search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரவுடி கொலை"

    • தனிப்படை போலீசார் திருமங்கலம், திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
    • கடந்த சில நாட்களாக தங்கி இருந்த தனக்கன்குளம் பகுதியில் முகாமிட்டு கிருஷ்ணகுமாரை நோட்டமிட்டு வந்துள்ளனர்.

    திருமங்கலம்:

    நெல்லை பாளையங்கோட்டை அருகே உள்ள பாளையஞ்செட்டிகுளத்தை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (வயது 31). இவர் மீது போலீஸ் நிலையங்களில் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கிருஷ்ணகுமார் கடந்த ஆண்டு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    தண்டனை காலம் முடிந்த பின் வெளியே வந்த கிருஷ்ணகுமாரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தது. இதன் காரணமாக மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள தனக்கன்குளம் பகுதியில் கிருஷ்ணகுமார் தனியாக வீடு எடுத்து தங்கியிருந்தார். அந்த பகுதியில் வெல்டிங் தொழில் செய்து வந்த அவர் தனியாக தொழில் தொடங்கவும் திட்டமிட்டு அதற்கான பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

    இந்நிலையில் நேற்று மாலை வேலைக்கு சென்று விட்டு கிருஷ்ணகுமார் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். மதுரை திருநகரை அடுத்த கூத்தியார்குண்டு-கருவே லம்பட்டி சாலையில் உள்ள ரெயில்வே கேட் அருகே சென்றபோது காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் அவர்கள் இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த கும்பல் கிருஷ்ணகுமாரை சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த கிருஷ்ணகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் சூப்பிரண்டு சிவப்பிரசாத் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் கொலையாளிகளை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் திருமங்கலம், திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். மேலும் தொடர் விசாரணையில் கொலையாளிகள் உசிலம்பட்டி அருகே செக்கானூரணி பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து அங்கு சென்ற தனிப்படை போலீசார் 4 பேரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர். போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர்களிடம் கிடுக்கிப்படி விசாரணை நடத்தப்பட்டது. இதில் அவர்கள் நெல்லை பாளையஞ்செட்டிகுளத்தை சேர்ந்த மாரிராஜ் (30), மேலகுளத்தைச் சேர்ந்த நாராயணன் (29), எம்.கே.பி. நகரைச் சேர்ந்த விஜய் பிரகாஷ் (29), சாலமன் சியான் பிரபாகரன் (29) என தெரிந்தது.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாரிராஜ் ஒரு வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்டிருந்தார். இதற்கு சாட்சி சொல்லக் கூடாது என கிருஷ்ணகுமார் மற்றும் அவரது தரப்பினர் தொடர்ந்து மிரட்டி வந்துள்ளனர். ஆனால் அதற்கு அவர் மறுத்துவிட்டார். இதையடுத்து டாஸ்மாக் பாரில் இருந்த மாரிராஜை, கிருஷ்ணகுமார் சரமாரியாக அரிவாளால் வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த மாரிராஜ் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உயிர் பிழைத்தார்.

    இதற்கு பழி வாங்கும் நோக்கத்தில் கிருஷ்ணகுமாரை கொலை செய்ய மாரிராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் திட்டம் தீட்டி வந்துள்ளனர். அதன்படி கடந்த சில நாட்களாக அவர் தங்கி இருந்த தனக்கன்குளம் பகுதியில் முகாமிட்டு கிருஷ்ணகுமாரை நோட்டமிட்டு வந்துள்ளனர்.

    நேற்று ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் சென்றபோது கிருஷ்ணகுமாரை, மாரிராஜ் கும்பல் அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளது. மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    • மேட்டூரில் உள்ள முனியப்பன் கோவிலுக்கு செல்வதற்காக காரை தரும்படி கிட்டா மணிகண்டனிடம் கேட்டார்.
    • கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக போலீசார் மாற்றி உள்ளனர்.

