என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தெப்ப உற்சவம்"

    • வைகுண்ட நாத சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
    • பக்தர்கள் விரதமிருந்து தாசர்களுக்கு படி அரிசி, காய்கறிகள் அளித்து வழிபட்டனர்.

    உடுமலை :

    உடுமலை பெரிய கடைவீதியில் உள்ள 400 ஆண்டு பழமையான ஸ்ரீ நவநீதகிருஷ்ணன் கோவிலில் மார்கழி மாதத்தை முன்னிட்டு ஸ்ரீ பூமி நிலா நாயகி சமேத ஸ்ரீ சீனிவாச பெருமாள் தெப்ப உற்சவம், வைகுண்ட நாத சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கோவிலில் ஆண்கள் பாட்டுப்பாடி கோவிலை சுற்றி வந்தார்கள்.

    கோவிலில் நவநீதகிருஷ்ணன் பெருமாளுக்கு பால், தயிர், நெய், இளநீர் என பல்வேறு திரவியங்களால் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில், ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் சீனிவாச பெருமாள் தெப்ப உற்சவம் நடைபெற்றது. மேலும் உடுமலை சுற்றுப்பகுதியிலுள்ள அனைத்துபெருமாள் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன.பக்தர்கள் விரதமிருந்து தாசர்களுக்கு படி அரிசி, காய்கறிகள் அளித்து வழிபட்டனர்.  

    • 3 நாட்கள் நடக்கிறது
    • கோவில் நிர்வாகத்தினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்

    சோளிங்கர்:

    சோளிங்கர் லட்சுமி நர சிம்மர் கோவிலில் தை தெப்ப உற்சவம் நாளை தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது.

    சோளிங்கரில் அமைந் துள்ள பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோவிலில் ஆண்டுதோ றும் தை தெப்ப உற்சவம் மலையடிவாரத்தில் உள்ள தக்கான் குளத்தில் 3 நாட்களுக்கு நடைபெறு வது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தை தெப்ப உற்சவம் நாளைதொடங்கி 3 நாட்களுக்கு நடைபெறுகிறது.

    முதல் நாள் தெப்ப உற்சவத்தில் உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத பக்தோசித பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி 3 சுற்றுக்கள் வலம் வந்து அருள்பாலிக்கிறார். 2-ம் நாளில் 5 சுற்றுக்களும், 3ம் நாளில் 7 சுற்றுக்களும் தெப்பத்தில் வலம் வந்து சுவாமி அருள்பாலிக்கிறார்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். இந்த தகவலை கோவில் உதவி ஆணையர் ஜெயா தெரிவித்துள்ளார்.

    • கள்ளழகர் கோவில் மாசி தெப்ப உற்சவம் 7-ந் தேதி நடக்கிறது.
    • மாலை 6.20 மணிக்கு மேல் 7.15மணிக்குள் கஜேந்திர மோட்சத்துடன் நடக்கிறது.

    அலங்காநல்லூர்

    திருமாலிருஞ்சோலை, தென் திருப்பதி என்று போற்றி அழைக்கப்படுவது மதுரையை அடுத்த அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலாகும்.

    இந்த கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஒன்று மாசி மாதம் நடைபெறும் தெப்ப உற்சவம். இந்த விழா வருகிற மார்ச் மாதம் 6-ந்தேதி தொடங்குகிறது. அன்று மாலை 6.20 மணிக்கு மேல் 7.15மணிக்குள் கஜேந்திர மோட்சத்துடன் நடக்கிறது.

    விழாவின் முக்கிய நிகழ்வான தெப்ப உற்சவம் வருகிற 7-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 7.02 மணிக்கு மேல் 7.50 மணிக்குள் ஸ்ரீ தேவி பூமிதேவி சமேத கள்ளழகர் என்ற சுந்தராஜ பெருமாள் எழுந்தருளி மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் பொய்கை கரைபட்டி தெப்பத்திற்கு புறப்பாடாகி செல்வார். வழி நெடுகிலும் நின்ற சேவை சாதிக்கிறார்.

