என் மலர்
நீங்கள் தேடியது "பஸ் மோதி விபத்து"
- பிலிப்பைன்சில் சுங்கச்சாவடி அருகே வாகனங்கள் வரிசையாக நின்றன.
- அந்த வாகனங்கள் மீது ஒரு பஸ் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டது.
மணிலா:
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா அருகே உள்ள நெடுஞ்சாலையில் ஒரு பஸ் சென்று கொண்டிருந்தது. இதில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
டார்லாக் நகரில் உள்ள சுங்கச்சாவடி அருகே பஸ் சென்றது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய பஸ் முன்னால் வரிசையில் நின்ற ஒரு கார் மீது மோதியது.
இந்த சங்கிலித் தொடர் விபத்தில் அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதின. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்த தகவலின் பேரில் மீட்புப் படையினர் அங்கு விரைந்து சென்றனர்.
அப்போது 2 பஸ்களுக்கு இடையில் ஒரு மினி வேன் சிக்கிக் கொண்டது. இதனால் அந்த வேனில் இருந்த குழந்தைகள் உள்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். அதேபோல், நடுவில் சிக்கிக் கொண்ட ஒரு காருக்குள் இருந்த தம்பதியும் உடல் நசுங்கி பலியாகினர்.
காயமடைந்த 30-க்கும் மேற்பட்ட பயணிகள் வலியில் அலறி துடித்தனர். இதையடுத்து அங்கு விரைந்து சென்ற மீட்பு படையினர் அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.
இந்த விபத்தால் அங்கு பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அரசு பஸ் சாலை ஓரத்தில் பள்ளத்தில் உள்ள வயலில் இறங்கி நின்றது.
- தேசிய நெடுஞ்சாலையில் விபத்து நடைபெற்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கடலூர்:
கடலூர் அருகே 2 பஸ்கள் மோதி 30 பேர் படுகாயம் அடைந்தனர். சென்னையில் இருந்து நாகப்பட்டினத்திற்கு அரசு விரைவு பஸ்சும், கடலூரில் இருந்து முத்தாண்டிக் குப்பத்திற்கு தனியார் பஸ்சும் இன்று காலை பயணிகளை ஏற்றிக்கொண்டு விழுப்புரம்-நாகப்பட்டினம் சாலையில் சென்று கொண்டிருந்தது.

கடலூர் அடுத்த ஆலப்பாக்கம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது தனியார்பஸ் டிரைவர் நெடுஞ்சாலையில் உள்ள சர்வீஸ் சாலை வழியாக முத்தாண்டிக்குப்பத்திற்கு செல்வதற்காக பஸ்சை திருப்பினார்.
அப்போது நேராக சென்று கொண்டிருந்த அரசு விரைவு பஸ் எதிர்பாராமல் தனியார் பஸ் மீது பலத்த சத்தத்துடன் மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் நிலைகுலைந்த அரசு பஸ் சாலை ஓரத்தில் பள்ளத்தில் உள்ள வயலில் இறங்கி நின்றது. விபத்து நடந்த பஸ்களில் இருந்த பயணிகள் அலறி துடித்தனர். அக்கம்பக்கத்தினர் மற்றும் பொதுமக்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக பஸ்சில் சிக்கி இருந்த பயணிகளை மீட்க தொடங்கினர்.

மேலும் காயம் அடைந்து மீட்ட பயணிகளை உடனடியாக சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் 2 பஸ்களில் பயணம் செய்த குள்ளஞ்சாவடி பச்சையம்மாள், குறிஞ்சிப்பாடி கதிர்வேல், புவனகிரி ராம் குமார், சாத்தப்பாடி உதய குமார், பூண்டியாங்குப்பம் அமிர்தவள்ளி, தமிழரசி, வீரகுமார் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயம் அடைந்தவர்களுக்குகடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
விழுப்புரம்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து நடைபெற்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து புதுச்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போக்குவரத்தை சரி செய்தனர்.
இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- பெண் படுகாயம்
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் அருகே இரட்டைமலை சீனிவாசன் தெருவை சேர்ந்தவர் மோசஸ் தினகரன் இவரது மனைவி மனைவி யாமணிஜான்சிராணி (வயது 36). இவர்கள் நேற்று முன்தினம் ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி கூட்டு ரோடு பகுதியில் உள்ள கார் ஷோரூமில் புதிய கார் ஒன்றை வாங்கி அதனை காரின் உரிமையாளர் ஓட்டினார்.