    சேலம்:

    சேலம் கோரிமேடு ஜல்லிக்காடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் என்ற கிட்டா மணிகண்டன் (வயது 30), பிரபல ரவுடி. திருமணமாகாத இவர் சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார்.

    இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் மகாவிஷ்ணு (32). இவர் மேட்டூரில் உள்ள முனியப்பன் கோவிலுக்கு செல்வதற்காக காரை தரும்படி கிட்டா மணிகண்டனிடம் கேட்டார்.

    அதற்கு அவர் கார் இப்போது தான் வாங்கியிருக்கிறேன், நானே ஓட்டி கொண்டு வருகிறேன் என்று கூறினார். இதனால் வேறு ஒரு காரில் மேட்டூர் சென்ற மகாவிஷ்ணு நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வந்தார். அப்போது ரவுடி கிட்டா மணிகண்டன் என்னிடம் காரை கேட்டு விட்டு எதுவுமே சொல்லாமல் போய் விட்டாயே வண்டிக்கு டீசலை போட்டு கொண்டு காத்திருக்கிறேன் என கூறினார்.

    முன்னதாக மகாவிஷ்ணுவின் அக்காவிடமும் இவ்வாறு கேட்டு அவர் தகராறு செய்தார். இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மகாவிஷ்ணு அங்கிருந்த இரும்பு ராடால் ரவுடி கிட்டா மணிகண்டன் மண்டையில் ஓங்கி அடித்தார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    இது குறித்த தகவல் அறிந்த கன்னங்குறிச்சி போலீசார் அங்கு விரைந்து சென்ற மகாவிஷ்ணுவை கைது செய்தனர். அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து நேற்று மாலை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இதற்கிடையே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ரவுடி கிட்டா மணிகண்டன் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். இதையடுத்து கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக போலீசார் மாற்றி உள்ளனர்.

    • மர்ம கும்பல் மோகன் ராஜை கடந்த 2 நாட்களுக்கு முன்பே வீடு புகுந்து கொலை செய்து இருக்கலாம் என்று தெரிகிறது
    • கொலையாளிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.

    வண்டலூர்:

    வண்டலூரை அடுத்த ஆதனூர், டி.டி.சி நகரை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது25). ரவுடி. இவர் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

    இந்த நிலையில் இன்று காலை மோகன்ராஜ் தங்கி இருந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் மணிமங்கலம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து பார்த்தபோது வீட்டில் உள்ள அறையில் மோகன்ராஜ் கொடூராமாக வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார். ரத்தம் முழுவதும் காய்ந்து இருந்தது.

    எனவே மர்ம கும்பல் மோகன் ராஜை கடந்த 2 நாட்களுக்கு முன்பே வீடு புகுந்து கொலை செய்து இருக்கலாம் என்று தெரிகிறது. அவர் மட்டும் தனியாக இருந்ததால் கொலை நடந்தது பற்றி அக்கம்பக்கத்தினருக்கு தெரியவில்லை. துர்நாற்றம் வீசிய பின்னரே வெளியில் தெரிந்நது.

    கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை. கொலையாளிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.

    கொலையுண்ட மோகன் ராஜ் மீது கடந்த 2021-ம் ஆண்டு கொலை வழக்கு உள்ளது. அவரது தந்தை பம்மலில் வசித்து வருகிறார். தாய் மலேசியாவில் வேலை பார்த்து வருகிறார். பல்வேறு வழக்குகளில் எதிரிகள் மற்றும் போலீசார் தேடுவதை அறிந்ததும் மோகன்ராஜ் டி.டி.சி நகரில் தனியாக வீடு எடுத்து தங்கி இருந்து உள்ளார்.

    இதனை அறிந்த எதிர்தரப்பினர் வீடுபுகுந்து மோகன்ராஜை வெட்டி கொலை செய்து விட்டனர். பழிக்குப் பழியாக இந்த கொலை நடந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதுதொடர்பாக போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    வீடு புகுந்து ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கொலையாளிகள் 5 பேரும் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளிலேயே ஏறி அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.
    • கொலையாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்னை:

    புழல், அடுத்த காவாங்கரை, 15-வது தெருவை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மகன் சத்யா(வயது22). ரவுடியான இவர் மீது கொலை வழக்கு உள்ளது.

