search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொதுமக்கள் புகார்"

    • ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மூலமும் அதிகளவில் தட்கல் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
    • கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மேம்படுத்தப்பட்டது.

    ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மூலம் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்வதில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதாக பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

    விரைவான மற்றும் பாதுகாப்பான பயணங்களுக்கு பொதுமக்கள் எப்போதும் நாடுவது ரெயில் பயணங்களையே. இதனால் முக்கிய ரெயில்களில் காத்திருப்போர் வரிசை அதிகமாக இருக்கும். அதிலும் குறிப்பாக, திட்டமிடாத திடீர் பயணங்களுக்கு டிக்கெட் பொதுமக்கள் அதிகம் நாடுவது தட்கல் டிக்கெட்டுகளையே. இதன்மூலம் முன்கூட்டியே பயணத்தை திட்டமிடாதவர்களும் பாதுகாப்பான ரெயில் பயணத்தை மேற்கொள்ளலாம்.

    டிக்கெட் கவுன்டர்கள் மட்டுமல்லாமல், ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மூலமும் அதிகளவில் தட்கல் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

    தற்போதைய நிலையில், மொத்த ரெயில் டிக்கெட்டுகளில் 80 சதவீதம் ஆன்லைன் மூலமே பெறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மூலம் தட்கல் டிக்கெட்டுகள் பதிவு செய்வதில் பயணிகள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர்.

    இதுகுறித்து மதுரையைச் சேர்ந்த ரெயில் பயணி ஒருவர் கூறுகையில், ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் எனது பெயர் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயர்களை ஆதார் மூலம் இணைத்து பதிவு செய்துள்ளேன். டிக்கெட் எடுக்கும் நேரத்தில் கால நேர விரயம் ஏற்படுவதை தடுக்க ஆர்-வாலட் மூலம் இணையதளத்தில் தட்கல் டிக்கெட் எடுக்க முயன்றும், பணம் செலுத்திய சிறிது நேரம், இணையதளம் முடங்கி, பின்னர் 5 நிமிடங்கள் கழித்து நேரம் முடிவடைந்து விட்டது என்றோ அல்லது கேப்சா சரியாக பதிவேற்றப்பட வில்லை என்றோ தகவல் வருகிறது.

    கடந்த ஏப்ரல், மே மாதங்கள் வரை எனக்கு இந்த பிரச்சினை இல்லை. கடந்த சில மாதங்களாகவே இந்த பிரச்சினையை சந்திக்கிறேன். காலை 10 மணிக்கு தொடங்கும் ஏ.சி. வகுப்பு டிக்கெட்டுகள் எடுப்பதில் எந்த பிரச்சினையும் எழவில்லை. ஆனால் ஏ.சி. அல்லாத டிக்கெட் எடுக்கும் போது மட்டுமே பிரச்சினைகள் ஏற்படுவதாக தெரிவித்தார்.

    இதே போல் மற்றொரு ரெயில் பயணி கூறுகையில், நான் மதுரையிலிருந்து அடிக்கடி தொழில் விஷயமாக வடமாநிலங்களுக்கு செல்வது வழக்கம். இந்நிலையில், அவசர பயணங்களுக்காக, மொபைல் ஆப் மூலம் தட்கல் ரெயில் டிக்கெட் புக் செய்யும் போது, இணையதளம் முடங்கி விடுகிறது. நான் அதிக வேகமுடைய இன்டர்நெட்டை பயன்படுத்தி டிக்கெட் எடுக்க முயன்றாலும் என்னால் டிக்கெட் எடுக்க முடியவில்லை. ஆனால் இது போன்ற நேரங்களில் ரெயில் டிக்கெட் ஏஜென்டுகள் மட்டும் டிக்கெட் முன்பதிவு செய்து விடுகிறார்கள்.

    இது எப்படி என்று தெரியவில்லை. என அதிருப்தி தெரிவித்தார்.

