என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "குரூப்-1 தேர்வு"
- தமிழ்நாடு அரசிற்கு முதுகெலும்பாக திகழ்வது வருவாய்த்துறை தான்.
- சுமார் 150 உயர்பதவிகள் காலியாக உள்ளது.
சென்னை :
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசின் வருவாய்த்துறையில் மட்டும் 31 மாவட்ட வருவாய் அலுவலர் பணியிடங்களும், 117 துணை ஆட்சியர் (சப்-கலெக்டர்) பணியிடங்களும் காலியாக இருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. இதனால் வருவாய் நிர்வாகம் சார்ந்த பணிகள் முடங்கிக் கிடக்கின்றன.
டி.என்.பி.எஸ்.சி. முதல் தொகுதி தேர்வுகளை (குரூப்-1) ஆண்டுக்கு ஒருமுறை நடத்தாதது, வட்டாட்சியர்களுக்கு துணை ஆட்சியராகவும், துணை ஆட்சியர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலராகவும் பதவி உயர்வு வழங்காதது ஆகியவை தான் இவ்வளவு காலியிடங்கள் ஏற்படுவதற்கு காரணம் ஆகும்.
தமிழ்நாடு அரசிற்கு முதுகெலும்பாக திகழ்வது வருவாய்த்துறை தான். அத்துறையில் சுமார் 150 உயர்பதவிகள் காலியாக இருப்பதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. இதன் காரணமாக வளர்ச்சி மற்றும் நலத்திட்ட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இது தமிழகத்தின் வளர்ச்சியையும் பாதிக்கும்.
காலியிடங்களில் சுமார் 100 துணை ஆட்சியர் பணியிடங்களை டி.என்.பி.எஸ்.சி. முதல் தொகுதி தேர்வு மூலம் தான் நிரப்ப முடியும் என்பதால், உடனடியாக அத்தேர்வை அறிவிக்க வேண்டும். அதேபோல், தகுதியான வட்டாட்சியர், துணை ஆட்சியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 1,089 கள ஆய்வாளர், வரைவாளர் பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு நவம்பர் 6-ந்தேதி நடத்தப்பட்டது.
- குரூப்-2 முதன்மைத் தேர்வு பிப்ரவரி மாதம் 25-ந்தேதி நடத்தப்படும்.
சென்னை :
தமிழ்நாடு அரசு துறைகளில் காலியாக இருக்கும் பல்வேறு இடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியிட்டதோடு, அதற்கான தேர்வையும் நடத்தி முடித்தது. அந்த வகையில் குரூப்-1, குரூப்-4 உள்பட பல்வேறு பதவிகளில் வரும் ஏராளமான பணியிடங்களுக்கு எழுத்துத்தேர்வு நடந்தது.
இந்த தேர்வின் முடிவுகள் ஏற்கனவே உத்தேசிக்கப்பட்டு இருந்த மாதங்களில் வெளியாகும் என்று தேர்வர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் எதிர்பார்த்தபடி தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை.
உதாரணமாக, 7 ஆயிரத்து 301 பணியிடங்களுக்கு சுமார் 18 லட்சத்து 50 ஆயிரம் பேர் எழுதிய குரூப்-4 பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு முடிவு, முதலில் அக்டோபர் மாதத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. பின்னர், டிசம்பர் மாதம் முடிவு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது பிப்ரவரி மாதத்தில் தான் வெளியிட திட்டமிட்டு இருப்பதாக டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்து இருக்கிறது.
அதன்படி, 2022-ம் ஆண்டில் நடத்தப்பட்ட தேர்வுகளின் முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற முழு விவரத்தை தேர்வை நடத்திய டி.என்.பி.எஸ்.சி. நேற்று வெளியிட்டுள்ளது. அதன் விவரங்கள் வருமாறு:-
* 830 பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த என்ஜினீயரிங் சேவைகள் பிரிவுக்கான தேர்வு முடிவு ஏற்கனவே ஆகஸ்டு மாதத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது அது 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகும்.
* 7,301 பணியிடங்களுக்கு கடந்த ஜூலை மாதம் 27-ந்தேதி நடத்தப்பட்ட குரூப்-4 தேர்வு முடிவு, அக்டோபரில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டு, தற்போது 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாகும்.
* 1,089 கள ஆய்வாளர், வரைவாளர் பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு நவம்பர் 6-ந்தேதி நடத்தப்பட்டது. இதற்கான தேர்வு முடிவு டிசம்பர் மாதம் வெளியாகும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், அது தற்போது ஜனவரி மாதம் வெளியிடப்படப்படும்.
* 92 பணியிடங்களுக்கு கடந்த நவம்பர் மாதம் 19-ந்தேதி நடத்தப்பட்ட குரூப்-1 பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு முடிவு டிசம்பர் மாதத்தில் வெளியிடப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது அது பிப்ரவரி மாதத்தில் வெளியாகும்.
