என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பெரியார் சிலை"
- சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அ.தி.மு.க. சார்பில் மனு அளிக்கப்பட்டது.
- அங்கிருந்த கண்காணிப்பு கேமிரா உதவியுடன், போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் புதிய பேருந்து நிலைய நுழைவாயில் அருகில் அ.தி.மு.க. சார்பில் ஒரே பீடத்தில் பெரியார், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகள் வைக்கப்பட்டுள்ளது.
அதில் பெரியார் சிலை யின் இடது கை பெருவிரல் சேதப்படுத்தப்பட்டது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அ.தி.மு.க.வினர், மாவட்ட செயலாளர் இளம்பை இரா. தமிழ்ச்செல்வன் தலைமை யில் மறியல் மற்றும் ஆர்ப்பா ட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினருடன், பெரம்பலூர் டி.எஸ்.பி. சுக்கிரன் பழனிச்சாமி தலைமையிலான போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது சிலையை சேதப்படுத்தியது குறித்து உரிய விசாரணை நடத்தி, மர்ம நபர் கைது செய்யப்படுவார் என்று உறுதி அளித்தார். சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அ.தி.மு.க. சார்பில் மனு அளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து சிலை சேதப்படுத்தியது தொடர்பாக, அங்கிருந்த கண்காணிப்பு கேமிரா உதவியுடன், போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், பெரம்பலூர் மாவட்டம் ஒகளூர் கிராமத்தை சேர்ந்த அண்ணாதுரை என்பவரது மகன் அனுசந்திரன் (வயது 37) என்ற கூலித்தொழிலாளி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு உள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில், குடிபோ தை யில் பெரியார் சிலை அருகே படுத்திருந்ததாகவும், பெரியாரின் சிலையில் உள்ள விரலை பிடித்து எந்திரிக்க முயற்சித்த போது, உடைந்து விட்டதாகவும், இதனால் தான் பயன்படுத்திய சிவப்பு துண்டை வைத்து, மறைத்து விட்டு சென்றதாகவும், ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் அவரை கைது செய்த போலீசார், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சமத்துவபுரம் நுழைவு வாயிலில் மார்பளவு கொண்ட பெரியார் சிலை வைக்கப்பட்டு உள்ளது.
- போலீசார் நேரில் வந்து விசாரணை நடத்தினர்.
கோவை:
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள வடசித்தூரில் பெரியார் நினைவு சமத்துவபுரம் உள்ளது. இங்கு ஏராளமானோர் வசித்து வருகிறார்கள்.
சமத்துவபுரம் நுழைவு வாயிலில் மார்பளவு கொண்ட பெரியார் சிலை வைக்கப்பட்டு உள்ளது. கம்பி வேலி அமைக்கப்பட்டு அதற்குள் சிலை மிகவும் பாதுகாப்புடன் இருந்தது.
இந்தநிலையில் இன்று காலை அந்த பெரியார் சிலை மீது யாரோ மாட்டு சாணத்தை வீசி அவமதிப்பு செய்து இருந்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியினர் நெகமம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் நேரில் வந்து விசாரணை நடத்தினர். பின்னர் சிலையின் மீது வீசப்பட்டு இருந்த சாணத்தை தண்ணீர் ஊற்றி கழுவினர். இந்த செயலில் ஈடுபட்டது யார், எதற்காக ஈடுபட்டனர் என்று தெரியவில்லை. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தகவல் அறிந்த திராவிடர் கழகம் மற்றும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் அங்கு திரண்டனர். இதனால் கிணத்துக்கடவு சமத்துவபுரம் பகுதியில் பரபரப்பு நிலவியது. பாதுகாப்பு கருதி அங்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர். பெரியார் சிலையை அவமதித்தவர்களை கண்டுபிடித்து சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் புகாரில் கூறி இருந்தனர்.
இதுகுறித்து தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் கூறுகையில் மக்கள் மத்தியில் வேற்றுமை இருக்கக் கூடாது. ஒற்றுமையாக சமத்துவமாக வாழ வேண்டும் என்பதற்காக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் தொடங்கப்பட்டது சமத்துவ புரங்கள். அதற்கு பெரியாரின் பெயரையே சூட்டினார்.
