என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சதுரங்க போட்டி"
- இந்த போட்டியில் ஆண்கள், பெண்கள் என 35 பேர் கலந்து கொண்டனர்.
- அனைத்து வீரர்களுக்கும் ஆறுதல் பரிசுகள், சான்றிதழ்களையும் வழங்கினார்.
நாகர்கோவில் :
கன்னியாகுமரி மாவட்ட சதுரங்க கழகம் சார்பில் அனைத்து மாற்றுத்திறனாளி களுக்கான சதுரங்க போட்டி நாகர்கோவில் கார்மல் மேல்நிலைப்பள்ளியில் வைத்து நடைபெற்றது. போட்டியில் கண் பார்வை யற்றோர், செவித்திறனற்றோர், உடல் ஊனமுற்றோர் என 3 பிரிவுகளாக ேபாட்டி கள் நடத்தப்பட்டது. வயது வரம்பின்றி நடந்த இந்த போட்டியில் ஆண்கள், பெண்கள் என 35 பேர் கலந்து கொண்டனர்.
மாவட்ட சதுரங்க கழக செயலாளர் வின்ஸ்டன் நடுவராக செயல்பட்டார். தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக கார்மல் மேல்நிலைப்பள்ளி அருட்தந்தை வின்சென்ட் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பையும், போட்டியில் பங்கேற்ற அனைத்து வீரர்களுக்கும் ஆறுதல் பரிசுகள், சான்றிதழ்களையும் வழங்கினார்.
விழாவில் சதுரங்க கழக நிர்வாகிகள் நடராஜன், துணை தலைவர்கள் தட்சனா மூர்த்தி, எப்ரேம் ரெக்ஸ், துணை செயலா ளர்கள் அரவிந்த், வினோத்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- போட்டியில் 300-க்கும் மேற்பட்ட வீரர்- வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
- பொதிகை சாம்பியன் கோப்பை வென்ற வீரருக்கு ரூ. 5 ஆயிரம் ரொக்க பரிசு வழங்கப்பட்டது.
தென்காசி:
தென்காசி மாவட்ட பொதிகை சதுரங்க வளர்ச்சி கழகம் சார்பாக பொதிகை சதுரங்க கோப்பை மாநில சதுரங்க போட்டி தென்காசி எம்.கே.வி.கே. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
நெல்லை வீரர் முதலிடம்
போட்டியில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, தேனி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட வீரர்- வீராங்கனைகள் கலந்து கொண்டனர். போட்டிகள் பொது பிரிவு மற்றும் 9, 11, 13, 17 ஆகிய வயது பிரிவுகளில் தனித்தனியாக 6 சுற்றுகள் நடைபெற்றது.
போட்டியை எம்.கே.வி.கே. பள்ளி தாளாளர் பாலமுருகன் தொடங்கி வைத்தார். நாகர்கோவில் ஜீவக்குமார் தலைமையில் தேனி சையது மைதீன், மேனகா, சதீஷ்குமார், ராஜாகாந்தன், வைதேகி, தமிழ்ச்செல்வி ஆகியோர் நடுவர் குழுவாக செயல்பட்டனர். நெல்லை மாவட்ட வீரர் ஸ்கேனி முதலிடம் பெற்று பொதிகை கோப்பை சாம்பியன் பரிசை வென்றார். தென்காசி மாவட்ட வீரர்கள் சபின், விஷால், ரித்திக் ரக்சன், ஷாம் ஜெப்ரி, மதுரை மாவட்ட வீரர் பாலன் வைரவன் ஆகியோர் முதல் 5 இடங்களை பெற்றனர்.
பொதிகை சாம்பியன் கோப்பை வென்ற வீரருக்கு ரூ. 5 ஆயிரம் ரொக்க பரிசுடன் சாம்பியன் கோப்பையும் வழங்கப்பட்டது. மாண வர்கள் பிரிவில் பிரித்வி, ஹரிஷ் லிங்கம், அஸ்வத், முகமது அசில், மாணவிகள் பிரிவில் பிரதிக்ஷா, ராஜ லட்சுமி, யாமினா, தார ணிகாஸ்ரீ ஆகியோர் அவ ர்கள் வயது பிரிவில் முத லிடம் பெற்றனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு தட்சண மாற நாடார் சங்க தலை வரும், மாவட்ட சதுரங்க கழக தலைவருமான ஆர்.கே. காளி தாசன் பரிசுகள் வழங்கினார்.