    பகல் 10.30 மணிக்கு மேல் 11.45 மணிக்குள் தெப்பத்தின் கிழக்கு புறம் உள்ள மண்டபத்தில் எழுந்தருளி பகல் முழுவதும் தெப்பத்திலிருந்து அன்று மாலை பூஜைகள் முடித்து மீண்டும் தெப்பத்தில் எழுந்தருளுவார். இந்த தெப்ப உற்சவத்தை காண அழகர்கோவில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும், வெளி மாவ இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்வார்கள்.

    தொடர்ந்து அன்று இரவு சுவாமி வந்த வழியாக சென்று கள்ளழகர் கோவிலுக்கு போய் இருப்பிடம் சேருகிறார். இத்துடன் இந்த திருவிழா நிறைவு பெறுகிறது. ெதப்ப உற்சவத்துக்கான ஏற்பாடுகளை கள்ளழகர் கோவில் தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி மற்றும் கண்கா ணிப்பாளர்கள், கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். 

    • கள்ளழகர் கோவில் மாசி தெப்ப உற்சவம் நாளை நடக்கிறது.
    • நாளை இரவு சுவாமி வந்த வழியாக சென்று கள்ளழகர் கோவிலுக்கு போய் இருப்பிடம் சேருகிறார்.

    அலங்காநல்லூர்

    திருமாலிருஞ்சோலை, தென் திருப்பதி என்று போற்றி புகழப்படுவது மதுரையை அடுத்த அழகர் கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலாகும். இக்கோவிலில் மாசி மாதம் தெப்ப உற்சவ விழா விமரிசையாக நடைபெறும்.

    இந்த ஆண்டு விழா இன்று (6-ந்தேதி) மாலை 6.20 மணிக்கு மேல் 7.15 மணிக்குள் கஜேந்திர மோட்சத்துடன் தொடங்கு கிறது. இதைதொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்வான தெப்ப உற்சவம் நாளை (செவ்வாய் கிழமை) நடக்கிறது.

    இதையொட்டி நாளை காலை 7.02 மணிக்கு மேல் 7.50 மணிக்குள் தேவி பூமிதேவி சமேத கள்ளழகர் என்ற சுந்தராஜ பெருமாள் எழுந்தருளி மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் தெப்பத்திற்கு புறப்பாடாகி செல்கிறார்.

    மண்டூக தீர்த்தம் என்ற பொய்கைகரைப்பட்டி புஸ்கரணிக்கு செல்லும் வழி நெடுகிலும் நின்ற சேவை சாதித்து தொடர்ந்து பொய்கைக்கரைப்பட்டி தெப்பத்தில் சுவாமி- அம்பாள் எழுந்தருளு கிறார்கள். அங்கு பகல் 10.30 மணிக்கு மேல் 11.45 மணிக்குள் தெப்பத்தின் கிழக்குபுறம் உள்ள மண்ட பத்தில் எழுந்தருளி பகல், மாலையில் சுவாமி தெப்பத்தில் எழுந்தருளுகிறார்.

    தெப்ப உற்சவத்தை காண சுற்று வட்டாரத்தில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்து சுவாமி தரிசனம் செய்வார்கள். தொடர்ந்து நாளை இரவு சுவாமி வந்த வழியாக சென்று கள்ளழகர் கோவிலுக்கு போய் இருப்பிடம் சேருகிறார். இத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம் துணை ஆணையர் ராமசாமி மற்றும் கண்காணிப்பாளர்கள் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • மானாமதுரை கோவிலில் தெப்ப உற்சவம் நடந்தது.
    • ஏராளமான பெண்கள் தெப்பக்குளத்தை சுற்றி அகல் விளக்குகளை ஏற்றி வழிபாடு நடத்தினர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாயமங்கலம் செல்லும் சாலையில் உள்ள அங்காள பரமேசுவரி அம்மன் கோவில் மாசிமக விழாவில் தெப்ப உற்சவம் நடந்தது. இந்த கோவிலில் 10 நாட்களுக்கு முன்பு மாசிமக விழா தொடங்கியது. விழா நாட்களில் தினமும் மூலவர் அங்காள பரமேசுவரிக்கு அபிஷேகம், ஆராதனை, பூஜை நடந்தன. விழாவின் முக்கிய நிகழ்வாக நடந்த தெப்ப உற்சவத்தை முன்னிட்டு உற்சவர் அங்காள பரமேஸ்வரி அம்மன் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலில் இருந்து புறப்பாடாகி வீதி உலா வந்தார்.

