என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மின்கம்பங்கள்"
- பலத்த காற்று வீசினால் சிமெண்ட் கம்பங்கள் உடைந்து கீழே விழும் நிலை உள்ளது.
- மின் கம்பங்களை மாற்றி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெரியபாளையம்:
பெரியபாளையம் அருகே உள்ள பூச்சிஅத்திப்பேடு ஊராட்சிக்குட்பட்ட வேம்பேடு கிராமம், செல்லியம்மன் கண்டிகை பகுதியில் சுடுகாடு மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆகியவற்றிற்கு இடையே அலமாதியில் இருந்து உயர் அழுத்த மின்சாரம் வருகிறது. இதையடுத்து அந்த பகுதியில் டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டு அங்கிருந்து மின்கம்பங்கள் மூலம் மின்வினியோகம் செய்யப்படுகிறது.
இந்த நிலையில் இந்த உயர் அழுத்த டிரான்ஸ்பார்மரில் உள்ள மின்கம்பிகளை தாங்கி பிடிக்கும் 2 சிமெண்டு மின்கம்பங்களும் முற்றிலும் சிதிலமடைந்து சிமெண்டுகள் பெயர்ந்து அதில் உள்ள கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் மின் கம்பங்கள் எந்த நேரத்திலும் முறிந்து விழும் நிலையில் காட்சி அளிக்கின்றன. பலத்த காற்று வீசினால் சிமெண்ட் கம்பங்கள் உடைந்து கீழே விழும் நிலை உள்ளது.
இதேபோல் அப்பகுதியில் உள்ள பல மின் கம்பங்கள் மிகவும் சேதம் அடைந்து காணப்படுகின்றன. எனவே சேதம் அடைந்த மின் கம்பங்களை மாற்றி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, கடந்த ஆண்டு ஆயிலச்சேரி கிராமத்தில் அலமாதி துணை மின் நிலையத்தில் இருந்து உயர் அழுத்த மின்சாரம் செல்லும் மின்கம்பம் உடைந்து விழுந்ததால் வயல்வெளியில் இருந்த ஒருவர் பலியானார். கோடு வெளி கிராமத்தில் மின்வயர் அறுந்து விழுந்ததில் ஒரு பெண் மற்றும் 10 ஆடுகள், ஒரு மாடு பலி ஏற்பட்டது. எனவே உயிர் பலி ஏற்படும் முன்னர் இப்பகுதியில் உள்ள சேதம் அடைந்த மின்கம்பங்களை போர்க்கால அடிப்படையில் மாற்றி அமைக்க வேண்டும் என்றனர்.
- தற்போது வடகிழக்கு பருவ மழை பெய்து வரு கிறது.
- பொதுமக்கள் பாது காப்பாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
கள்ளக்குறிச்சி, நவ.5-
கள்ளக்குறிச்சி மின்சார வாரிய மேற்பார்வை பொறி யாளர் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-
தற்போது வடகிழக்கு பருவ மழை பெய்து வரு கிறது. எனவே பொது மக்கள் பருவ மழையாலும், பெருங் காற்றாலும் அல்லது வேறு இயற்கை சீற்றத்தா லோ அறுந்து விழுந்துள்ள மின்சார கம்பி அருகே செல்லக் கூடாது. மேலும் அவ்வாறு மின் கம்பிகள் அறுந்து கிடந்தால் அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு உடனடி யாக தகவல் தெரிவிக்க வேண்டும். மின்கம்பங்கள் பழுதடைந்து இருந்தாலோ அல்லது அதிலிருந்து போகும் மின்கம்பிகள் பூமியில் இருந்து 15 அடிக்கு கீழ் தொங்கிக்கொண்டு இருந்தாலோ அதனை கடந்தோ அல்லது அருகிலோ செல்ல வேண்டாம். இதுகுறித்து மின்சாரவாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மின் கம்பத்திலோ, அதனை தாங்கும் (ஸ்டே) கம்பிகளிலோ கால்நடை களை கட்டாதீர்கள். மழைக் காலங்ளில் மின் மாற்றிகள், மின்கம்பங்கள், ஸ்டே ஒயர்கள் ஆகியவற்றின் அருகே செல்லாதீர்கள். மேற்கண்ட எச்சரிக்கை நடவடிக்கைகளை கடை பிடித்து பொதுமக்கள் பாது காப்பாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சுந்தரபாண்டியபுரத்தில் இருந்து சுரண்டை செல்லும் தார் சாலையானது குண்டும் குழியுமாக காட்சியளித்தது.
