search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதிப்பீடு"

    • பொருளாதாரம் இல்லாமல் தவிக்கும் சாதாரண மக்கள் தான் பெருமளவு பாதிக்கப்படுகிறார்கள்.
    • பொது மக்கள் மீது கூடுதல் சுமையைத் திணிக்கும் வகையில் சொத்துக்கான வழிகாட்டி மதிப்பீடு அமையக்கூடாது.

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழக அரசு, சொத்துக்கான வழிகாட்டி மதிப்பீட்டில் முறையாக மதிப்பிட வேண்டும். அதாவது அரசு, சொத்துக்கான வழிகாட்டி மதிப்பீட்டில் சுமார் 33 சதவீதம் உயர்த்தியது நியாயமில்லை. குறிப்பாக மாநிலத்தில் சொத்துக்களை வழிகாட்டி மதிப்பீடு செய்யும் முறை அரசுக்கு உண்டு. இருப்பினும் பொது மக்களின் சிரமத்தை அறிந்து, ஆலோசனையைக் கேட்டு மதிப்பீடு செய்திருக்க வேண்டும்.

    ஆனால் அரசு, பொது மக்களின் கருத்தைக் கேட்காமல் சொத்துக்கான வழிகாட்டி மதிப்பீட்டில் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி நடைமுறைப்படுத்துவதால் சிறிய அளவிலான சொத்து (வீடு, மனை, நிலம்) வாங்க முன்வரும், போதுமான பொருளாதாரம் இல்லாமல் தவிக்கும் சாதாரண மக்கள் தான் பெருமளவு பாதிக்கப்படுகிறார்கள்.

    ஐகோர்ட்டு உத்தரவை அரசு கவனத்தில் கொள்ளாமல் சொத்துக்கான வழிகாட்டி மதிப்பீட்டில் சுமார் 33 சதவீதம் கூடுதல் கட்டணத்தை வசூல் செய்வது உயர்நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் செயல். எனவே தமிழக அரசு, பொது மக்கள் மீது கூடுதல் சுமையைத் திணிக்கும் வகையில் சொத்துக்கான வழிகாட்டி மதிப்பீடு அமையக்கூடாது என்பதை கவனத்தில் கொண்டு சொத்துக்கான வழிகாட்டி மதிப்பீடு செய்ய முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
    • 37-வது வார்டு வீரசிவாஜி தெருவில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி

    நாகர்கோவில், அக்.30-

    நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட 37-வது வார்டு வீரசிவாஜி தெருவில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி மற்றும் 49-வது வார்டு காந்திபுரம் மெயின்ரோடு, பெட்ரோல் பல்க் அருகில் உள்ள தெருவில் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகளை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

    இதில் மாநகர செயலாளர் ஆனந்த், ஜீவா, அணி நிர்வாகிகள் அகஸ்தீசன், ராஜன், சரவணன், வட்ட செயலாளர்கள் ரவி, விஜயகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • அமைச்சர் மனோதங்கராஜ் திறந்து வைத்தார்
    • குலசேகரம் - குளச்சல் வழித்தடத்தில தடம் எண் 332 என்ற பஸ்சையும் அவர் தொடங்கி வைத்தார்.

    திருவட்டார் :

    திருவட்டார் பேருராட்சிக்கு உட்பட்ட திருவட்டார் பாலம் அருகே மீன் சந்தை ஒன்று செயல்பட்டு வந்தது. அதனுடன் காய்கறி கடைகளும் ரோட்டோரம் செயல்பட்டு வந்தது. சுற்றுவட்டார பகுதி மக்கள் அனைவரும் இங்கு வந்து தான் மீன், காய்கறிகள் வாங்கி செல்வார்கள். ஆனால் மழை காலங்களில் சந்தை பகுதிகளில் சேறும் சகதியுமாக காணப்பட்டது. இதனால் வியாபாரிகள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். எனவே அந்த பகுதியில் மீன் விற்பனை கூடம் அமைக்க வேண்டும் என்று அமைச்சர் மனோ தங்கராஜியிடம் கோரிக்கை வைத்தனர்.