    அதிகளவில் பயணிகள் டிக்கெட் பெறுவதால், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மேம்படுத்தப்பட்டது. இருந்த போதிலும் சாதாரண பயணிகள் இணையதளம் மூலமாக தட்கல் உள்ளிட்ட ரெயில் டிக்கெட்டுகளை பெறுவதில் உள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு ரெயில் நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • தனித்தீவில் இருப்பதைப் போல தவிப்பதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
    • அரசு அதிகாரிகள் யாரும் வந்து இதனை சரிசெய்ய எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று புகார் தெரிவித்துள்ளனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள முத்துக்குமாராபுரம் கிராமத்தில், காட்டாற்று வெள்ளத்தின் காரணமாக சுமார் 150 மீட்டர் சாலை முற்றிலும் பெயர்ந்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது.

    இதனால் அப்பகுதி மக்கள் தூத்துக்குடி, விளாத்திகுளம் செல்வதற்கு பல கிலோமீட்டர் தூரம் சுற்றிச்செல்வதாகவும், அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் கூட உள்ளே வர முடியாத மோசமான சூழ்நிலை இருப்பதால் தனித்தீவில் இருப்பதைப் போல தவிப்பதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

    அதுமட்டுமின்றி, காட்டாற்று வெள்ளத்தினால் சாலை அடித்துச் செல்லப்பட்டு 4 நாட்கள் ஆகியும் தற்போது வரை அரசு அதிகாரிகள் யாரும் வந்து இதனை சரிசெய்ய எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று புகார் தெரிவித்துள்ளனர்.

    எனவே சாலை துண்டிக்கப்பட்டுள்ளதால் அவரச மருத்துவத் தேவைக்குக்கூட தூத்துக்குடி, விளாத்திகுளம் போன்ற பகுதிகளுக்குச் செல்ல பெரும் சிரமம் ஏற்படுகிறது. இதனால் முத்துக்குமாரபுரம் மக்களின் நலன் கருதி உடனடியாக சாலையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    • பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்
    • உரிய நடவடிக்கை எடுப்பதாக பொது மக்களிடம் அதிகாரிகள் உறுதி

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் சான்றோர்குப்பம் - சோலூர் இடையே அமைந்துள்ள 2 தடுப்பணைகளில் மண்ணை கொட்டி, மரங்களை வெட்டி அகற்றிவிட்டு, நீர்வழிப்பாதையை மூடி, அப்பகுதி வழியாக கல்குவாரிக்கு வாகனங்கள் செல்வதற்காக மண் சாலை அமைக்கப்பட்டதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

    மேலும் மண்சாலை அமைத்த தனிநபரை அப்பகுதி பொதுமக்கள் சிறைபிடித்து போராட்ட த்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆம்பூர் தாசில்தார் குமாரி நீர்வழிப்பாதை யையும், 2 தடுப்பணை களையும் மண் போட்டு மூடி சாலை அமைக்கப்பட்ட இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் தடுப்பணைகளில் கொட்ட ப்பட்ட மண்ணையும், நீர்வழி ப்பாதையை மூடி சாலை அமைக்கப்பட்டுள்ளதையும் அகற்ற உத்தரவிட்டார். மேலும் சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக பொது மக்களிடம் உறுதி அளித்தார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • விதிகளை மீறி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
    • ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்.

    இளையான்குடி

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி நகரில் கடந்த 2 நாட்களாக மதுரை ஐகோர்ட்டு உத்தரவின் படி ஆக்கிரமிப்புகள் அகற்றப் பட்டது. கண்மாய் கரையில் இருந்து சாலையூர் பகுதி முழுவதும் இருந்த ஆக்கிர மிப்புகள் ஜே.சி.பி. எந்திரம் மூலம் இடித்து அகற்றப் பட்டன.

    இளையான்குடி தாசில் தார் கோபிநாத், நெடுஞ் சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் சையது இப்ராகிம் ஷா, உதவி பொறியாளர் முரு கானந்தம், சாலை ஆய்வா ளர்கள் ராஜ்குமார், செல்வி, இளையான்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபர்ட் மற்றும் போலீசார் முன்னி லையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

    ஆனால் சில இடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்று வதில் வருவாய் துறையினர் பாரபட்சம் காட்டுவதாக புகார்கள் எழுந்துள்ளது. அளவீடுகள் சரியாக செய்யப்படாமல் கட்டிடங் கள் இடிக்கப்படுவதாகவும் பொதுமக்கள், வியாபாரிகள் தெரிவித்தனர்.

    இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், அதிகாரிகள் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் நடுநிலையுடன் செயல்பட வேண்டும். மறு அளவீடு செய்து ஆக்கிர மிப்புகள் அகற்ற வேண்டும் என்றனர்.

    • சொா்ணபுரி காா்டன் பகுதி பொதுமக்கள் மனு அளித்தனர்.
    • தோல் அரிப்பு உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன.

    திருப்பூர்

    திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர குறைதீா்க்கும் கூட்ட முகாம் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் திருப்பூா் மாநகராட்சி 16 -வது வாா்டு மாமன்ற உறுப்பினா் தமிழ்செல்வி கனகராஜ் தலைமையில் சொா்ணபுரி காா்டன் பகுதி பொதுமக்கள் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: -திருப்பூா் மாநகராட்சி 16 வது வாா்டு சொா்ணபுரி காா்டன் பகுதியில் 1,500-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியில் உள்ள ஆழ்துளைக் கிணற்றில் தண்ணீா் எடுக்கும்போது சாயக்கழிவு கலந்து முற்றிலும் மாசுபட்ட தண்ணீா் வருகிறது.

    இதைப் பயன்படுத்தும்போது தோல் அரிப்பு உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன.ஆககே எங்களது பகுதியில் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து நிலத்தடி நீரைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கடற்கரைக்கு பொழுது போக்குவதற்காக குழந்தைகளுடன் வரும் பொதுமக்கள் காதலர்களின் செயல்களை பார்த்து முகம் சுழித்தனர்.
    • கடற்கரையிலும் இது தொடர்பாக எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டு உள்ளது.

    வீரேநகர்:

    நெதர்லாந்த் வீரேநகரில் புகழ்பெற்ற கடற்கரை உள்ளது. காதலர்களின் சொர்க்கபுரியாக திகழும் இந்த கடற்கரைக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வருவார்கள். விடுமுறை நாட்களில் ஏராளமான காதல் ஜோடிகள் இங்கு திரளுவார்கள்.

    காதலர்கள் தனிமையில் நெருக்கமாக அமர்ந்து கொண்டு சில்மிஷத்தில் ஈடுபடுவது உண்டு. சில காதலர்கள் மெய்மறந்து அத்துமீறுவதும் உண்டு. பக்கத்தில் யார்? இருக்கிறார்கள் என்பதை மறந்து அவர்கள் நிர்வாணமாக உல்லாசத்திலும் ஈடுபடுவார்கள், கடற்கரைக்கு அருகில் இருக்கும் சிறு குன்றுகளை கூட காதலர்கள் விடுவது இல்லை. அங்கும் அவர்கள் ஜாலியாக இருப்பார்கள்.

    இதனால் அந்த கடற்கரைக்கு பொழுது போக்குவதற்காக குழந்தைகளுடன் வரும் பொதுமக்கள் காதலர்களின் செயல்களை பார்த்து முகம் சுழித்தனர்.

    கடற்கரையை படுக்கை அறைகாக மாற்றும் இளசுகளின் இந்த அத்துமீறல் குறித்து வீரேநகர் மாநகராட்சிக்கு அடுக்கடுக்கான புகார்கள் வந்தது. இதையடுத்து வீரேநகர் கடற்கரையில் காதல் ஜோடியினர் உல்லாசமாக இருக்க தற்போது நெதர்லாந்து அரசு தடை விதித்துள்ளது. கடற்கரையிலும் இது தொடர்பாக எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டு உள்ளது. தடையை மீறி யாராவது கடற்கரையில் உல்லாசமாக இருந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கபட்டு உள்ளது.

    இந்த தடையால் கடற்கரையில் நிர்வாணமாக சன்பாத் எடுக்க வரும் சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். பொது இடங்களில் நாங்கள் உல்லாசமாக இருப்பதில்லை என்றும் உடல் ஆரோக்கியத்துக்காக சன்பாத் எடுப்பதாகவும் அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

    • அரசு அனுமதியின்றி விளம்பர பலகைகள், விளம்பர பதாகைகள் வைக்கக்கூடாது.
    • அச்சிடப்படும் அச்சகத்தின் பதிவு எண் மற்றும் செல்போன் எண் இடம் பெற வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    ஆபத்தான விளம்பர பதாகைகள் தொடர்பாக பொது மக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு தெரிவித்துள்ளார்.

