என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தம்பதி கைது"
- தீபாவளி அன்று சிறுமி சரியாக வேலை செய்யவில்லை எனக்கூறி கடுமையாக வீட்டில் இருந்தவர்கள் தாக்கியுள்ளனர்.
- சிறுமி கடந்த சில மாதங்களாகவே தொடர்ச்சியாக கொடூரமாக சித்ரவதைக்கு உள்ளாகி இருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சென்னை அமைந்தகரை மேத்தா நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் முகமது நவாஷ். இவர் சொந்தமாக பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.
இவருக்கு திருமணமாகி மனைவி நிவேதிதா மற்றும் 6 வயது குழந்தை உள்ளனர்.
நவாஸ் வீட்டில் கடந்த ஓராண்டாக தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமி தங்கி வீட்டு வேலை பார்த்து வந்து உள்ளார்.
நேற்று முன்தினம் தீபாவளி தினத்தன்று நவாஸ் வீட்டில் வேலை முடிந்து குளிக்கச் சென்ற சிறுமி நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகமடைந்த நவாஸ் மற்றும் அவரது மனைவி நிவேதிதா இருவரும் குளியல் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது சிறுமி மர்மமான முறையில் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் பயத்தில் நவாஸ் வீட்டை பூட்டி விட்டு மனைவி குழந்தையுடன் உறவினர்கள் வீட்டிற்கு சென்றுள்ளார்.
பின்னர் நேற்று முன்தினம் மாலையில் முகமது நவாஸ் தனது வக்கீல் மூலமாக சிறுமி இறந்தது குறித்து அமைந்தகரை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் விரைந்து சென்று நவாஸ் மற்றும் அவரது மனைவி நிவேதிதா முன்னிலையில் பாத்ரூமில் இறந்து கிடந்த சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்டு இருக்கும் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.
சிறுமியின் உடலில் சிகரெட்டால் சூடு வைத்து சித்ரவதை செய்த காயங்கள் காணப்பட்டன. அயன் பாக்ஸ் வைத்து சிறுமியின் உடலில் சூடு வைக்கப்பட்டு உள்ளது. கடந்த சில மாதங்களாகவே இது போன்று சிறுமியை சூடு வைத்து மிகவும் கொடூரமாக கொடுமைப்படுத்தி இருப்பதும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து போலீசார் தம்பதியான முகமது நவாஸ்-நிவேதிதா ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சிறுமியை அவரது உறவினர்கள் சிலரும் வீட்டில் வேலை செய்த இன்னொரு வேலைக்கார பெண்ணும் சேர்ந்து கொடுமைப்படுத்தி இருப்பதும் தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து அவர்கள் மீதும் கைது நடவடிக்கை பாய்ந்துள்ளது. இது தொடர்பாக லோகேஷ் அவரது மனைவி ஜெயசக்தி மற்றும் சீமா வேலைக்கார பெண் மகேஸ்வரி ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கொடூரமாக கொலை செய்யப்பட்ட சிறுமி தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர் ஆவார்.
இதனால் அனைவர் மீதும் தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டம், குழந்தை தொழிலாளர் தடுப்புச் சட்டம், கொலை, மற்றும் போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
தீபாவளி அன்று சிறுமி சரியாக வேலை செய்யவில்லை எனக்கூறி கடுமையாக வீட்டில் இருந்தவர்கள் தாக்கியுள்ளனர். அதே நேரத்தில் சிறுமி கடந்த சில மாதங்களாகவே தொடர்ச்சியாக கொடூரமாக சித்ரவதைக்கு உள்ளாகி இருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே சிறுமியின் தாய் மகள் உயிரிழந்த தகவல் அறிந்து தஞ்சையில் இருந்து சென்னை வந்தார். கணவரை இழந்து வாழும் அவர் தனது சிறு வயது மகனுடன் சென்னை வந்து மகளை இழந்து தவியாய் தவித்து வருகிறார்.
மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த அவரால் தனது மகளின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு சென்று அடக்கம் செய்ய இயலாத நிலை உள்ளது.
இது பற்றி அவர் போலீசாரிடம் தெரிவித்து தனது மகளை சென்னையில் அடக்கம் செய்து விடுங்கள் என்று கூறியிருக்கிறார். இதனைக் கேட்டு போலீசாரும் கண்ணீர் வடித்துள்ளனர்.