    அவர்களின் கோரிக்கை யை ஏற்று மீன் விற்பனை கூடம் கட்ட, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 15 லட்சம் நிதியினை அமைச்சர் மனோ தங்கராஜ் ஓதுக்கினார். இதனை தொடர்ந்து பணிகள் நடைபெற்று வந்தது. இந்த பணிகள் முடிவுற்ற நிலையில் அமைச்சர் மனோதங்கராஜ் விற்பனை கூடத்தை திறந்து வைத்தார்.

    விழாவுக்கு பேருராட்சி தலைவர் பெனிலா ரமேஷ் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சுந்தர்ராஜ், செயல் அலுவலர் மகாராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பலீலா ஆல்பன், ஆற்றூர் பேருராட்சி தலைவர் பீனா அமிர்தராஜ், தி.மு.க. பேரூர் செயலாளர் சோழராஜன், திருவட்டார் ஒன்றிய பொருளாளர் ரமேஷ், மற்றும் தி.மு.க.வினர், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    திற்பரப்பு பேருராட்சிக்கு உட்பட்ட சேக்கல் பகுதியில் திற்பரப்பு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் சார்பில் பகுதி நேர ரேசன் கடையையும் அமைச்சர் மனோதங்கராஜ் திறந்து வைத்தார். அதை தொடர்ந்து அஞ்சுகண்டறை பகுதியில் இருந்து குலசேகரம் - குளச்சல் வழித்தடத்தில தடம் எண் 332 என்ற பஸ்சையும் அவர் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் திருவட்டார் வடக்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் ஜான்சன், மாநில பொதுக்குழு உறுப்பினர் அலாவுதீன், பேரூர் செயலாளர் ஜான் எபனே சர், திற்பரப்பு பேருராட்சி தலைவர் பொன்.ரவி, செயல் அலுவலர் விஜய குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
    • பிரச்சினையை தீர்ப்பதற்கு பேரூராட்சி உதவி இயக்குநர் உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும்.

    நாகர்கோவில்:

    முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான தளவாய் சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தோவாளை அருகே திடல் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் புதுக்குளம்- கடம்பாடி விளாகம் காலனி சாலை உள்ளது. இச்சாலையானது மிகவும் குறுகலாகவும், மிகவும் பழுதடைந்தும் காணப்பட்டு வருகிறது. இந்த சாலையானது நெடுஞ் சாலைத்துறையின் கிராம சாலை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்ட நிலையில் சரி செய்வதற்காக ஒதுக்கப்பட்ட நிதி நிறுத்தப்பட்டுள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இதனை கருத்தில் கொண்டு புதுக்குளம்- கடம்பாடி விளாகம் காலனி சாலை யினை சரி செய்வதற்கு உரிய நடவடிக்கையினை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.

    இதேபோல் சிறமடம்-அனந்தனார் கால்வாய் சாலை சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.6 கோடியே 98 லட்சத்திற்கு மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, இந்த சாலை ஊராட்சி சாலையாக ஆக்கப்பட்டு ஓராண்டு ஆகியும் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதற்கான நிதி யினை அரசு ஒதுக்கி பணி யினை தொடங்கிட வேண்டும்.முதல்-அமைச்சரின் சிறப்பு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு தொகுதிக்கும் ரூ.3 கோடி ஒதுக்கப்படும் என்றும் இதன்பேரில் ஒவ்வொரு தொகுதியிலிருந்தும் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பணிகளை நிறைவேற்றும் பொருட்டு மாவட்ட கலெக்டரிடம் விவரங்கள் தெரிவிக்க கூறப்பட்டிருந்தது. இதில் அரசு தனி கவனம் செலுத்தி நிதி ஒதுக்கீடு வழங்கிட வேண்டும். பேரூராட்சி பகுதிகளில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டு ஆண்டுகள் கடந்தும் இத்திட்டம் கொண்டு வரப்பட வில்லை. அஞ்சுகிராமம், பால்குளம் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடுகள் கட்டி கொடுக்கப்பட் டுள்ளது. இப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு குடி தண்ணீர் வசதி கிடைக்கப் பெறவில்லை. இப்பிரச்சினையை தீர்ப்ப தற்கு பேரூராட்சி உதவி இயக்குநர் உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும்.