அத்தகைய சமத்துவபுரத்தில் இருந்த பெரியாரின் சிலை அவமதிக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது. பெரியார் சிலை அவமதிக்கப்பட்ட செயல் சமூக ஒற்றுைமயை சீர்குலைக்க நடத்தப்பட்ட சதி ஆகும். எனவே இதில் தொடர்புடைய நபர்களை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வடசேரியில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
- அ.தி.மு.க. சார்பில் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நாகர்கோவில் :
தந்தை பெரியார் பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையடுத்து நாகர்கோவில் வடசேரியில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட பொருளாளர் கேட்சன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் துணை மேயர் மேரி பிரின்சி லதா, மாவட்ட துணை செயலாளர் பூதலிங்கம், தலைமை செயற்குழு உறுப்பினர் சதாசிவம், அணி அமைப்பாளர்கள் இ.என். சங்கர், அருண் காந்த் உள்பட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் மாவட்ட செயலாளர் வெற்றிவேந்தன் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அ.தி.மு.க. சார்பில் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவைத் தலைவர் சேவியர் மனோகரன், ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், மாநகராட்சி கவுன்சிலர் அக்சயா கண்ணன் மற்றும் வடிவை மாதவன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருமாவேந்தன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மோகன், அந்தோணி ஆகியோரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாநில செயலாளர் முத்தரசன் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
- தி.மு.க. சார்பில் நகர்மன்ற தலைவர் கருணாநிதி, பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
- ம.தி.மு.க. சார்பில் வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ், விநாயகா ரமேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
கோவில்பட்டி:
பெரியார் நினைவு நாளை முன்னிட்டு கோவில்பட்டி அருகே பாண்டவர்மங்கலத்தில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தி.மு.க. சார்பில் மத்திய ஒன்றிய செயலாளர் முருகேசன் தலைமையில் நகர செயலாளரும், நகர்மன்ற தலைவருமான கருணாநிதி, பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில் செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், விவசாய அணி துணை அமைப்பாளர் சந்தானம், மாவட்ட பொறியாளரணி துணை அமைப்பாளர் ரமேஷ், நெசவாளரணி துணை அமைப்பாளர் சண்முகராஜ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பாரதி, மாணவரணி துணை அமைப்பாளர்கள் கணேசன், செல்வ மணிகண்டன், தாமோதரக்கண்ணன், ஒன்றிய கவுன்சிலர் பொன்னுத்துரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ம.தி.மு.க. சார்பில் வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ் தலைமையில், மாநில சொத்துப் பாதுகாப்புக் குழு உறுப்பினர் விநாயகா ரமேஷ், பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில் மத்திய ஒன்றிய செயலாளர் சரவணன், நிர்வாகிகள் முத்துசெல்வம், கணேசன், நகர செயலாளர் பால்ராஜ், இளைஞர் அணி செயலாளர் முத்து கிருஷ்ணன், முத்துப்பாண்டி, நாகராஜ், செண்பகராஜ், கோடையிடி ராமச்சந்திரன், சிவராமகிருஷ்ணன் உட்பட ஏராளமான ம.தி.மு.கவினர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
- தமிழகத்தில் உள்ள முக்கிய சந்திப்புகளில் பெரியார், அம்பேத்கர் சிலைகள் நிறுவப்பட்டிருக்கும்.
- சென்னை அண்ணாசாலை சிம்சன் சந்திப்பு பகுதியில் உள்ள பெரியார் சிலை முன்பு பாதுகாப்புக்கு போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
சென்னை:
அம்பேத்கரின் 66-வது நினைவு தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் அவரது சிலைக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டன.
இந்த நிலையில் இந்து மக்கள் கட்சியினர் கும்பகோணத்தில் காவி உடையுடன் கூடிய அம்பேத்கர் சுவரொட்டிகளை ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து சென்னையில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்த சென்ற இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது.
ஐகோர்ட்டில் வக்கீல்களும், ராஜா அண்ணாமலைபுரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள அம்பேத்கர் மற்றும் பெரியார் சிலைகளுக்கு இந்து மக்கள் கட்சியினர் காவி சாயம் பூசி விடக்கூடாது என்பதால் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் அம்பேத்கர் மற்றும் பெரியார் சிலைகள் முன்பு நேற்று இரவில் இருந்தே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பெரியார், அம்பேத்கர் சிலைகளை பொறுத்தவரையில் தமிழகத்தில் முக்கிய சந்திப்புகளில் இந்த 2 சிலைகளும் நிறுவப்பட்டிருக்கும். கிராமப்புறங்கள் தொடங்கி நகர பகுதிகள் வரையில் உள்புற சாலைகளிலும் இந்த 2 தலைவர்களுக்கும் சிலைகள் நிறுவப்பட்டுள்ளது. இதனால் அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னை அண்ணாசாலை சிம்சன் சந்திப்பு பகுதியில் உள்ள பெரியார் சிலை முன்பு பாதுகாப்புக்கு போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தாம்பரம், ஆவடி போலீஸ் கமிஷனரக எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் சிலைகளுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- சட்டம்-ஒழுங்கை சீர் குலைக்கும் வகையில் செயல்படுபவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- பெரியார், அண்ணா சிலைகளை சேதப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒரு கும்பல் ஈடுபட்டுள்ளது.
