என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அவசர நிலை பிரகடனம்"

    • அதே போல் நாட்டின் தெற்கு பகுதியிலும் காட்டுத் தீ பரவியுள்ளது.
    • வெப்பநிலை 104 டிகிரி வரை உள்ளதால் வரும் நாட்களில் காட்டுத்தீ இன்னும் மோசமடைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

    சாண்டியாகோ:

    தென் அமெரிக்கா நாடான சிலியில் மத்திய பகுதியில் பயங்கர காட்டுத் தீ பரவி வருகிறது.

    கடலோர நகரமான வினாடெல்மாரை சுற்றியுள்ள மலைப் பகுதிகளில் காட்டுத் தீ ஏற்பட்டது. தீ வேகமாக மற்ற இடங்களிலும் பரவியது.

    எஸ்ட்ரெல்லா, நவிடாப் உள்ளிட்ட நகரங்களில் காட்டுத்தீயால் ஏராளமான வீடுகள் எரிந்து நாசமானது. அதே போல் நாட்டின் தெற்கு பகுதியிலும் காட்டுத் தீ பரவியுள்ளது.

    கொளுந்து விட்டு எரியும் காட்டுத் தீயால் அங்கு கரும் புகை மண்டலம் ஏற்பட்டு உள்ளது. அப்பகுதிகளில் இருளில் சூழ்ந்தது போல் புகை மண்டலம் பரவி உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்படுகிறார்கள்.

    காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். விமானங்கள் மூலம் தண்ணீர் ஊற்றப்பட்டு வருகிறது. ஆனாலும் காட்டுத்தீ பயங்கரமாக எரிந்து வருகிறது. இதனால் தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி வருகிறார்கள்.

    இந்நிலையில் காட்டுத் தீயில் சிக்கியும், புகை மூட்டத்தால் மூச்சு திணறியும் 46 பேர் பலியாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் பலரது உடல்கள் சாலைகளில் சிதறி கிடந்தன.

    தொடர்ந்து காட்டுத்தீ பரவி வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. மேலும் வெப்பநிலை 104 டிகிரி வரை உள்ளதால் வரும் நாட்களில் காட்டுத்தீ இன்னும் மோசமடைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து சிலியில் அவசர நிலையை அந்நாட்டு அதிபர் கேப்ரியல் போரிக் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, நாட்டின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் காட்டுத் தீ பேரழிவு காரணமாக 40-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

    லால்பரைசோ பிராந்தியத்தில் நான்கு இடங்களில் காட்டுத்தீ பயங்கரமாக எரிந்து வருகிறது. தீயை அணைக்க வீரர்கள் கடுமையாக போராடி வருகிறார்கள். மீட்புப் பணியாளர்களுக்கு ஒத்துழைக்குமாறு மக்களை கேட்டுக் கொள்கிறேன். தீ வேகமாக முன்னேறி வருகிறது. கால நிலை, காரணமாக தீயை கட்டுப்படுத்துவது கடினமாக உள்ளது என்றார்.

    இந்த காட்டுத்தீயில் 19 ஆயிரத்து 770 ஏககர் வனப்பகுதி எரிந்து நாசமாகிஉள்ளது. 1000-க்கும் மேற்பட்ட வீடுகள் தீயில் முற்றிலும் எரிந்தன.

    • யூன் சுக் இயோல் பதவி விலக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
    • பாராளுமன்ற வாக்கெடுப்பு மூலம் அதிபர் பதவி நீக்கம் செய்யப்படலாம்.

    சியோல்:

    தென்கொரியாவில் கடந்த 3-ந்தேதி அதிபர் யூன் சுக் இயோல் திடீரென ராணுவ அவசர நிலையை பிரகடனப்படுத்தினார். மக்களின் கடும் எதிர்ப்பால் அவசர நிலையை வாபஸ் பெற்றார்.

    பின்னர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டார். ஆனால் யூன் சுக் இயோல் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

    அவருக்கு எதிரான தீர்மானத்தை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்தன. ஆனால் ஆளும் கட்சி புறக்கணித்ததால் தீர்மானம் தோல்வி அடைந்தது. இதற்கிடையே புதிய தீர்மானத்தை எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி கொண்டு வந்துள்ளது.

    இந்த மசோதா மீதான வாக்கெடுப்பை சனிக்கிழமை நடத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. மேலும் அவர் பதவி விலக வேண்டும் என்று ஆளும் கட்சியே விரும்புகிறது.