    அதன்பின் கோவிலை வந்தடைந்த அம்மன் தெப்பக்குளத்தில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த தெப்பத்தேரில் எழுந்தருளி அருள்பாலித்தார். தெப்பம் 3 முறை வலம் வந்தது. திரளான பக்தர்கள் தெப்பத்தில் வலம் வந்த அம்மனை தரிசனம் செய்தனர். ஏராளமான பெண்கள் தெப்பக்குளத்தை சுற்றி அகல் விளக்குகளை ஏற்றி வழிபாடு நடத்தினர்.

    • நேற்று இரவு தேர்பேட்டையில் உள்ள பச்சைக்குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெற்றது.
    • பக்தர்கள் பூஜைப்பொருட்களை வழங்கி சாமி வழிபாடு நடத்தினர்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீசந்திரசூடேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா, கடந்த 7-ந்தேதி விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தேரோட்டத்தை தொடர்ந்து நேற்று முன்தினம் (புதன்கிழமை) இரவு தொடங்கி விடிய, விடிய தேர்பேட்டையில் பல்லக்கு உற்சவம் நடைபெற்றது. இதில் ஸ்ரீ சந்திரசூடேஸ்வரர், மரகதாம்பிகை அம்மன், விநாயகர், முருகன் உள்ளிட்ட சுமார் 20 சாமிகளை அலங்கரிக்கப்பட்ட பல்லக்குகளில் வைத்து, தேர்பேட்டை வீதிகளில் மேள, தாள வாத்தியத்துடன் பல்லக்கு உற்சவம் நடைபெற்றது.

    விழாவின் கடைசி நாள் நிகழ்ச்சியாக, நேற்று இரவு தேர்பேட்டையில் உள்ள பச்சைக்குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சாமியை வைத்து, மேள, வாத்தியத்துடன் குளத்தை சுற்றி 3 முறை தெப்பம் சென்றது. அப்போது பக்தர்கள், ஓம் நமச்சிவாயா, ஓம் நமச்சிவாயா என்று பக்தி கோஷம் எழுப்பினர். மேலும் பக்தர்கள் பூஜைப்பொருட்களை வழங்கி சாமி வழிபாடு நடத்தினர்.

    இதில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு . தெப்ப உற்சவத்தை தரிசித்தனர். விழாவையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    • சிவகாசி மாரியம்மன் கோவில் தெப்ப உற்சவம் நடந்தது.
    • தெப்ப உற்சவத்துடன் மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா நிறைவு பெற்றது.

    சிவகாசி

    சிவகாசியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 16 நாட்கள் நடந்தது. பக்தர்கள் நேர்த்திக்கடன்களை அம்மனுக்கு செலுத்தினர். தேரோட்டம் நடந்தது. கொடி இறக்கி கடைசி திருவிழா நடந்து முடிந்ததை தொடர்ந்து மாரியம்மன் கோவில் வளாக தெப்பக்குளத்தில் தெப்ப உற்சவம் நடத்தப்பட்டது.

    மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த தெப்பத்தில் மாரியம்மன் அலங்காரத்துடன் எழுந்தருளி தெப்பத்தை 11 முறை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் மாரியம்மனை வணங்கி வழிபட்டனர். தெப்ப உற்சவத்துடன் மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா நிறைவு பெற்றது.

    • திருத்தளி நாதர் கோவில் தெப்ப உற்சவம் நடந்தது.
    • நிகழ்ச்சி ஏற்பாடுகளை கார்காத்த வெள்ளாளர் உறவின்முறையினர் செய்திருந்தனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சிவகாமி உடனுறை திருத்தளிநாதர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி விசாக திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும்.

    இந்த ஆண்டு வைகாசி விசாக திருவிழா கடந்த

    24-ந்தேதி கொடி யேற்றத்து டன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் விநாயகர், சுப்பிரமணியர், சோமஸ்கந்தர், பிரியா விடை அம்மன், சிவகாமி அம்மன் சிறப்பு அலங்கா ரத்தில் பூதம், அன்னம், ரிஷபம், சிம்மம், யானை, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் உலா வந்தனர்.

