search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2 பேர் மீது வழக்கு"

    • கிருஷ்ணகிரியில் இளம்பெண்களை வைத்து விபசாரம் 2பேர் கைது
    • போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கிருஷ்ணகிரியில் சேலம் சாலையில் உள்ள ஒரு ஸ்பா சென்டரில் இளம்பெண்களை வைத்து விபசாரம் நடந்து வருவதாக டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீசார் நேற்று முனதினம் அந்த ஸ்பா சென்டரில் சோதனை செய்தனர். அதில் இளம்பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரிய வந்தது. இதையடுத்து ஸ்பா சென்டரை நடத்தி வந்த சேலம் செவ்வாய்பேட்டையை சேர்ந்த முகமது, செந்தில்குமார் ஆகிய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

    • விற்பனைக்காக வைத்திருந்த 20 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட பகுதிகளில் குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என கோபி, பெருந்துறை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது விஜயமங்கலம்- ஊத்துக்குளி ரோடு டாஸ்மாக் கடை, மூல வாய்க்கால் டாஸ்மாக் கடை அருகே அனுமதியின்றி மது விற்பனை செய்து கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோயிலை சேர்ந்த சிவந்தி கண்ணன் மகன் ராஜமாணிக்கம் (வயது 44),

    சிவகங்கை மாவட்டம் மருதவாயில் பகுதியைச் சேர்ந்த காசி மகன் கோபால் (44) ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 20 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • முருகன் என்பவர் வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பது தெரிய வந்தது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பர்கூர் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா செடி வளர்ப்பதாக பர்கூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் அடிப்படையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    அப்போது அந்தியூர் அடுத்த பர்கூர் கொங்காடை பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பது தெரிய வந்தது.

    மேலும் அதே பகுதியை சேர்ந்த தாசன் மகன் முருகன் என்ற சின்னமுத்து என்பவர் கஞ்சா செடி வளர்ப்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் கஞ்சா செடிகளை பறிமுதல் செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண் உட்பட 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
    • விவகாரத்து தொடர்பான வழக்கில் தகராறு

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அண்ணாநகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் அருண்குமார்(வயது39). விவசாயி. இவருக்கும் தருமபுரியை சேர்ந்த ஜான்சிராணி(35) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திரும ணம் நடந்தது. இந்த நிலையில் கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அருண்குமார், ஜான்சிராணியி–டம் இருந்து விவகாரத்து பெற்று விட்டார்.

    கணவன்-மனைவி இருவ ரும் சம்பவத்தன்று தருமபுரி நீதிமன்றத்துக்கு ஜீவனாம்சம் தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பாக ஆஜராக வந்துள்ளனர். அப்போது அருண்குமாருக்கும் ஜான்சிராணிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஜான்சிராணியும், வக்கீல் விமல் என்பவரும் சேர்ந்து நீதிமன்ற வாளகத்தி–லேயே அருண்குமாரை தகாத வார்த்தையில் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

    இது குறித்து அருண்குமார் அளித்த புகாரின் பேரில் அதியமான்கோட்டை போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    • பணம் கொடுக்கல் வாங்கலில் தம்பதியை தாக்கியவர்கள் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
    • புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    பெரியகுளம்:

    பெரியகுளம் அருகே வடகரை வைத்தியநாத புரத்தை சேர்ந்தவர் சுப்பிர மணி மனைவி மனோ ன்மணி(37). விவசாயம் செய்து வருகின்றனர். அழகுபாறை, அணைக்கல் பகுதியில் தென்ன ந்தோப்பை அதேபகுதியை சேர்ந்த சசிக்குமார், கற்பகம் ஆகியோருக்கு கிரைய அக்ரிமெண்ட் செய்து கொடுத்தனர்.

    இதற்காக ரூ.10 லட்சம் பேசி முன்பணமாக ரூ.7 லட்சம் கொடுக்கப்பட்டது. மீதி பணத்தை கேட்டபோது பிறகு தருவதாக இழுத்த டித்து வந்தனர். இந்தநிலை யில் சுப்பிரமணி மற்றும் அவரது மனைவி தோப்பில் இருக்கும் போது கற்பகம், சசிக்குமார் ஆகியோர் அத்துமீறி உள்ளே நுழைந்து அவர்களை தகாத வார்த்தை யால் திட்டி கொலை மிரட்டல் விடுத்து ள்ளனர்.

    தோப்பின் ஆவணம் எங்களிடம் உள்ளது. இத னால் ஒன்றும் செய்யமுடி யாது எனக்கூறி அவரை தாக்க முயன்றனர். இதுகுறித்து தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளிக்கப்பட்டது. எஸ்.பி உத்தரவின்பேரில் பெரியகுளம் போலீசார் கற்பகம் மற்றும் சசிக்குமார் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பணிக்கு வந்தவர்களை வேலை இடங்களில் புகைப்படம் எடுத்து மின் பொருள் செயலியில் தினமும் காலை 9மணிக்கு பதிவேற்றம் செய்துள்ளனர்.
    • முன்னாள் பணித்தள பொறுப்பாளர்கள் 2 பேர் செயலியில் நுழைந்து பணிக்கு வந்த வர்களுக்கு ஆப்சென்ட் எனவும், பணிக்கு வராத வர்களுக்கு பிரசென்ட் என முறைகேட்டில் ஈடுபட்டனர்.

