search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாழை இலை"

    • ஒரே வாழை இலையில் அனைத்து உணவுகளும் பரிமாறப்படும்.
    • ஓண விருந்து பரிமாறப்படும் வாலை இலை விற்பனையும் அதிகமாக நடக்கும்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் சாதி மத பாகுபாடின்றி கொண்டாடப்படும் பண்டியைாக ஓணம் திகழ்கிறது. இந்த விழா நடக்கும் 10 நாட்களும் மாநிலம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    விழாவின் 10-வது நாளில் ஓணம் கொண்டாடப்படும். அன்றைய தினம் பொதுமக்கள் அனைவரும் தங்களின் குடும்பத்தினருடன் இணைந்து கொண்டாட்டத்தில் ஈடுபடுவார்கள். அப்போது நடக்கும் ஓண விருந்து பிரசித்திபெற்றது. இதில் அறுசுவை கொண்ட பலவித உணவுகள் இடம் பெறும்.

    ஒரே வாழை இலையில் அனைத்து உணவுகளும் பரிமாறப்படும். ஓண விருந்தில் இடம்பெறும் உணவு பொருட்களை மக்கள் அதிகளவில் வாங்குவார்கள். அதேபோன்று ஓண விருந்து பரிமாறப்படும் வாலை இலை விற்பனையும் அதிகமாக நடக்கும்.

    இதற்காக கேரளாவின பல்வேறு பகுதிகளில் இருந்தும் வாழை இலைகள் சந்தைகளுக்கு வரும். இருந்த போதிலும் தமிழகத்தில் இருந்து அதிகளவில் வாழை இலைகள் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்படும். அதேபோன்று இந்த ஆண்டும் வாழை இலைகள் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

    கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு ரூ.6 கோடி வரை வாழை இலை வர்த்தகம் நடந்துள்ளது. அதில் தமிழகத்திற்கு ரூ.4 கோடி கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    • விநாயகர் சதுர்த்தி மற்றும் சுபமுகூர்த்த தினம் அடுத்தடுத்து வந்ததையடுத்து வாழை இலையின் தேவை அதிகரித்தது.
    • வழக்கமாக ஆவணி மாதத்தில் ஓணம் பண்டிகைக்காக கேரளாவில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வருகை தருவார்கள்.

    நாகர்கோவில்:

    விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்பட்டது. இதைத்தொடர்ந்து நாளையும், நாளை மறுநாளும் சுப முகூர்த்த தினங்களாகும். இதனால் நாகர்கோவில் வடசேரி மார்க்கெட், அப்டா மார்க்கெட்டில் வாழை இலையின் விலை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது.

    அப்டா மார்க்கெட்டிற்கு குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமின்றி நெல்லை மாவட்டம் களக்காடு, ஏர்வாடி, ராதாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் வாழை இலைகள் விற்பனைக்காக வருகிறது. 150 இலைகள் கொண்ட ஒரு கட்டு கடந்த வாரம் ரூ.600-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    ஆனால் இன்று விலை கிடுகிடுவென உயர்ந்து ரூ.1500-க்கு விற்பனையானது. ஒரு இலை பத்து ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் வாழைத்தார்கள் விலையும் உயர்ந்து காணப்பட்டது. ரசகதலி வாழைக்குலை குமரி மாவட்டம் மட்டுமின்றி, நெல்லை மாவட்டத்தில் இருந்தும் அப்டா மார்க்கெட்டிற்கு விற்பனைக்காக கொண்டுவரப்படுகிறது.

    கடந்த சில நாட்களாக வாழைக்குலைகளின் விலை உயர்ந்தே உள்ளது. தற்போது வாழைக்குலை வாங்குவதற்கு ஏராளமான வியாபாரிகள் வருவதால் விலை உயர்ந்து காணப்பட்டது. ஒரு வாழைத்தார் ரூ.450 முதல் ரூ.800 வரை விற்பனையானது.

    இதே போல் செவ்வாழை, ஏத்தன், நாட்டுப்பழம், பச்சை பழம் உள்ளிட்ட அனைத்து வாழைத்தார்கள் விலையும் உயர்ந்துள்ளது. இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறியதாவது:-

    விநாயகர் சதுர்த்தி மற்றும் சுபமுகூர்த்த தினம் அடுத்தடுத்து வந்ததையடுத்து வாழை இலையின் தேவை அதிகரித்தது. இதனால் வாழை இலை விலை உயர்ந்துள்ளது. இன்னும் இரண்டு நாட்களுக்கு விலை உயர்ந்து காணப்படும். வாழைத்தாரை பொருத்தமட்டில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வந்தாலும் வியாபாரிகள் போட்டி போட்டு வாலைத்தார்களை வாங்கி செல்கிறார்கள்.

