என் மலர்
நீங்கள் தேடியது "அடிக்கல்"
- சிங்கம்புணரி ஒன்றியங்களில் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அமைச்சர் பெரியகருப்பன் அடிக்கல் நாட்டினார்.
- ஊராட்சி மன்ற தலைவர் பாலசுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஒன்றி யங்களில் வேலைவாய்ப்பு முகாம், பள்ளி மற்றும் மயான பகுதிகளுக்கு சுற்றுச்சுவர் அமைத்தல், நியாயவிலைக் கடை திறப்பு, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார்.
இதில் அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் பங்கேற்று வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். தனியார் கல்வி நிறுவனமான எஸ்.எஸ்.மெட்ரிக் பள்ளியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி ஒன்றிய, நகர தி.மு.க. ஏற்பாட்டில் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.
அதில் கலந்து கொண்ட 40-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவதற்கான ஆணையை முகாமில் பங்கேற்றவர்களுக்கு அமைச்சர் வழங்கினார்.
நமக்கு நாமே திட்டத்தின் கீழ் தனியார் தொண்டு நிறுவனங்களின் பங்களிப்பாக ரூ.19 லட்சம், அரசு நிதியில் இருந்து ரூ.38 லட்சம் என மொத்தம் ரூ.57 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசு மேல்நி லைப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட பூமி பூஜை நடந்தது.
மேலும் முஸ்லிம்களின் மயான பகுதிக்கு சுற்றுச்சுவர் கட்ட அமைச்சர் தனது சொந்த நிதியில் இருந்து ரூ.10 லட்சம், அரசு நிதி ரூ.20 லட்சம் என மொத்தம் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் அதற்கான பணியை தொடங்கி வைத்தார்.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் சார்பில் முறையூர், அரளிப்பட்டி, கிருங்கா கோட்டை, சூரக்குடி, காளாப்பூர், சிங்கம்புணரி போன்ற பகுதிகளில் உள்ள 91 பயனாளிகளுக்கு ரூ.27.01 லட்சம் மதிப்பீட்டில் பயிர் கடன், புதிய வாகனம் என பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து பேரூராட்சிக்கு உட்பட்ட 2-வது வார்டு மற்றும் பிரான்மலை ஊராட்சி போன்ற பகுதிகளில் நீண்ட நாள் கோரிக்கையான முழுநேர புதிய நியாய விலை கடைகளை அமைச்சர் திறந்து வைத்து அந்த பகுதிகளில் செயல்பட்டு வரும் மகளிர் சுயநிதி குழுக்களுக்கு நலத்திட்ட உதவிக்கான ஆணைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன், மாவட்ட கல்வி அலுவலர் சண்முகநாதன், கூட்டுறவு சங்க இணை பதிவாளர் கோ.ஜினு, துணைப் பதிவாளர் குழந்தை வேல், மாவட்ட வழங்கல் அலுவலர் ரத்தினவேல்,ஆவின் பால்வளத் தலைவர் சேங்கை மாறன், பேரூராட்சி சேர்மன் அம்பலமுத்து, துணை சேர்மன் செந்தில், செயல் அலுவலர் ஜான் முகமது, கவுன்சிலர் செந்தில் கிருஷ்ணன், 2-வது வார்டு கவுன்சிலர் முகமது நிஷா ஷேக் அப்துல்லா, பிரான்மலை ஊராட்சி மன்ற தலைவர் பாலசுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- பழைய கட்டிடங்களை இடித்துவிட்டு புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
- சுகாதார நிலையத்தில் அடிக்கல் நாட்டி பணியை துவங்கி வைத்தனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருவெண்காட்டில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது.
இதன் மூலம் சுற்றியுள்ள 30 க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சை பெற்று பலன் அடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் இங்குள்ள கட்டிடங்கள் மிகவும் பழுதடைந்து இடிந்து விடும் நிலையில் இருந்தது.
இப்பகுதியில் அண்மையில் ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பழைய கட்டிடங்களை இடித்துவிட்டு புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்திருதார்.
அதன்படி புதிய கட்டிடம் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டது ரூ1 கோடியே 98 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டுமான பணி அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
திருவெண்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் திருவெண்காடு வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்மோகன் தலைமை வகித்தார்.