    தேனி:

    தேனி மாவட்டம் திருமலாபுரம் ஊராட்சியில் கடந்த பிப்ரவரி, மார்ச்சில் தனியார் காளவாசல் முதல் மாலப்பட்டி வரை வாய்க்கால் சீரமைப்பு மந்தையம்மன் கோவில் முதல் கருப்பத்தேவன்பட்டி, காமாட்சிதேவன் ஓடை வரத்து வாய்க்கால்கள் சீரமைப்பு பணிகள் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ஒரு வாரம் நடந்தது.

    இப்பணிக்கு வருவோரின் வருகையை பணித்தள பொறுப்பாளர்கள் பால்கண்ணன், கயல்விழி பதிவு செய்தனர். வேலை நடக்கும் நாட்களில் பணிக்கு வந்தவர்களை வேலை இடங்களில் புகைப்படம் எடுத்து மின் பொருள் செயலியில் தினமும் காலை 9மணிக்கு பதிவேற்றம் செய்துள்ளனர். பதிவேற்றம் செய்த சில நிமிடங்களுக்குள் அச்செயலியில் முன்னாள் பணித்தள பொறுப்பா ளர்கள் அருள்முருகன், மேனகா செயலியில் நுழைந்து பணிக்கு வந்த வர்களுக்கு ஆப்சென்ட் எனவும், பணிக்கு வராத வர்களுக்கு பிரசென்ட் எனவும் மோசடியாக பதிவு செய்து பணிக்கு சம்மந்தமில்லாதவர்களின் புகைப்படத்தை மாற்றி முறைகேட்டில் ஈடுபட்டனர்.

    இது குறித்து பி.டி.ஓ. மலர்விழி புகாரின்படி சைபர்கிரைம் இன்ஸ்பெ க்டர் அரங்கநாயகி, சப்-இன்ஸ்பெக்டர் தாமரை க்கண்ணன் ஆகி யோர் அருள்முருகன், மேனகா மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    • பரமத்தி வேலூர் பழைய தேசிய நெடுஞ்சாலையில் ஒரு உணவகம் இயங்கி வருகிறது.
    • உணவகத்தில் இருந்த அனைத்து குடில்களிலும் பலர் மது அருந்திக் கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பழைய தேசிய நெடுஞ்சாலையில் ஒரு உணவகம் இயங்கி வருகிறது. இங்கு இளைஞர்கள் மற்றும் அப்பகுதி ஆண்களுக்கு தினமும் மது அருந்த அனுமதி அளிப்பதாகவும், முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, பிறந்தநாள், பல்வேறு விழாக்களுக்கு பார்ட்டி வைத்து கொண்டாடுவதற்கும், கும்பலாக மது அருந்துவதற்கும் அனுமதி அளிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

    இதுகுறித்து தகவல் அறிந்த பரமத்திவேலூர் போலீசார், உணவகத்தில் திடீர் சோதனை நடத்தினர். இதில் உணவகத்தில் இருந்த அனைத்து குடில்களிலும் பலர் மது அருந்திக் கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து அந்த உணவகத்தின் உரிமையா–ளர்களான சகோதரர்கள் செந்தில், சிவா ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் உரிய அனுமதி பெறாமல் உணவ–கத்தில் மது அருந்த அனுமதித்தது தெரியவந்தது. இதையடுத்து செந்தில், சிவா ஆகிய இருவர் மீதும் பரமத்திவேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    மேலும் இது போன்று சட்ட விரோதமாக உணவ–கங்கள், தாபாக்கள், ரெஸ்டா–ரண்டில் அனுமதி இன்றி மது விற்பது, மது அருந்த அனுமதி அளிப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டால், குற்றவியல் வழக்கு தொடரப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். 

    • போலி மருத்துவர்கள் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
    • மருத்துவர் பரிந்துரை இன்றி ஊசி, மரு ந்துகளை பயன்படுத்தியது கண்டு பிடிக்கப்பட்டது.

    கடலூர்:

    மருத்துவம் படிக்காமல் மருந்த கங்களில் மருத்துவம் பார்க்கும் போலி மருத்து வர்கள் மீது வழக்கு பதிந்து, கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என எஸ்.பி. உத்தரவி ட்டிருந்தார். அதன்படி கடலூர் மாவட்டத்தில் காவ ல்துறை அதிகாரிகளும் மருத்துவ அதிகா ரிகளும் இணைந்து சோதனை மேற்கொண்டனர். அதன்பேரில் திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரி டாக்டர்.பால முருகன், இன்ஸ்பெக்டர் (பொ றுப்பு) ராமச்ச ந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் பாக்யராஜ் ஆகியோர் இணைந்து திட்டக்குடி பகுதிகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    சோதனையில் 2 மெடிக்கல்களில் மருத்துவர் பரிந்துரை இன்றி ஊசி, மரு ந்துகளை பயன்படுத்தியது கண்டு பிடிக்கப்பட்டது. இது குறித்து டாக்டர். பாலமுருகன் கொடுத்த புகாரின் பேரில் மெடிக்கல் உரிமையாளர்கள் 2 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.மேலும் இது குறித்து அரசு டாக்டர் கூறுகையில் கருகலைப்பு சிகிச்சை, மருத்துவர் பரிந்துரையின்றி ஊசி போடுதல் போன்ற புகார் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.

