search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சண்டை"

    • சேலம் சூரமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு நேற்று மதியம் சூரமங்கலம் கல்யாணசுந்தரம் காலனி பகுதியில் உள்ள ஒரு காலி நிலத்தில் பணம் வைத்து சேவல் சண்டை நடப்பதாக தகவல் வந்தது.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு சில வாலிபர்கள் பணம் வைத்து சேவல் சண்டை விளையாட்டில் ஈடுபடுவது தெரியவந்தது.

    சேலம் சூரமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு நேற்று மதியம் சூரமங்கலம் கல்யாணசுந்தரம் காலனி பகுதியில் உள்ள ஒரு காலி நிலத்தில் பணம் வைத்து சேவல் சண்டை நடப்பதாக தகவல் வந்தது. அதை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு சில வாலிபர்கள் பணம் வைத்து சேவல் சண்டை விளையாட்டில் ஈடுபடுவது தெரியவந்தது.அப்போது அங்கு பணம் வைத்து சேவல் சண்டை விளையாட்டில் ஈடுபட்ட திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் கோரையர் பாலம் பகுதியைச் சேர்ந்த ராஜா (34), சூரமங்கலம் அருகே உள்ள கல்யாண சுந்தரம் காலனி பகுதியைச் சேர்ந்தவர்கள் பூபதி (44), சுபாஷ் (30), பிரபு (33),ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் 11 சேவல்களையும் பறிமுதல் செய்தனர்.

    • சோழவந்தான் அருகே கிடா முட்டு சண்டை நடந்தது.
    • கமிட்டித் தலைவர் வீரசிங்கம் தலைமை தாங்கினார்.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே உள்ள விக்கிரமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கல்புளிச்சான்பட்டி கிராமத்தில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழாவையொட்டி இன்று கிடா முட்டு சண்டை நடந்தது. பல்வேறு கிராமங்களில் இருந்து கிடாக்கள் குவிந்தன.

    கமிட்டித் தலைவர் வீரசிங்கம் தலைமை தாங்கினார். முத்துப்பாண்டி, பாஸ்கரன் முன்னிலை வகித்தனர். அஜித், குண்டுமணி வரவேற்றனர். உசிலம்பட்டி முன்னாள் எம்.எல்.ஏ.வும், அகில இந்திய பார்வர்டு பிளாக் பொதுச் செயலாளருமான கதிரவன் தொடங்கி வைத்தார். மாவட்ட கவுன்சிலர் ரெட்காசி, விக்கிரமங்கலம் ஊராட்சி மன்றதலைவர் கலியுக நாதன், ஆர்.கே.சாமி, இளைஞரணி விக்னேஷ் ஆகியோர் பேசினர். பவித்திரன் நன்றி கூறினார்.

    இந்த கிடா முட்டு சண்டையில் மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் இருந்து இருந்து 85 கிடாக்கள் கலந்து கொண்டன. கிடாக்களுக்கு கமிட்டி சார்பில் பரிசு வழங்கப்பட்டது. டி.எஸ்.பி. நல்லு தலைமையில் 60 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • சம்பத்குமார் அமிர்தவள்ளியுடன் இருந்து கொண்டு மனைவி குழந்தைகளை கண்டுகொள்ளாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
    • ஏட்டு சம்பத்குமாரின் கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகே உள்ள மானத்தாள் கிராமம், தாண்டவனூர் பகுதியை சேர்ந்தவர் சம்பத்குமார். இவர் சென்னை ஆயுதப் படையில் போலீஸ் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி சரஸ்வதி என்ற மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர்.

    இந்நிலையில் தாரமங்கலம் ஆசிரியர் காலனி பகுதியை சேர்ந்தவர் அமிர்தவள்ளி என்பவருக்கும், சம்பத்குமாருக்கும் இடையே கடந்த 15 ஆண்டுகளாக தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.

    கணவனை இழந்த அமிர்தவள்ளி ஒரு மகனுடன் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக வேலை செய்து வருகிறார்.