இதையடுத்து சென்னையிலேயே சிறுமியின் உடலை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. வீட்டில் வேலை செய்த 16 வயது சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
- கடந்த 5.5.2023-ம் தேதி சுப்பிரமணியை குறிஞ்சிநகரில் வைத்து கடுமையாக தாக்கி அவரது மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போனை பறித்துக்கொண்டனர்.
- சில நாட்கள் கழித்து தான் இனிமேல் சத்யாவுடன் பழக மாட்டேன் என்றும், தனது மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போனை திரும்ப தருமாறு கேட்டார்.
தேனி:
மதுரை சம்மட்டிபுரம் ராஜ்நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் ரவி மகன் சுப்பிரமணி(30). தந்தை இறந்துவிட்ட நிலையில் தனது தாய் நாகஜோதியுடன் வசித்து வந்தார். சுப்பிரமணி தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள தனியார் மகளிர் சுயஉதவிக்குழுவில் பணிபுரிந்து வந்தார்.
கன்னிசேர்வை பட்டியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி வேலைக்கு சென்றுவந்தார். மகளிர்சுய உதவிக்குழு பெண்களுக்கு வழங்கப்படும் கடனுதவியை வசூல் செய்து நிறுவனத்தில் கட்டி வந்தார். அப்போது தேனி அல்லிநகரம் குறிஞ்சிநகரை சேர்ந்த ராமமூர்த்தி மனைவி சத்யா என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் அந்த பெண்ணின் கணவர் மற்றும் குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். மேலும் கடந்த 5.5.2023-ம் தேதி சுப்பிரமணியை குறிஞ்சிநகரில் வைத்து கடுமையாக தாக்கி அவரது மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போனை பறித்துக்கொண்டனர்.
இதனால் அவமானம் தாங்காமல் வேலைக்கு செல்லமுடியாமல் வீட்டிலேயே இருந்தார். சில நாட்கள் கழித்து தான் இனிமேல் சத்யாவுடன் பழக மாட்டேன் என்றும், தனது மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போனை திரும்ப தருமாறு கேட்டார். ஆனால் அவர்கள் தர மறுத்து அன்னஞ்சி பைபாஸ் பகுதியில் கடுமையாக தாக்கி சென்றுவிட்டனர்.
பலத்த காயமடைந்த சுப்பிரமணி தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். அதன்பிறகு வீட்டிற்கு சென்றபோது மீண்டும் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதனையடுத்து மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். தனது மகன் அடித்து கொலை செய்யப்பட்டதாக அவரது தாய் சின்னமனூர் போலீசில் புகார் அளித்தார். இந்த வழக்கு தேனி அல்லிநகரம் போலீசுக்கு மாற்றப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையில் சுப்பிரமணியின் உடலில் பல்வேறு காயங்கள் இருந்ததும், அவர் அடித்து கொலை செய்யப்பட்டதும் உறுதியானது.
இதனையடுத்து 6 மாதத்திற்கு பின்பு கள்ளக்காதலி சத்யா மற்றும் அவரது கணவர் ராமமூர்த்தி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
- ஜவுளி ஏற்றுமதி நிறுவன உரிமையாளர் வீட்டில் ரூபாவுடன் பணியாற்றி வரும் நித்யா மீது சந்தேகம் ஏற்பட்டது
- ரூபா வேலைக்கு வரும் போதெல்லாம் நகை அதிகமாக அணிந்து வருவார்.
வேலாயுதபாளையம்:
ஈரோடு மாவட்டம், கொடுமுடியை அடுத்த சோழ காளிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் தங்கராசு (வயது 57). இவர் அப்பகுதியில் கறிக்கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி ரூபா (42). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ரூபா, சென்ன சமுத்திரம் பேரூராட்சியில் தி.மு.க. கவுன்சிலராக பணியாற்றி வந்தார். இதற்கிடையே கரூர் மாநகர பகுதியில் உள்ள ஜவுளி ஏற்றுமதி நிறுவன உரிமையாளர் வீட்டில் ரூபா வேலை பார்த்து வந்துள்ளார்.