    இதேபோன்று ஈசாந்தி மங்கலம் பகுதியில் தற்போது குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கட்டப்பட்டு வரு கின்ற வீடுகளுக்கு குடி தண்ணீர் வசதி முறையாக செய்யப்பட வேண்டும். தோவாளையில் கட்டப்பட்டு வருகின்ற கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை மணி மண்டப பணிகளை விரைந்து கட்டி முடிக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
    • மாமூடு தெருவில் ரூ.11.30 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி நடைபெற உள்ளது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகராட்சி 4-வது வார்டுக்குட்பட்ட ராஜலெட்சுமி நகர், கவின் முகில் கார்டன் பகுதியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி மற்றும் 7-வது வார்டுக்குட்பட்ட கிரவுண் தெரு, மாமூடு தெருவில் ரூ.11.30 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி நடைபெற உள்ளது.

    அதேபோல் 22-வது வார்டுக்குட்பட்ட பரேரா காலனி பகுதியில் ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணி மற்றும் 48-வது வார்டு வெள்ளாடிச்சவிளை பகுதியில் ரூ.3.20 லட்சம் மதிப்பீட்டில் சிறு பாலம் அமைத்தல் உள்ளிட்ட பணிகளும் நடைபெற உள்ளது. இந்த பணிகளை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

    அப்போது மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்ஸி லதா, மாநகராட்சி உதவி பொறியாளர் ராஜசீலி, மண்டல தலைவர்கள் செல்வகுமார், ஜவகர், மாமன்ற உறுப்பினர் பியஷா ஹாஜி பாபு, சுகாதார ஆய்வாளர்கள் சத்தியராஜ், பகவதி பெருமாள், மாநகர பகுதி செயலாளர்கள் சேக் மீரான், துரை, அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் உட்பட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

    • பொன்மனை சந்திப்பில் பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன
    • பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    திருவட்டார் :

    பொன்மனை பேரூராட்சிக்குட்பட்ட பொன்மனை சந்திப்பில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் பேரூராட்சி தலைவர் அகஸ்டினிடம் கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்று விஜய்வசந்த் எம்.பி. தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் ரூ.3.40 லட்சம் மதிப்பீட்டில் பொன்மனை சந்திப்பில் பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. பணிகள் முடிந்து நேற்று பயணிகள் நிழற்குடையை திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    பேரூராட்சி தலைவர் அகஸ்டின் தலைமை தாங்கினார். நகர தலைவர் ஜான் போஸ்கே, வினுகுமார், மார்டின், அஜிகுமார், ஜெகன், ஜெயசிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விஜய்வசந்த் எம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயணிகள் நிழற்குடையை திறந்து வைத்தார்.

    அகில இந்திய காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் ரெத்தினகுமார், குலசேகரம் பேரூராட்சி தலைவர் ஜெயந்தி ஜேம்ஸ், மாவட்ட பொதுச்செயலாளர் ஜான் இக்னோசியஷ், முன்னாள் வட்டார தலைவர் காஸ்டன் கிளிட்டஸ், மாவட்ட செயலாளர் கோபகுமார், பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்
    • சிவன்கோவில் கொடூர்குளம் நல்லதங்காடு சாலை, கல்வெட்டான் குழி குருசடி சாலை பணிகள் நடைபெற உள்ளது.

    களியக்காவிளை :

    களியக்காவிளை அருகே முஞ்சிறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குளப்புறம் கிராம ஊராட்சியில் முதல்-அமைச்சர் கிராம சாலை திட்டத்தின் கீழ் ரூ.47 லட்சம் மதிப்பீட்டில் சிவன்கோவில் கொடூர்குளம் நல்லதங்காடு சாலை, கல்வெட்டான் குழி குருசடி சாலை பணிகள் நடைபெற உள்ளது. இந்த பணிகளை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., குளப்பு றம் ஊராட்சி தலைவர் மனோன்மணி, மாவட்ட கவுன்சிலர் லூயிசாள், ஒன்றிய கவுன்சிலர் கலா, ஊராட்சி துணை தலைவர் வினு, முஞ்சிறை மேற்கு ஒன்றிய செயலாளர் றாபி, வார்டு உறுப்பினர்கள் ஞானசுந்தரி, லைலா, ஜெயராணி, றீனா, அல்போன்சா, ஜெபகுமார், அனில் குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • விஜய்வசந்த் எம்.பி. திறந்து வைத்தார்
    • ரூ.12,95,000 மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு

    திருவட்டார் :

    கண்ணனூர் ஊராட்சி 9-வது வார்டுக்குட்பட்ட சியோன்மலை பகுதியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி கட்டிடம் இடிந்து விழும் தருவாயில் சேதமடைந்து இருந்தது. அதனை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் செலின்மேரியிடம் கோரிக்கை வைத்தனர். கோரிக்கையை ஏற்று மாவட்ட பஞ்சாயத்து கமிட்டி கூட்டத்தில் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் ரூ.12,95,000 மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன. கட்டிடத்தின் பணிகள் முடிந்து அதன் திறப்பு விழா நடைபெற்றது.

    மாவட்ட பஞ்சயாத்து கவுன்சிலர் செலின்மேரி தலைமை தாங்கினார். விஜய்வசந்த் எம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அங்கன்வாடியை திறந்து வைத்தார். அகில இந்திய காங்கிரஸ் பொது க்குழு உறுப்பினர் ரெத்தின குமார், வட்டார தலைவர் வக்கீல் ஜெபா, குமரி மேற்கு மாவட்ட பொருளாளர் ஐஜிபி. லாரன்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட பொதுசெய லாளர் ஜான் இக்னேசியஷ், மாவட்ட செயலாளர் பென்னட், முன்னாள் வட்டார தலைவர் ஜெக ன்ராஜ், கண்ணனூர் ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜோன், மாவட்ட செயலாளர் ஆற்றூர் குமார், வார்டு உறுப்பினர் யோவான் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், பொது மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 12-வது வார்டு சக்தி கார்டன் பகுதியில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் தார்ச்சாலை அமைக்கும் பணி
    • குறுக்கு தெருவில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் தார்ச்சாலை அமைக்கும் பணி

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகராட்சி 12-வது வார்டு சக்தி கார்டன் பகுதியில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் தார்ச்சாலை அமைக்கும் பணி, 46-வது வார்டு வண்ணான்விளை சானல் கரை சாலை, குறுக்கு தெருவில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் தார்ச்சாலை அமைக்கும் பணி ஆகிய வற்றை மாநகரட்சி மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

    அப்போது மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்ஸி லதா, மாநகராட்சி உதவி பொறியாளர் ராஜா, மாமன்ற உறுப்பினர்கள் சுனில், வீரசூரபெருமாள், ஜெயவிக்ரமன், அய்யப்பன், பகுதி செயலாளர் சேக் மீரான், இளைஞர் அணி அகஸ்தீசன், சரவணன், வட்ட செயலாளர் பெறி, ஜெயகிருஷ்ணன் உட்பட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

    • மாநகராட்சி மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.
    • நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் ஆனந்த மோகன் கலந்து கொண்டார்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகராட்சி 46-வது வார்டு பகுதியான வண்ணான்விளை பகுதியில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணியினை குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், மாநகராட்சி மேயருமான மகேஷ் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் ஆனந்த மோகன், மாநகராட்சி பொறியாளர் பாலசுப்பிரமணியன், துணை மேயர் மேரி பிரின்சி லதா, மண்டல தலைவர் ஜவகர், மாமன்ற உறுப்பினர் வீரசூர பெருமாள், பகுதி செயலாளர் ஜீவா உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ. 30 கோடி திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது.
    • சட்டமன்றத்தில் அவற்றிற்கான நிதி ஒதுக்கும் பணி துறை சார்பில் நடைபெற்று வருகிறது.

    நாகப்பட்டினம்:

    சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் பேசியதாவது:-

    நாகப்பட்டினம் நாகூர் நகரங்களில் மிகப் பெரிய அளவுக்கு போக்குவரத்து நெருக்கடி இருக்கிறது.

    நாகப்பட்டினம் விழுப்புரம் சாலை, கிழக்கு கடற்கரை சாலைப் பணிகள் நடந்து வருகின்றன.