    5-ம் திருநாளான்று திருத்தளிநாதருக்கும், சிவகாமி அம்பாளுக்கும் திருக்கல்யாண வைபவம் நடந்தது. ெதாடர்ந்து 9-ம் நாளில் தேரோட்டம் நடந்தது. முதல் தேரில் விநாயகரும், நடுத்தேரில் பிரியாவிடையுடன் திருத்தளிநாதரும், 3-வது தேரில் சிவகாமி அம்மனும் எழுந்தருளினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த நிலையில் 10-ம் நாளான நேற்று இரவு கோவில் சீதளி குளத்தில் தெப்ப உற்சவம் நடந்தது. இதையொட்டி திருத்தளி தீர்த்தத்தில் தீர்த்தம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து கோவிலில் இருந்து சுவாமி அம்பாளுடன் தெப்ப மண்டபம் எழுந்தருளினார். அங்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

    பின்னர் மின் விளக்கு களால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமி- சிவகாமி அம்பாள் எழுந்தருளினர். வான வேடிக்கை முழங்க தெப்பம் சீதளி குளத்தை வலம் வந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கார்காத்த வெள்ளாளர் உறவின்முறையினர் செய்திருந்தனர்.

    • அரங்குளநாதர் கோவிலில் வைகாசி விசாக தெப்ப உற்சவம் நடைபெற்றது.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளத்தில் சுயம்புலிங்க அரங்குளநாதர் சமேத பெரியநாயகி அம்பாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகாசி விசாக பெருந்திருவிழா நடைபெற்று வந்தது. இதையடுத்து திருவிழாவின் 10-வது நாள் அன்று சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் வீதி உலா நடைபெற்றது. இதையடுத்து சுவாமி-அம்பாளுக்கு பட்டாடை உடுத்தி, சிறப்பு அலங்காரத்தில் தங்க ஆபரணங்கள் சாற்றப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதையடுத்து சுவாமி-அம்பாள் தேரோடும் வீதிகளில் வீதி உலா வந்து கோவில் தெப்பக்குளத்தில் உள்ள தெப்பத்தில் எழுந்தருளினர். பின்னர் தெப்பத்தில் 3 முறை சுற்றிவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் அமைச்சர் மெய்யநாதன் மற்றும் திருவரங்குளம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து இளைஞர்கள், பொதுமக்கள் சார்பில் இன்னிசை கச்சேரி நடைபெற்றது.

    • வேதபாராயணம், பிரபந்த பாராயண சாற்று முறை நிகழ்ச்சிகளும் நடந்தது.
    • இரவு ஓசூர் ராம நாயக்கன் ஏரி அருகே ஜலகண்டேஸ்வரர் கோவில் குளத்தில் தெப்ப உற்சவமும் நடை பெற்றது.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நேதாஜி சாலையில், மிக வும் பழமையான, பிரசித்தி பெற்ற ஸ்ரீகோதண்டராமர் கோவில் உள்ளது.

    இங்கு பவித்ரோத்சவ விழா, கடந்த புதன்கிழமை, 81 கலச திருமஞ்சன நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து, சனிக்கிழமை வரை அங்குரார்ப்பணம், புண்யாஹவாசனம், துவார பூஜை, பவித்ர பிரதிஷ்டை மற்றும் கும்ப மண்டல ஆராதனையும் சிறப்பு ஹோமங்களும் நடை பெற்றது. தொடர்ந்து, வேதபாராயணம், பிரபந்த பாராயண சாற்று முறை நிகழ்ச்சிகளும் நடந்தது.

    நேற்று விழாவின் முக்கிய நிகழ்ச்சி யாக, சம்வத் சரோத்சவ நிகழ்ச்சியும், இரவு ஓசூர் ராம நாயக்கன் ஏரி அருகே ஜலகண்டேஸ்வரர் கோவில் குளத்தில் தெப்ப உற்சவமும் நடை பெற்றது.

    பின்னர் சிறப்பு பூஜைகள் நடத்தி பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது. தலைமை அர்ச்சகர் கேசவன் தலைமையில், அர்ச்சகர்கள் ரகுராமன், சுதர்சன் மற்றும் யோகேஷ் ஆகியோர் சிறப்பு ஹோமங்கள் மற்றும் சிறப்பு பூஜைகளை நடத்தினர்.