நேற்று முன்தினம் வழக்கம்போல் தனது வீட்டிலிருந்து புறப்பட்டு கரூர் சென்றார். பின்னர் ரூபா அன்று இரவு வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் ரூபாவை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் அவர் பற்றி எந்த தகவலும் இல்லை.
இந்த நிலையில் நேற்று மதியம் கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே பவுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட பாலமலை முருகன் கோவில் அருகே உள்ள காட்டுப்பகுதியில் ரூபா தலை நசுங்கிய நிலையில் அரை நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கொடுத்த புகாரின்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம், அரவக்குறிச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு அண்ணாதுரை, வேலாயுதம்பாளையம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராஜேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
பின்னர் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். மேலும் போலீஸ் மோப்ப நாயும் கொண்டு வரப்பட்டது. பின்னர் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் வேலாயுதம்பாளையம்க போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதில் ஜவுளி ஏற்றுமதி நிறுவன உரிமையாளர் வீட்டில் ரூபாவுடன் பணியாற்றி வரும் நித்யா மீது சந்தேகம் ஏற்பட்டது. பின்னர் அவரிடம் கிடுக்குபிடி விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரூபா அணிந்திருந்த நகைக்கு ஆசைப்பட்டு நித்யா தனது கணவருடன் சேர்ந்து அவரை கொலை செய்தது தெரியவந்தது.
இதை எடுத்து நித்யா(28) அவரது கணவர் கதிர்வேல் (33) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கைதான நித்யா போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது;-
எனது கணவர் இவர் ஈரோடு-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் டீ கடை வைத்துள்ளார்.
ரூபா வேலைக்கு வரும் போதெல்லாம் நகை அதிகமாக அணிந்து வருவார். இதனை எனது கணவரிடம் கூறினேன்.
பின்னர் நகைக்கு ஆசைப்பட்டு ரூபாவை கொலை செய்ய திட்டம் தீட்டினோம்.
அதன்படி நேற்று முன்தினம் காலை வேலைக்கு வந்த ரூபாவிடம் பவுத்திரம் பாலமலை முருகன் கோவிலுக்கு போகலாம் என நைசாக அழைத்தேன். அவரும் என் பேச்சை தட்டாமல் வந்தார். பின்னர் கோவில் அருகே உள்ள காட்டுப்பகுதியில் ஏற்கனவே தயாராக இருந்த எனது கணவர் வந்தார். பின்னர் ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப் பகுதியில் வைத்து நானும் கணவரும் ரூபாவின் கழுத்தை நெரித்து தலையில் கல்லை வைத்து நசுக்கி கொலை செய்தோம். பின்னர் அவர் அணிந்திருந்த நகைகளை கொள்ளையடித்தோம்.போலீசை திசை திருப்புவதற்காக அவரது களைந்து அரை நிர்வாணமாக்கி விட்டு தப்பிச் சென்றோம். ஆனால் போலீசார் துப்பு துலக்கி பிடித்து விட்டனர்.
- செல்போனை திருடிக் கொண்டு தம்பதி அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனர்.
- கணவன்-மனைவி 2 பேரையும். கைது செய்து செல்போனையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
நத்தம்:
செந்துறை அருகே மணக்காட்டூரைச் சேர்ந்தவர் பூங்கொடி (வயது 35). இவர் வீட்டில் தனியாக இருந்தபோது 2 பேர் ஜோசியம் பார்ப்பதாக கூறி உள்ளே வந்துள்ளனர்.
அவருடன் பேச்சுக் கொடுத்துக் கொண்டே சிறிது நேரத்தில் தண்ணீர் கேட்டுள்ளனர். பூங்கொடி தண்ணீர் எடுக்க உள்ளே சென்ற போது ரூ.10000 மதிப்புள்ள செல்போனை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனர். இதைப் பார்த்த பூங்கொடி சத்தம் போட்டார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஒன்று கூறினர். அவர்கள் 2 பேரையும் மடக்கிப் பிடித்து நத்தம் போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் விசாரணையில் பிடிபட்டவர்கள் எரியோடு அருகே கோவிலூரைச் சேர்ந்த தங்கவேல், நித்யா என்பதும், இருவரும் கணவன்-மனைவி என்பதும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவர்களை கைது செய்து செல்போனையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
- தனிப்படை போலீசார் தருமபுரிக்கு விரைந்து சென்று அங்கு பதுங்கியிருந்த 3 பேரை கைது செய்தனர்.
