என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பூச்சி மருந்து"
- பொதுமக்களில் ஒரு சிலர் ஊரின் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் குடிநீரை பரிசோதனை செய்தனர்.
- கடந்த இரு நாட்களாக அப்பகுதியில் உள்ள யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை என கூறப்படுகிறது.
வள்ளியூர்:
நெல்லை மாவட்டம் ஆனைகுளம் ஊராட்சி துலுக்கர் பட்டியில் இன்று காலை குடிநீரில் அதிகமான மருந்து வாசனை வீசியதாக பொதுமக்கள் தரப்பில் புகார் எழுந்தது.
இதையடுத்து பொதுமக்களில் ஒரு சிலர் ஊரின் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் குடிநீரை பரிசோதனை செய்தனர். அப்போது அதிகமான மருந்து வாசனை வீசி உள்ளது.
இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் சுகாதாரத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக வட்டார மருத்துவ அலுவலர் கோலப்பன் தலைமையிலான சுகாதாரத்துறையினர் விரைந்து சென்ற குடிநீரை பரிசோதனை செய்தனர்.
மேலும் கடந்த இரு நாட்களாக அப்பகுதியில் உள்ள யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை என கூறப்படுகிறது.
எனினும் அதில் பூச்சி மருந்தை விஷமிகள் யாரேனும் கலந்தனரா? அல்லது கிருமி நாசினி பவுடர் அதிகம் கலந்ததால் வாசனை உள்ளதா? என்ற நோக்கத்தில் சுகாதாரத்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
- இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்த நிலையில் அவரது மனைவி தீபா கண்டித்துள்ளார்.
- ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மதிசெல்வம் பரிதாபமாக உயிரிழந்தார்.
கடலூர்:
மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். கடலூர் அடுத்த காரணப்பட்டு சேர்ந்தவர் மதிச்செல்வம் (வயது 30 ). கூலி தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்த நிலையில் அவரது மனைவி தீபா கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த மதி செல்வம் பூச்சி மருந்து குடித்தார்.
இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் மதி செல்வத்தை மீட்டு கரிக்கலாம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு மதி செல்வத்தை சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மதிசெல்வம் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பாலமுருகனுக்கு அடிக்கடி கழுத்தில் வலி ஏற்பட்டுள்ளது.
- நிலத்திற்கு வாங்கி வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். அவரது குடும்பத்தார்,
கடலூர்:
சிதம்பரம் அடுத்த வீரசோ ழகன் பகுதியை சேர்ந்த வர் பாலமுருகன் (வயது 50). விவசாயி. இவருக்கு கடந்த சில தினங்க ளுக்கு முன்பாக கழுத்துப் பகுதியில் அறுவை சிகிச்சை நடை பெற்றது. இதையடுத்து சிகிச்சை முடிந்து வீட்டிற்கு வந்த பாலமுருகனுக்கு அடிக்கடி கழுத்தில் வலி ஏற்பட்டுள்ளது. இதை யடுத்து ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் திடீரென கழுத்துப் பகுதியில் வலி ஏற்பட்டுள்ளது. இதற்கு மாத்திரை உட்கொண்டும் வலி குறையாமல் துடித்துள்ளார். வலி பொருக்க முடியாத பால முருகன், நிலத்திற்கு வாங்கி வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார்.
அவரது குடும்பத்தார், பாலமுருகனை மீட்டு சிதம்பரம் அரசு ஆஸ்பத்தி ரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக இறந்துபோனார். இது தொடர்பான புகாரின் பேரில் சிதம்பரம் தாலுக்கா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வீட்டில் பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்து கிடந்தார்.
- சிகிச்சை பலனின்றி நேற்று மாதேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், பொம்மிடி அருகே கதிரிபுரம் பகுதியை சேர்ந்தவர் மாதேஷ் (வயது33). இவரது மனைவி சந்தியா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் மாணிக்கத்துக்கு மதுகுடிக்கும் பழக்கம் உள்ளது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பத்தன்று மீண்டும் இருவருக்கும் தகராறு நடந்தது. இதனால் கோபித்து கொண்டு சந்தியா தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் தனிமையில் தவித்த மாதேஷ் தனது மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். ஆனால் அதற்கு வர மறுத்துள்ளார். இதில் மனமுடைந்து காணப்பட்ட மாதேஷ் கடந்த 4-ந்தேதி அன்று வீட்டில் பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்து கிடந்தார். இதனை பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாதேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து பொம்மிடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சந்திரபோஸ் விவசாய கூலி இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது.
- சந்திரபோஸ் வாயில் நுரை பொங்க மயங்கி கிடந்தார்.
புதுச்சேரி:
காரைக்கால் அருகே தரங்கம்பாடி நல்லாடை, கார்குடி பகுதியை சேர்ந்தவர் (மயிலாடுதுறை மாவட்டம்) சந்திரபோஸ் (வயது64). இவர் விவசாய கூலி வேலைசெய்து வந்தார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு மனைவி ராதாவிடம் சந்திரபோஸ் மது குடிக்க பணம் கேட்டு சண்டையிட்டதாக கூறப்படுகிறது. இதனால் கோபப்பட்டு வெளியே சென்றவர் 10 மணி வரை வீடு திரும்பவில்லை.