    நேற்று இரவு அவர் சென்னை எழும்பூருக்கு வந்திருந்தார். பின்னர் நண்பர்களுடன் பாண்டியத் ரோட்டில் உள்ள ஜூஸ் மற்றும் டீக்கடை முன்பு தனது மோட்டார் சைக்கிளில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.

    அப்போது 5 பேர் கும்பல் இரண்டு மோட்டார் சைக்கிளில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சத்யாவை சுற்றி வளைத்தனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சத்யா தப்பி ஓட முயன்றார். ஆனால் மர்ம கும்பல் அவரை ஓட, ஓட விரட்டி சரமாரியாக வெட்டினார்கள் . இதில் கழுத்து, வாய், காது உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே சத்யா ரத்த வெள்ளத்தில் துடி துடித்து பலியானார்.

    கொலையாளிகள் ரவுடி சத்யாவை வெட்டி கொலை செய்வதை கண்டு அவ்வழியே சென்று பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். கொலையாளிகள் 5 பேரும் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளிலேயே ஏறி அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

    இது பற்றி தகவல் அறிந்ததும் எழும்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். சத்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இன்று அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. கொலையாளிகள் யார்? எதற்காக அவர்கள் சத்யாவை கொலை செய்தனர்? என்பது பற்றி எழும்பூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    இதில் மாதவரம் பகுதியை சேர்ந்த நாய் ரமேஷ் என்பவர் கொலைக்கு பழிக்கு பழி வாங்கும் வகையில் ரவுடி சத்யா கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பேசின்பிரிட்ஜ் அருகே நாய் ரமேஷ் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தற்போது கொலையுண்ட சத்யா குற்றவாளியாக இருந்தார். இந்த மோதலின் தொடர்ச்சியாக சத்யா கொலை செய்யப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். கொலையாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு பட்டினப்பாக்கம் பகுதியில் பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலை செய்யப்பட்டிருந்தார்.இந்த நிலையில் சென்னை மாநகரின் முக்கிய பகுதியான எழும்பூர் பாந்தியன் சாலையில் வைத்து ரவுடி சத்யா கொலை செய்யப்பட்டுள்ளார்.

    இதையடுத்து சென்னை மாநகரில் வெளியூர்களில் இருந்து வந்து ஒதுங்கி இருக்கும் ரவுடிகளைகளை ஒடுக்க போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டு உள்ளார். போலீசார் தங்களது பகுதியில் பதுங்கியுள்ள ரவுடிகளை பிடிக்க தீவிர வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.

    • கொலை செய்யப்பட்ட ரவுடி சுதாகருக்கு திருமணம் ஆகவில்லை.
    • தலைமுறைவாக இருக்கும் முக்கிய குற்றவாளியான பாஸ்கரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள திருமழப்பாடி புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சுதாகர் (வயது 42).

    பிரபல ரவுடி. இவர் மீது அரியலூர் மாவட்டம் பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன.

    இவருக்கும் குல மாணிக்கம் கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் பாஸ்கர் ரவுடி சுதாகரை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி அவர் கண்டிரா தீர்த்தம் கிராமத்தைச் சேர்ந்த தனது கூட்டாளி அர்ஜு ன்ராஜ் என்பவருடன் அரிவாள், மிளகாய் பொடி ஆகியவற்றை எடுத்து மறைத்து வைத்து கொண்டு சுதாகர் வீட்டுக்கு சென்றனர்.

    பின்னர் வீட்டு முன்பு நின்று கொண்டு அவரை கெட்ட வார்த்தைகளால் திட்டினர். ஆனால் இதை சுதாகர் கண்டுகொள்ளாமல் வீட்டை பூட்டிக் கொண்டு உள்ளேயே இருந்தார்.

