என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுற்றுலா பயணி"

    • சனி, ஞாயிறு தொடர் விடுமுறையையொட்டி குவிந்தனர்
    • நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களும் கன்னியாகுமரி சீசன் காலமாக கருதப்படுகிறது.

    கன்னியாகுமரி:

    இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ளது கன்னியாகுமரி. இது ஒரு உலகப் புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாகும். இங்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    இங்கு வருடம் முழுவதும் சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றாலும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களும் வழக்கத்தைவிட அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள்.

    இந்த3மாத காலமும் இங்கு சீசன் காலமாக கருதப்படுகிறது. இதேபோல ஏப்ரல் மே கோடை விடுமுறை சீசன் காலங்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு படையெடுப்பார்கள்.

    இந்த நிலையில் சனி, ஞாயிறு தொடர்விடு முறையையொட்டி கடந்த2நாட்களாக சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமானதால் கன்னியாகுமரி களைகட்டியது.

    இந்த2நாட்கள் தொடர்விடுமுறையிலும் சுற்றுலா தலங்களுக்கு மக்கள் படை எடுத்துச் சென்ற வண்ணமாக இருந்தனர்.அந்த அடிப்படையில் கன்னியாகுமரியிலும் சனி, ஞாயிறு தொடர் விடுமுறை நாட்களில்பல்லா யிரக்கணக்கான சுற்றுலா பயணிகள்குவிந்தனர்.இன்றும் கன்னியாகுமரியில்முக்கடலும்சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துஇருந்தனர்.

    கன்னியாகுமரி கடலில் இன்றுஅதிகாலையில் வானம் மேகமூட்டமாக இருந்ததால் சூரியன் உதயமான காட்சியை சுற்றுலாபயணிகள் பார்க்கமுடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். அதன்பிறகு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் காலையில் இருந்தே ஏராளமான சுற்றுலாபயணிகள் ஆனந்த குளியல் போட்டனர்.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ளவிவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிடஇன்றுகாலை 6மணியில் இருந்தேசுற்றுலாபயணிகள் படகுத்துறையில்நீண்ட கியூவில் காத்திருந் தனர்.அவர்கள்காலை 8மணியில்இருந்து படகில்ஆர்வத்துடன் பயணம்செய்துவிவே கானந்தர்மண்டபத்தைபார்வையிட்டுவந்த னர்.

    மேலும் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலாத் தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுதுபோக்கு பூங்கா,சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி, அரசு அருங்காட்சியகம், மீன் காட்சி சாலை, சுற்றுச்சூழல் பூங்கா, வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    இதனால் விடுமுறைஇல்லாத நாட்களிலும் சுற்றுலா தளங்கள் களை கட்டியது.

    இந்தசுற்றுலாதலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும்போ டப்பட்டுஇருந்தது. கடற்கரைப்பகுதியில்சுற்றுலாபோலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்புபணியில் ஈடுபட்டு வந்தனர். கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துஉள்ள விவேகானந்தர்நினைவு மண்டபத்தை சனி ஞாயிறு தொடர் விடுமுறையான கடந்த2நாட்களில் மட்டும் 17ஆயிரத்து400சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்வையிட்டுஉள்ளனர்.

    கடந்த சனிக்கிழமை 9ஆயிரத்து200 பேரும் ஞாயிற்றுக்கிழமையான நேற்று 8ஆயிரத்து200 பேரும் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்வையிட்டுஉள்ளனர்.

    • வெயிலுடன் இயல்பு நிலை திரும்பியதால், வழக்கம்போல் சுற்றுலாப் பயணிகள் வரத் துவங்கி விட்டனர்.
    • தேவையான பிலிம் ரோல்களை அமெரிக்காவில் இருந்தே அவர் கொண்டு வந்திருந்தார்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் "மாண்டஸ்" புயல் மற்றும் தொடர் மழையால் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை குறைவாக இருந்தது. தற்போது வெயிலுடன் இயல்பு நிலை திரும்பியதால், வழக்கம்போல் பயணிகள் வரத் துவங்கி விட்டனர்.