இந்நிலையில், பக்கத்து வீட்டில் வசிக்கும் உறவினர் ஒருவர், நெடுங்காடு நல்லாத்தூர் மேலபடுகை சாலை பாலத்தில், சந்திரபோஸ், மது மற்றும் பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடப்பதாக உறவினர் மூலம் ராதாவிற்கு தகவல் சென்றது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, சந்திரபோஸ் வாயில் நுரை பொங்க மயங்கி கிடந்தார். தொடர்ந்து, நெடுங்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்று முதல் உதவி அளித்து, மேல்சிகிச்சைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்தி ரிக்கு தூக்கி சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். பின்னர், ராதா, நெடுங்காடு போலீசில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- மகாலட்சுமி பிளஸ்-2 முடித்து விட்டு அதே பகுதியில் கூலி வேலை செய்து வந்துள்ளார்.
- பூச்சி மருந்து குடித்து விட்டதாக கூறியுள்ளார்.
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம் அருகே ஈய்யனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிராஜ் (வயது 53). கூலித் தொழிலாளி, இவரது மகள் மகாலட்சுமி (21) இவர் பிளஸ்-2 முடித்து விட்டு அதே பகுதியில் கூலி வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு ஒவ்வொரு மாதமும் வயிற்று வலி வருவதாகவும் அவ்வாறு வயிற்றை வலிக்கும் போது தனியார் மருந்தகத்தில் மருந்தை வாங்கி சாப்பிடுவது வழக்கம் என கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று காலை கூலி வேலைக்கு சென்று விட்டு மீண்டும் மதியம் வீட்டுக்கு திரும்பி னார். அப்போது வயிற்று வலி அதிகமாக இருந்ததால் பருத்தி வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்து விட்டு வாந்தி எடுத்துள்ளார். வீட்டில் இருந்தவர்கள் ஏன் வாந்தி எடுக்கிறாய்? என கேட்டபோது பூச்சி மருந்து குடித்து விட்டதாக கூறி யுள்ளார். அதிர்ச்சியடைந்த வீட்டில் இருந்தவர்கள் மகாலட்சுமியை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு இவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து இவரது தந்தை மணிராஜ் கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உடல்நலம் பாதிக்கப்பட்டதால விரக்தி
- போலீசார் விசாரணை
வாணாபுரம்:
தச்சம்பட்டு அருகே உள்ள சூ.பாப்பாம்பாடி பகுதியை சேர்ந்தவர் சின்னதுரை (வயது 64), கூலி தொழிலாளி.
இவ ருக்கு அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்ததாகவும் அதற்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சம்பவத்தன்று உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் விவசாய பயிர்களுக்கு அடிக்க வைக்கப்பட்டிருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்துவிட்டு மயங்கி கிடந்தார்.
உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு காட்டாம் பூண்டி அரசு சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருவண்ணா மலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தச்சம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த மூன்று மாத காலமாக சரிவர வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.
- சிகிச்சை பலனின்றி ஞானவேல் பரிதாபமாக உயிர் இழந்தார்.
கடலூர்:
பண்ருட்டி அருகே சிறு வத்தூர் 7-வது தெருவை சேர்ந்தவர் ஞானவேல் (வயது 40),ஆட்டோ டிரை வர். கடந்த மூன்று மாத காலமாக சரிவர வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். இதனால் கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மன உளைச்ச லில் இருந்த ஞானவேல் நேற்று இரவு 10 வீட்டி லிருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி கீழே விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வீட்டில் இருந்தவர்கள் ஞான வேலுவை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஞானவேல் பரிதாபமாக உயிர் இழந்தார். இது பற்றி தகவல் அறிந்ததும் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் சம்பவ இடத்திற்கு சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- விருதுநகர் அருகே மகன் இறந்த சோகத்தில் தந்தை தற்கொலை செய்து கொண்டார்.
- நத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கட்டய தேவன் பட்டியை சேர்ந்தவர் பாண்டி என்ற பெரியபாண்டி. இவரது கடைசி மகன் கடந்த மாதத்தில் திடீரென இறந்து விட்டார். இதனால் அவர் மன வேதனையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த வாரத்தில் மரத்திலிருந்து கீழே விழுந்து காயம் ஏற்பட்டதால் வெளியே செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பெரிய பாண்டி பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் நத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பரமத்தி வட்டாரத்தில் நீடித்த நிலையான பருத்தி சாகுபடி இயக்கத்தின் கீழ் மேலப்பட்டி கிராமத்தில் ட்ரோன் மூலம் பூச்சி மருந்து தெளித்தல் நிகழ்ச்சி செயல்விளக்கமாக செய்து காண்பிக்கப்பட்டது.