    • இரும்பு கம்பியை கொண்டு கடையில் உள்ள பொருட்களை அடித்து நொறுக்கினர்.
    • இந்த காட்சி அங்குள்ள சி.சி.டி.வி. காமிராவில் பதிவாகியிருந்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மேச்சேரி கந்தநாயக்கர் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 28). இவர் எறகுண்டப்பட்டியில் பேக்கரி கடை நடத்தி வருகிறார்.

    நேற்று முன்தினம் இரவு இவரது கடைக்கு குடிபோைதயில் 2 பேர் வந்து முருகனிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இரும்பு கம்பியை கொண்டு கடையில் உள்ள பொருட்களை அடித்து நொறுக்கினர். இந்த காட்சி அங்குள்ள சி.சி.டி.வி. காமிராவில் பதிவாகியிருந்தது.

    இது குறித்து முருகன், மேச்சேரி போலீஸ் நிலையத்தில் வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீ சார் விசாரணை நடத்தி,

    மேச்சேரி திமிரி கோட்டைைய சேர்ந்த ராஜா மகன் மணி, தெத்திகிரிபட்டியை சேர்ந்த செல்வம் மகன் அருள்குமார் ஆகிய இருவர் மீதும் கொலை முயற்சி உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். கடந்த உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. சார்பில் மணி, வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியை தழுவியவர் என்பது போலீசாரின் விசாரணை தெரியவந்தது.

    • கண்டக்டரை தகாத வார்த்தைகளால் திட்டி சட்டையை கிழித்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
    • புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேவதானப்பட்டி:

    தேனி மாவட்டம் சில்வார்பட்டி வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் அழகுமணி (வயது 46). இவர் பெரியகுளம் அரசு போக்கு வரத்துக் கழக பணிமனையில் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார்.

    சம்பவத்தன்று ஜெயமங்கலம் நடுப்பட்டி யில் இருந்து சிந்துவம்ப ட்டிக்கு இடையே சென்று கொண்டிருந்த போது அதே பகுதியைச் சேர்ந்த அனித்குமார், முத்துராஜா ஆகியோர் படியில் நின்றபடி வந்துள்ளனர்.

    அவர்களை மேலே ஏறும்படி கூறியதால் ஆத்திரமடைந்த அவர்கள் கண்டக்டரை தகாத வார்த்தைகளால் திட்டி சட்டையை கிழித்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    இது குறித்து ஜெயமங்கலம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திட்டக்குடி அருகே பெருமுளை கிராமத்தில் 2012 ஆண்டு கோவில் மணிகள்திருடு போனது.
    • வழக்கு விசாரணை திட்டக்குடி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

    கடலூர்:

    திட்டக்குடி அருகே பெருமுளை கிராமத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு கோவிலில் இருந்த கோவில் மணிகள்திருடு போனது. இதுகுறித்து மணி உள்ளிட்ட பேர் மீது திட்ட க்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். தற்போது இந்த வழக்கு விசாரணை திட்டக்குடி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

    அரசு தரப்பு சாட்சிகளை தொட்டி (வயது65), செங்க மலம் பூசாரி ஆகியோரை தங்களுக்கு ஆதரவாக பொய் சாட்சி சொல்ல சொல்லி யதாக அதை கிராம த்தைச் சேர்ந்த தன்ராஜ் (42), முருகானந்தம் (45) ஆகி யோர் மீது கோர்ட்டு உத்தர வின் பேரில் திட்டக்குடி போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டுள்ள னர்.

    • தியாகதுருகம் அருகே கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
    • அதே பகுதியைச் சேர்ந்த மணிவேல் (35)மற்றும் இவரது தாய் சின்னப்பிள்ளை (55).

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே எஸ்.ஒகையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் உத்தண்டராமன் (வயது 65) இவர் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர். சம்பவத்தன்று இவரது வீட்டின் முன்புறம் உள்ள சிமெண்ட் சாலையில் பைப் லைன் அமைப்பதற்காக கிராம ஊராட்சி சார்பில் பள்ளம் தோன்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த மணிவேல் (35)மற்றும் இவரது தாய் சின்னப்பி ள்ளை (55)ஆகியோர் உத்தண்டராமன் தான் பள்ளம் தோண்டி யதாக தவறாக நினைத்துக் கொண்டு, அவரைத் திட்டி அவரது வீட்டின் சுற்றுச்சுவர் மற்றும் படியை சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து உத்தண்டராமன் கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் மணிவேல், சின்னப்பிள்ளை ஆகிய 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    ×