    வழக்கமாக ஆவணி மாதத்தில் ஓணம் பண்டிகைக்காக கேரளாவில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வருகை தருவார்கள். இந்த ஆண்டு ஓணம் பண்டிகை கொண்டாடப்படாது என்று அந்த மாநில முதல்-மந்திரி கூறியுள்ளார். இருப்பினும் வாழைத்தார்களை வாங்குவதற்கு ஏராளமான பொதுமக்கள் வியாபாரிகள் வருகிறார்கள். எனவே இன்னும் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிறுநீரகக் கற்கள் உருவாவதைத் தடுக்கும்.
    • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

    வாழை இலையை பயன்படுத்தி சாப்பிடுபவர்களுக்கு நோய்கள் வருவதில்லை. இதை என்றாவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? வாழை இலையில் தொடர்ந்து உணவு உண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். உடல் நலம் பெறும். மந்தம், வலிமைக்குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும். அழல் எனப்படும் பித்தமும் தணியும்.

    நம் பாரம்பரியத்தோடு நெருங்கிய தொடர்புடையது வாழை இலை. விருந்துகள், விழாக்கள், திருமணம் உள்ளிட்ட வைபவங்களில் இதில் உணவு பரிமாறுவது மரியாதையின் வெளிப்பாடு.

    வாழை இலையின் மேல் உள்ள பச்சைத் தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் ஜீரணமடைய செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. நன்கு பசியைத் தூண்டும். வாழை இலையில் உண்பவர்கள் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்.

    தெய்வீக மரமாக கருதப்படும் வாழை மரத்தின் இலையில் விருந்தோம்பல் செய்வது, தமிழர்களில் பாரம்பரிய கலாச்சாரமாகும். அதன் நன்மைகளை பற்றி பார்க்கலாம்.

    * ஆரோக்கியமான உணவுகளை வாழை இலையில் சாப்பிட்டு வந்தால் நீண்ட ஆயுளுடன் மகிழ்ச்சியாக வாழலாம்.

    * வாழை இலையில் உள்ள குளோரோபில் அல்சர் மற்றும் தோல் நோய்கள் வருவதைத் தடுக்கும். தோல் ஆரோக்கியம் காக்கவும் உதவும்.

    * ரத்தத்தை சுத்திகரிக்கும்.

    * சிறுநீரகக் கற்கள் உருவாவதைத் தடுக்கும். சிறுநீர்ப்பை தொடர்பான நோய்களுக்கு நல்ல தீர்வு தரும்.

    * நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உணவை எளிதில் செரிக்க உதவும்

    * சமச்சீர் உணவுகளை அதிகம் உண்ண வேண்டும்.

    * காலை உணவை ஒருபோதும் தவிர்க்க கூடாது.

    * காலை உணவில் ஒரு பழம் அல்லது காய்கறிகளை சேர்க்க வேண்டும்.

    * நார்ச்சத்துள்ள பொருட்களை அதிகம் சாப்பிட வேண்டும்.

    * பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்.

    * செயற்கை இனிப்புகளை தவிர்க்க வேண்டும்.

    * புரதம் நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

    • 312 உணவு வணிகர்கள் இந்த திட்டத்துக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
    • ஒருமுறை பயன்படுத்தப்பட்ட எண்ணெய் சேகரிக்கப்பட்டு பயோடீசலாக மாற்ற அனுப்பி வைக்கப்படுகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிவுறுத்தலின்பேரில் திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை தலைமையில் உணவு பாதுகாப்பு குழுவினர் திருப்பூர் மாவட்டத்தில் உணவு கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். இதில்,உணவு கடைகளில் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை சேகரித்து அதை பயோடீசலாக மாற்றம் செய்ய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒருமுறை பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை உணவு வணிகர்களிடம் இருந்து விலைக்கு பெற்று பயோ டீசலாக மாற்றப்படுகிறது. இதனால் சமையல் எண்ணெயை மீண்டும், மீண்டும் பயன்படுத்துவது தடுக்கப்படும்

    இதுபோன்று மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதால் இதயம், வயிறு சம்பந்தமான கோளாறுகள் ஏற்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதை தடுக்கும் வகையில் ஒருமுறை பயன்படுத்தப்பட்ட சமை–யல் எண்ணெயை சேகரிக்கும் ரூகோ திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்கள்.