    அமெரிக்காவில் இருந்து மாமல்லபுரம் வந்த சுற்றுலா பயணி தாமஸ் என்பவர் டிஜிட்டல் கேமரா, ஆன்ட்ராய்டு போன் எதுவும் பயன்படுத்தாமல் 1990களில் பயன்படுத்திய பிலிம்ரோல் கேமராவை பயன்படுத்தி புராதன சின்னங்களை படம் எடுத்தார். இங்கு பிலிம் ரோல் கிடைக்காது என்பதால் தேவையான ரோல்களை அமெரிக்காவில் இருந்தே அவர் கொண்டு வந்திருந்தார். அவருக்கு மதன் என்ற உள்ளூர் வழிகாட்டி உதவினார். பழமை மாறாத அமெரிக்க இளைஞர் தாமசை பார்த்து மற்ற பயணிகள் வியப்படைந்தனர்.

    • குமரியில் மழை நீடிப்பு
    • குமரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை

    நாகர்கோவில்:

    வங்கக் கடலில் இலங்கை அருகே நிலை கொண்டி ருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து உள்ளது. இருப்பினும் குமரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

    இந்த நிலையில் மாவட் டம் முழுவதும் நேற்று மாலை பரவலாக மழை பெய்தது. இரவும் விட்டு விட்டு மழை பெய்தது. கன்னியாகுமரி யில் இன்று அதிகாலையில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக மழை வெளுத்து வாங்கியது. சுசீந்திரம், கொட்டாரம், மயிலாடி, அஞ்சுகிராமம், மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் இன்று அதிகா லையில் கன மழை பெய்தது.

    இதைத் தொடர்ந்து வானத்தில் கருமேகங்கள் திரண்டு மந்தாரமாக காணப்பட்டது. அவ்வப் போது மழை பெய்தது. நாகர்கோவிலிலும் இன்று அதிகாலையில் சாரல் மழை பெய்தது. புத்தன் அணை, ஆணைக்கிடங்கு, கன்னிமார், நிலப்பாறை பகுதிகளிலும் மழை பெய் தது. நிலப்பாறையில் அதிக பட்சமாக 8.4 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    மலையோரப் பகுதி யான பாலமோர் பகுதி யிலும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.இதனால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. திற்பரப்பு அருவி பகுதியில் பெய்து வரும் சாரல் மழை யின் காரணமாக அங்கு ரம்யமான சூழல் நிலவுகிறது. தற்பொழுது பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் ஏராளமான பொதுமக்கள் குடும்பத்தோடு அருவியில் ஆனந்த குளியலிட்டு வரு கிறார்கள்.

    அய்யப்ப பக்தர்களின் கூட்டமும் அங்கு அலை மோதி வருகிறது. பேச்சிப் பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 43.38 அடியாக இருந்தது. அணைக்கு 803 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 785 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 72.98 அடியாக உள்ளது. அணைக்கு 120 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணை யில் இருந்து 150 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பெருஞ்சாணி-1.6, பாலமோர்-2.4, மயிலாடி- 6.4, கொட்டாரம்-5.2, நிலப்பாறை-8.4, கன்னி மார்-1.8, பூதப்பாண்டி-1, நாகர்கோவில்-7, ஆணைக்கிடங்கு-3.2, புத்தன் அணை-1.2.

    • மனைவி கண் எதிரே பரிதாபம்
    • கன்னியா குமரி போலீசார் விசாரணை

    கன்னியாகுமரி:

    மத்தியபிரதேசம் மாநிலம் தார் திரியா பகுதியைச் சேர்ந்தவர் மதன்சிங் தாகூர் (வயது 72).

    இவர் மனைவி நர்மதா தாகூர் உள்பட 120 பேருடன் 2 பஸ்களில் நேற்று மதியம் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தனர். பின்னர் அவர்கள் கன்னியாகுமரியில் உள்ள பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு சென்று பார் வையிட்டனர்.

    அதன்பிறகு அவர்கள் கன்னியாகுமரியி ல் உள்ள சன்செட் பாயிண்ட் கடலில் குளித்துஉள்ளனர். அப்போது "திடீர்"என்று மதன்சிங் தாகூர் தனது மனைவி கண் எதிரே மயங்கி விழுந்து உள்ளார்.

    இதைப் பார்த்து அவரது மனைவி மற்றும் அவருடன் வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரை அவரது உறவினர்கள் மீட்டு ஆம்பு லன்ஸ் மூலம் கன்னியா குமரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று உள்ளனர். ஆனால் மதன் சிங் தாகூர் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்து விட்டார்.