இதேபோல், டி.என்.பி.எஸ்.சி.யால் நடத்தப்பட்ட மேலும் 8 தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் குறித்த தகவலும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதுதவிர ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, குரூப்-2 முதன்மைத் தேர்வு பிப்ரவரி மாதம் 25-ந்தேதி நடத்தப்படும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.
- நாகரில் 22 மையங்களில் நடந்தது
- பலத்த சோதனைக்கு பிறகு அனுமதி
நாகர்கோவில்:
தமிழகத்தில் துணை கலெக்டர், துணை போலீஸ் சூப்பிரண்டு, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், வணிகவரி உதவி ஆணையர், ஊரக மேம்பாட்டு உதவி இயக்குனர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் என 92 பணியிடங்கள் காலி யாக உள்ளது.
இந்த பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 தேர்வு இன்று தமிழகம் முழுவதும் நடந்தது. குமரி மாவட்டத்தில் குரூப்-1 தேர்வு எழுதுவதற்கு 7329 பேர் விண்ணப்பித்து இருந்தனர். நாகர்கோவிலில் 22 மையங்களில் இன்று தேர்வு நடந்தது. தேர்வு மையங்களுக்கு காலை யிலேயே தேர்வு எழுதுப வர்கள் வந்திருந்தனர். இளம்பெண்கள், வாலி பர்கள் பலரும் தேர்வு மையத்திற்கு வந்தனர். கைக் குழந்தைகளுடனும் பெண்கள் வந்தனர்.
நாகர்கோவில் எஸ்.எல். பி. பள்ளியில் தேர்வு எழுதுவதற்கு வந்தவர்கள் பலத்த சோதனைக்கு பிறகு தேர்வு மையத்திற்குள் அனுமதிக்க பட்டனர்.காலை 8.30 மணி முதல் தேர்வு எழுத வந்தவர்களின் அனுமதி சீட்டுகள் பரிசோதனை செய்யப்பட்டு அவர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வு மையத்திற்குள் செல்போன், கால்குலேட்டர் போன்ற எலக்ட்ரானிக்கல் பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது.
இதனால் தேர்வு எழுத வந்த இளம்பெண்கள் தங்களது உறவினர்களிடம் செல்போன்களை ஒப்படைத்து சென்றனர். சிலர் செல்போன் வைப்ப தற்காக ஒதுக்கப்பட்டிருந்த அறையில் செல்போன்களை வைத்துவிட்டு தேர்வு எழுத சென்றனர். கைக்கு ழந்தையுடன் வந்த பெண் கள் தங்களது குழந்தை களை கணவர்கள் மற்றும் உறவினர்களிடம் ஒப்ப டைத்துவிட்டு தேர்வு மையத்திற்கு சென்றனர். இளம்பெண்கள் தேர்வு எழுத சென்ற பிறகு அவர்களுடன் வந்த பெற்றோர் தேர்வு மையத்திற்கு வெளியே காத்திருந்தனர்.
டதி பள்ளி, டி.வி.டி. பள்ளி, கோலி கிராஸ் கல்லூரி, ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி, இந்து வித்யாலயா பள்ளி, பயோனியர் கல்லூரி, சி.எஸ்.ஐ. மெட்ரிக் பள்ளி உள்பட அனைத்து தேர்வு மையங்களிலும் பலத்த பாதுகாப்புடன் தேர்வு நடந்தது. காலை 9.30 மணிக்கு தொடங்கிய இந்த தேர்வு மதியம் 12.45 மணிக்கு முடிந்தது.
தேர்வை கண்காணிக்க 2 பறக்கும் படைகள், 6 நடமாடும் குழுக்கள் மற்றும் 22 ஆய்வு அலுவலர்களும் நியமனம் செய்யப்பட்டு இருந்தனர். அவர்கள் தேர்வு மையங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
நாகர்கோவில் டதி பள்ளியில் நடந்த தேர்வு மையத்தில் கலெக்டர் அரவிந்த் ஆய்வு மேற்கொண்டார்.
- குரூப்-1 பதவிகளில் உள்ள 92 காலி இடங்களுக்கு இந்த தேர்வு நடக்கிறது.
- காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரையில் இந்த தேர்வு நடக்கிறது.
சென்னை :
துணை கலெக்டர், வணிக வரி உதவி கமிஷனர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, ஊரக மேம்பாட்டுத்துறை உதவி இயக்குனர் ஆகிய குரூப்-1 பதவிகளில் உள்ள 92 காலி இடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டு இருந்தது.
முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அந்த வகையில் முதல்நிலைத் தேர்வு இன்று (சனிக்கிழமை) தமிழகம் முழுவதும் நடைபெற இருக்கிறது. இந்த தேர்வை எழுதுவதற்காக 3 லட்சத்து 22 ஆயிரத்து 416 பேர் விண்ணப்பித்து இருந்த நிலையில், அதில் 2 பேரின் விண்ணப்பங்கள் மட்டும் நிராகரிக்கப்பட்டு, 3 லட்சத்து 22 ஆயிரத்து 414 பேர் தேர்வை எழுத தகுதியுள்ளவர்களாக டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.
காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரையில் இந்த தேர்வு நடக்கிறது. பொதுப்பாடம் பிரிவில் 175 வினாக்கள் திறனறிவு பிரிவில் 25 வினாக்கள் என 200 வினாக்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது. தேர்வை எதிர்கொள்ளும் தேர்வர்கள் என்ன மாதிரியான நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்? என்பது தொடர்பான முழு விவரங்களை ஹால்டிக்கெட்டில் டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.
- 35 தேர்வு மையங்களில் சுமார் 10,838 தேர்வர்கள் தேர்வு எழுதவிருக்கின்றனர்.
- 9 மணிக்கு பிறகு தேர்வு மையத்திற்கு வந்தால் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கி ணைந்த குடிமைப் பணிகள் தேர்வு குருப் 1-ல் அடங்கியுள்ள பதவிக ளுக்கான முதன்மைத்தேர்வு வருகின்ற நாளை சனிக்கிழமை அன்று முற்பகல் மட்டும் தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 35 தேர்வு மையங்களில் சுமார் 10,838 தேர்வர்கள் தேர்வு எழுதவிருக்கின்றனர்.
இத்தேர்வு மையங்களில் தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முழு அளவில் செய்யப்பட்டுள்ளன. அனைத்து தேர்வு மையங்களிலும் பேருந்துகள் நின்று செல்லும் வகையிலும், சிறப்பு பேருந்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
தேர்வர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு காலை 9 மணிக்கு முன்னதாக தேர்வு மையத்திற்கு செல்ல வேண்டுமெனவும், 9 மணிக்கு பிறகு தேர்வு மையத்திற்கு வந்தால் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய விதிமுறைகளை முழுமையாக படித்து, அவற்றை முழுமையாக கடைபிடிக்குமாறும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
- விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள 27-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
- முதல்நிலைத் தேர்வு அக்டோபர் 30-ந் தேதி நடைபெற இருக்கிறது.
சென்னை :
குரூப்-1 பதவிகளுக்கு முதல்நிலை, முதன்மை, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் 18 துணை கலெக்டர், 26 போலீஸ் துணை சூப்பிரண்டு, 25 வணிகவரித்துறை உதவி ஆணையர், 13 கூட்டுறவுத்துறை துணைப் பதிவாளர், 7 ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர், 3 மாவட்ட தீயணைப்புத்துறை அதிகாரி ஆகிய குரூப்-1 பதவிகளில் உள்ள 92 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த மாதம் (ஜூலை) வெளியிட்டது.
அதன்படி இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நேற்று முன்தினம் கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த 92 காலிப் பணியிடங்களுக்கு 3 லட்சத்து 16 ஆயிரத்து 678 பேர் விண்ணப்பித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விண்ணப்பித்தவர்கள் தங்கள் விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள வருகிற 27-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்தப் பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு வருகிற அக்டோபர் 30-ந் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்வில் வெற்றி பெறுகிறவர்கள், அடுத்தகட்டமாக நடைபெற இருக்கும் முதன்மைத்தேர்வுக்கு தகுதி பெறுவார்கள். அதைத் தொடர்ந்து நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு, தகுதியானவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு, பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
- கன்னியாகுமரி மாவட்டம் கூஞ்சன்விளை இவரது சொந்த ஊர் ஆகும்.
- சின்ன வயதில் இருந்து கலெக்டராக ஆசைப்பட்டு விடாமுயற்சியில் படித்தேன் என்று ஷீஜா கூறினார்.
தூத்துக்குடி:
தமிழகத்தில் துணை ஆட்சியர், டி.எஸ்.பி. உள்ளிட்ட பணிகளுக்கான குரூப்-1 மெயின் தேர்வு கடந்த மார்ச் 4, 5, 6-ம் தேதிகளில் சென்னையில் நடைபெற்றது. இந்த மாதம் கடந்த 13-ந்தேதி நேர்காணல் தேர்வு நடைபெற்றது.
வருவாய் கோட்டாட்சியர் (துணை ஆட்சியர்), டி.எஸ்.பி., வணிகவரி உதவி ஆணையர், ஊரகவளர்ச்சி உதவி இயக்குநர், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி அதிகாரி ஆகிய பதவிகளில் 66 காலி இடங்களை நிரப்புவதற்காக நடைபெற்ற தேர்வில் தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராமின் மகள் ஷீஜா மாநில அளவில் 9-வது இடம்பிடித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் கூஞ்சன்விளை இவரது சொந்த ஊர் ஆகும். மாநில அளவில் 9-வது இடம் பெற்றது குறித்து ஷீஜா கூறுகையில், சின்ன வயதில் இருந்து கலெக்டராக ஆசைப்பட்டுவிடாமுயற்சியில் படித்தேன். எனது பெற்றோரின் உதவியுடன் இந்நிலைக்கு வந்துள்ளேன். அவர்களுக்கு நன்றி என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்