சென்னை:
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பாரதிய ஜனதா பிரமுகர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் பதட்டத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து மாநிலம் முழுவதும் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் போலீஸ் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பெட்ரோல் குண்டு வீசியவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பாக 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பா.ஜனதா பிரமுகர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டது.
சட்டம்-ஒழுங்கை சீர் குலைக்கும் வகையில் செயல்படுபவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பெரியார், அண்ணா சிலைகளை சேதப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒரு கும்பல் ஈடுபட்டுள்ளது. விழுப்புரம் கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் அண்ணா சிலை அவமதிக்கப்பட்டு இருந்தது.
இதுபோன்று மேலும் பல இடங்களிலும் அண்ணா மற்றும் பெரியார் சிலைகளை மர்ம கும்பல் அவமதித்து சேதப்படுத்த திட்டமிட்டிருப்பதாக உளவு பிரிவு போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தமிழகம் முழுவதும் பெரியார்-அண்ணா சிலைகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் பெரியார்-அண்ணா சிலைகளுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
சென்னை முழுவதும் உள்ள பெரியார்-அண்ணா சிலைகளுக்கு பாதுகாப்பு அளிக்க கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து அண்ணா சாலையில் உள்ள பெரியார் -அண்ணா சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னை முழுவதும் 47 பெரியார் சிலைகளுக்கும், 17 அண்ணா சிலைகளுக்கும் உரிய பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சிலைகள் இருக்கும் பகுதிகளில் போலீசார் ரோந்து சுற்றி வருகிறார்கள்.
இதேபோன்று அனைத்து மாவட்டங்களிலும் போலீஸ் சூப்பிரண்டுகள் மேற்பார்வையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
- 144-வது பிறந்தநாள் விழா
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர் அடுத்த சமத்துவபுரம் பகுதியில் வேலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தந்தை பெரியாரின் 144-வது பிறந்தநாள் விழா முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தலைமையில் பெரியாரின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதனை தொடர்ந்து அமைச்சர் காந்தி தலைமையில் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ, மாவட்ட துணை செயலாளர் ஏ.கே.சுந்தரமூர்த்தி, வாலாஜா ஒன்றியக்குழுத் தலைவர் வெங்கட்ரமணன், அம்மூர் பேரூர் செயலாளர் பெரியசாமி, ராணிப்பேட்டை நகர செயலாளர் பூங்காவனம், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வினோத், அம்மூர் பேரூராட்சி துணை தலைவர் உஷாராணி அண்ணாதுரை, ராணிப்பேட்டை நகரமன்ற உறுப்பினர்கள் அப்துல்லா, குமார் உள்பட ஒன்றிய, நகர, பேரூர் தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் பெரியாரின் உருவ படத்திற்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
- பெரியார் பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.
- அரசியல் கட்சியினர் மரியாதை செலுத்தினர்
நாகர்கோவில்:
பெரியார் பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையடுத்து நாகர்கோவில் ஒழுகின சேரியில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சி யினர் மாலை அணி வித்து மரியாதை செலுத்தி னார்கள்.
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட பொறுப்பாளரும் மேயருமான மகேஷ் தலை மையில் மாலை அணி வித்து மரியாதை செலுத்தப் பட்டது.
முன்னாள் எம்.எல்.ஏ. ஆஸ்டின், முன்னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன், மாநகர செயலாளர் ஆனந்த், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை செயலாளர் தில்லை செல்வம், ஒன்றிய செயலாளர் மதிய ழகன், சுரேந்திர குமார், பாபு, செல்வன், மாணவரணி அமைப்பாளர் சதாசிவம், தாழக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் இ.என்.சங்கர் மாநகராட்சி கவுன்சிலர் கலாராணி, நாகர்கோவில் மாநகர துணை செயலாளர் வேல் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அ.தி.மு.க. சார்பில் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. தலைமையில் நிர்வாகிகள் மாலை அணி வித்து மரியாதை செலுத்தி னார்கள்.