    இதுபற்றி கன்னியாகுமரி போலீசுக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. அதன் பேரில் கன்னியாகுமரி போலீசார்அங்குவிரைந்து சென்று பிணத்தைகைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து கன்னியா குமரி போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • காவிரி ஆற்றுப்பகுதிகளில் ஆபத்தை உணராமல் செல்பி எடுத்து வருகின்றனர்.
    • நீரில் மூழ்கி மரணம் அடையும் சோக சம்பவம் அடிக்கடி நிகழ்வது சர்வ சாதாரணமாக உள்ளது.

    தருமபுரி,

    தமிழகத்தில் சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாக திகழும் ஒகேனக்கல்லில் நாள்தோறும் ஆயிர க்கணக்கான சுற்றுலா பய ணிகள் வருகை தருகின்றனர்.

    இது தவிர சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலமான கர்நாடகா ஆந்திரா மற்றும் புதுச்சேரியில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குடும்பம் குடும்பமாகவும் பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவி களும் வருகை தருகின்றனர்.

    சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்துடன் வந்து ஒகேனக்கல் அருவியில் குளித்து பரிசலில் சவாரி செய்து காவிரியின் அழகை கண்டு ரசித்து ஒகேன க்கல்லில் மீன் உணவை உண்டு ரசித்து மகிழ்வது வழக்கம்.

    குறிப்பாக இளைஞர்கள் பள்ளி மாணவர்கள் பிரதான அருவி பகுதிகளிலும் சினி பால்ஸ் உள்ளிட்ட காவிரி ஆற்றுப்பகுதிகளில் ஆபத்தை உணராமல் செல்பி எடுத்து வருகின்றனர்.

    இதேபோல் கடந்த மே மாதம் 16-ம் தேதி ஐந்தருவி பகுதிக்கு சென்ற பென்னாகரம் பகுதியைச் சேர்ந்த பெயிண்ட் கடை உரிமையாளர் ஆறுமுகம் என்பவரின் மனைவி சுமதி என்பவர் பாறைகளின் மீது செல்பி எடுக்க முற்பட்டபோது கால் தவறி காவிரி ஆற்றில் விழுந்து நீரில் மூழ்கி இறந்துள்ளார்.

    அதேபோல் சென்னை தியாகராய நகர் உஸ்மான் சாலையைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் தனது குடும்பத்தினருடன் கடந்த 2015 -ம் ஆண்டு அன்று இங்கு சுற்றுலா வந்த போது காவிரியில் பரிசலில் சென்று செல்பி எடுக்க முயன்ற போது பரிசல் கவிழ்ந்ததில் 5 பேர் உயிரிழந்தனர்.

    இதுபோன்று இங்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் அவரது குடும்பத்தார் காவிரியின் அழகை கண்டு ரசிக்கும் ஆர்வத்தில் ஆற்றுப்பகுதிகளிலும் பிரதான அருவி ஐந்தருவி உள்ளிட்ட பகுதிகளிலும் பாறைகளின் மீது நின்று செல்பி எடுக்கும் போது கால் தவறி ஆற்றில் விழுந்து நீரில் மூழ்கி மரணம் அடையும் சோக சம்பவம் அடிக்கடி நிகழ்வது சர்வ சாதாரணமாக உள்ளது.

    ஆகவே தருமபுரி மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் தீயணைப்பு துறை மற்றும் ஊர் காவல் படையினர் ஒகேனக்கல் பகுதியில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து ஒகேனக்கல் காவிரியில் தடை செய்யப்பட்ட பகுதிகளிலும், பிரதான நீர்வீழ்ச்சி செல்லும் நடைபா தையிலும் பாதுகாப்பை பலப்படுத்தி சுற்றுலாப் பயணிகளின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

    • சுற்றுலா பயணிகள் இதனை பார்வையிட்டு வந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2019-ம் ஆண்டு பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
    • வார நாட்களில் மாலை 3 மணி முதல் 5.30 மணி வரையிலும், சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் 5.30 மணி வரை

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரியில் மத்திய அரசின் கலங்கரை விளக்கங்கள் மற்றும் விளக்கு கலன்கள் இயக்குநகரத்தின் கீழ் 1971-ம்ஆண்டு கலங்கரை விளக்கம் திறக்கப்பட்டது.

    சுற்றுலா பயணிகள் இதனை பார்வையிட்டு வந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2019-ம் ஆண்டு பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

    தற்போது கொரோனா கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட நிலையில் சுற்றுலா பயணிகள் கலங்கரை விளக்கத்தை பார்வையிட நாளை (13-ந் தேதி) முதல் அனுமதிக்கப்படுகிறார்கள்.