    பின்னர் அவரை வெளியில் வர வைப்பதற்காக பாஸ்கர், அர்ஜுன் ராஜ் ஆகிய இருவரும் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுதாகரின் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்தனர்.

    அப்போதும் சுதாகர் வெளியே வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கொலையாளிகள் வீட்டின் மேற்கூறையில் கற்களை வீசி தாக்கினர். இதில் ஓடுகள் உடைந்து விழுந்தது.

    அதைத்தொடர்ந்து சுதாகர் தனது குடும்பத்தினரை பாதுகாப்பாக வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டு வெளியே வந்தார்.

    அடுத்த நொடி தயாராக நின்ற பாஸ்கரும், அர்ஜுனும் அவரது முகத்தில் மிளகாய் பொடி தூவி கண்ணிமைக்கும் நேரத்தில் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் சுதாகர் சம்பவ இடத்தில் துடிதுடித்து இறந்தார். பின்னர் கொலையாளிகள் அங்கிருந்து தப்பி சென்றனர்.

    இதுகுறித்து திருமானூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    சம்பவ இடத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ் கான் விசாரணை நடத்தினர். பின்னர் சப்-இன்ஸ்பெக்டர் ராஜவேல் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகளை தேடினர்.

    பின்னர் தனிப்படை போலீசார் விரைந்து செயல்பட்டு அர்ஜுன்ராஜை அதிரடியாக கைது செய்தனர்.

    அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

    அதில், கொலை செய்யப்பட்ட ரவுடி சுதாகருக்கு திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில் பாஸ்கரின் அண்ணன் ஜெகதீசனின் மனைவியுடன் அவருக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

    இதை அறிந்த ஜெகதீசனின் சகோதரர் பாஸ்கர் அதிர்ச்சி அடைந்து ரவுடியை கண்டித்தார். அவர்களுக்குள் பல முறை சண்டையும் நடந்தது. இருந்தபோதிலும் சுதாகர் கள்ளத்தொடர்பை துண்டிக்கவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த பாஸ்கர் அவரை கொலை செய்ய திட்டமிட்டார். பின்னர் நானும் அவரும் சென்று வீட்டுக்குள் இருந்த ரவுடியை வெளியே வர வைத்து வெட்டிக்கொலை செய்தோம் எனக் கூறியுள்ளார்.

    தலைமுறைவாக இருக்கும் முக்கிய குற்றவாளியான பாஸ்கரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

    கள்ளத்தொடர்பு விவகாரத்தில் ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • எபினேசரிடம் மோதலில் ஈடுபட்ட ரவுடி தற்போது தலைமறைவாக உள்ளார்.
    • ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் சமீபகாலமாக வெடிகுண்டு வீசி கொலைசெய்யும் கலாசாரம் பரவி வருகிறது.

    ஸ்ரீபெரும்புதூர்:

    திருமழிசை பகுதியை சேர்ந்தவர் எபினேசர்(வயது32).ரவுடி. இவர் மீது கொலை, மிரட்டல், அடிதடி, ஆள் கடத்தல் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

    நேற்று மாலை எபினேசர் ஸ்ரீபெரும்புதூர் அருகே மண்ணூர் என்ற இடத்தில் ஆட்டோவில் வந்து கொண்டு இருந்தார். அப்போது காரில் வந்த மர்ம கும்பல் திடீரென ஆட்டோ மீது காரை மோதினர். மேலும் 2 நாட்டுவெடி குண்டுகளையும் ஆட்டோ மீது வீசினர். இதனால் அதிர்ச்சி அடைந்த எபினேசர் ஆட்டோவில் இருந்து கீழே குதித்து தப்பி ஓட்டம் பிடித்தார். அருகில் உள்ள வயல்வெளியில் ஓடிய எபினேசரை மர்மகும்பல் விரட்டிச்சென்று சரமாரியாக வெட்டி கொடூரமாக கொலை செய்தனர்.