    இதுகுறித்து திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை கூறியதாவது :- மாவட்டத்தில் இதுவரை 312 உணவு வணிகர்கள் இந்த திட்டத்துக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். உணவு தயாரிப்பு கூடங்களில் 40 லிட்டர் கொள்ளளவு உள்ள கேன்கள் பயன்படுத்தப்பட்ட எண்ணெயை சேகரிக்க வைக்கப்படும். ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை சேகரித்து வாரத்துக்கு ஒருமுறை அல்லது இருமுறை சேகரிக்கப்பட்டு பயோடீசலாக மாற்ற அனுப்பிவைக்கப்படுகிறது.

    மாதத்துக்கு 7 முதல் 8 டன் வரை ஒருமுறை பயன்படுத்தப்பட்ட எண்ணெய் சேகரிக்கப்பட்டு பயோடீசலாக மாற்ற அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் கடந்த மே மாதம் வரை 111 டன் எண்ணெய் சேகரிக்கப்பட்டு அதில் 85 டன் பயோடீசலாக மாற்றுவதற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் திருமண மண்டபங்களில் செயல்படுத்த முனைப்பு காட்டப்படுகிறது. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

    பேக்கரி, டீக்கடைகள், உணவு விற்பனை நிலையங்களில் பஜ்ஜி, போண்டா போன்ற பலகாரத்தை காகிதத்தில் பரிமாறுவது தவிர்க்கப்பட்டு வாழை இலையை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 6 மாதங்களில் 90 கிலோ காகிதம் பறிமுதல் செய்து கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கலப்படம் மற்றும் உணவு தரம் தொடர்பான புகார்களை 94440 42322 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

    • சிறுநீரகக் கல்லுக்கு வாழைத்தண்டு சாறு உகந்தது என்பது போல, வாழை இலையும் சிறுநீரகம் மற்றும் விதைப்பை தொடர்புடைய பிரச்னைகளிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.
    • சூடான சாப்பாட்டை வாழை இலையில் பரிமாறும்போது அந்த சூட்டில் இலை லேசாக வெந்து இலையின் பச்சையத்தில் உள்ள பாலிபீனால் சாப்பாட்டில் கலந்து விடும்.

    திருமணம் போன்ற அனைத்து சுபகாரியங்களிலும் வாழை இலையில் விருந்து பரிமாறுகிறார்களே, அதற்கு ஏன் என்று என்றாவது விருந்து சாப்பிடும் போது சிந்தித்திருக்கிறீர்களா ?

    அதற்கு பல காரணங்கள் இருந்தாலும் முதல் காரணம் வாழை இலை விருந்துக்கு சமைத்த உணவில் ஏதாவது நஞ்சு இருந்தால் அதை வாழை இலை நீக்கிவிடும்.

    நம்பமுடியவில்லையா.. இன்றும் கிராமங்களில் பாம்பு கடித்தால் முதலுதவியாக வாழையின் மட்டையில் இருந்து சாறு பிழிந்துதான் தருவார்கள். அதன் அடிக் கிழங்கில் இருந்து சுரக்கும் நீரைத்தருவார்கள் .

    அதற்காகத்தான் பெருவாரியாக மக்கள் கூடும் கோயில் திருவிழாக்கள் மற்றும் திருமணம் இன்னும் சொல்லப்போனால் சில பகுதியில் இறப்பு வீடுகளிலும் கூட முதலுதவி இருக்கவேண்டும் என்று தயாராக வாழையை மங்களகரம் என்று கூறி கட்டிவைப்பார்கள் .

    திருமணப் பந்தலிலும் வாழை மரம், இடுகாட்டுப் பாடையிலும் வாழை மரம், மக்கள் கூடும் எந்த திருவிழாக் கூட்டங்களிலும் வாழை மரம் என்று எங்கெங்கு காணினும் வாழை மரத்தை வைத்தார்கள் தொல் தமிழர்கள் .

    அதாவது நச்சு முறிப்புக்கு என்றுதான் முதலுதவிக்கு அவ்வாறு செய்து வைத்தார்கள். எத்தகைய அமங்கலமும் நடக்காமல் இருந்தால் அது மங்கலம் தானே ! இவ்வாறு தொல் தமிழ் மக்கள் எதையும் அறிவியல் பூர்வமாகவே செய்திருக்கிறார்கள் .