ஒன்றியக் குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் முத்து.மகேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் ரவி, ஒன்றிய செயலாளர் பஞ்சுகுமார், அவை தலைவர் நெடுஞ்செழியன், எம்.என்.ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருவெண்காடு ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி நடராஜன் வரவேற்றார் விழாவில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதாமுருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்–செல்வம் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணியை துவங்கி வைத்தனர்.
ஒன்றிய துணைச் செயலாளர் ரவி, தினகர், மங்கை.வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒப்பந்ததாரர் பழனிவேல் நன்றி கூறினார்.
- ரூ.1.14 கோடியில் வணிக வளாகம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது.
- 24 கடைகளுடன் கூடிய வணிக வளாகம் கட்டப்பட உள்ளது என்றார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் ரூ.1.14 கோடி மதிப்பில் தினசரி சந்தைக்கான புதிய வணிக வளாகம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. நகராட்சி தலைவர் தங்கம் ரவிகண்ணன் தலைமை தாங்கினார். துணை தலைவர் செல்வமணி முன்னிலை வகித்தார்.
மாநகராட்சிகள், நக ராட்சிகள், பேரூராட்சிகளில் அடிப்படை கட்ட மைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக கடந்த ஆண்டு கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் 24 கடை களுடன் கூடிய தினசரி சந்தைக்கான வணிக வளாகம் கட்டுவதற்கு ரூ.1.14 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்காக சர்க்கரை குளம் அருகே இடம் தேர்வு செய்யப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டது.
இதுகுறித்து நகராட்சி தலைவர் தங்கம் ரவி கண்ணன் கூறுகையில், நகராட்சியில் வரியற்ற வருவாயை அதிகப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நகர் பகுதியில் நெரிசலை குறைக்கும் வகையில் தினசரி சந்தை அமைப்பதற்காக 24 கடைகளுடன் கூடிய வணிக வளாகம் கட்டப்பட உள்ளது என்றார்.
அடிக்கல் நாட்டு விழாவில் நகராட்சி பொறி யாளர் தங்கப்பாண்டியன், ஒப்பந்ததாரர் குழந்தைவேலு, கவுன்சிலர் மீரா தனலட்சுமி முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- அருப்புக்கோட்டையில் ரூ.133.5 கோடியில் மேற்கு புறவழிச்சாலை அமைக்கும் பணியை தொடங்கியது.
- அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டினார்
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை- விருதுநகர் சாலையில் உள்ள துணைமின் நிலையம் அருகில் ரூ.133.5 கோடி மதிப்பில் அருப்புக்கோட்டை -மேற்கு புறவழிச்சாலை அமைக்கும் பணி தொடங்கியது.
கலெக்டர் மேகநாத ரெட்டி தலைமையில், அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டினார். பின்னர் அமைச்சர் கூறியதாவது:-
இந்த புறவழிச் சாலை யானது அருப்புக்கோட்டை- கோவிலாங்குளம் விலக்கில் ஆரம்பித்து வலதுபுறம் பிரிந்து ஸ்ரீவில்லிபுத்தூர்- பார்த்திபனூர் சாலையில் குறுக்கிட்டு சுக்கிலநத்தத்தில் மீண்டும் குறுக்கிட்டு தேசிய நெடுஞ்சாலையில் இணைக்கப்படுகிறது.
இதனுடைய தூரம் 10 கி.மீ. ஆகும். 35.25 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப் பட்டுள்ளது. ரூ.98.58 கோடி சாலை பணிக்கும், ரூ.35.4 கோடி நில எடுப்புக்கும் பயன்படுத்தப்பட உள்ளது.
இந்த புறவழிச்சாலை பணிகள் முடிவடையும் போது விருதுநகர், ராஜபாளையம், தென்காசியில் இருந்து ராமநாதபுரம் மற்றும் ராமேசுவரத்திற்கும், ராமேசுவரம், ராமநாதபு ரத்தில் இருந்து விருதுநகர், ராஜபாளையம், தென்கா சிக்கும் செல்லும் வாக னங்கள் போக்குவரத்து நெரிசலுள்ள மற்றும் குறு கலானஅருப்புக்கோட்டை நகர பகுதியை தவிர்த்து பயணிக்க ஏதுவாக அமையும்.