- சாலை ஓரத்தில் நின்ற மின்கம்பங்களை அகற்றாமலேயே சாலை அமைக்கப்பட்டுள்ளது.
தென்காசி:
தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரத்தில் இருந்து சுரண்டை செல்லும் தார் சாலையானது குண்டும் குழியுமாக காட்சியளித்ததால் புதிய தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றது.மேலும் தார் சாலையானது சற்று அகலப்படுத்தப்பட்ட நிலையில் சாலை ஓரத்தில் நின்ற மின்கம்பங்களை அகற்றாமலேயே தற்பொழுது புதிய தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக மின்கம்பத்தை சாலையோரம் மறு நடவு செய்ய வேண்டும் எனவும், மின்கம்பங்களில் உரசும் மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பாபநாசத்தில் இருந்து சென்ற லாரி சாலையில் உள்ள மின் கம்பத்தில் மோதியது.
- சாலையில் சாய்ந்த மின்கம்பத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பாபநாசம்:
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சாலியமங்கலம் சாலையில் ரயில் நிலையம் அருகில் பாபநாசத்தில் இருந்து வேகமாக சென்ற லாரி சாலையில் உள்ள மின் கம்பத்தில் மோதியது.
இதில் அடுத்தடுத்து 5 மின்கம்பங்கள் முறிந்து சாய்ந்ததில் சேதம் ஏற்பட்டது.
சாலையில் சாய்ந்த மின்கம்பத்தால் பாபநாசம் சாலியமங்கலம் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு பாபநாசம் மின்சாரத்துறை உதவி செயற்பொறியாளர் கருணாகரன், இளமின் பொறியாளர் ஷாஜாதி, மின்பாதை ஆக்க முகவர் ராஜகோபால் மின்வாரிய ஊழியர்கள் விரைந்து வந்து, சாலையில் சாய்ந்து கிடந்த மின் கம்பத்தை அப்புறப்படுத்தி பின்பு போக்குவரத்து சீரமைத்தனர்.
பின்பு மின்வாரிய ஊழியர்கள் தடைப்பட்ட மின்சாரத்தை போர்க்கால அடிப்படையில் சீரமைத்து மின் இணைப்பு தரப்பட்டது.
இது குறித்து பாபநா சம்மின்வாரிய இளமின் பொறியாளர் ஷாஜாதி கொடுத்த புகாரின் பேரில் பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெ க்டர் கலை வாணி மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
- மாதவரம் பகுதியில் உள்ள பல மின்கம்பங்கள் உடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது.
- மின்கம்பங்கள் சாயந்தாலோ மின்கம்பம் அருந்து விழுந்தாலோ உயிர்சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது.
மாதவரம்:
மாதவரம் அருகே உள்ள தபால் பெட்டி பகுதி எப்போதும் போக்குவரத்து மிகுந்த சாலை ஆகும். இந்த சாலையில் பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனை, பஸ் நிறுத்தங்கள், கோவில் என மக்கள் அதிகம் பயன்படுத்தும் இடங்களாக உள்ளன.
மாதவரம் பகுதியில் உள்ள பல மின்கம்பங்கள் உடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. இதனால் அவை எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழுந்து விடும் ஆபத்தான நிலையில் காட்சி அளிக்கின்றன. இதுபற்றி பொது மக்கள் பலமுறை மின்வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்தும் சேதமான மின்கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
தபால் பெட்டி பஸ் நிறுத்தம் அருகே உள்ள மின்கம்பத்தின் அடிப்பகுதி துருப்பிடித்து துகள்கள் கொட்டி வெற்றிடமாக உள்ளது. இதன் அடிப்பகுதி பலம் இல்லாமல் ஆபத்தான நிலையில் எப்போது வேண்டுமானாலும் சரியும் நிலை காணப்படுகிறது.