    வாழை இலையில் உண்பது நஞ்சு நீக்க மட்டும் காரணம் அல்ல. வாழை இலையில் ஆன்டி ஆக்சிடன்ட் அதிக அளவில் இருக்கிறது. இதனால் உடலின் செல் சிதைவு ஏற்படாமல் இளமையுடன் இருக்க முடியும். அதோடு மன அழுத்தம், புற்றுநோய் மற்றும் இதய நோய்களும் தடுக்கப்படுகின்றன.

    சிறுநீரகக் கல்லுக்கு வாழைத்தண்டு சாறு உகந்தது என்பது போல, வாழை இலையும் சிறுநீரகம் மற்றும் விதைப்பை தொடர்புடைய பிரச்னைகளிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.

    சூடான சாப்பாட்டை வாழை இலையில் பரிமாறும்போது அந்த சூட்டில் இலை லேசாக வெந்து இலையின் பச்சையத்தில் உள்ள பாலிபீனால் சாப்பாட்டில் கலந்து விடும். இதன் மூலம் அதில் உள்ள விட்டமின் ஏ, சிட்ரிக் அமிலம், கால்சியம் மற்றும் கரோட்டின் ஆகியவை நமக்குக் கிடைக்கின்றன.

    வாழை இலையில் சாப்பிடுவதால், இளநரை வராமல் நீண்டநாட்கள் தலைமுடி கருப்பாக இருக்கும். வாழை இலையின் சிறப்பம்சமே அதன் குளிர்ச்சித் தன்மைதான். மரத்திலிருந்து அறுத்தெடுக்கப்பட்ட பின்பும் கூட வாழைஇலை ஆக்சிஜனை வெளியிட்டுக்கொண்டே இருக்கும்.

    வாழை இலையில் வைக்கப்படும் கீரைகள், காய்கள், பழங்கள், பூக்கள் ஆகியவை விரைவில் வாடாது. அதனால் தான் சமீப காலம் வரை பூக்கடைகளில் கட்டிய பூ வாங்கினால் அதை வாழை இலையில் தான் கட்டித் தருவார்கள் .

    -அண்ணாமலை சுகுமாரன்

    • திடீரென நேற்று இரண்டு மடங்கு விலை உயர்ந்து ஒரு கட்டு வாழை இலை ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.
    • கடந்த சில மாதங்களுக்கு முன்பு காற்றுடன் பெய்த மழையால் வாழை மரங்கள் சாய்ந்ததால் வாழை இலை வரத்து குறைந்துள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு வ.உ.சி பூங்கா காய்கறி மார்க்கெட்டில் 700-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு காஞ்சி கோவில், பெருந்துறை, சோலார், கவுந்தப்பாடி, பாசூர், கருமாண்டம் பாளையம் போன்ற பகுதியில் இருந்து வாழை இலைகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    தற்போது ஈரோடு சின்ன மார்க்கெட்டிற்கும் வாழை இலை விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த 2 மார்க்கெட்டில் இருந்து மாநகர் பகுதியில் உள்ள கடைகளுக்கு வாழை இலைகள் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக ஓட்டல்களுக்கு சப்ளை செய்யப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று திடீரென வாழை இலைகளின் விலை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் ஒரு பெரிய கட்டு இலை (130 வரை எண்ணிக்கை) 500 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஆனால் நேற்று திடீரென இரண்டு மடங்கு விலை உயர்ந்து ஒரு கட்டு வாழை இலை ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதற்கு முக்கிய காரணம் தொடர்ந்து திருமண நிகழ்வுகள், சுப முகூர்த்தங்கள் வருவதே ஆகும்.

    மேலும் முக்கியமான காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு காற்றுடன் பெய்த மழையால் வாழை மரங்கள் சாய்ந்ததால் வாழை இலை வரத்து குறைந்துள்ளது. இதுவும் விலை உயர்வுக்கு காரணமாக அமைந்துவிட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    இது போக 1 ரூபாய்க்கும் குறைவாக விற்ற டிபன் இலை 4 ரூபாய்க்கும், 4 ரூபாய்க்கு விற்ற தலைவாழை இலை 6 ரூபாய்க்கும் கூடுதலாக விற்கப்படுகிறது. டிபன் மற்றும் சாப்பாட்டு இலை விலை உயர்ந்துள்ளதால் மக்கள் மட்டுமின்றி ஓட்டல் கடைக்காரர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். 