அதேபோல், அருப்புக்கோட்டை மேற்கு பகுதியில் வசிப்பவர்கள் வாகன நெரிசலுள்ள நகர பகுதிகளை தவிர்த்து, மதுரை மற்றும் தூத்துக்குடிக்கு சிரமமின்றி பயணம் செய்யவும், பந்தல்குடியில் இருந்து விருதுநகருக்கும், பாலையம்பட்டியில் இருந்து விருதுநகருக்கும் வாகன நெரிசலுள்ள நகர பகுதியை தவிர்த்து
சுலபமாக பயணிக்க ஏதுவாக இந்த புறவழிச்சாலை அமையும். மேலும், அருப்புக்கோட்டை நகரபகுதியில் காணப்படும் வாகன போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கருண்கரெட், கோட்டாட்சியர் கல்யாணகுமார், அருப்புக்கோட்டை நகர்மன்ற தலைவர் சுந்தர லட்சுமி சிவபிரகாசம் மற்றும் பலர் பங்கேற்றனர்.
- திருப்புல்லாணி பகுதியில் திட்டப்பணிகளை எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
- புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்புல் லாணி கிழக்கு ஒன்றிய பகுதிகளில் எம்.எல்.ஏ.வும், தி.மு.க. மாவட்ட செயலாளருமான காதர் பாட்சா முத்துராமலிங்கம் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
கோரைக்கூட்டம் ஊராட்சி தன்ரம்பல் கிராமத்தில் புதிய டிரான்ஸ்பார்மர், தினைக்குளத்தில் சைக்கிள் நிறுத்தம், மரைக்கா நக ரில் நிழற்குடை, பெரிய பட்டினத்தில் 63 கே.வி. திறன் கொண்ட டிரான்ஸ்பார்மர், ரேசன்கடை, வண்ணாங் குண்டு ஊராட்சி நேருபுரம் கிராமத்தில் கலையரங்கம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.
தினைக்குளத்தில் கலையரங்கம் கட்டவும், வண்ணாங்குண்டு தொடக்கப்பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டவும் அடிக்கல் நாட்டினார். அனைத்து இடங்களிலும் பொதுமக்கள் மற்றும் தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ.வுக்கு வரவேற்பு அளித்தனர். அங்கு தி.மு.க. கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். அனைத்து கிரா மங்களிலும் பொதுமக்களை சந்தித்து அவர்களிடம் குறைகளை கேட்டு, கோரிக்கை மனுக்களை பெற்றார். இதில் ராமநாதபுரம் நகர் மன்ற தலைவர் கார்மேகம், துணைத் தலைவர் பிரவீன் தங்கம், மின்வாரிய செயற்பொ றியாளர் இளங்கோ, உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி பொறியாளர் சோமசுந்தரம், ராமநாதபுரம் ஒன்றிய குழு தலைவர் வக்கீல் பிரபாகரன், மாவட்ட கவுன்சிலர் ஆதித்தன், பெரியபட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் அக்பர் ஜான் பீவி, ஒன்றிய கவுன்சிலர் பைரோஸ் கான், ஊராட்சி துணைத் தலைவர் புரோஸ் கான்.
எஸ்.டி.பி.ஐ. நகர் தலைவர் மீராசா, நகர் செயலாளர் பீர் மைதீன், எஸ்.டி.டி.யூ. நகர் தலைவர் இஜாஸ், ஹக் அம்பலம், கீழக்கரை நகர் செயலாளர் பஷீர் அகமது, மாணவரணி அமைப்பாளர் இப்திகார் ஹசன், நகர்மன்ற உறுப்பினர்கள் நசீருதீன், மீரான் அலி, திருப்புல்லாணி கிழக்கு ஒன்றிய செயலாளர் நாகேசுவரன், மண்டபம் மத்திய ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் பிரவீன், பெரியபட்டினம் தி.மு.க. செயலாளர் அன்சாரி, ஒன்றிய முன்னாள் கவுன்சிலர் அபிபுல்லா, ராமநாதபுரம் மாவட்ட பிரதிநிதிகள் ஆனந்தன், டி.கே.குமார், ரகுநாதபுரம் ஊராட்சி தலைவர் கோபால கிருஷ்ணன், திருப்புல்லாணி ஒன்றிய கவுன்சிலர் கோவிந்த மூர்த்தி.திருப்புல்லாணி ஊராட்சி மன்ற தலை வர் கஜேந்திரமாலா முத்துகி ருஷ்ணன், வண்ணாங் குண்டு ஊராட்சி தலைவர் தியாகரா ஜன், ஜமாத் தலைவர் நிஜாப் கான், தி.மு.க.நிர்வாகி பஷீர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- சேதமடைந்த 2 வகுப்பறை கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டது.
- புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருச்செங்காட்டங்குடியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேதமடைந்த 2 வகுப்பறை கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டது.
இதை தொடர்ந்து புதிய வகுப்பறை கட்டிடம் கட்ட அரசுக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து அந்த பள்ளிக்கு புதிய பள்ளி கட்டிடங்கள் கட்டும் சிறப்பு திட்டம் 2022-23 கீழ் ரூ.26 லட்சம் மதிப்பீட்டில் 2 புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் வள்ளி கலியமூர்த்தி தலைமை தாங்கினார்.
ஒன்றியக்குழு உறுப்பினர் இளஞ்செழியன் முன்னிலை வகித்து அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.
இதில் ஒன்றிய பொறியாளர் சுரேஷ், பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆனந்த வல்லி, ஊராட்சி செயலர் அன்பழகன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- ரூ.10.50 கோடியில் பிரசவ சிகிச்சை பிரிவு கட்டிடத்துக்கு விரைவில் அடிக்கல் நாட்டுகிறார்.
- ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் அமை ப்பதற்கான கட்டுமானப் பணிகளும் நடைபெற்று வருகிறது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் மாவட்ட சுகாதார பேரவை நிகழ்ச்சி கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடந்தது.
இதில் அவர் பேசியதாவது:-
சிவகங்கை அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவ மனையில் சராசரியாக மாதந்தோறும் 400-க்கும் மேற்பட்ட பிரசவங்கள் நடைபெற்று வருகின்றன. இதை கருத்தில் கொண்டு இந்த வளாகத்தில் மருத்துவக் கட்டிடம் ரூ.10.50 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் அமைய உள்ளது. இதற்கு முதல்-அமைச்சர் காணொலிக்காட்சி மூலம் விரைவில் அடிக்கல் நாட்டுகிறார்.
சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டை, சங்கராபுரம், வேலங்குடி ஆகிய பகுதிகளில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதற்கென நட வடிக்கைகள் மேற்கொ ள்ளப்பட்டுள்ளது. அதன் முதற்கட்டமாக சங்கராபுரத்தில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதற்கு தற்போது ஆணை வரப்பெற்றுள்ளது.
இதுதவிர அனைத்து நகர்ப்புறப்பகுதிகளிலும் சுகாதார கட்டமைப்புக்களை மேம்படுத்தும் வகையில், தேசிய நகர்ப்புற சுகாதார திட்டம் மூலம் சிவகங்கை, தேவகோட்டை, காரைக்குடி ஆகிய நகராட்சிப் பகுதி களில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் அமை ப்பதற்கான கட்டுமானப் பணிகளும் நடைபெற்று வருகிறது.
மேற்கண்ட 3 நகராட்சிகளிலும் தலா ரூ.25லட்சம் மதிப்பீட்டில் சுகாதாரம் மற்றும் நல மையம் அமைப்பதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. மானாமதுரை நகராட்சி பகுதியில் ரூ.1.25கோடி மதிப்பீட்டில் புதிதாக நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்ப தற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது.
சுகாதார கட்டமைப்பில் வட்டார அளவில் தலா ரூ.50லட்சம் மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய மருத்துவ ஆய்வகங்கள் அமைப்பதற்காக பிரான்மலை, முத்தனேந்தல் ஆகியப்பகுதிகளில் அதற்கான கட்டிடங்கள் அமைக்கப்ப டவும் நடவடிக்கை கள் எடுக்க ப்பட்டுள்ளது.