இதேபோல் வடபெரும்பாக்கம்-மாதவரம் செல்லும் சாலை, கொசப்பூர்- மாதவரம் சாலை, வட பெரும்பாக்கம்-மாதவரம் செல்லும் சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகே மற்றும் புழல் அருகே உள்ள மின்கம்பங்கள் ஆபத்தான நிலையில் காணப்படுகின்றன. எனவே பழுதடைந்த மின்கம்பங்களை உடனடியாக மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதுகுறித்து இது குறித்து சமூக ஆர்வலர் சுனில் என்பவர் கூறும்போது, மாதவரம், வடபெரும்பாக்கம், கொசப்பூர், புழல், மாதவரம் பால்பண்ணை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அதிக அளவிலான சேதமான மின்கம்பங்கள் உள்ளன.
இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இந்த மின்கம்பங்கள் பல மாதங்களாக இப்படியே உள்ளது. மின்கம்பங்கள் அருகே பள்ளி குழந்தைகளும் வயதானவர்களும் பெண்கள் என பல தரப்பினர் சென்று வருகின்றனர். பிரதான சாலைகளில் உள்ள சேதமான மின்கம்பங்கள் சாயந்தாலோ மின்கம்பம் அருந்து விழுந்தாலோ உயிர்சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. அசம்பாவிதம் ஏற்படும் முன்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
மாதவரம் மண்டலம், 33-வது வார்டுக்கு உட்பட்ட லட்சுமிபுரம் பகுதியில் செங்குன்றம்-வில்லிவாக்கம் சாலையில் சென்னை குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் 15 லட்சம் லிட்டர் கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி மற்றும் 4 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ்நிலை நீர் தேக்க தொட்டி நீரேற்று நிலையம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டும் பணி தொடங்கியது. தற்போது பணி முடிந்து விட்ட நிலையில் குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் உள்ளது. இதனை பொது மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என லட்சுமிபுரம் மற்றும் சுற்றி உள்ள பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த சசி என்பவர் கூறும்போது, மாதவரம் லட்சுமிபுரம் பகுதியில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டி முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இது பயன்பாட்டுக்கு வராததால் லட்சுமிபுரம் , ஆசிரியர் காலனி, ஸ்டார் விஜய் நகர், சரஸ்வதி நகர், சப்தகிரி நகர், செல்வம் நகர், ரமணி நகர், செகரட்டரி காலனி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுக்கப்படாமல் உள்ளது என்றார்.
- காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்விநியோகம் இருக்காது
- குழித்துறை மின்விநியோக செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி :
குழித்துறை மின் கோட்டத்துக்கு உட்பட்ட புதுக்கடை, கருங்கல், கொல்லங்கோடு, நம்பாளி, இரவிபுதூர்கடை, கிள்ளியூர், பள்ளியாடி, சூரியகோடு பிரிவுகளுக்கு உள்பட்ட பகுதிகளில் பழுதடைந்த மின்கம்பங்கள் மற்றும் மின் தளவாடங்கள் மாற்றும் பணி வருகிற 19-ந் தேதி முதல் தொடர்ச்சியாக நடைபெற உள்ளது. 31-ந் தேதி வரை பணிகள் நடைபெற உள்ளதால் ஒவ்வொரு நாளும் பணி நடக்கும் நாளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்விநியோகம் இருக்காது.அதன்படி 19-ந் தேதி கொன்னறை, மங்காடு, பள்ளிக்கல், சரல்விளை, குழித்தோட்டம், திருஞானபுரம், பாலவிளை, மங்கலக்குன்றி, தொழிச்சல், வள்ளவிளை, இளம்பாலமுக்கு. மங்காடு, சரல்முக்கு, கோயிக்கத்தோப்பு, பணமுகம், பணமுகம், செறுகோல், அரசகுளம், கல்நாட்டி, குஞ்சாகோடு, பகுத்திக்காட்டு விளை, கோழிப்போர்விளை பகுதியிலும், 20-ந் தேதி மெதுகும்மல், குளப்புறம் பகுதி யிலும், 21-ந் தேதி மானான்விளை, கருக்குப்பனை, வடக்கன்கரை, கொல்லன்விளை, காக்கவிளை, வைக்கல்லூர், பருத்திக்கடவு, வாழ் வச்சக்கோஷ்டம், கொடு வனம்தோட்டம், முள்ளங்கனா விளை, இடவார், வளனூர் பகுதியிலும் மின் தடை ஏற்படும்.வருகிற 24-ந் தேதி பாத்திமாபுரம், பூவன்விளை, கோழிப்போர்விளை, இலவுவிளை, கல்லுக்கூட்டம், சடையன்குழி, மணக்காலை பகுதிக்கும், 25-ந் தேதி கொடுவனம்தோட்டம், மாராயபுரம், உதய மார்த்தாண்டம், மிடாலம், தையாலுமூடு, கோழிவிளை பகுதிகளுக்கும், 26-ந் தேதி கொல்லங்கோடு, மேடவிளாகம், மார்த் தாண்டன்துறை, நீரோடி, பாத்திமாபுரம், சுவாமியார்மடம், புலிப்பனம், விழுந்தயம்பலம், வெட்டுவிளை, ஆப்பிக்கோடு, நட்டாலம், இடவிளாகம் பகுதிகளுக்கும், 27-ந் தேதி ஓச்சவிளை, பேப்பிலாவிளை, ஓலவிளை, வாய்க்கால்கரை, விரிவிளை, வாவறை பகுதி களுக்கும், 28-ந் தேதி சங்குருட்டி, அடைக்காகுழி, செங்கவிளை, செம்முதல், தாழக்கான்வல்லி, செவ்வேலி, கூட்டமாவு, சூரியகோடு, பாத்திமாநகர் பகுதிகளுக்கும், 31-ந் தேதி தொண்டனாவிளை, தும்பாலி, மறுகண்டான்விளை, பிராகோடு, கடுவாக்குழி, சிராயன்குழி, குன்னம்பாறை, பழையகடை, வருக்கவிளை பகுதிகளிலும் முன்விநியோகம் இருக்காது.
மேற்கண்ட தகவலை குழித்துறை மின்விநியோக செயற் பொறியாளர் தெரிவித்துள்ளார்.
- சாலை விரிவாக்கத்திற்கு மின்கம்பங்கள் மாற்றி அமைக்கும் பணி நாளை நடைபெறுகிறது.
- நாளை காலை 9.30 மணிமுதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
தஞ்சாவூர்:
தஞ்சை நகர மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கருப்பையா வெளியிட்டு ள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை மணிமண்டபம் துணை மின் நிலைய பகுதியில் நெடுஞ்சாலை துறையால் சாலை விரிவாக்கத்திற்கு மின்கம்பங்கள் மாற்றி அமைக்கும் பணி நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது.
எனவே நாளை காலை 9.30 மணிமுதல் மாலை 5 மணி வரை அண்ணாநகர் மின் வழித்தடத்தில் உள்ள காவேரி கல்யாணமண்டபம் முதல் கல்லுக்குளம் வரை உள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
மேலும் மேரீஸ்கார்னர் மின்பாதையில் அருளானந்ததம்மாள் நகர் 1-வது தெரு வரை உள்ள பகுதிகளிலும் மின் வினியோகம் இருக்காது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மத்திய அரசின் நூற்பாலைக்கு மின்கம்பங்கள் நட கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
- மின்வாரிய அதிகாரிகள் தேர்வு செய்த இடத்தில் குடிநீர் குழாய்கள் செல்வதாலும், சாலை குறுகலாக இருப்பதாலும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும்.