    இதற்கிடையே எபினேசர் வந்த ஆட்டோவை ஓட்டிவந்தவர் அங்கிருந்து ஆட்டோவுடன் தப்பி சென்றுவிட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சந்திரதாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். ரவுடிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இந்த கொலை நடந்து இருப்பது விசாரணையில் தெரியவந்து உள்ளது. திருமழிசை பகுதியை சேர்ந்த மற்றொரு ரவுடிக்கும் எபினேசருக்கும் மோதல் இருந்து உள்ளது. இதில் யார்? பெரியவர்? என்று அவர்களுக்கு இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது. இந்த தகராறில் இருதரப்பையும் சேர்ந்த ஸ்டீபன்ராஜ், கிரிஸ்டோபர் ஆகியோர் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டனர். இதனால் எபினேசரும், எதிர்தரப்பு ரவுடியும் மாறிமாறி யார் முந்திதீர்த்துகட்டுவது என்று திட்டமிட்டு வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் எபினேசர் கொலை செய்யப்பட்டு உள்ளார்.

    எபினேசரிடம் மோதலில் ஈடுபட்ட ரவுடி தற்போது தலைமறைவாக உள்ளார். இதனால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்து உள்ளது. கொலையாளிகளை பிடிக்க துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதேபோல் கடந்த 2020-ம் ஆண்டு திருமழிசை பகுதியை சேர்ந்த ஆனந்தன் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் எபினேசர் குற்றவாளி ஆவார். எனவே இந்த கொலைக்கு பழிக்குபழியாக எபினேசர் தீர்த்து கட்டப்பட்டாரா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.

    ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் சமீபகாலமாக வெடிகுண்டு வீசி கொலைசெய்யும் கலாசாரம் பரவி வருகிறது. ஏற்கனவே ஸ்ரீபெரும்புதூர் தொழில் அதிபர் பி.பி.ஜி. குமரன்,பா.ஜ.க.பிரமுகர் பி.பி.ஜி.டி சங்கர், கடந்த மாதம் தி.மு.க. பிரமுகர் ஆல்பர்ட் என அனைவரும் வெடி குண்டு வீசியும் வெட்டி கொலை செய்யப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • கடந்த 14-ந்தேதி இரவு பாலமுருகன் புதுவை பஸ் நிலையத்துக்கு வந்தார்.
    • கொலை தொடர்பாக உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    புதுச்சேரி:

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் மாரியம்மன்கோவில் வீதியை சேர்ந்தவர் ஓசை மணி. இவரது மகன் பாலமுருகன் (வயது 28). ரவுடியான இவர் அதே பகுதியை சேர்ந்த காமராஜ் என்பவர் கொலையில் தொடர்புடையவர்.

    இந்த நிலையில் கடந்த 14-ந்தேதி இரவு பாலமுருகன் புதுவை பஸ் நிலையத்துக்கு வந்தார். திருநங்கை ஒருவரை பஸ் ஏற்றிவிட அவர் காரைக்கால் பஸ்கள் நிற்கும் இடத்துக்கு வந்துள்ளார்.

    அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் பாலமுருகனை தாக்கி கீழே தள்ளி வயிற்றில் மிதித்து தாக்கியது. இதில் சுருண்டு விழுந்த அவரை அங்கிருந்துவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக னியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இந்த கொலை தொடர்பாக உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் முன்விரோதம் காரணமாக கடலூரை சேர்ந்த சூர்யா (25), விஷ்ணு (22) தேவ் (23) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் சேர்ந்து பாலமுருகனை கொலை செய்தது தெரியவந்தது. அவர்களை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

    இந்த நிலையில் அவர்கள் கடலூரில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று சூர்யா, விஷ்ணு, தேவ் உள்பட 4 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • கொலை செய்த மர்ம கும்பல் குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • விசாரணையில் போலீசாருக்கு பல திடுக்கிடும் தகவல் தெரிய வந்தது.