துணை சுகாதார நிலையங்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வருகிறது. 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் மானாமதுரை ஆவரங்காடு பகுதியில் புதிய துணை சுகாதார நிலையம் அமைப்பதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரேவதி, மருத்துவப்பணிகள் இணை இயக்குநர் (பொறுப்பு) தர்மர், துணை இயக்குநர்கள் விஜய்சந்திரன்(சுகாதாரப்பணிகள்), யோகவதி (குடும்ப நலம்), கவிதாராணி (தொழுநோய்), ராஜசேகரன் (காச நோய்), ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள் மஞ்சுளா பாலசந்தர் (சிவகங்கை), சரவணமெய்யப்பன் (கண்ணங்குடி) மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
- போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அடிக்கல் நாட்டினார்
- 2.32 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட உள்ளது
அரியலூர்,
அரியலூர் மாவட்டம், கீழப்பழூர் ஊராட்சியில் காவல் நிலையம் அருகில் மாவட்ட நகர் மற்றும் ஊரமைப்பு அலுவலக கட்டட பணிகளுக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர்.சிவசங்கர் அவர்கள் அடிக்கல் நாட்டினார். இவ்வலுவலகம் ரூ.2 கோடியே 32 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ளது. இதில் தரைத்தளம் 2453 சதுர அடியில் உதவி இயக்குநர் அறை, வரவேற்பு அறை, அலுவலக அறை, நகல் எடுக்கும் இயந்திர அறை மற்றும் கழிவறை வசதிகளுடன் அமைக்கப்பட உள்ளது. மேலும், முதல் தளம் 2453 சதுர அடியில் அலுவலக அறை, பதிவறை, சேமிப்பு அறை மற்றும் கழிவறை வசதிகளுடன் அமைப்படவுள்ளது. பொதுமக்கள் மற்றும் அலுவலக பயன்பாட்டிற்காக 365 சதுர அடியில் நான்கு சக்கர வாகனம் நிறுத்துமிடமும், 355 சதுர அடியில் இருச்சக்கர வாகனம் நிறுத்திமிடமும் அமைக்கப்படவுள்ளது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர்பெ.ரமண சரஸ்வதி, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர்கு.சின்னப்பா, செயற்பொறியாளர்மணிவண்ணன், உதவி செயற்பொறியாளர்தேவேந்திரன், உதவி பொறியாளர்அட்ஷயா, திருமானூர் ஒன்றியக்குழுத்தலைவர்சுமதி அசோகசக்கரவர்த்தி, வட்டாட்சியர்கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- ரூ.12.40 கோடி செலவில் கட்டப்பட உள்ளது
- அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டினார்
ஆலங்குடி,
கடந்த ஆண்டு சட்டசபையில் மானியக் கோரிக் கையின் போது ஆலங்குடி தொகுதிக்கு அரசு இருபாலர் கலை அறி வியல் கல்லூரி அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கல்லூரி அறிவிக்கப்பட்டு இரண்டு மாதங்களிலேயே ஆலங்குடி நகரில் உள்ள தனியார் கட்டடத்தில் அரசு கலைக்கல்லூரி செயல்பட தொடங்கியது. அரசு கலைக் கல்லூரிக்கு நிரந்தர இடமா னது ஆலங்குடி அருகே உள்ள கீழாத்தூர் ஊராட்சியில் தேர்வு செய்ய ப்பட்டது. புதிய கல்லூரி கட்டடம் கட்டுவதற்கு ரூ.12.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த இடத்தில் புதிய கல்லூரி கட்டிடம் கட்டுவதற்காக அடிக் கல் நாட்டும் விழா இன்று கீழாத்தூர் சமத்துவபுரம் அருகே நடைபெ ற்றது. இந்த விழாவில் ஆலங்குடி சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நா டு சுற்றுச்சூழல் துறை அமைச்சருமான மெய்யநாதன் கலந்துகொ ண்டு புதிய கல்லூரிக்கு அடிக்கல் நாட்டி கல்லூரி காண வரைபடத் தையும் பார்வையிட்டார்.
- அய்யப்பன் எம்.எல்.ஏ. நியாய விலைக்கடை கட்டிடம் கட்டும் பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
- விழாவிற்கு முன்னாள் மாவட்ட பொருளாளர் வி.எஸ்.எல்.குணசேகரன் தலைமை தாங்கினார்.