பரமக்குடி
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள கமுதக்குடியில் மத்திய அரசின் நூற்பாலை இயங்கி வருகிறது. கொரோனா காரணமாக 2 ஆண்டுகளாக ஆலை செயல்படவில்லை. இதனால் உயர் மின்னழுத்த சப்ளைக்கு பதிலாக குறைந்த மின்னழுத்த சப்ளைகோரி ஆலை சார்பில் விண்ணப்பிக்கப்பட்டது. இதனை அடுத்து மின் விநியோகம் வழங்குவதற்கு கமுதக்குடி கிராமத்தில் மின்கம்பங்கள் நடுவதற்கு மின்வாரிய ஊழியர்கள், அதிகாரிகள் வந்தனர். மின்வாரிய அதிகாரிகள் தேர்வு செய்த இடத்தில் குடிநீர் குழாய்கள் செல்வதாலும், சாலை குறுகலாக இருப்பதாலும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும். எனவே மின்கம்பங்கள் நடுவதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து 50-க்கும் மேற்பட்டோர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எதிர்ப்பு அதிகளவில் இருந்ததால் தற்காலிகமாக பணிகளை நிறுத்தி விட்டு மின்வாரிய அதிகாரிகள் திரும்பி சென்றனர்.
- தடை இல்லாத மின்சாரம் வழங்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
- கன்னியாகுமரி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் பத்மகுமார் தகவல்
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை மற்றும் பலத்த காற்று வீசி வருவதால் மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையங்கள் மற்றும் உயர்மின் அழுத்த பாதைகளில் கடந்த ஜூன் 1-ந்தேதி முதல் ஜூலை 15-ந்தேதி வரை சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இது குறித்து கன்னியாகுமரி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறி யாளர் பத்மகுமார் ஒரு அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கன்னியாகுமரி மின் பகிர்மான வட்டத்தில் தடை இல்லாத மின்சாரம் வழங்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகின்றன. அதன் படி கன்னியாகுமரி மாவட் டத்தின் மூன்று கோட்டங் களில் கீழ்க்கண்ட பராமரிப்பு பணிகள் கடந்த ஜூன் 1-ம் தேதி முதல் ஜூலை 15ஆம் தேதி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் மூன்று கோட்டங் களில் உள்ள உயரழுத்த மற்றும் தாழ்வழுத்த மின்பா தைகளில் பொறியாளர்கள், இதர பணியாளர்கள் மற்றும் களப்பணியாளர்களைக் கொண்டு மின்கம்பிகளில் 44148 இடங்களில் உரசி கொண்டிருந்த மரக்கிளைகள் மற்றும் தென்னை ஓலைகள் வெட்டி அகற்றப் பட்டுள்ளதாகவும், 290 பழுதடைந்த மின்கம்பங்களை மாற்றி புதிய மின் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும்,
134 சாய்ந்த நிலையில் இருந்த மின்கம்பங்கள் சீர்செய்யப் பட்டுள்ளதாகவும், புதிதாக 81 மின்கம்பங்கள் தாழ்வான மின்பாதைகளுக்கு இடையே அமைக்கப்பட் டுள்ளதாகவும், பழைய 201 இன்சுலேட்டர்கள் மாற்றப்பட்டு புதிய இன்சு லேட்டர்கள் வைக்கப்பட் டுள்ளதாகவும், 205 ஏ.பி. சுவிட்ச்சுகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள் ளப்பட்டு சீரான மின்சாரம் வழங்க நடவ டிக்கை மேற்கொள் ளப்பட் டுள்ளதாகவும்,
503 மின் மாற்றிகளில் பராம ரிப்பு பணிகள் மேற்கொள் ளப்பட்டு சீரான மின்சாரம் வழங்க நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட் டுள்ளதாகவும் அந்த அறிக் கையில் கூறி இருந்த அவர், மேலும் தொடர்ந்து இப்பணிகளை பொது மக்கள் எங்களுக்கு ஒத்து ழைப்பு வழங்க கேட்டுக் கொள்கிறோம் என்றும் அந்த அறிக்கையில் கூறி இருந்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்