முன்னாள் அமைச்சர் பச்சைமால், மாநகராட்சி கவுன்சிலர் அக்ஷ்யா கண்ணன், தோவாளை யூனியன் தலைவர் சாந்தினி பகவதியப்பன், நிர்வாகிகள் ஜெயகோபால், சகாயராஜ் உட்பட பலர் கலந்து கொண் டனர்.
திராவிட கழகம் சார் பில் மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலை மையில் மாலை அணி வித்து மரியாதை செலுத் தப்பட்டது. மாவட்ட செயலாளர் வெற்றிவேந்தன், நிர்வாகி கள் சிவதானு, நல்லபெரு மாள், பொன்னூ ராஜன், இந்திராமணி, ராஜூலால், ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
- ம.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் நாகராஜன் தலைமையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
திருப்பூர் :
பெரியார் பிறந்தநாளையொட்டி திருப்பூர் ரெயில் நிலையம் முன்புள்ள பெரியார் சிலைக்கு தி.மு.க. சார்பில் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் செல்வராஜ் எம்.எல்.ஏ., திருப்பூர் மாகராட்சி மேயர் தினேஷ்குமார், திருப்பூர் தெற்கு மாநகர தி.மு.க. செயலாளர் டி.கே.டி. நாகராஜ், கவுன்சிலர்கள் திவாகர், ராதாகிருஷ்ணன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் எம்.எஸ்.ஆர். ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருப்பூர் மாநகர் மாவட்ட ம.தி.மு.க. சார்பில் பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு மாநகர் மாவட்ட செயலாளர்.நாகராஜன் தலைமையில் திருப்பூர் ெரயில் நிலையம் முன்பு உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர்.நேமிநாதன்,மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம், மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் சாந்தாமணி, மாமன்ற உறுப்பினர் குமார்,மாநில பொதுக்குழு உறுப்பினர் சக்திவேல்,மாநில இளைஞரணி துணை செயலாளர் ரத்னசாமி,தொண்டர் அணி மாவட்ட அமைப்பாளர் ராஜகோபால் மற்றும் பகுதி செயலாளர்கள் ,ஒன்றியச் செயலாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் சமூகநீதிநாள் உறுதிமொழி எடுத்தக்கொண்டனர்.
- கனல் கண்ணனுக்கு எதிராக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது
- பொது அமைதியை சீர்குலைத்தல் சட்டப்பிரிவுகளின் கீழ் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை:
ஸ்ரீரங்கம் கோயில் முன்பு இருக்கும் பெரியார் சிலையை இடிக்க வேண்டும் என ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் பேசியது சர்ச்சையை கிளப்பியது. அதில், உலகப் புகழ் பெற்ற திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் முன்பு இருக்கும், கடவுள் இல்லை என்று சொன்னவரின் சிலை என்றைக்கு உடைக்கப்படுகிறதோ அன்றுதான் ஹிந்துக்களின் உண்மையான எழுச்சி நாள் என்று கனல் கண்ணன் பேசியுள்ளார். இவரின் இந்த கருத்துக்கு எதிர்ப்பும் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.
கனல் கண்ணனுக்கு எதிராக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், தந்தை பெரியார் திராவிடக்கழகத்தின் மாவட்ட செயலாளர் குமரன் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், பொது அமைதியை சீர்குலைத்தல் சட்டப்பிரிவுகளின் கீழ் கனல் கண்ணன் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையடுத்து முன்ஜாமீன் கேட்டு கனல் கண்ணன், மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், "சிலையை உடைக்கப் போவதாக கூறவில்லை. சிலையை அகற்ற வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கைதான் விடுக்கப்பட்டது. மனுதாரர் வேறு எந்த குற்றமும் செய்யவில்லை" என்று வாதிடப்பட்டது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து மாநகர குற்றவியல் அரசு வக்கீல் ஜி.தேவராஜன் வாதிட்டார். "மனுதாரர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. மோதலை உருவாக்கும் விதமாக மதங்களை பற்றியும் பேசியுள்ளார். அவருக்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது" என வாதிட்டார். இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி, முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
- காரைக்குடியில் கருணாநிதி பிறந்த நாளில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.
- பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பெரியார் சிலை அருகில் நடந்தது.