    இந்த நிலையில் அதிபர் யூன் சுக் இயோல் தொலைக் காட்சியில் பேசும்போது கூறியதாவது:-

    நான் அறிவித்த ராணுவ அவசர நிலை ஆணை என்பது ஆளுகைச் செயலை சார்ந்தது.

    இது விசாரணைகளுக்கு உட்பட்டது அல்ல. கிளர்ச்சிக்கு உட்பட்டது அல்ல. என் மீதான கிளர்ச்சி குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன். எனக்கு ராஜினாமா செய்யும் எண்ணம் இல்லை. நாட்டின் அரசாங்கத்தை முடக்குவதற்கும், அரசியலமைப்பு ஒழுங்கை சீர்குலைப்பதற்கும் காரணமான சக்திகள் மற்றும் குற்றக் குழுக்களை கொரியா குடியரசின் எதிர்காலத்தை அச்சுறுத்துவதைத் தடுக்க நான் இறுதிவரை போராடுவேன்.

    எனது ராணுவ அவசர நிலை சட்டம் என்பது எதிர்க்கட்சியிடம் இருந்து ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு ஒழுங்கை பாதுகாப்பதற்காக கொண்டு வரப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே ஆளும் கட்சியின் தலைவர் ஹான் டோங்-ஹூன் கூறும் போது, பதவி நீக்கத்துக்கு பதிலாக யூன் சுக் இயோல் பதவியை ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அவரை சம்மதிக்க வைக்கும் முயற்சியில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

    தற்போது ஜனநாயகத்தையும் குடியரசையும் பாதுகாக்க, பதவி நீக்கம் மூலம் அதிபரை வெளியேற்றுவது தான் ஒரே வழியாக உள்ளது என்றார். இதனால் பாராளுமன்ற வாக்கெடுப்பு மூலம் அதிபர் பதவி நீக்கம் செய்யப்படலாம்.

    • இரண்டாவது முறையாக யூன் பதவிநீக்கம் தொடர்பாக புதிய தீர்மானத்தை எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி கொண்டு வந்துள்ளது.
    • தீர்மானத்துக்கு ஆதரவாக 204 வாக்குகளும், எதிராக 85 வாக்குகளும் பதிவாகின.

    அவசர நிலை 

    பட்ஜெட் மசோதாவை எதிர்க்கட்சிகள் ஆதரிக்காததால் தென்கொரியாவில் கடந்த 3-ந்தேதி அதிபர் யூன் சுக் இயோல் திடீரென ராணுவ அவசர நிலையை பிரகடனப்படுத்தினார். மக்களின் கடும் எதிர்ப்பால் அவசர நிலையை வாபஸ் பெற்றார். 45 வருட தென் கோரிய அரசியல் வரலாற்றில் அவசர நிலை பிரகடனப்படுத்தபட்டது இதுவே முதல் முறை ஆகும்.

    பின்னர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டார். ஆனால் யூன் சுக் இயோல் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. அவருக்கு எதிரான தீர்மானத்தைப் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்தன.

     

    பதவி நீக்கம்

    ஆனால் ஆளும் கட்சி புறக்கணித்ததால் தீர்மானம் தோல்வி அடைந்தது. ஆனால் மக்களிடையே வலுக்கும் எதிர்ப்பால் சொந்த கட்சியினரே யூனுக்கு எதிராக திரும்பியுள்ளனர். இதற்கிடையே இரண்டாவது முறையாக யூன் பதவிநீக்கம் தொடர்பாக புதிய தீர்மானத்தை எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி கொண்டு வந்துள்ளது.

    இந்த மசோதா மீதான வாக்கெடுப்பு இன்று [சனிக்கிழமை] தென் கொரிய பாராளுமன்றத்தில் நடைபெற்றது. பாராளுமன்றக் கட்டடத்துக்கு வெளியே திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள் யூன்-க்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

    வாக்கெடுப்பில் மொத்தம் 300 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்தில் தீர்மானத்துக்கு ஆதரவாக 204 வாக்குகளும், எதிராக 85 வாக்குகளும் பதிவாகின. 3 பேர் வாக்களிக்க மறுத்தனர். 8 வாக்குகள் செல்லாததாயின.

    இதன்படி தீர்மானத்துக்கு ஆதரவாக பெரும்பான்மை வாக்குகள் பதிவாகியுள்ளதால் யூன் சுக் பாராளுமன்றத்தால் ஒருமனதாக பதவிநீக்கம் செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

    அடுத்தது என்ன? 