- 3 பேரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சிவகிரி:
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் எஸ்.டி. நகர் புதுமனை 3-வது தெருவை சேர்ந்தவர் மணி வண்ணன் (வயது 38). சித்தா டாக்டரான இவர் அப்பகுதியில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார்.
கடந்த 19-ந்தேதி இவர் வீட்டில் ஆட்கள் இல்லாததை அறிந்து மர்மநபர்கள் உள்ளே சென்று அங்குள்ள பீரோவில் இருந்த 102 பவுன் தங்க நகைகள், 263 கிராம் வெள்ளி உள்ளிட்டவைகளை கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக வாசுதேவநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
கொள்ளையர்களை பிடிக்க சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். சம்பவம் நடந்த தெருவில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தபோது, சந்தேகத்திற்கிடமாக 4 பேர் கொள்ளை நடந்த அன்று காலையில் சுற்றித்திரிந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த காட்சிகளை கொண்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
அதில் வாசுதேவநல்லூர் அருகே தலையணை பகுதியில் வசிக்கும் ஒருவரை பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், கொள்ளை சம்பவத்தில் அவரது உறவினர்களான தருமபுரி மாவட்டம் அரூர் தாலுகா மலைதாங்கி கிராமத்தை சேர்ந்த நடராஜன் என்ற நிக்கல்சன்(வயது 50), அவரது மனைவி லலிதா(45), அவர்களது மகன் நவீன்குமார்(27) ஆகியோர் இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதையடுத்து தனிப்படை போலீசார் தருமபுரிக்கு விரைந்து சென்று அங்கு பதுங்கியிருந்த 3 பேரையும் கைது செய்தனர். இவர்களின் உறவினர்கள் வாசுதேவநல்லூர் தலையணையில் வசித்து வருவதால் அங்கு வந்துள்ளனர். பின்னர் அப்பகுதியில் உள்ள வீடுகளை நோட்டமிட்டு ஆட்கள் இல்லாததை அறிந்துள்ளனர்.
சம்பவத்தன்று மணிவண்ணன் வீட்டில் கொள்ளையடிப்பதற்கு முன்பாக அதே தெருவில் 3 வீடுகளின் கதவை உடைத்து பணம் திருடியுள்ளனர் என்பதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் இருந்து ரூ.9 லட்சம் மதிப்பிலான நகைகளை மீட்டனர். இதையடுத்து 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- கண்காணிப்பு கேமராவில் குழந்தையை ஒரு ஆணும், பெண்ணும் சேர்ந்து கடத்தி சென்றது பதிவாகி இருந்தது.
- விசாரணையில் குழந்தையை கடத்தி சென்றவர்கள் இருவரும் சோனியாவின் உறவினர்கள் என்பது தெரியவந்தது.
புதுச்சேரி:
புதுச்சேரி உப்பளம் நேதாஜி நகரை சேர்ந்தவர் வீரபிரதாப். இவரது மனைவி சோனியா. இவர்களுக்கு லட்சயா (வயது 3) என்ற பெண் குழந்தையும், ஆதித்யா என்ற 2 மாத ஆண் குழந்தையும் உள்ளனர்.
சோனியா புதுச்சேரி கடற்கரையில் விளையாட்டு பொருட்கள் விற்பனை செய்து வருகிறார். கடந்த 27-ந்தேதி இரவில் வியாபாரத்தை முடித்த விட்டு மிஷன் வீதிக்கு நடந்து வந்துள்ளார்.
அங்கு ஒரு கடையின் முன்பு பிளாட்பாரத்தில் அமர்ந்து குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டினார். பின்னர் அசதியில் அவர் குழந்தைகளுடன் பிளாட்பாரத்திலேயே தூங்கிவிட்டார்.
நள்ளிரவு திடீரென்று கண்விழித்து பார்த்தபோது குழந்தை ஆதித்யாவை காணாமல் திடுக்கிட்டார். மர்ம நபர்கள் யாரோ குழந்தையை கடத்தி சென்று விட்டது தெரியவந்தது.