    வார நாட்களில் மாலை 3 மணி முதல் 5.30 மணி வரையிலும், சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் 5.30 மணி வரையிலும் சுற்றுலா பயணிகள் கலங்கரை விளக்கத்தை பார்வையிட அனுமதிக்கப்படுகிறார்கள்

    கலங்கரை விளக்கத்தை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து செல்லும் வகையில் முழுவதும் கண்ணாடியால் ஆன லிப்ட் தற்போது அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் கலங்கரை விளக்க த்தின் மேல் நின்று பார்வை யாளர்கள் சுற்றி பார்க்கும் வகையில் புதிதாக கேலரியும் அமைக்கப்பட்டு உள்ளது.

    இதில் இருந்து இந்திய பெருங்கடல், அரபிக்கடல், வங்க கடல் ஆகிய 3 கடல்களும் சங்கமிக்கும் முக்கடல் சங்கமத்தையும், கன்னியாகுமரியின் முழு அழகையும், விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலை ஆகியவற்றையும் பார்த்து ரசிக்கலாம்.

    கலங்கரை விளக்கத்தை பார்வையிட பெரியவர் களுக்கு ரூ.10-ம், சிறியவர்களுக்கு ரூ.5-ம், கேமராவுக்கு ரூ.20-ம் வசூலிக்கப்படுகிறது. மேற்கண்ட தகவலை கன்னியாகுமரி கலங்கரை விளக்க அதிகாரி கே.பிரகாஷ் தெரிவித்து உள்ளார்.

    • மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சுற்றுலா இடங்களை சுற்றி பார்க்க ஆரோக்கியம் சென்றார்
    • நிறுத்தப்பட்டிருந்த அவரது மோட்டார் சைக்கிள் மாயமாகி இருந்தது.

    கன்னியாகுமரி :

    கேரள மாநிலம் திருவ னந்தபுரம் விழிஞ்சம் பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியம் (வயது45). இவர் தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தார்.

    கன்னியாகுமரி காந்தி மண்டபம் அருகே உள்ள முக்கோண பூங்கா முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சுற்றுலா இடங்களை சுற்றி பார்க்க ஆரோக்கியம் சென்றார். சிறிது நேரம் கழித்து அவர் திரும்பி வந்தார்.

    அப்போது குறிப்பிட்ட இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த அவரது மோட்டார் சைக்கிள் மாயமாகி இருந்தது. அதனை பல இடங்களில் தேடியும் காணவில்லை. அதனை யாரோ மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

    இதனால் திடுக்கிட்ட ஆரோக்கியம் இது குறித்து கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமராவதி அணை கட்டப்பட்டு உள்ளது.
    • அமராவதி ஆறு மற்றும் பிரதான கால்வாயை ஆதாரமாகக் கொண்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது

    உடுமலை :

    உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமராவதி அணை கட்டப்பட்டு உள்ளது.இந்த அணையின் மூலமாக பாசனத்திற்கு தண்ணீர் விநியோகம் செய்யப்படுவதுடன் அமராவதிஆறு மற்றும் பிரதான கால்வாயை ஆதாரமாகக் கொண்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அணைப்பகுதியில் உள்ள இயற்கை சூழலை ரசிக்கவும் புகைப்படம் எடுத்து மகிழவும் முதலைப் பண்ணையை பார்வையிடவும் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் அமராவதிக்கு வந்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகளை மேலும் மகிழ்விக்கும் விதமாக மகளிர் சுய உதவி குழுவினர் சார்பில் அணைப்பகுதியில் படகு சவாரியும் நடைபெற்று வருகிறது. இதற்காக பத்து நிமிட பயணத்திற்கு நபர் ஒன்றுக்கு 50 ரூபாய் வசூலிக்கப்பட்டு வருகிறது.