    ஆனால் இதனால் யூன் உடனே பதவியை விட்டு விலகமாட்டார். தென் கொரிய சட்டப்படி, இந்த வெற்றி பெற்ற தீர்மானம் தொடர்பாக அரசியலமைப்பு நீதிமன்றத்தின் முன் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதால், பதவி நீக்கம் முற்றிலுமாக செயல்பாட்டுக்கு வர பல வாரங்கள் ஆகும்.

     

    நீதிமன்றத்தில் ஒன்பது நீதிபதிகளில் ஆறு பேர் பதவி நீக்கத்தை உறுதிப்படுத்தி வாக்களித்தால், யூன் பதவியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார். யூனை பதவி நீக்கம் செய்வதா அல்லது வேண்டாமா என்பது குறித்து தீர்ப்பளிக்க நீதிமன்றத்திற்கு 180 நாட்கள் வரை அவகாசம் உள்ளது.

    இந்த இடைப்பட்ட காலத்தில் யூன் சுக் நியமித்த பிரதமர் ஹான் டக்-சூ, அரசாங்கத்தின் செயல் தலைவராகப் பொறுப்பேற்பார் என்று கூறப்படுகிறது.

    • மியான்மர் நாட்டில் மேலும் 6 மாத காலத்துக்கு அவசர நிலை நீட்டிக்கப்பட்டது.
    • தொடர்ந்து 5 ஆண்டாக அவசர நிலை நீட்டிக்கப்பட்டு வருகிறது.

    பாங்காக்:

    மியான்மரில் கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியது. பொது தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டது. அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    அப்போது 2023, ஆகஸ்டு மாதம் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என ராணுவம் உறுதியளித்தது. தொடர்ந்து அவசர நிலையை நீட்டித்து வருவதால் பொதுத்தேர்தலையும் ஒத்தி வைத்தது.

    இந்நிலையில், மியான்மர் நாட்டில் மேலும் 6 மாத காலத்துக்கு அவசர நிலை நீட்டிக்கப்படுகிறது என அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது.

    தொடர்ந்து 5 ஆண்டாக அவசர நிலை நீட்டிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    • நிலநடுக்கத்தால் இதுவரை பெரிய சேதம் எதுவும் பதிவாகவில்லை.
    • சாண்டோரினி தீவிலிருந்து 11 ஆயிரம் பேர் வெளியேறி விட்டனர்.

    ஐரோப்பாவின் தென்கிழக்கே உள்ள கிரீஸ் நாட்டின் சாண்டோரினி தீவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. புதன்கிழமை இரவு ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 5.2ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் இதுவரை பெரிய சேதம் எதுவும் பதிவாகவில்லை.

    கடந்த ஒரு வாரத்திற்குள் 7,700 நிலநடுக்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், புதன்கிழமை இரவு பதிவான நிலநடுக்கமே சக்திவாய்ந்த நிலநடுக்கமாக கருதப்படுகிறது.



    நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்த நிலையில், அவசர நிலை பிரகடனம் படுத்தப்பட்டது. இந்த அவசர நிலையானது மார்ச் 3-ந்தேதி வரை அமலில் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதை தொடர்ந்து சாண்டோரினி தீவிலிருந்து 11 ஆயிரம் பேர் வெளியேறி விட்டனர். சுமார் 7ஆயிரம் பேர் படகு மூலமாகவும், 4ஆயிரம் பேர் விமானம் மூலமாகவும் புறப்பட்டனர். 

    • இலங்கையில் அதிபர் பதவிக்கு நாளை மறுநாள் தேர்தல் நடத்தப்படுகிறது
    • அதிபர் தேர்தலையொட்டி வன்முறை பரவாமல் இருக்க நடவடிக்கை

    கொழும்பு:

    இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிரான மக்கள் புரட்சி தீவிரமடைந்ததையடுத்து அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றார். பின்னர் அவர் பதவி விலகினார். அவர் ராஜினாமா செய்ததையடுத்து, காலியாக இருக்கும் அதிபர் பதவிக்கு நாளை மறுநாள் (ஜூலை 20) தேர்தல் நடைபெறுகிறது.

    தேர்தலையொட்டி வன்முறை பரவாமல் இருக்கவும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையிலும் இன்று முதல் மீண்டும் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை இடைக்கால அதிபர் ரணில் விக்கிரமசிங்கே பிறப்பித்தார்.

    இதன்மூலம் பாதுகாப்புப் படையினருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து பகுதிகளிலும் சோதனை நடத்தி ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை கைப்பற்றுதல், கைது செய்தல் போன்ற அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள்.

    ×