    கடலூர்:

    புதுவை அரியாங்குப்பத்தை சேர்ந்தவர் முகிலன். பிரபல ரவுடி. இவர் நேற்று இரவு கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே பாலூர் சித்தரசூர் காலனி பகுதியில் உள்ள விவசாய கரும்பு தோட்டத்தில் கும்பலுடன் சேர்ந்து மது அருந்தி கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் முகிலனை வெட்டி கொலை செய்தது. இந்த சம்பவம் குறித்து அறிந்த நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குபதிவு செய்தனர். கொலையாளிகளை பிடிக்க பண்ருட்டி டி.எஸ்.பி சபியுல்லா, இன்ஸ்பெக்டர் சீனுவாசன், சப்-இன்ஸ்பெக்டர் தலைமையிலான 3 தனிப்படை அமைக்கப்பட்டு தலைமறைவான கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் கொலை செய்த மர்ம கும்பல் குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்படி போலீசார் 5 பேர் கொண்ட கும்பலை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் புதுவை ரவுடி முகிலனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். உடனே போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் போலீசாருக்கு பல திடுக்கிடும் தகவல் தெரிய வந்தது.

    ரவுடியை கொலை செய்த கும்பல் புதுவை மாநிலத்தை கலக்கும் மற்றொரு பிரபல ரவுடியான முதலியார்பேட்டை பகுதியை சேர்ந்த விக்கி என்கிற விக்னேஸ்வரன் (வயது 31), அரியாங்குப்பம் விஸ்வா (23), ரெட்டியார்பாளையம் கணபதி (27), புவனேஸ்வர் (20), உழவர்கரையை சேர்ந்த ஸ்ரீராக் (20) ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள் வருமாறு:-

    ரவுடி விக்கிக்கும் கொலை செய்யப்பட்ட முகிலனுக்கும் புதுவை மாநிலத்தில் யார் பெரிய ரவுடி என்ற முன்விரோத தகராறு நீண்ட நாட்களாக இருந்து வந்துள்ளது. இந்த முன்விரோத தகராறில் ரவுடி விக்கி என்ற விக்னேஸ்வரனை, முகிலன் திட்டம் தீட்டி கொலை செய்ய முயன்றுள்ளார்.

    ஏற்கனவே ஒரு வழக்கில் கைது செய்யப்பட்ட முகிலன் சமீபத்தில் சிறையில் இருந்து வெளியேவந்தார். சிறையில் இருக்கும் போது நெல்லிக்குப்பம் பகுதியை சேர்ந்த புகழ் என்ற கைதியுடன் பழக்கம் ஏற்பட்டது. ஜெயிலில் இருந்து வெளியே வந்த முகிலன் புதுவையில் இருந்தால் ரவுடி விக்கி கொலை செய்து விடுவான் என்ற நோக்கத்தில் சிறையில் பழக்கமான கைதி புகழின் பகுதியான சித்தரசூர் பகுதிக்கு சென்று தலைமறைவாகிவிட்டார். இந்நிலையில் விக்னேஸ்வரன் தரப்பை சேர்ந்தவர்கள் முகிலனை தீவிரமாக தேடி வந்த நிலையில் முகிலன் நெல்லிக்குப்பம் அருகே சித்தரசூர் பகுதியில் பதுங்கியிருப்பது விக்கி தரப்பிற்கு தெரிய வந்தது.