- விவசாயிகள், மற்றும் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி வட்டாரத்தில் நீடித்த நிலையான பருத்தி சாகுபடி இயக்கத்தின் கீழ் மேலப்பட்டி கிராமத்தில் ட்ரோன் மூலம் பூச்சி மருந்து தெளித்தல் நிகழ்ச்சி செயல்விளக்கமாக செய்து காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர், பரமத்தி வட்டார அட்மா திட்ட தலைவர் தனராசு , மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில், பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்தசாமி மற்றும் திரளான விவசாயிகள், மற்றும் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
- விவசாயிகள் மர வள்ளிக் கிழங்கு குச்சிகள் பாதிப்படைந்த வயலில் இருந்து விதை கரணை தேர்வு செய்வதை தவிர்க்க வேண்டும்.
- அனைத்து விவசாயிகளின் கூட்டு முயற்சி மாவுப்பூச்சி மேலாண்மைக்கு மிகவும் அவசிய மானதாகும்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை வட்டாரத்தில் தோட்டக்கலைத்துறை வெளியிட்டுள்ள கூறியிருப்பதாவது:-
விவசாயிகள் மர வள்ளிக் கிழங்கு குச்சிகள் பாதிப்படைந்த வயலில் இருந்து விதை கரணை தேர்வு செய்வதை தவிர்க்க
வேண்டும். முன்னெச்சரிக்கையாக, வேப்ப எண்ணெய் 2 சதவீதம் அல்லது அசாடிராக்டின் 1500 (5 மி.லி/ லிட்டர் தண்ணீருக்கு) மற்றும் 1 மி.லி. டீப்பால் ஒட்டும் திரவம் 1 லிட்டர் தண்ணீருடன் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு செடியின் அடிப்பாகம் வரை நன்கு நனையும் படி தெளிக்க வேண்டும். இதனால் மாவுப்பூச்சிகள் தாக்குதலை தடுக்கலாம்.
தையோமீத்தாக்சிம் பூச்சிக் கொல்லி 1 லிட்டர் தண்ணீருக்கு 0.5 கிராம் அளவில் கலந்து கைத் தெளிப்பான் கொண்டு செடியின் அடிப்பாகம் நன்கு நனையும்படி தெளித்து மாவுப்பூச்சி தாக்கு தலை தடுக்கலாம். மருந்து தெளிக்கும்போது பாதிக்கப்பட்ட செடியின் நுனிப்பகுதியை மாவுப்பூச்சி
யுடன் சேர்த்து அப்புறப்ப டுத்தி எரிக்க வேண்டும்.
அனைத்து விவசாயிகளின் கூட்டு முயற்சி மாவுப்பூச்சி மேலாண்மைக்கு மிகவும் அவசிய மானதாகும். விவ
சாயிகள் ஒருங்கிணைந்த முறைகளில் மாவுப்பூச்சி களை கட்டுப்படுத்த வேண்டும். நமது பகுதியில் மரவள்ளி நடவு பருவம் என்பதால் அனைவரும் தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.
மேற்கண்ட மருந்துகள் கபிலர்மலை வட்டார தோட்டக்கலை துறை சார்பில் மானியம் மூலம் வழங்கப்படுகிறது. மானிய விலையில் மருந்துகள் தேவைப்படும் விவசாயிகள் சிட்டா,ஆதார் நகல், ரேசன் கார்டு நகல்,புகைப்படம் ஆகியவற்றை கபிலர்மலை வட்டார தோட்டக்கலை துறை அலுவலகத்திற்கு கொண்டு வந்து கொடுத்து பெற்றுக் கொள்ளலாம்.
- பூச்சிக்கொல்லி மருந்தை குடித்த சிறுமி பரிதாபமாக இறந்தார்.
- சிறுமி இறந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள அரச குலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமு (வயது 33). விவசாயியான இவருக்கு மனைவி மற்றும் 3 வயதில் சஞ்சனா என்ற பெண் குழந்தை உள்ளது.சம்பவத்தன்று தோட்டத்தில் பூச்சி கொல்லி மருந்து தெளிக்க ராமு தனது மனைவி மற்றும் மகளுடன் சென்றுள்ளார்.
அங்கு பூச்சிக்கொல்லி மருந்தை தண்ணீர் கலந்து ராமுவும் அவரது மனைவி யும் அதனை பயிர்களுக்கு தெளிக்க சென்று விட்டனர். காலி பாட்டிலை அப்புறப்படுத்தாமல் ராமு அங்கேயே போட்டுவிட்டு சென்றுவிட்டதாக தெரி கிறது. அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுமி பூச்சிக்கொல்லி மருந்தின் காலி பாட்டிலை எடுத்து அதில் தண்ணீரை ஊற்றி குடித்ததாக தெரி கிறது.
சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து உயிருக்கு போராடிய மகளை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராமு உடனே காரியாபட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு சிறு சிறுமியின் உடல் நிலை மோசமானதால் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சஞ்சனா பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக ஆவியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெற்றோர் அஜாக்கிர தையாக இருந்ததால் சிறுமி இறந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்