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொதுமக்கள் பயன்பாட்டு இடங்களான பஸ் நிலையங்கள், ஊரக, மாநில, தேசிய நெடுஞ்சாலைகள், முக்கிய வளைவுகள், பஸ் நிறுத்தங்கள், தனியாருக்கு சொந்தமான இடங்கள் ஆகியவற்றில் அரசு அனுமதியின்றி விளம்பர பலகைகள், விளம்பர பதாகைகள் வைக்கக்கூடாது.

    விளம்பர பதாகைகள் வைப்பது தொடர்பாக அரசாணை எண்.45 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை தெரிவித்துள்ளபடி சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி பெற்ற பின்னரே விளம்பர பதாகைகள் வைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தனியாருக்கு சொந்தமான இடமாக இருப்பின் சம்பந்தப்பட்ட இடத்தின் உரிமையாளரிடம் சம்மத கடிதம் பெறப்பட்டிருக்க வேண்டும்.

    உரிய அனுமதி பெற்றபின் வைக்கப்படும் விளம்பர பதாகைகளில் வழங்கப்பட்ட அனுமதி ஆணை மற்றும் அனுமதிக்கப்பட்ட காலம் மற்றும் அச்சிடப்படும் அச்சகத்தின் பதிவு எண் மற்றும் செல்போன் எண் இடம் பெற வேண்டும்.

    மேலும், கோவில், மசூதி, தேவாலயம் போன்ற மக்கள் வழிப்படும் இடங்கள், வரலாற்று புராதனச் சின்னங்கள், நீர்நிலைகள் அமைத்துள்ள பகுதிகளில் விளம்பர பதாகைகள் வைக்க அனுமதி கிடையாது. அரசாணை எண்.45 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை குறிப்பிட்டுள்ள விதிமுறைகளை மீறி வைக்கப்படும் விளம்பர பதாகைகள் வைக்கும் நபர்கள் மீது காவல்துறை மற்றம் உள்ளாட்சி மூலம் உரிய குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    மேலும், ஆபத்தான விளம்பர பதாகைகள் தொடர்பாக பொதுமக்கள் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் கட்டுப்பாட்டு அறைக்கு 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • 2 வருட ங்களுக்கு முன்பு ரோட்டில் ஜல்லி மட்டும் கொட்டி சென்றனர்.
    • இருசக்கர வாகனங்களில் சென்றாலும் பஞ்சர் ஆகி விடுகிறது.

    கடலூர்:

    குறிஞ்சிப்பாடி தாலுகா விற்கு உட்பட்ட பஸ் நிலை யத்தி லிருந்து குறிஞ்சிப்பாடி முதல் எம்.ஆர்.கே. நகர் வழியாக சென்று வரதரா ஜன்பேட்டை, கல்குணம், கிருஷ்ணாபுரம் வரை செல்ல சுமார் 2 கிலோ மீட்ட ருக்கு மேல் உள்ள பழுத டைந்த கிராமசாலையை தார் சாலையாக போடு வதற்காக, சுமார் 2 வருட ங்களுக்கு முன்பு ரோட்டில் ஜல்லி மட்டும் கொட்டி சென்றனர். 

    ஆனால் இது நாள் வரையில் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சித்துறை அதிகாரிகள் சாலையை போடாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். இதனால் சுமார் 2000 ஏக்கர் விவ சாய நிலங்களுக்கு செல்ல பயன்படும் இந்த சாலை யில் பயிர்களுக்கு உரம் இடு வதற்கு மாட்டு வண்டிகளை பயன்படுத்த முடியாமலும், இருசக்கர வாகனங்களில் சென்றாலும் பஞ்சர் ஆகி விடுகிறது. 

    இதனால் ஒவ்வொரு மூட்டையாக தலையில் தூக்கிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என விவசாயி களும், பொதுமக்களும் புகார் தெரிவிக்கின்றனர். உடனடி யாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும் கிடப்பில் போடப்பட்ட இந்த தார் சாலையை அமைத்து தர விவசாயிகளும், பொதுமக்க ளும் கோரிக்கை வைக்கின்ற னர். கிராம வளர்ச்சியே நம் இந்திய நாட்டின் வளர்ச்சி, விவசாயமே நம் உயிர் நாடி ஆகையால் மாவட்ட நிர்வாக மும், சம்பந்தப்பட்ட துறை உயரதிகாரிகளும் காலம் தாழ்த்தாமல் சாலை போடுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைக்கின்றனர். 