    இதனையடுத்து முகிலன் எங்கு செல்கிறான் என்பதை விக்கி தரப்பை சேர்ந்தவர்கள் நோட்டமிட்டனர். இந்நிலையில் நேற்று ஒரு கும்பலுடன் முகிலன் சித்தரசூர் பகுதியை அடுத்த விவசாய கரும்பு தோட்டத்தில் மது குடித்து கொண்டிங்கும் தகவல் விக்கி தரப்பிற்கு தெரிவந்தது. உடனே விக்கி தரப்பை சேர்ந்தவர்கள் வீச்சரிவாளுடன் அங்கு சென்று முகிலனை ஓட ஓடவிரட்டி கொலை செய்தது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

    முகிலன் கொலை செய்யப்பட்டபோது அவருடன் இருந்த வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த கொலை சம்பவம் நெல்லிக்குப்பம் பகுதி பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    • கடந்த சில தினங்களுக்கு முன்பாக மர்மநபர்கள் ராமு மீது தாக்குதல் நடத்தினர்.
    • ராமுவை சுற்றி வளைத்து உருட்டுக் கட்டையால் தாக்கி, கத்தியால் வெட்டினர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் வடக்கு வடுகு தெருவை சேர்ந்தவர் நாராயணன் மகன் ராமு என்கிற உண்டி ராமு (வயது 35). இவர் உண்டியலை உடைத்து திருடுவதில் கைதேர்ந்தவர். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவருக்கும் சிதம்பரம் தில்லைக்காளியம்மன் கோவில் அருகேயுள்ள எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த செல்வம் மகன் கஜேந்திரன் (21), மூர்த்தி மகன் கணேசன் (26) ஆகியோருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.கடந்த சில தினங்களுக்கு முன்பாக மர்மநபர்கள் ராமு மீது தாக்குதல் நடத்தினர். இதில் கைகளில் கத்தி வெட்டு காயங்களுடன் ராமு தப்பியதாக கூறப்படுகிறது. இதனால் ராமு வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்ததாக தெரிகிறது.

    இந்நிலையில் ஆடி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, தில்லைக் காளியம்மன் கோவிலில் விழா நடைபெற்றது. இதனால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அங்கு வந்த ராமு, ஒரு ஓட்டலில் அமர்ந்து டிபன் சாப்பிட்டார். இதனை அறிந்து வந்த கஜேந்திரன், கணேசன் ஆகியோர் ராமுவை சுற்றி வளைத்து உருட்டுக் கட்டையால் தாக்கி, கத்தியால் வெட்டினர். இதில் நிலை குலைந்த ராமு, பலத்த காயங்களுடன் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து கஜேந்திரன், கணேசன் ஆகியோர் சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்தில் சரணடைந்தனர்.

    உடனடியாக சம்பவ இடத்திற்கு சிதம்பரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி, நகர போலீசார் விரைந்து சென்றனர். கோவில் அருகே கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்த ராமுவின் உடலை கைப்பற்றினர். பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலை செய்ய பயன்படுத்திய கத்தி, உருட்டுக்கட்டைகளை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சிதம்பரம் நகர பகுதியில் பரபரப்பை உருவாக்கியுள்ளது,

    • வில்லிவாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் புருசோத்தமன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
    • விஜி மற்றும் அலெக்ஸ், ராஜேஸ், சுரேஷ், செல்வம், ராஜி ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

    அம்பத்தூர்:

    சென்னை வில்லிவாக்கத்தில் ரவுடி கல்லறை அப்பு நேற்று முன்தினம் ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்டார்.

    இதுதொடர்பாக வில்லிவாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் புருசோத்தமன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். போலீஸ் விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த மெக்கானிக் விஜி என்பவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ரவுடி அப்புவை வெட்டிக்கொன்றது தெரிய வந்தது.

    இதையடுத்து விஜி மற்றும் அலெக்ஸ், ராஜேஸ், சுரேஷ், செல்வம், ராஜி, ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். ரவுடி அப்பு, மகேஷ் என்பவரிடம் தனது ஆட்டோவை வாடகைக்கு கொடுத்திருந்தார். இந்த வாடகை பணத்தை வாங்கி வைத்துக்கொண்டு மெக்கானிக் விஜி கொடுக்காமல் ஏமாற்றியதால் ஏற்பட்ட தகராறில்தான் அப்பு கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

    இந்த விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட மோதலில் அப்பு, விஜியை கொன்று விடுவதாக மிரட்டியதால் விஜி முந்திக்கொண்டு அப்புவை போனில் அழைத்து நேரில் வரவழைத்து கொலை செய்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    • போலீசாரின் விசாரணையில் பழிக்கு பழியாக இந்த கொலை நடந்து இருப்பது தெரிந்தது.
    • வழக்கு விசாரணைக்கு ஆஜராக லோகேஷ் வந்த போதுதான் மர்மகும்பல் வெடிகுண்டு வீசி அவரை கொலை செய்து உள்ளது.