    இதில், விழாக் குழு தலை வரும், முன்னாள் ஓசூர் எம்.எல்.ஏ.வுமான கோபிநாத், மற்றும் நீலகண்டன் உள்ளிட்ட கமிட்டி நிர்வா கிகள்,கோவில் செயல் அலுவலர் சாமிதுரை, ஆய்வாளர் சக்திவேல், கோவில் பணி யாளர்கள் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • திருவண்ணாமலையில் இன்று இரவு நடக்கிறது
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா முதல் நாள் தெப்ப உற்சவம் அய்யங்கு ளத்தில் நடைபெற்றது.

    கார்த்திகை தீபத் திருவிழாவின் உச்ச நிகழ்வான மகா தீபம் அண்ணாமலை உச்சியில் நேற்று முன் தினம் ஏற்றப்பட்டது.

    அதனை தொடர்ந்து நேற்று இரவு அய்யங்குளத்தில் தெப்பல் உற்சவம் நடைபெற்றது. முதல் நாள் தெப்பல் உற்சவத்தில் எழுந்தருளி அருள் பாலித்தார்.

    இ்தில் முன்னாள் நகரமன்ற தலைவர் இரா.ஸ்ரீதரன், சீனியர் தடகள சங்க மாவட்ட தலைவர் ப.கார்த்தி வேல்மாறன், அண்ணாமலையார் கோவில் அறங்காவலர் குழு தலைவர் இரா.ஜீவானந்தம், உறுப்பினர்கள் டிவிஎஸ் ராஜாராம், கோமதி குணசேகரன், சினம் பெருமாள், ஒப்பந்ததாரர் குட்டி புகழேந்தி, முன்னாள் நகரமன்ற உறுப்பினர் பச்சையம்மன் முத்து உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இன்று இரவு 2-ம் நாள் தெப்பல் உற்சவத்தில் பராசக்தி அம்மனும், நாளை நடைபெறும் மூன்றாம் நாள் உற்சவத்தில் சுப்பிரமணியரும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சிதருவர்.

    தெப்ப உற்சவம் காண வந்த பக்தர்களுக்கு தூய்மை அருணை அமைப்பின் சார்பில் இனிப்புகள் வழங்கப்பட்டது.

    • திருவிழாக்களில் பிரசித்தி பெற்றது தைப்பூச விழாவாகும்.
    • தெப்பத்தேரில் எழுந்தருளி தெப்ப உற்சவம் நடைபெற்றது.

    பழனி:

    தமிழ் கடவுள் முருகனின் 3ம் படை வீடான பழனியில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் பிரசித்தி பெற்றது தைப்பூச விழாவாகும். இதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து அலகு குத்தியும், காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.

    இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா கடந்த 19-ம் தேதி பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 24-ம் தேதி வள்ளிதெய்வானை முத்துக்குமாரசாமி திருக்கல்யாணம் இரவு வெள்ளி ரதத்தில் ரதவீதியில் தேரோட்டம் நடைபெற்றது. முக்கிய

    நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் 25ம் தேதி நடைபெற்றது. மேலும் வெள்ளி ஆட்டுக்கிடா உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சாமி புறப்பாடு நடைபெற்றது.

    27-ம் தேதி இரவு பெரிய தங்கமயில் வாகனத்தில் சாமி எழுந்தருளினார். 10ம் நாள் நிகழ்ச்சியாக நேற்று காலை வள்ளி முத்துக்குமாரசாமி திருமண வைபவத்தால் தெய்வானை கோபித்துக்கொண்டு செல்ல தூதரான வீரபாகு சென்று சமாதானம் செய்து கோவில் கதவை திறக்கும் திருஊடல் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவில் தெப்பகுள மண்டபத்தில் சாமிக்கு தீபாராதனை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தேரில் எழுந்தருளி தெப்ப உற்சவம் நடைபெற்றது.

    நேற்று விடுமுறை தினம் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். இரவு கொடி இறக்குதலுடன் தைப்பூச திருவிழா நிறைவடைந்தது.

    ×