    • ஆண்டுகளுக்கு ஒருமுறை கியாஸ் சிலிண்டர் பரிசோதிக்கப்படுகிறது.
    • சிலிண்டர் சப்ளை செய்யும் ஏஜென்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

    உடுமலை :

    இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் வீடுகள், கடைகள், ஓட்டல்கள், என வர்த்தக நிறுவனங்களுக்கு கியாஸ் சிலிண்டர் சப்ளை செய்து வருகின்றன.அவ்வகையில் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் கியாஸ் சிலிண்டர்களின் இணைப்புகள் சரியாக உள்ளதா என, குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒருமுறை பரிசோதிக்கப்படுகிறது.

    இப்பணியை, சிலிண்டர் சப்ளை செய்யும் ஏஜென்சிகள் மேற்கொண்டு வருகின்றன.அதன்படி ஏஜென்சி ஊழியர்கள், நுகர்வோர்களின் வீடுகளுக்குச்சென்று சிலிண்டர்களில் உள்ள வாஷர், ரெகுலேட்டர், ரப்பர் குழாய் இணைப்பை பரிசோதிக்கின்றனர். அப்போது ஏதேனும் பிரச்னை கண்டறியப்பட்டால் அவற்றை சீரமைக்கின்றனர்.சிலிண்டர் அகற்றும் போதும் பொருத்தும் போதும் கவனிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை, சரியான முறையில் ரெகுலேட்டரை எவ்வாறு பொருத்துவது, அவசரகால பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து நுகர்வோரிடம் விளக்கிக்கூறுகின்றனர்.அவ்வகையில், உடுமலை நகர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில், பரிசோதனை, உபகரணம் மாற்றுதல் என்ற பெயரில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக நுகர்வோர் புகார் தெரிவிக்கின்றனர்.

    இது குறித்து நுகர்வோர்கள் கூறியதாவது:-பரிசோதனைக்கு, ஜிஎஸ்டி சேர்த்து 236 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. வீட்டுக்கு வரும் ஊழியர்கள் சிலிண்டர் இணைப்பு முறையாக உள்ளதா, ரப்பர் குழாய்கள் சரியாக உள்ளதா என முறையாக ஆய்வு நடத்துவதும் கிடையாது.சிலர் ரப்பர் குழாய் சேதமடைந்துள்ளதாகக்கூறி மாற்ற முற்படுகின்றனர். இதனால் பெண்களிடையே பீதி கிளம்புவதால் அதனை மாற்ற முற்படுகின்றனர்.அதற்கு 1,500 ரூபாய் வரை கட்டணம் வசூலிப்பதும் தெரியவந்துள்ளது. ஊழியர்கள் பெரும்பாலும் பணத்தை மட்டும் வாங்கிச்செல்ல முற்படுகின்றனர். எனவே நுகர்வோர் விருப்பத்தின்பேரில் மட்டுமே ஏஜென்சிகள், கியாஸ் சிலிண்டரை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். அதற்கு மாறாக கட்டாயப்படுத்தக் கூடாது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • ரூ.11.80 லட்சம் ரூபாய் மதிப்பில் கான்கிரீட் ரோடு அமைக்கப்பட்டது.
    • முறையாக பராமரிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள்கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பாப்பிரெட்டிப்பட்டி,

    கடத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சுங்க ரஅள்ளிகிராம பஞ்சாயத்தில் பழைய காலணி பகுதியில் ரூ.11.80 லட்சம் ரூபாய் மதிப்பில் கான்கிரீட் ரோடு அமைக்கப்பட்டது. ரோடு அமைக்கப்பட்டு 6 மாதங்களே ஆன நிலையில் அந்த ரோடு பொதுமக்கள் நடந்து போக முடியாத நிலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து பாழடைந்து உள்ளது.

    எனவே மாவட்ட அதிகாரிகள் மற்றும் ஒன்றிய அதிகாரிகள் இந்த ரோட்டை முறையாக பராமரிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள்கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×