    அணையிலும் போதுமான அளவு நீர்இருப்பு உள்ளதால் படகு சவாரி மனதிற்கு புத்துணர்வை அளிப்பதுடன் இனிமையான நிகழ்வாக உள்ளது.கடல் போன்று காட்சி அளிக்கும் அணையில் படகில் திகிலுடன் சென்று திரும்பும் சில வினாடிகள் மனதில் நீங்கா இடம் பெற்றிருக்கும். அந்த அனுபவத்தை மீண்டும் மீண்டும் பெறுவதற்காக அணைப்பகுதிக்கு வருகின்ற சுற்றுலா பயணிகள் படகில் ஏறி சவாரி செய்து வருகின்றனர். குறிப்பாக வார,கோடை,பொது விடுமுறை நாட்களில் படகு சவாரி பரபரப்பாக நடைபெற்று வருகிறது.அந்த வகையில் அமராவதி அணைக்கு வருகை தந்த வெளிமாவட்ட சுற்றுலா பயணிகள் அணைப்பகுதி, பூங்கா, முதலைப் பண்ணை உள்ளிட்டவற்றை பார்வையிட்டனர்.பின்பு படகு சவாரிக்கு சென்றனர். இதையடுத்து படகில் ஏறி குடும்பத்துடன் சென்று உற்சாகமாக சவாரி செய்து மகிழ்ந்தனர். அதற்கு முன்பாக சுற்றுலாப் பயணிகளுக்கு படகோட்டியின் சார்பில் விழிப்புணர்வும் உயிர் கவசமும் வழங்கப்பட்டது. மேலும் திருமூர்த்தி அணையில் நீண்ட நாட்களாக இயக்கப்படாமல் உள்ள படகு சவாரியை துவக்க வேண்டும் என்றும் சுற்றுலா பயணிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

    • நீண்ட நேரம் தங்க நகையை கோவில் வளாகம் முழுவதும் தேடினார்
    • கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நடந்தது

    கன்னியாகுமரி :

    திருச்சி மாவட்டம் செங்கதிர் சோலை பகுதியை சேர்ந்தவர் அமுதா.இவர் 35 பேர் அடங்கிய குழுவி னருடன் நேற்று முன்தினம் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்துள்ளார்.

    இவர்கள் காலையில் சூரிய உதய காட்சியை பார்த்துவிட்டு பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர். அப்போது கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததால் அமுதாவின் பர்ஸ் மற்றும் அதில் இருந்த 10 பவுன் தங்க நகையும் தொலைந்தது.பின்னர் நீண்ட நேரம் தங்க நகையை கோவில் வளாகம் முழுவதும் தேடினார்.

    இதனையடுத்து அவர் கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த நிலையில் அவர் தவறவிட்ட பர்ஸ் மற்றும் அதில்இருந்த தங்க நகையையும் பகவதி அம்மன் கோவில் வளாகத்தில் பிரசாத ஸ்டால் நடத்திவரும் ராமச்சந்திரன் என்பவர் மீட்டு கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

    இதைத்தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி முன்னிலையில் ராமச்சந்தி ரன் சுற்றுலா பயணி அமுதா விடம் 10 பவுன் தங்க நகையை ஒப்படைத்தார்.

    நகையை மீட்டு பெண் சுற்றுலா பயணியிடம் ஒப்படைத்த ராமச்சந்திரனுக்கு போலீசார் மற்றும் பொதுமக்கள் பாராட்டுகள் தெரிவித்தனர்.

    • 131 பயணிகள் சாதாரண இருக்கைகளுடன் பயணம் செய்வதற்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது
    • பாதுகாப்பு கவசத்துடன் பயணம் மேற்கொள்ள உரிய நடவடிக்கை என கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்தார்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தில் சுமார் ரூ.8.24 கோடி மதிப்பில் திருவள்ளுவர், தாமிரபரணி என்ற பெயர் கொண்ட சுற்றுலா சொகுசு படகு வடிவமைக்கப்பட்டு சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

    தாமிரபரணி நவீன சொகுசு படகில் குளிர்சாதன வசதியுடன் 75 சுற்றுலா பயணிகள் அமரும் வகையில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் திருவள்ளுவர் நவீன சொகுசு படகில் குளிர்சாதன வசதியுடன் 19 சுற்றுலா பயணிகள் அமரும் வகையிலும், 131 பயணிகள் சாதாரண இருக்கைகளுடன் பயணம் செய்வதற்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. குளிர்சாதன இருக்கையில் பயணம் மேற்கொள்ளும் ஒரு நபருக்கு ரூ.450-ம், சாதாரண இருக்கையில் அமர்ந்து பயணம் மேற்கொள்ளும் ஒரு நபருக்கு ரூ.350-ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இந்த 2 படகுகளும் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக தளத்தில் இருந்து புறப்பட்டு, சின்ன முட்டம் வழியாக வட்டக்கோட்டை கடல் பகுதியை சென்றடைந்து மீண்டும் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக தளத்திற்கு வந்து சேரும்.