இதுகுறித்து பெரியகடை போலீஸ் நிலையத்தில் சோனியா புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் வழக்குப்பதிவு செய்து 2 தனிப்படைகள் அமைத்து அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது அந்த குழந்தையை ஒரு தம்பதி கடத்தி சென்றது பதிவாகி இருந்தது. அதனை வைத்து அவர்களை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் குழந்தையை கடத்தியவர்கள் பெங்களூருவில் தங்கி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து குழந்தையை மீட்டனர். தொடர்ந்து அவர்கள் 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் பெங்களூருவை சேர்ந்த தம்பதியர் புனிதா (31), பசவராஜ் (32) என்பது தெரியவந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடந்துள்ளது.
சில ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்துள்ளனர். கடந்த சில மாதத்துக்கு முன்பு புனிதா கர்ப்பமானார். இந்த நிலையில் திடீரென புனிதாவுக்கு கரு கலைந்தது.
இதனை கணவனிடம் கூறி புனிதா வருத்தப்பட்டார். மாமியார் உள்பட கணவன் வீட்டினர் ஏளனமாக பேசுவார்களே என்று பயந்துபோன புனிதா தனது கணவரிடம் வேறு எங்காவது குழந்தையை கடத்தி வந்து தனக்கு பிறந்ததாக கூறலாம் என யோசனை தெரிவித்தார்.
அதற்கு பசவராஜ் ஒப்புக்கொண்டார். அதன்படி கடந்த 3 மாதத்துக்கு முன்பு பிரசவத்துக்காக தாய் வீட்டிற்கு செல்வதாக புனிதா தனது மாமியாரிடம் கூறிவிட்டு கணவருடன் புதுவை வந்தார்.
அவர்கள் இருவரும் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து முகாமிட்டு வந்துள்ளனர். ஆனால் அங்கு சரியான சந்தர்ப்பம் அவர்களுக்கு கிடைக்கவில்லை.
இதைத்தொடர்ந்து புதுவை கடற்கரைக்கு வந்தபோது அங்கு சோனியா கைக்குழந்தையுடன் பொம்மை விற்பதை பார்த்து உள்ளனர்.
குழந்தை அழகாக இருந்ததால் அதனை கடத்தி செல்ல முடிவு செய்தனர். இந்த திட்டத்திற்கு புனிதாவின் சகோதரரான புவனகிரியை சேர்ந்த ராஜ்கணேஷ் (30) உதவி செய்வதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பல நாட்களாக அவர்கள் சோனியா இரவு நேரத்தில் குழந்தையுடன் எங்கு செல்கிறார் என்பதை நோட்டமிட்டுள்ளனர்.
அதன்படி சம்பவத்தன்று இரவு மிஷன் வீதி கடை முன்பு பிளாட்பாரத்தில் குழந்தையுடன் சோனியா அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி குழந்தையை கடத்தி சென்றது விசாரணையில் தெரியவந்தது.
தொடர்ந்து குழந்தை கடத்தலுக்கு உதவிய புனிதாவின் சகோதரர் ராஜ்கணேசையும் போலீசார் கைது செய்தனர்.
மீட்கப்பட்ட குழந்தையை அவரது பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
- சமீபகாலமாக பச்சைக்கிளி உள்ளிட்ட அபூர்வ வகை பறவைகளை வீட்டில் வளர்க்ககூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- 40 பச்சைக்கிளிகள், 70 முனியாஸ் பறவைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
பழனி:
பழனி ஆவணிமூலவீதியில் உள்ள ஒரு வீட்டில் அரியவகை பறவைகள் ஏராளமாக வளர்க்கப்படுவதாக வனத்துறையினருக்கு புகார் வந்தது. இதனையடுத்து இன்று வனத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட வீட்டில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அந்த வீட்டில் இருந்த மாரிமுத்து(52), அவரது மனைவி பார்வதி(45) ஆகியோர் காட்டில் மட்டும் வாழும் பறவைகளை அதிகளவில் வீட்டில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
அவர்களிடமிருந்து 40 பச்சைக்கிளிகள், 70 முனியாஸ் பறவைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர்களுக்கு ரூ.30ஆயிரம் அபராதம் விதித்து பழனி வனச்சரகர் குமரேசன் தலைமையிலான அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
சமீபகாலமாக பச்சைக்கிளி உள்ளிட்ட அபூர்வ வகை பறவைகளை வீட்டில் வளர்க்ககூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கிளிகள், புறாக்கள் உள்ளிட்ட பறவை இனங்களை யாரும் அடைத்து வைத்து வளர்த்து விற்பனை செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பிடிபட்ட கிளிகள் மற்றும் பறவைகள் எங்கிருந்து பெறப்பட்டன என்பது குறித்தும், இதனை யாருக்கு விற்பனை செய்ய வைத்திருந்தனர் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- குமரி மாவட்டம் மட்டுமின்றி சென்னை, அறந்தாங்கி, பாண்டிச்சேரி, கூடலூர், தர்மபுரி உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தம்பதி கைவரிசை காட்டி இருப்பது தெரியவந்துள்ளது.