    இந்நிலையில் சம்பத்குமார் அமிர்தவள்ளியுடன் இருந்து கொண்டு மனைவி குழந்தைகளை கண்டுகொள்ளாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் மனம் உடைந்த சரஸ்வதி, சம்பவத்தன்று அமிர்தவள்ளி வீட்டில் கணவர் இருப்பது தெரியவந்ததால் கணவனை தேடி அங்கு சென்றுள்ளார்.

    மனைவியை பார்த்தவுடன் அங்கிருந்து போலீஸ் ஏட்டு சம்பத்குமார் வெளியே ஓடியுள்ளார். பின்னர் வீட்டில் புகுந்த சரஸ்வதியை அமிர்தவள்ளி தாக்கியுள்ளார். பதிலுக்கு அவரும் தாக்கியதால் இருவரும் காயம் அடைந்து ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக இருதரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதனிடையே ஏட்டு சம்பத்குமாரின் கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதன் தொடர்ச்சியாக சம்பந்தப்பட்ட ஏட்டு சம்பத்குமார் மீது துறைவாரியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது. இந்த சம்பவம் தாரமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • காந்திநகர் பகுதியில் சேவல் சண்டை சூதாட்டம் நடைபெறுவதாக குமாரபாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் நேரில் சென்று பார்த்த போது, அங்கு 4 பேர் சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. அவர்களி டமிருந்து ரூ. 4 ஆயிரம் மதிப்புள்ள 2 சேவல்கள், பணம் ரூ.1200 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் அருகே காந்திநகர் பகுதியில் சேவல் சண்டை சூதாட்டம் நடைபெறுவதாக குமாரபாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் நேரில் சென்று பார்த்த போது, அங்கு 4 பேர் சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. விசாரணையில் அவர்கள் பவானியை சேர்ந்த சுரேஷ்(வயது 38,), ஈரோட்டை சேர்ந்த பாஸ்கரன்( 48,) கனகராஜ்( 28,) குப்பாண்டபாளை யத்தை சேர்ந்த சவுந்தர்( 27,) என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களி டமிருந்து ரூ. 4 ஆயிரம் மதிப்புள்ள 2 சேவல்கள், பணம் ரூ.1200 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    • கல்லங்காட்டுவலசு பகுதியில் சேவல் சண்டை சூதாட்டம் நடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • இதன் பேரில் சேவல் சண்டை நடத்திய 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் ரூ.4 ஆயிரம் மதிப்பிலுள்ள சேவல்களையும் பறிமுதல் செய்தனர்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் கல்லங்காட்டுவலசு பகுதியில் சேவல் சண்டை சூதாட்டம் நடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் ரவி. சப்-இன்ஸ்பெக்டர். மலர்விழி தலைமையிலான போலீசார் நேரில் சென்று சோதனை நடத்தினர். அப்போது சேவல் சண்டை நடத்திய அதே பகுதியை சேர்ந்த விவசாயி கோகுல்(வயது 23), ராஜகோபால்(26), பவானி, இளங்கோவன்(43), ஈரோடு எலக்ட்ரீசியன் தினேஷ்(29), ஈரோடு நிதி நிறுவன அதிபர் உதயன்(32), ஈரோடு, போட்டோ கடை உரிமையாளர் சிவசுப்ரமணியன்(28) ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் ரூ.4 ஆயிரம் மதிப்புள்ள 2 சேவல்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

    • ஆத்திரமடைந்த இருவரும் நள்ளிரவில் திடீரென மோதலில் ஈடுபட்டனர்.
    • அவர்கள் நடுரோட்டில் கட்டிப்புரண்டு ஒருவரையொருவர் தாக்கி சண்டை போட்டனர்.

    நெல்லை:

    நெல்லை சந்திப்பு காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் பிரம்மநாயகம் (வயது28). ஊர்க்காவல் படை வீரர். இவர் கடந்த 3-ந் தேதி இரவு பாதுகாப்பு பணியை முடித்து கொண்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

    அவர் வண்ணார்பேட்டை-சந்திப்பு சாலையில் சென்ற போது ஜவுளிக்கடையில் வேலை பார்க்கும் ஒருவர் அங்கு வந்தார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    ஆத்திரமடைந்த இருவரும் நள்ளிரவில் திடீரென மோதலில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் நடுரோட்டில் கட்டிப்புரண்டு ஒருவரையொருவர் தாக்கி சண்டை போட்டனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வைரலானது. இது தொடர்பாக விசாரணை நடத்த மாநகர போலீஸ் துணைகமிஷனர் சீனிவாசன் உத்தரவிட்டார்.

    அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் பிரம்மநாயகத்துடன் மோதலில் ஈடுபட்டது வீரவநல்லூர் அருகே உள்ள கரிசூழ்ந்தமங்கலத்தை சேர்ந்த முத்துச்சரவணன் (32) என்பதும், தாக்குதல் சம்பவத்தில் பிரம்மநாயகம், முத்துச்சரவணன் ஆகியோர் காயமடைந்து நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதும் தெரியவந்தது.

    தொடர் விசாரணையில் பிரம்மநாயகம் முன்பு ஜவுளிக்கடையில் வேலை பார்த்த போது அவருக்கும் முத்துச்சரவணனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது.

    இந்நிலையில் தற்போது ஊர்க்காவல் படையில் சேர்ந்து பணியாற்றி வரும் பிரம்மநாயகம் சம்பவத்தன்று சாலையில் வந்த போது அவர்களுக்கடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அதனை ஜவுளிக்கடை காவலாளி ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட 3 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பணம் கட்டி சேவல் சண்டை நடப்பதாக பெருந்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • சேவல் சண்டையில் ஈடுபட்டதாக 33 பேர் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். சேவல்களை கொண்டுவர பயன்படுத்தப்பட்ட 2 கார்கள், 6 மோட்டார் சைக்கிள்கள், சூதாட்டப் பணம் ரூ.36, 190 ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.

    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம், பெருந்துறை பகுதியில் சிவகாமி என்பவரது வீட்டின் பின்புறம் உள்ள கால் நடை வளர்ப்புப் பகுதியில் பணம் கட்டி சேவல் சண்டை நடப்பதாக பெருந்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் பெருந்துறை சப்- இன்ஸ்பெக்டர் செந்தி ல்குமார் தலைமையான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணித்த போது அதேப் பகுதியைச் சேர்ந்த சிவகாமியின் மகன் தினேஷ்குமார் (30) மற்றும் ராஜ்குமார் ஆகியோர் தலைமையில் பணம் வைத்து சேவல் சண்டை நடத்தியது தெரிய வந்தது.

    இதையடுத்து சுற்றி வளைத்துப் பிடித்த போலீசார் சேவல் சண்டையில் ஈடுபட்டதாக 33 பேர் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

    மேலும், சண்டைக்கு பயன்படுத்தப்பட்ட 8 சேவல்கள், சேவல்களின் கால்களில் கட்டப்படும் கத்திகள் 21 மற்றும் சேவல்களை கொண்டுவர பயன்படுத்தப்பட்ட 2 கார்கள், 6 மோட்டார் சைக்கிள்கள், சூதாட்டப் பணம் ரூ.36, 190 ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.

    • கணவர் அடிக்கடி குடித்து விட்டு வந்ததால் அவர்களுக்கிடையே சண்டை ஏற்பட்டது.
    • வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு மாட்டி தற்கொலை செய்து ெகாண்டார்.

    நீடாமங்கலம்:

    ஆடுதுறை தெற்கு அக்ரஹாரத்தை சேர்ந்தவர் ராஜகுரு. இவரது மனைவி இந்துமதி (வயது 24). இத்தம்பதிகளுக்கு திருமணம் ஆகி நான்கு ஆண்டுகள் ஆகிறது. 9 மாத ஆண் குழந்தை உள்ளது.

    கடந்த இரண்டு வருடங்களாக தனியாக வசித்து வந்த நிலையில் ராஜகுரு அடிக்கடி குடித்து விட்டு வந்ததால் அவர்களுக்கிடையே சண்டை ஏற்பட்டு இந்துமதி அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு அவரை சமாதானம் செய்து வீட்டிற்கு ராஜகுரு அழைத்து வந்துள்ளார். இதனிடையே இந்துமதி வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு மாட்டி தற்கொலை செய்தார். இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×