கடலூர்:
கடலூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட 2 வது வார்டில் 15.50 லட்சம் ரூபாய் செலவில் சிமெண்ட் சாலை, 3-வது வார்டு செம்மண்டலம் காந்தி நகர் ரூ.14 லட்சம் மதிப்பில் நியாய விலைக்கடை கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதற்கு முன்னாள் மாவட்ட பொருளாளர் வி.எஸ்.எல்.குணசேகரன் தலைமை தாங்கினார். மாநகராட்சி கவுன்சிலர்கள் கீதா குணசேகரன், பிரகாஷ் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக அய்யப்பன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு நியாய விலைக்கடை கட்டிடம் கட்டும் பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி கவுன்சிலர்கள் தமிழரசன், சரத் தினகரன், சுமதி ரங்கநாதன், பாரூக் அலி, கர்ணன், கீர்த்தனா ஆறுமுகம், ராதிகா பிரேம்குமார், மகேஸ்வரி விஜயகுமார், கூட்டுறவு சங்கத் தலைவர்கள் ஆதி பெருமாள், ரவிச்சந்திரன், லட்சுமி செக்யூரிட்டி கே.ஜி.எஸ்.தினகரன், முன்னாள் கவுன்சிலர்கள் இளங்கோவன், வனிதா சேகர், வார்டு அவைத்தலைவர் அண்ணாதுரை, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுதாகர், நிர்வாகிகள் ராமலிங்கம், தெய்வநாயகம், செல்வராஜ், சம்மந்தம், முருகன், பாஸ்கர், அஷ்ரப் அலி, மணிகண்டன், சதிஷ், ஆனந்த், பாலசந்தர், செந்தில், மணிவண்ணன், சதாசிவம், சுரேஷ், தண்டபாணி, அருணாச்சலம், சிவகுஞ்சிதம், ஆறுமுகம், சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் 100 படுக்கை வசதி கொண்ட அதிதீவிர சிகிச்சை பிரிவு கட்டிடம் கட்டும் பணி.
- அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமை தாங்கி புதிய கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார்.
கடலூர்:
கடலூர் மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா, மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில்கடலூர் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் 100 படுக்கை வசதி கொண்ட அதிதீவிர சிகிச்சை பிரிவு கட்டிடம் கட்டும் பணிக்காக 34 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதிதாக கட்டிடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா இன்று( 15- ந்தேதி) மாலை கடலூர் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் நடைபெறுகிறது. விழாவிற்கு வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமை தாங்கி புதிய கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார். இதில் கலெக்டர் பாலசுப்ரமணியம், அய்யப்பன் எம்.எல். ஏ, அரசு மருத்துவமனை இணை இயக்குனர், சுகாதார துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள், மண்டல குழு தலைவர்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ள
- 45- வது வார்டில் 9.80 லட்சம் மதிப்பீட்டில் கல்வெட்டு அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
- விழாவில் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தலைமை தாங்கி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
கடலூர்:
கடலூர் மாநகராட்சிக் குட்பட்ட முதுநகர் பகுதிகளில் உள்ள 36, 37, 38, 39, 41, 42, 45 ஆகிய வார்டு களில் தமிழ்நாடு அரசின் நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 3.41 கோடி மதிப்பீட்டில் சிமெண்ட் மற்றும் தார் சாலைகள் அமைப்பதற்கான பணிகள் மற்றும் 45- வது வார்டில் 9.80 லட்சம் மதிப்பீட்டில் கல்வெட்டு அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
விழாவில் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தலைமை தாங்கி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, மாநகர தி.மு.க.செயலாளர் ராஜா, பொறியாளர் மகாதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவர் அணி துணை அமைப்பாளர் பாலாஜி, தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், மண்டல குழு தலைவர் இளையராஜா, மாநகராட்சி கவுன்சிலர்கள் விஜயலட்சுமி செந்தில், பாலசுந்தர், கவிதா ரகு ராமன், தகவல் தொழில்நுட்ப அணி பிரவீன் மற்றும் வெங்கடேசன், செந்தில், ரகுராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.