என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பக்தர்கள் ஊர்வலம்"
- செந்துறை சுற்றுவட்டார பொதுமக்கள் மற்றும் பெண்கள் தலையில் கஞ்சி கலயத்தை சுமந்தபடி கோவிலை சென்றடைந்தனர்.
- பின்னர் அம்மனுக்கு கஞ்சி படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதமாக கஞ்சி வழங்கப்பட்டது
நத்தம்:
நத்தம் அருகே செந்துறை ஆதிபராசக்தி வழிபாடு மன்றம் சார்பில் உலக நன்மை வேண்டியும், மழைவேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும் கஞ்சி கலய ஊர்வலம் நடந்தது.
இந்த ஊர்வலத்தில் செந்துறை சுற்றுவட்டார பொதுமக்கள் மற்றும் பெண்கள் தலையில் கஞ்சி கலயத்தை சுமந்தபடி ஆதிபராசக்தி வழிபாடு மன்றத்தில் இருந்து மகாலட்சுமி கோவில், சந்தப்பேட்டையில் உள்ள முருகன் கோவில், விநாயகர், முத்தாலம்மன் கோவில், குரும்பபட்டி வீதி, ஐயப்பன் கோவில் வழியாக கோவிலை சென்றடைந்தனர்.
பின்னர் அம்மனுக்கு கஞ்சி படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதமாக கஞ்சி வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
- புதிதாக கட்டப்பட்ட நாகம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் கடந்த பிப்ரவரி மாதம் நடந்தது.
- 48 நாட்கள் தினமும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் மண்டல பூஜை நடைபெற்று வந்தது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம், திருக்குவளை அடுத்துள்ள காருகுடி கிராமத்தில் 60 அடி நீளமுடைய நாகம் குடை பிடித்து கலசத்தை காப்பது போன்ற தோற்றத்தில் புதிதாக கட்டப்பட்ட மகா மாரியம்மன் மற்றும் நாகம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் கடந்த பிப்ரவரி மாதம் நடந்தது.
தொடர்ந்து, 48 நாட்கள் தினமும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் மண்டல பூஜை நடைபெற்று வந்தது.
இந்நிலையில், இந்த மண்டல பூஜை நிறைவு பூர்த்தியை முன்னிட்டு பட்டாணி கோவிலில் இருந்து பழங்கள், வஸ்திரங்கள், இனிப்புகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் அடங்கிய 51 வரிசை தட்டுகளை பக்தர்கள் ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வந்தனர்.
தொடர்ந்து, சிவ வாத்தியங்கள், மேள தாளங்கள் முழங்க, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத சிறப்பு யாகபூஜை நடத்தப்பட்டது.
பின்னர், யாகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட கடம் புறப்பாடாகி கோலிலை சுற்றி வலம் வந்து புனிதநீர் கொண்டு மகா மாரியம்மன், நாக விநாயகர், நாகம்மன், மதுரை வீரன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்நது, சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- 18-வது ஆண்டு பொங்கல் திருவிழா நடைபெற்றது.
- ஆடல், பாடலுடன் ஊர்வலமாக வந்தனர்.
குன்னூர்,
தமிழகம் முழுவதும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. புது நெல்லரிசி, மஞ்சள், கரும்பு உள்பட விளை பொருட்களை வைத்து பொங்கலை கொண்டாடினர். மாட்டு பொங்கல் நேற்று கொண்டாடப்பட்டது. குன்னூரில் பல்வேறு இடங்களில் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. காந்திபுரம் இந்திரா நகரில் நாகம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் 18-வது ஆண்டு பொங்கல் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து தந்தி மாரியம்மன் கோவிலில் இருந்து செண்டை மேளம் முழங்க அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. இதில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். விழாவில் விநாயகர், முருகப்பெருமான், ஆஞ்சநேயர், பத்ரகாளி, பெருமாள் போன்ற சாமி வேடங்கள் அணிந்து பக்தர்கள் ஆடல், பாடலுடன் ஊர்வலமாக வந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- ஆடி கிருத்திகையை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.
- பக்தர்களின் தலை மீது தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் ஆடி கிருத்திகை விழாவை முன்னிட்டு முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.
காட்டிநாயனப்பள்ளியில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணியர் கோவில் உள்ளது. இங்கு ஆடி கிருத்திகையை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியவாறும் ஊர்வ லமாக வந்து தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தி னார்கள்.
சந்தூர் மாங்கனி மலையில் வேல்முருகன் வள்ளி தெய்வசேனா சமேத கோவில் உள்ளது. இங்கு 53-ம் ஆண்டு ஆடிக்கிருத்திகை விழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை யொட்டி சாமிக்கு தினமும் பூஜைகள், சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு வேல்முருகன் பூ பல்லாக்கில் அலங்க ரிக்கப்பட்டு நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது, சிலம்பாட்டம் ,காவடி ஆட்டம், நையாண்டி மேளம், கரகாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது.
விழாவின் முக்கிய நாளான நேற்று ஆடிக்கிருத்தி கையை முன்னிட்டு, காலை 5 மணியளவில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. இதனை தொடர்ந்து மாரியம்மன் கோயில் முன்பு வீரபத்திரசுவாமி பக்தர்களின் சேவ ஆட்டம், பக்தர்களின் தலை மீது தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதையடுத்து காலை 11 மணியளவில் வேல் போடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் வேல் போட்டு கொண்டும், காவடி எடுத்து சென்று சுவாமியை வழிப்பட்டனர்.
பிற்பகல் 2 மணியளவில், சந்தூரைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் அந்தரத்தில் தொங்கியபடி, சிடல் ஆடும் நிகழ்ச்சி நடந்தது. இந்த விழாவில், சந்தூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இன்று (ஞாயிற்றுக்கி ழமை) சாமிக்கு திருக்க ல்யாண நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை சந்தூர் ஊர்பொதுமக்களும், அறநிலையத்துறையினர் செய்திருந்தனர்.
இதே போல எட்ரப்பள்ளி வேல்முருகன் கோவில், ஓசூர் வேல்முருகன் கோயில், அகரம் முருகன் கோவில், ஜெகதேவி முருகன் கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் ஆடி கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமியை தரிசனம் செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்