- அரசு ஓய்வூதியம் மற்றும் கடனுதவி பெற்று தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி பெண்களிடம் நகை பறித்ததை ஒப்புக்கொண்டனர்.
குழித்துறை:
குமரி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரசு ஆஸ்பத்திரிகள், பஸ் நிலையங்களில் பெண்களை குறி வைத்து நூதன முறையில் ஒரு கும்பல் நகை, பணத்தை பறித்து சென்றது.
இது தொடர்பாக மாவட்டம் முழுவதும் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த கொள்ளையர்களைப் பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மகேஸ்வரராஜ், மகேஷ் தலைமை காவலர் ரெஜிகுமார்,சேம்,பிஜு ஆகியோர் அடங்கிய குழுவினர் தீவிர தேர்தல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது நடத்திய விசாரணையில் குமரி மாவட்டத்தில் கைவரிசை காட்டியது மதுரை எலைட் நகர் போடிலைன் பகுதியைச் சேர்ந்த சித்திரவேல் (வயது40) அவரது மனைவி பார்வதி (38) என்பது தெரியவந்தது. போலீசார் அவர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் குழித்துறை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் இவர் குமரி மாவட்டம் மட்டுமின்றி சென்னை, அறந்தாங்கி, பாண்டிச்சேரி, கூடலூர், தர்மபுரி உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இவர்கள் கைவரிசை காட்டி இருப்பது தெரியவந்துள்ளது. அரசு ஓய்வூதியம் மற்றும் கடனுதவி பெற்று தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி பெண்களிடம் நகை பறித்ததை ஒப்புக்கொண்டனர்.
இவர்களிடமிருந்து 10 பவுன் நகையை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சித்திரவேல், பார்வதி இருவரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- மின்சார பேட்டரியில் இயங்கும் இருசக்கர வாகனத்துக்கு தூத்துக்குடி மாவட்டத்துக்கு டீலர்ஷிப் உரிமை கொடுப்பதாக கூறினர்.
- நேரில் சென்று பணத்தை கேட்டபோது வெங்கடேசும் அவரது மனைவி பாண்டி லட்சுமியும் சேர்ந்து தகாத வார்த்தை கூறி தாக்கியதுடன் கொலை மிரட்டல் விடுத்தனர்.
பூந்தமல்லி:
தூத்துக்குடி கார்டுவெல் காலனி பகுதியை சேர்ந்தவர் நிமேஷ் எட்வின் (43). இவர் கடந்த வாரம் பூந்தமல்லி போலீசில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.
அந்த புகாரில் பூந்தமல்லி முனிகிருஷ்ணா நகர் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் மற்றும் பாண்டி லட்சுமி தம்பதியினர் கரையான்சாவடி பகுதியில் இரு சக்கர வாகன விற்பனை நிறுவனம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிறுவனத்தின் மின்சார பேட்டரியில் இயங்கும் இருசக்கர வாகனத்துக்கு தூத்துக்குடி மாவட்டத்துக்கு டீலர்ஷிப் உரிமை கொடுப்பதாக கூறினர்.
அதற்காக ரூ.25 லட்சம் பணம் கொடுத்துள்ளேன். ஆனால் அவர்கள் கூறியபடி டீலர்ஷிப் உரிமையை கொடுக்கவில்லை. மேலும் நான் கொடுத்த பணத்தில் ரூ.8 லட்சம் மட்டுமே திருப்பி கொடுத்தனர். மீதியுள்ள ரூ.17 லட்சத்தை திருப்பி கேட்டபோது பணத்தை தராமல் இழுத்தடித்து வந்தனர்.