    • சுப்பிரமணியன் வண்ணான்குளத்தில் தோட்டம் வைத்துள்ளார்.
    • ஆத்திரம் அடைந்த முருகன் அரிவாளால் சுப்பிரமணியனை வெட்டினார்.

    சாம்பவர்வடகரை:

    சாம்பவர்வடகரையை சேர்ந்த சுப்பிரமணியன்(வயது 32) என்பவர் அங்குள்ள வண்ணான்குளத்தில் தோட்டம் வைத்துள்ளார்.

    அதில் பயிரிட்டுள்ள வாழைமரங்களில் இருந்து சில நாட்களாக வாழை இலைகளை அதே ஊரில் வசிக்கும் முருகன்(36), அவரது தாயார் சீனியம்மாள் ஆகியோர் திருடிச்சென்றுள்ளனர்.

    இதனை சுப்பிரமணியன் தட்டிக்கேட்கவே, ஆத்திரம் அடைந்த முருகன் அரிவாளால் அவரை வெட்டினார்.

    இதில் காயம் அடைந்த சுப்பிரமணியன் தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது புகாரின்பேரில் சாம்பவர்வடகரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தார்.

    • வாழை இலையின் சிறப்பம்சமே அதன் குளிர்ச்சித் தன்மைதான்.
    • மரத்திலிருந்து அறுத்தெடுக்கப்பட்ட பின்பும் கூட வாழைஇலை ஆக்சிஜனை வெளியிட்டுக்கொண்டே இருக்கும்.

    திருமணப் பந்தலிலும் வாழை மரம், இடுகாட்டுப் பாடையிலும் வாழை மரம், மக்கள் கூடும் எந்த திருவிழாக் கூட்டங்களிலும் வாழை மரம் என்று எங்கெங்கு காணினும் வாழை மரத்தை வைத்தார்கள் தொல் தமிழர்கள்.

    அதாவது நச்சு முறிப்புக்கு என்றுதான் முதலுதவிக்கு அவ்வாறு செய்து வைத்தார்கள். எத்தகைய அமங்கலமும் நடக்காமல் இருந்தால் அது மங்கலம் தானே !

    வாழை இலையில் உண்பது நஞ்சு நீக்க மட்டும் காரணம் அல்ல. வாழை இலையில் ஆன்டி ஆக்‌சிடன்ட் அதிக அளவில் இருக்கிறது. இதனால் உடலின் செல் சிதைவு ஏற்படாமல் இளமையுடன் இருக்க முடியும். அதோடு மன அழுத்தம், புற்றுநோய் மற்றும் இதய நோய்களும் தடுக்கப்படுகின்றன.

    சிறுநீரகக் கல்லுக்கு வாழைத்தண்டு சாறு உகந்தது என்பது போல, வாழை இலையும் சிறுநீரகம் மற்றும் விதைப்பை தொடர்புடைய பிரச்சனைகளிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. வாழை இலையில் உள்ள பச்சையம் நோய் எதிர்ப்பு சக்தியாகவும் விளங்குகிறது.

    சூடான சாப்பாட்டை வாழை இலையில் பரிமாறும்போது அந்த சூட்டில் இலை லேசாக வெந்து இலையின் பச்சையத்தில் உள்ள பாலிபீனால் சாப்பாட்டில் கலந்து விடும். இதன் மூலம் அதில் உள்ள விட்டமின் ஏ, சிட்ரிக் அமிலம், கால்சியம் மற்றும் கரோட்டின் ஆகியவை நமக்குக் கிடைக்கின்றன.

    வாழை இலையின் சிறப்பம்சமே அதன் குளிர்ச்சித் தன்மைதான். மரத்திலிருந்து அறுத்தெடுக்கப்பட்ட பின்பும் கூட வாழைஇலை ஆக்சிஜனை வெளியிட்டுக்கொண்டே இருக்கும். அதனால் வாழை இலையில் வைக்கப்படும் கீரைகள், காய்கள், பழங்கள், பூக்கள் ஆகியவை விரைவில் வாடாது.

    வாழை இலையில் சாப்பிடுவதால், இளநரை வராமல் நீண்டநாட்கள் தலைமுடி கருப்பாக இருக்கும்.

    வாழை இலையின் குளிர்ச்சியும் அது வெளியிடும் ஆக்சிஜனும் தீப்புண்ணுக்கு இதமாகவும், விரைவாக காயங்களை ஆற்றக் கூடியதாகவும் இருக்கிறது.

    - அண்ணாமலை சுகுமாறன்

    ×