அப்போது ஷோரூமில் இருந்து வெளிவந்த கார் கட்டுப்பாட்டை இழந்து அருகில் நின்ற இருந்த டெமோ கார் மீது மோதி சாலையோரம் நின்று கொண்டு இருந்த கல்லூரி பஸ் மீது மோதியது.
இதில் காரின் முன் பக்கம் சேதமடைந்தது.
மேலும் காரில் இருந்த யாமினி ஜான்சிராணிக்கு காயம் ஏற்பட்டது. இது குறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- பால் வாங்க சென்றபோது பரிதாபம்
- போலீசார் விசாரணை
செய்யாறு:
செய்யாறு டவுன், நரசிம்ம நகரில் வசித்து வருபவர் ஐயப்பன் வயது 55, இவர் தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வந்தார்.
இன்று அதிகாலை 5 மணி அளவில் பால் பாக்கெட் வாங்க ஆற்காடு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது செய்யாறு பஸ் நிலையம் நோக்கி சென்ற தனியார் பஸ் ஐயப்பன் மீது மோதியது. இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதபமாக இறந்தார்.
இது குறித்து அவரது மகன் பிரேம்குமார் செய்யாறு போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- 2 வாலிபர்கள் படுகாயம்
- போலீசார் விசாரணை
குடியாத்தம்:
குடியாத்தம் அடுத்த அம்மணாங்குப்பம் துர்க்கை நகர் பகுதியை சேர்ந்தவர் அரவிந்தன் (வயது 21). அதே பகுதியை சேர்ந்தவர் ராஜலிங்கம் (21) இருவரும் நண்பர்கள்.
இந்நிலையில் நேற்று மாலையில் மோட்டார் சைக்கிளில் அரவிந்தன், ராஜலிங்கம் இருவரும் குடியாத்தம் ெரயில் நிலையம் அருகே உள்ள பெட்ரோல் பங்குக்கு சென்றனர்.
அங்கு பெட்ரோல் போட்டு கொண்டு மெயின் ரோட்டுக்கு வந்துள்ளனர். வேலூரில் இருந்து குடியாத்தம் நோக்கி வந்த அரசு பஸ் குடியாத்தம் ெரயில்வே மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதியது. இதில் ராஜலிங்கமும், அரவிந்தனும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர்.
உடனடியாக அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்.
மேல் சிகிச்சைக்காக ராஜலிங்கம் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விபத்து சம்பவம் தொடர்பாக குடியாத்தம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அதிர்ஷ்டவசமாக 30 பயணிகள் உயிர் தப்பினர்
- போலீசார் விசாரணை
ராணிப்பேட்டை:
காஞ்சீபுரத்தில் இருந்து வேலூர் நோக்கி ஒரு தனியார் பஸ் எம்.பி.டி சாலையில் நேற்று மாலை வந்து கொண்டிருந்தது. இதனை ராஜேந்திரன் (வயது 42) என்பவர் ஓட்டி வந்தார். ராணிப்பேட்டை ஆட்டோ நகர் அருகே வரும்போது பஸ் திடீரென்று நிலை தடுமாறி சாலை நடுவில் இருந்த தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
பஸ் பாதி கவிழ்ந்த நிலையில் ஏற்பட்ட இந்த விபத்தில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ஷ்டவசமாக காயம் இன்றி உயிர் தப்பினார்கள்.
இந்த விபத்தினால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து ராணிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிரேன் மற்றும் ஆட்கள் துணையோடு போக்குவரத்தை சரி செய்தனர். இது குறித்து ராணிப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார்
- போலீசார் விசாரணை
கண்ணமங்கலம்:
சந்தவாசல் அருகே உள்ள கல்வாசல் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (60), ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர். இவர் நேற்று தனது பைக்கில் கேளூர் சந்தைமேட்டிற்கு வந்தார்.
சமத்துவபுரம் நுழைவாயில் அருகே சென்றபோது, திருவண்ணாமலை நோக்கி வந்த அரசு பஸ் பைக் மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த அவர், சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள், முருகன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து சந்தவாசல் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- விவசாய பணிக்காக சென்றுகொண்டிருந்த போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
கீழ்பென்னாத்தூர்:
கீழ்பென்னாத்தூர் அடுத்த சிறுநாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் வேலாயுதம் (வயது 45). டிராக்டர் டிரைவர். இவர் இன்று அதிகாலை விவசாய பணிக்காக தனது டிராக்டரை ஓட்டிக்கொண்டு கீழ்பென்னாத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
பெங்களூரில் இருந்து பாண்டிச்சேரிக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. அண்ணாநகர் கூட்டு சாலை அருகே வந்தபோது முன்னால் வேலாயுதம் ஓட்டிச் சென்ற டிராக்டர் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
இதில் வேலாயுதம் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். டிராக்டர் 2 துண்டுகளானது.
ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வேலாயுதம் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கீழ்பென்னாத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வேலாயுதம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
- கிரேன் மூலமாக பஸ்சை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்செய்தனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை, ஆட்டோ நகர் பகுதியில் சென்னை-மும்பை தேசிய நெடுஞ்சாலையில் சாலையை விரிவுபடுத்தாமல் சாலை நடுவே கான்கிரீட் தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் தொடர் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு சென்னையில் இருந்து 30-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு ராணிப்பேட்டை நோக்கி அரசு பஸ் வந்தது.
அப்போது எதிர்பாராத விதமாக சாலை நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக தப்பினர். தகவல் அறிந்து வந்த ராணிப்பேட்டை போலீசார் போக்குவரத்து நெரிசலை சரிசெய்தனர்.
விபத்துக்குள்ளான அரசு பஸ்சை கிரேன் மூலமாக அப்புறப்படுத்தினர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 14 பேர் காயம்
- போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை
காவேரிப்பாக்கம்:
தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத் அடுத்த நிஜாமாபாத் பகுதியை சேர்ந்த 6 பேர் காஞ்சீபுரத்தில் சாமி தரிசனம் செய்துவிட்டு காரில் திருப்பதி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த சேந்தமங்கலத்தில் காஞ்சீபுரம்- அரக்கோணம் நெடுஞ்சாலையில் சென்றபோது எதிரே வந்த தனியார் நிறுவன பஸ் கார் மீது மோதியது. இதில் கார் முன்பகுதி நொறுங்கியது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த நிஜாமாபாத்தை சேர்ந்த வெங்கட்ரெட்டி (55) , அவிநாஷ் (20) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
அவர்களுடன் காரில் பயணித்த பத்ரிநாத் (22), நரசிங் (42), ரமேஷ் (40), கங்காதர் ஆகிய 4 பேரும், பஸ்சில் வந்த 10 ஊழியர்களும் காயம டைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் நெமிலி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்த 4 பேரையும், தனியார் நிறுவன பஸ்சில் காயமடைந்த 10 ஊழியர்களையும் மீட்டு காஞ்சீபுரம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
பின்னர் வெங்கடரெட்டி, அவிநாஷ் ஆகிய இருவரது உடல்களையும் பிரேத பரிசோ தனைக்காக காஞ்சீபுரம் அரசு மருத்துவ மனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து நெமிலி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாங்காய்க சிதறி கிடந்தது
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
ஆம்பூர்:
வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியை சேர்ந்தவர் வேணுகோபால், லாரி டிரைவர். இவர் இன்று அதிகாலை வேலூரில் இருந்து கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மண்டிக்கு, லாரியில் மாங்காய்களை லோடு ஏற்றிக்கொண்டு சென்றார்.
ஆம்பூர் நெடுஞ்சாலை யில் சென்றபோது, லாரி மீது பின்னால் வந்த தனியார் பஸ் மோதியது.
இதில் பஸ்சில் பயணம் செய்த 15 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களை வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 5 பேர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.
விபத்தால் சாலை முழுவதும் மாங்காய் சிதறி கிடந்தது. அதனை பொதுமக்கள் அள்ளி சென்றனர். இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 10 பேர் காயம்
- போக்குவரத்து நெரிசலை உடனடியாக சரிசெய்தனர்
ராணிப்பேட்டை:
சென்னையில் இருந்து பெங்களூர் நோக்கி நேற்று இரவு பயணிகளை ஏற்றிக்கொண்டு கர்நாடக அரசு பஸ் சென்றது.
அப்போது வாலாஜா டோல்கேட் அருகே சென்றபோது டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ் சாலையில் தறிகெட்டு ஓடியது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள் அலறி கூச்சலிட்டனர். டிரைவர் பஸ்சை கட்டுக்குள் கொண்டு வர முயற்ச்சித்தார்.
இருப்பினும் பஸ் சாலை நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி மற்றும் எஞ்சின் பாகங்கள் சேதமடைந்தது.
இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 10 பயணிகள் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தகவல் அறிந்த ராணிப்பேட்டை போலீசார் விரைந்து சென்று கிரேன் மூலம் பஸ்சை அப்புறப்படுத்தினர். போக்குவரத்து நெரிசலை உடனடியாக சரிசெய்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.