இதையடுத்து நேரில் சென்று பணத்தை கேட்டபோது வெங்கடேசும் அவரது மனைவி பாண்டி லட்சுமியும் சேர்ந்து தகாத வார்த்தை கூறி தாக்கியதுடன் கொலை மிரட்டல் விடுத்தனர்.
அவர்கள் இருவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகார் மனுவில் நிமேஷ் எட்வின் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து பூந்தமல்லி குற்றப்பிரிவு ஆய்வாளர் வள்ளி தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று வெங்கடேஷ் மற்றும் அவரது மனைவி பாண்டிலட்சுமி இருவரையும் கைது செய்த போலீசார் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
- பவானி காலிங்கராயன் பாளையம் பகுதியில் வாலிபர்களுக்கு கஞ்சா பொட்டலம் தயாரித்த போது போலீசில் சிக்கியது தெரியவந்தது.
- விஜயன், பவித்ரா மீது கொலை வழக்கு இருப்பதும், இது தவிர விஜயன்மீது கஞ்சா மற்றும் 18 அடிதடி வழக்குகள் இருப்பதும்தெரியவந்தது.
சித்தோடு:
ஈரோடு மாவட்டம் பவானி காலிங்கராயன் பாளையம் மாட்டு ஆஸ்பத்திரி அருகே ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக சித்தோடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் அந்த வீட்டிற்கு சென்றனர். அப்போது வீட்டில் ஒரு பெண் உள்பட 4 பேர் இருந்தனர். போலீசாரை பார்த்ததும் அந்த பெண் தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து போலீசார் அந்த வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு 300 கிராம் எடை கொண்ட 42 கஞ்சா பொட்டலங்கள் இருந்தது.
இதையடுத்து போலீசார் அங்கு இருந்த நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சரவணா தியேட்டர் பகுதியை சேர்ந்த சரவணன் (24), பவானி காலிங்கராயன் பாளையம் என்.எஸ்.எம்.வீதியை சேர்ந்த மெய்யப்பன் (24). சித்தார் குப்பிச்சி பாளையத்தை சேர்ந்த அஜித் (24) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
பின்னர் போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது தப்பி ஓடியது பவானி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ஆற்றோரம் பகுதியை சேர்ந்த விஜயன் என்பவரது மனைவி மகேஸ்வரி என்கிற பவித்ரா (24) என்று தெரியவந்தது.
இதையடுத்து சித்தோடு போலீசார் பவித்ராவை கைது செய்ய அவரது வீட்டிற்கு சென்றனர். அப்போது அங்கு இருந்த அவரது கணவர் விஜயன் போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டினார்.
இதையடுத்து போலீசார் விஜயன் மற்றும் அவரது மனைவி பவித்ரா ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தியபோது பரபரப்பு தகவல்கள் வெளியானது. அதுப்பற்றிய விபரம் வருமாறு:-
விஜயன் அவரது மனைவி பவித்ரா ஆகிய 2 பேரும் ஈரோடு மாவட்டம் பவானி, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், சேலம் மாவட்டம் சங்ககிரி புள்ளா கவுண்டன்பட்டி ஆகிய இடங்களில் வீடு வாடகைக்கு எடுத்து கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் மூலம் கஞ்சா விற்பனை செய்து உள்ளனர். இதற்காக இவர்கள் 2 நாட்களுக்கு ஒரு முறை அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று கஞ்சாவை பொட்டலங்களாக தயாரித்து அவர்களுக்கு கொடுத்து வந்தது தெரியவந்துது.
இதேபோல தான் பவானி காலிங்கராயன் பாளையம் பகுதியில் வாலிபர்களுக்கு கஞ்சா பொட்டலம் தயாரித்த போது போலீசில் சிக்கியது தெரியவந்தது.
மேலும் விஜயன், பவித்ரா மீது கொலை வழக்கு இருப்பதும், இது தவிர விஜயன்மீது கஞ்சா மற்றும் 18 அடிதடி வழக்குகள் இருப்பதும்தெரியவந்தது. மேலும் விஜயன் குண்டர் சட்டத்தில் கைதாகி விடுதலை ஆனதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்