கலந்து கொண்டவர்கள்
விழாவில் பாவூர்சத்திரம் காமராஜர் காய்கறி மார்க்கெட் சங்க செயலாளர் அழகேசன், பாவூர்சத்திரம் வணிகர்கள் சங்க தலைவர் பால சுப்பிரமணியன், குல சேகரபட்டி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் மணி வண்ணன், தென்காசி மாவட்ட மூத்த சதுரங்க வீரர் பாலகிருஷ்ணன், நெல்லை நகர சதுரங்க கழக செய லாளர் கருணாகரன், சதுரங்க கழக ஆர்வலர்கள் கமலக்கண்ணன், அருணா ச்சலம் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை சதுரங்க கழக இயக்குனர் எஸ்.கண்ணன் ஒருங்கிணைப்பு செய்திருந்தார்.
- மாணவி மிருதுளா ஜனனி 12 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் 3-வது இடம் பிடித்தார்.
- வெற்றி பெற்ற மாணவிக்கு வெற்றிக்கோப்பையும் பரிசாக வழங்கப்பட்டது.
தென்காசி:
தென்காசி மாவட்ட அளவிலான ஐ.பி.எல். சதுரங்க போட்டியானது பாவூர்சத்திரத்தில் உள்ள ஐ.பி.எல். சதுரங்க கலைக்கூடத்தில் நடைபெற்றது. இதில் இலஞ்சி பாரத் மாண்டி சோரி பள்ளியின் 6-ம் வகுப்பு மாணவி மிருதுளா ஜனனி 12 வயதுக்குட் பட்டோ ருக்கான பிரிவில் 3-வது இடம் பிடித்து சாதனை படைத்தார். போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவிக்கு ஐ.பி.எல். சதுரங்க கலைக்கூடத்தின் சார்பாக பாராட்டுச் சான்றிதழும், வெற்றிக்கோப்பையும் பரிசாக வழங்கப்பட்டது.
வெற்றி பெற்ற மாணவியை பாரத் கல்விக் குழுமத்தின் தலைவர் மோகனகிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகன கிருஷ்ணன், ஆலோசகர் உஷாரமேஷ், இயக்குனர் ராதாபிரியா மற்றும் பள்ளியின் முதல்வர் பாலசுந்தர் ஆகியோர் பாராட்டினர்.
- தமிழக அரசின் விளையாட்டுத்துறை சார்பில் நாமக்கல் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள் திருச்செங்கோட்டில் நடைபெற்றது.
- இதில் பல்வேறு வயது பிரிவின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டன.
நாமக்கல்:
தமிழக அரசின் விளையாட்டுத்துறை சார்பில் நாமக்கல் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள் திருச்செங்கோட்டில் நடைபெற்றது. இதில் பல்வேறு வயது பிரிவின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் 11 வயது பிரிவின் கீழ் நடந்த போட்டியில், குமாரபாளையம் அருகே தர்மதோப்பு, வாசுகி நகர் ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர் சையத் பாசித் பங்கேற்று விளையாடி, 2-ம் பரிசு பெற்று சாதனை படைத்தார். இவருக்கு பதக்கம், சான்றிதழ் மற்றும் கேடயம் பரிசாக வழங்கப்பட்டது. இவர் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகி உள்ளார். இவரை பள்ளியின் தலைமை ஆசிரியை நாகரத்தினம், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் ஜீனத், பி.டி.ஏ.தலைவர் தம்பி, ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவியர் உள்பட பலர் வாழ்த்தினர்.
- நத்தத்தில் லாண்டீஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் குறுவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள் நடந்தது
- வெற்றி பெற்று தகுதி அடைந்த மாணவர்களை உடற்கல்வி ஆசிரியர்கள் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
நத்தம்:
நத்தத்தில் லாண்டீஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் குறுவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள் நடந்தது. இந்த போட்டிகளை லாண்டீஸ் பள்ளியின் தாளாளர் நிக்சன்லாண்டீஸ் தொடங்கி வைத்தார்.
இதில் வட்டார அளவில் இருந்து 33 அணிகள் கலந்து கொண்டன. முடிவில் 14 வயதிற்குட்பட்டோருக் கான போட்டியில் துரைக்கமலம் மாதிரி அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளியும், 17 வயதிற்குட்பட்டோருக்கான போட்டியில் கம்பிளியம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியும், 19 வயதிற்குட்பட்டோருக்கான போட்டியில் கொசவபட்டி புனித செயின்ட் ஜோசப் பள்ளியும் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றது.