    செங்கல்பட்டு:

    தாம்பரம் அடுத்த இரும்புலியூர் செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் லோகேஷ் (வயது32). ரவுடி. நேற்று காலை இவர் ஒரு வழக்கு சம்பந்தமாக செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜராக வந்தார். அப்போது லோகேஷ் தனது நண்பர்கள் 2 பேருடன் கோர்ட்டு அருகே உள்ள டீக்கடை ஒன்றில் டீ குடித்துக் கொண்டு இருந்தார். அந்த நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கும்பல் திடீரென நாட்டு வெடி குண்டை டீக்கடையில் வீசினர். இதில் டீக்கடை ஒட்டி இருந்த சுற்றுச்சுவரில் பட்டு பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த லோகேஷ் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் மர்ம கும்பல் அவரை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றுவிட்டனர். கோர்ட்டு அருகே நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    செங்கல்பட்டு டவுன் போலீசார் விரைந்து வந்து உயிருக்கு போராடிய ரவுடி லோகேசை மீட்டு செங்கல் பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி லோகேஷ் பரிதாபமாக இறந்தார். போலீசாரின் விசாரணையில் பழிக்கு பழியாக இந்த கொலை நடந்து இருப்பது தெரிந்தது. லோகேசின் அண்ணன் ஏற்கனவே கொலை செய்யப்பட்டு உள்ளார். இந்த கொலைக்கு பழி தீர்க்க ஒருவரை கடந்த 2018-ம் ஆண்டு லோகேஷ் தீர்த்துக்கட்டி உள்ளார். இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராக லோகேஷ் வந்த போதுதான் மர்மகும்பல் வெடிகுண்டு வீசி அவரை கொலை செய்து உள்ளது.

    எனவே பழிக்கு பழியாக இந்த கொலை நடந்து இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. கொலையாளிகளை பிடிக்க எஸ்.பி. பரத் மேற் பார்வையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் லோகேஷ் கொலையில் தேடப்பட்ட விக்கி என்கிற விக்னேஷ் உள்பட 7 பேர் இன்று காலை திண்டிவனம் கோர்ட்டில் சரண் அடைந்தனர். அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர். இதன் பின்னரே கொலைக்கான காரணம் என்ன? என்பது தெரிய வரும்.

    • போலீசார் விரைந்து வந்து ஜெபராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • மர்மநபர்கள் அவரை கொலை செய்து தண்டவாளம் அருகே வீசி சென்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    வேப்பம்பட்டு:

    திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு கலைஞர் நகர் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் என்கிற ஜெபராஜ் (வயது30). ரவுடியான இவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட 15 வழக்குகள் உள்ளது. இந்தநிலையில் ஜெபராஜ் இன்று காலை வேப்பம்பட்டு ரெயில் நிலையம் அருகே சென்னை மார்க்கத்தில் உள்ள தண்டவாளம் பகுதியில் உள்ள முட்புதரில் பிணமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் திருவள்ளூர் ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் விரைந்து வந்து ஜெபராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரது ஒரு கால் மற்றும் தலையில் மட்டும் பலத்த காயம் உள்ளது. எனவே மர்மநபர்கள் அவரை கொலை செய்து தண்டவாளம் அருகே வீசி சென்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    அவருடன் மோதலில் உள்ளவர்கள் யார்? யார்? கடைசியாக யாருடன் சென்றார் என்பது குறித்த விபரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள். ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×