    இந்நிலையில் திருவள்ளுவர், தாமிரபரணி நவீன சொகுசு படகில் பயணம் மேற்கொள்ளும் சுற்றுலா பயணிகள் தகுந்த பாதுகாப்பு கவசங்களுடன் பயணம் மேற்கொள்ள பூம்புகார் மேலாளர் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தியதற்கிணங்க, சொகுசு படகில் பயணம் மேற்கொள்ளும் சுற்றுலா பயணிகளுக்கு தகுந்த பாதுகாப்பு கவசங்கள் வழங்கப்பட்டு, பாதுகாப்பு கவசத்துடன் பயணம் மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்தார்.

    • எதிர்பாராத விதமாக கம்பி அறுந்து சிறுவன் 40 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார்.
    • அவனுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மெக்சிகோவில் உள்ள மாண்டேரி பகுதியில் சுற்றுலா பொழுதுபோக்கு பூங்கா ஒன்று உள்ளது. இங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் அங்குள்ள ஜிப்லைனில் சாகச பயணம் செய்து மகிழ்வார்கள். இந்நிலையில் கடந்த 25-ந்தேதி அங்கு சுற்றுலா சென்றவர்களில் 6 வயது சிறுவன் ஒருவன் ஜிப்லைனில் சாகச பயணத்தை மேற்கொண்டுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கம்பி அறுந்து சிறுவன் 40 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார்.

    அதிர்ஷ்டவசமாக பூங்காவில் இருந்த செயற்கை குளத்தில் விழுந்துள்ளான். உடனே அங்கிருந்த சுற்றுலா பயணி ஒருவர் நீச்சல் குளத்துக்குள் குதித்து சிறுவனை காப்பாற்றி உள்ளார். இதில் சிறுவன் லேசான காயங்களுடன் உயிர் தப்பி உள்ளான். எனினும் அவனுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே அந்த சிறுவன் 40 அடி உயரத்தில் இருந்து விழுந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவை பார்த்த பயனர்கள் பூங்கா ஊழியர்களை விமர்சனம் செய்து கருத்துக்களை பதிவிட்டனர். இதைத்தொடர்ந்து பூங்காவில் சாகச சவாரி நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் குறைந்து காணப்பட்டது
    • பிளாஸ்டிக் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்

    கோபி,

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கொடிவேரி தடுப்ப ணை உள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கொடிவேரி தடுப்பணையில் கொட்டி ஆர்ப்பரித்து செல்கிறது. இந்த கொட்டும் தண்ணீ ரில் குளிப்பதற்கும், ரசிப்ப தற்கும் தினமும் ஏராளமான சற்றுலா பயணி கள் வந்து செல்கிறார்கள். மேலும் விழா மற்றும் விடுமுறை நாட்களில் ஆயிரக்கண க்கான பொதுமக்கள் குடு ம்பத்துடன் வந்து தடுப்ப ணையில் குளித்து மகிழ்ந்து செல்கிறார்கள். இதே போல் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பள்ளி விடுமுறை விடப்பட்டதால் சனி, ஞாயிறு மட்டுமின்றி அனைத்து நாட்களிலும் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் குடும்பத்து டன் வந்து சென்றனர்.

    இந்த நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டதால் கொடி வேரி தடுப்பணைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் கூடுவதும், குறைவ துமாக இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக கொடிவேரிக்கு சுற்றுலா பயணிகள் குறைந்த அளவே வந்திருந்தனர். நேற்று முன்தினம் சனக்கிழ மை பொதுமக்களின் கூட்டம் குறைந்த அளவே இருந்தனர். இதே போல் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கொடிவேரிக்கு பொதுமக்கள் அதிகளவில் வருவார்கள் என எதிர்ப் பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று சுற்றுலா பயணிகளின் கூட்டம் குறைந்து காண ப்பட்டது.

    இதற்கிடையே கொடி வேரிக்கு வரும் பொதுமக்கள் கடும் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர். போலீசார் கொடிவேரி அணைக்கு செல்லும் பகுதியில் பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் பொதுமக்கள் பிளாஸ்க் பொருட்கள் எடுத்து செல் கிறார்களா? என்றும் மது மற்றும் தடை செய்ய்ப்பட்ட பொருட்கள் எடுத்து செல்கிறார்களா? என சோதனைக்கு பிறகே அனுமதித்தனர். மேலும் போலீசார் சுற்றுலா பயணி கள் கொண்டு சென்ற பிளா ஸ்டிக் மற்றும் தடை செய்ய ப்பட்ட பொருட்களை பறி முதல் செய்த பிறகே அனு ப்பி வைத்தனர்.

    ×