    இப்போது நாகப்பட்டி னத்திற்கு ஒரு புறநகர் பேருந்து நிலையம் அவசியமாகிறது. ஏற்கெனவே முதலமைச்சரிடம் 10 கோரிக்கைகளில் ஒன்றாக இதை எழுதிக் கொடுத்திருக்கிறோம்.

    30 கோடி ரூபாய்க்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது.

    தஞ்சாவூரில் நடந்த ஆய்வுக் கூட்டத்திலும் நான் வலியுறுத்தி அமைச்சரிடம் கேட்டுக் கொண்டேன்.

    எனவே மிக மிக அவசியமான ஒரு கோரிக்கை.

    நாகப்பட்டினத்தில் வேளாங்கண்ணி, நாகூர், சிக்கல் சிங்காரவேலர் ஆலயம் போன்ற திருத்தலங்கள் உள்ளன. பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.

    அதை கருத்தில் கொண்டு இந்தக் கோரிக்கையை நிறைவேற்றித் தர வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு எம்.எல்.ஏ பேசினார்.

    அதற்கு பதிலளித்த அமைச்சர் கே.என்.நேரு, தஞ்சாவூர் ஆய்வுக் கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்களும் உள்ளாட்சிப் பிரதிநிதி களும் முன்வைத்த கோரிக்கைகளின் அடிப்ப டையில் தான் சட்டமன்ற த்தில் அவற்றிற்கான நிதி ஒதுக்கும் பணி, துறையின் சார்பில் நடைபெற்று வருகின்றது.

    முதலமைச்சர் கேட்ட 10 கோரிக்கைகளில் ஒன்றாக இதை நீங்கள் எழுதிக் கொடுத்திருக்கிறீர்கள்.

    எனவே நிச்சயமாக இது முதல் - அமைச்சரின் அனுமதியைப் பெற்று ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

    இது நடக்கும். இவ்வாறு அமைச்சர் பதிலளித்தார்.

    • முதுநிலை விரிவுரையாளர் சுப்ரமணியம் ஆகியோர் வினாடிவினா தேர்வு, விடைத்தாள் தயாரிப்பு குறித்து பயிற்சிகளை வழங்கினர்.
    • மாவட்டத்தில் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 179 ஆசிரியர்கள் பயிற்சியில் பங்கேற்றனர்.

    திருப்பூர்:

    பள்ளி கல்வித்துறை மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் 6முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கல்வித்தரம் குறித்து மதிப்பீடு செய்ய கம்ப்யூட்டர் வழியில் வினாடி வினா தேர்வு வாரம்தோறும் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

    தேர்வுக்கான வினாத்தாள் தயாரிப்பு தொடர்பான பயிற்சி மற்றும் ஆலோசனை கூட்டம் என்.சி.பி., மேல்நிலைப்பள்ளி தாராபுரம், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, உடுமலை, பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அவிநாசி ஆகிய மையங்களில் நடந்தது. திருப்பூர் குமார்நகர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில், முதுநிலை விரிவுரையாளர் பாபி இந்திரா, கே.எஸ்.சி., அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதுநிலை விரிவுரையாளர் சுப்ரமணியம் ஆகியோர் வினாடிவினா தேர்வு, விடைத்தாள் தயாரிப்பு குறித்து பயிற்சிகளை வழங்கினர்.

    மாவட்டத்தில் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 179 ஆசிரியர்கள் பயிற்சியில் பங்கேற்றனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்ச்செல்வி, மாவட்ட கல்வி அலுவலர் பக்தவச்சலம், மாநில கல்வியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் முதல்வர் சங்கர் ஆகியோர் பயிற்சி நடக்கும் மையங்களில் ஆய்வு செய்தனர்.

    மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வி கூறுகையில், வருகிற 20ந் தேதி முதல் பள்ளி அளவில், 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு வினாடி - வினா தேர்வு நடத்தப்படும். நடுநிலைப்பள்ளி மாணவரின் கல்வித்தரத்தை மேம்படுத்த தேவையான முயற்சிகள் பள்ளிகல்வித்துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

    ×