காரைக்குடி
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு காரைக்குடி 15-வது வட்ட தி.மு.க. சார்பில் கொடியேற்று விழா மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பெரியார் சிலை அருகில் நடந்தது.
நகர்மன்ற தலைவர் முத்துதுரை வரவேற்றார்.முன்னாள் அமைச்சர் தென்னவன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் சுப.துரைராஜ், நகர செயலாளர் குணசேகரன் முன்னிலை வகித்தனர்.
அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தி.மு.க. கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார். இதில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் செந்தில்குமார், ஒன்றிய செயலாளர்கள் கே.ஆர்.ஆனந்த், சின்னத்துரை, மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளர் சத்யா ராஜா, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ராஜ்குமார், நகர்மன்ற உறுப்பினர்கள் கண்ணன், அன்னை மைக்கேல், நாகராஜன், சித்திக், தெய்வானை, கலா, ஹேமலதா செந்தில், பூமி, கார்த்திகேயன், தனம் சிங்கமுத்து, மாவட்ட பிரதிநிதிகள் சேவியர், கென்னடி, முன்னாள் நகர இளைஞரணி அமைப்பாளர் காரை சுரேஷ்,புதுவயல் பேரூராட்சி துணை தலைவர் பகுர்தீன் அலி, நிர்வாகிகள் ருக்மா சரவணன், அமராவதிபுதூர் தினேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- சென்னை அண்ணாசாலையில் சிம்சன் அருகே பிரமாண்டமான பெரியார் சிலை அமைந்துள்ளது.
- பெரியார் சிலையை கோவிந்தசாமி என்ற சிற்பி வடிவமைத்துள்ளார்.
சென்னை:
சென்னை அண்ணாசாலை சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலையை சுற்றிலும் அழகிய பூங்கா- ரவுண்டானா அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
சென்னை அண்ணாசாலையில் சிம்சன் அருகே பிரமாண்டமான பெரியார் சிலை அமைந்துள்ளது. சாலையின் நடுவில் மிகப்பெரிய பீடத்தில் பெரியார் அமர்ந்து கையை நீட்டி அறிவுரை வழங்குவது போன்ற கம்பீர தோற்றத்தில் இந்த சிலை தத்ரூபமாக உள்ளது.
இந்த சிலையை அண்ணாசாலையில் வாகனங்களில் செல்லும் அனைவரும் வியப்புடன் பார்த்து செல்லுவார்கள்.
இந்த பெரியார் சிலையை கோவிந்தசாமி என்ற சிற்பி வடிவமைத்துள்ளார்.பெரியாரின் 96-வது பிறந்த நாளில் இந்த சிலையை 1974-ம் ஆண்டில் முதல்-அமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார்.
ஒவ்வொரு ஆண்டும் பெரியார் பிறந்தநாள், மற்றும் நினைவு நாளின் போது இந்த சிலைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்துவார்கள்.
இதனால் அப்பகுதியில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.
இதனால் தற்போது அண்ணாசாலையில் சிம்சன்யொட்டிய பகுதிகளில் சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது. வாகன போக்குவரத்து வசதிக்காக அப்பகுதி முழுவதும் தார்சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளது. விசாலமான வகையில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் பெரியார் சிலை சுற்றியுள்ள பகுதிகளில் பிரமாண்டமான வகையில் புதிதாக பூங்காவுடன் கூடிய ரவுண்டானா அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது.
இதற்காக பெரியார் சிலையை சுற்றிலும் புல்டோசர் மூலம் சீரமைக்கப்பட்டு ரவுண்டானா மேடை அமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த ரவுண்டானாவில் பல்வேறு வண்ணப்பூக்கள் நிறைந்த அழகிய செடிகள் அமைத்து அழகுபடுத்தப்பட உள்ளது.
மேலும் இரவு நேரத்தில் மின்னொலியில் பெரியார் சிலை ஜொலிக்கும் வகையில் கலர்புல் மின்விளக்குகள் அலங்காரம் செய்யப்பட உள்ளது.பெரியார் பிறந்தநாள், மற்றும் நினைவு நாட்களில் அரசியல் கட்சியினர் பெரியார் சிலைக்கு மாலைகள் அணிவிக்கும் போது அண்ணாசாலையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் இடையூறுகள் ஏற்படாத வகையில் அங்கு பல்வேறு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. இப்பணிகள் இன்னும் அடுத்த மாதத்தில் நிறைவடைய உள்ளன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்