தொடர்ந்து வெற்றி பெற்று தகுதி அடைந்த மாணவர்களை உடற்கல்வி ஆசிரியர்கள் சோலமலை, சுரேஷ், ஜோதிமுருகன் உள்ளிட்ட ஆசிரியர்கள் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
- தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியது.
- கமுதி குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் சதுரங்க போட்டி யுடன் தொடங்கியது.
பசும்பொன்
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியது. கமுதி ரஹ்மானியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், ராமநாதபுரம் வருவாய் மாவட்டம், கமுதி குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் சதுரங்க போட்டி யுடன் தொடங்கி யது.
இந்த போட்டியில் 30 பள்ளிகளைச் சேர்ந்த 220 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முன்னதாக விளையாட்டுப் போட்டியின் தொடக்க விழாவிற்கு, பள்ளியின் தாளாளர் ஆயிஷா பீவி தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் பாதுஷா முன்னிலை வகித்தார்.துணை முதல்வர் சர்மிளா வரவேற்று பேசி னார். கமுதி காவல் ஆய்வாளர் விமலா விளை யாட்டுப்போட்டிகளை தொடங்கி வைத்தார்.நிர்வாக அலுவலர் முகமது இர்ஷாத், உடற்கல்வி ஆசிரியர்கள் சந்திரசேகர், தாமரைக்கண்ணன் ஆகியோர் போட்டிகளுக் கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
முன்னதாக பள்ளியில் போதைப் பொருள் தடுப்பு உறுதிமொழி காவல் ஆய்வாளர் விமலா நிலையில் எடுக்கப்பட்டது.
- சதுரங்க போட்டி நடந்தது.
- மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட சதுரங்க கழகத்தின் சாணக்யா அகாடமி ஒருங்கிணைப்பில் சதுரங்க போட்டி மான்போர்ட் பள்ளியில்நடந்தது. 7 வயது, 9 வயது, 11 வயது, 13 வயது, 15 வயது என 5 பிரிவுகளில் இந்த போட்டிகள் நடைபெற்றன. இதில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பள்ளிகளில் இருந்து மொத்தம் 235 மாணவர்கள் கலந்து கொண்டனர். மான்போர்ட் பள்ளியின் தாளாளர் மற்றும் முதல்வர் இக்னேஷியஸ் தாஸ் தலைமை வகித்தார்.
சதுரங்க போட்டிகளுக்கு சிவகங்கை மாவட்ட இளைஞர் நலன் மற்றும் மாவட்ட விளையாட்டு துறை அலுவலர் ரமேஷ் கண்ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மாலையில் நடைபெற்ற போட்டிகளுக்கு சிவகங்கை மருத்துவக்கல்லூரி தலை மற்றும் கழுத்து அறுவை சிகிச்சை பிரிவின் துறை தலைவர் டாக்டர் ஜிம் திவாகர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். போட்டி முடிவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியை சாணக்கியா அகாடமி ஒருங்கிணைத்து நடத்தியது.
- மாநில அளவிலான சதுரங்க போட்டியில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
- அகமது இர்ஷாத் 2-ம் இடத்தையும்,மரிய ஜோபில் 4-ம் இடத்தையும் பெற்றனர்.
தென்காசி:
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் ஆலடி அருணா பவுண்டேஷன் மற்றும் மேக்னஸ் செஸ் அகாடமி இணைந்து நடத்திய மாநில அளவிலான சதுரங்க போட்டியில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
இப்போட்டியில் ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி 5-ம் வகுப்பு மாணவன் அகமது இர்ஷாத் 2-ம் இடத்தையும், 6-ம் வகுப்பு மாணவன் மரிய ஜோபில் 4-ம் இடத்தையும், 1-ம் வகுப்பு மாணவன் அஜய் கலந்து கொண்டதற்கான சான்றிதழையும் பெற்று மாநில அளவில் சாதனை படைத்தனர். வெற்றி பெற்ற மாணவர்கள் கோப்பைகளை தட்டி சென்றனர். மாநில அளவில் சாதனை படைத்த மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பள்ளியின் தாளாளர் டாக்டர் சேக் செய்யது அலி மற்றும் பள்ளியின் முதல்வர் சமீமா பர்வீன் ஆகியோர் பாராட்டினர்.
- போட்டியில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு விளையாடினர்.
- தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் எட்மண்ட் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
தென்காசி:
ஆலங்குளம் அருகே உள்ள ஆலடி அருணா லிபரல் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் கல்லூரி வளாகத்தில் மாநில அளவிலான சதுரங்க போட்டி ஆலடி அருணா அறக்கட்டளை சார்பில் நடந்தது.
பரிசளிப்பு விழா
இதில் திருச்சி, மதுரை, கோவில்பட்டி, தூத்துக்குடி உள்பட தமிழகத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு விளையாடினர். தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது.
கல்லூரி நிர்வாக இயக்குனரும், தி.மு.க. மாநில சுற்றுச்சூழல் அணி தலைவருமான டாக்டர். பூங்கோதை ஆலடி அருணா தலைமை தாங்கினார். கடையநல்லூர் பிரின்ஸ் மருத்துவமனை டாக்டர் சஞ்சீவி, ஆலங்குளம் டாக்டர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் பாப்புலர் செல்லத்துரை வாழ்த்தி பேசினார்.
கலந்து கொண்டவர்கள்
விழாவில் சிறப்பு விருந்தினராக தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் எட்மண்ட் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசினார்.
நிகழ்ச்சியில் கீழப்பாவூர் ஒன்றிய முன்னாள் தி.மு.க. செயலாளர் செல்லப்பா, முன்னாள் தி.மு.க. ஒன்றிய கலை இலக்கிய அணி அமைப்பாளர் மாஞ்சோலை துரை, இளைஞர் அணி துணை அமைப்பாளர் சிவக்குமார், பஞ்சு அருணாச்சலம், ஜெபராஜன், ரஞ்சித், மணிகண்டன், காவலாகுறிச்சி மகேஷ் பாண்டியன் மற்றும் ஆசிரியர்கள் ஜான்சுபா, ஆறுமுக செல்வி, கவுசல்யா அனு, இந்துராணி, ஜோன் திரிஷா, ராஜேஷ், ஜெயசீலின், ஜெகா உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கல்லூரி முதல்வர் முத்தமிழன் நன்றி கூறினார்.
- மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியில் ட்ரஷர் ஐலண்ட் பள்ளி மாணவன் ஜெகத் பிரபு 4-வது இடத்தை பிடித்தார்.
- வெற்றி பெற்ற மாணவர்களை தாளாளர்,பள்ளி முதல்வர் பாராட்டினர்.
தென்காசி:
குயின் செஸ் அகாடமி நடத்திய மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியானது இரு வேறு இடங்களில் நடைபெற்றது. இதில் ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி மாணவன் ஜெகத் பிரபு 4-வது இடத்தை பிடித்து சுழல் கோப்பை மற்றும் சான்றிதழ் பெற்றார்.
இதேபோல் தென்காசி செஸ் பெற்றோர் கமிட்டி நடத்திய மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியில் ட்ரஷர் ஐலண்ட் பள்ளி மாணவர்கள் ஜெகத் பிரபு, அகமது இர்ஷத் கலந்துகொண்டு சான்றிதழ் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை தாளாளர் டாக்டர் ஷேக் செய்யது அலி, பள்ளி முதல்வர் சமீமா பர்வீன் ஆகியோர் பாராட்டினர்.
- நெல்லையில் நடந்த சதுரங்க போட்டியில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
- போட்டியில் மாணவிகள் பிரிவில் ஹரி நந்தனா முதல் இடம் பெற்று வெற்றி பெற்றார்.
தென்காசி:
மாநில அளவில் மேக்னஸ் செஸ் அகாடமி ஹோலி கிராஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இணைந்து நெல்லையில் பள்ளிகளுக்கு இடையே நடத்திய சதுரங்க போட்டியில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில் ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி மாணவர் ஜெகத் பிரபு மாணவர்கள் பிரிவில் முதல் இடத்திலும், மாணவி ஹரி நந்தனா மாணவிகள் பிரிவில் முதல் இடமும் பெற்று வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி தாளாளர் டாக்டர் சேக் செய்யது அலி மற்றும் முதல்வர் சமீமா பர்வீன் ஆகியோர் பாராட்டினர்.
- 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
- மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி
அரியலூர்
அரியலூர் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி அரியலூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. போட்டிகள் 9, 11, 13 வயதிற்குட்பட்டவர்கள் மற்றும் ஓபன் பிரிவுகளில் மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியாக நடைபெற்றது. இதில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விளையாடினார்கள். இந்த போட்டிகள் ஸ்விஸ் பேரிங் முறையில் நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு ரொக்கப்பரிசு, கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்