என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கார் மோதி விபத்து"

    • சதீஷ் (42). கட்டிட மேஸ்திரி ராசிபுரம் கடைவீதியில் சாலையோரத்தில் மோட்டார் சைக்கிளில் அமர்ந்தவாறு நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
    • வேகமாக ஓட்டி வந்த கார் அவர் மீது மோதி தூக்கி வீசப்பட்டார்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பிற்படுத்தப்பட்டோர் காலனி பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (42). கட்டிட மேஸ்திரி. இவர் சம்பவத்தன்று ராசிபுரம் கடைவீதியில் சாலையோரத்தில் மோட்டார் சைக்கிளில் அமர்ந்தவாறு நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது முத்துகாளிப்பட்டியை சேர்ந்த ஒருவர் வேகமாக ஓட்டி வந்த கார் அவர் மீது மோதி தூக்கி வீசப்பட்டார். இதில் சதீஷ் படுகாயம் அடைந்தார். மோட்டார் சைக்கிளும் சேதம் அடைந்தது. இந்த காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவானது. இந்த நிலையில் தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்து குறித்து ராசிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காயம் அடைந்த சதீஷ் நாமக்கல் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    • 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
    • தாக்குதல் தீவிரவாதத்துடன் தொடர்புடையது என்று தெரியவந்தது.

    அமெரிக்காவின் லூசியானா மாகாணம் நியூ ஆர்லியன்ஸ் நகரில் நேற்று நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஏராளமானோர் திரண்டிருந்தனர். அப்போது கார் ஒன்று வேகமாக கூட்டத்துக்குள் புகுந்ததில் 15 பேர் பலியானார்கள். 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

    உடனே போலீசார் அந்த காரை மடக்கி பிடித்தனர். அப்போது காரை ஓட்டிய நபருக்கும், போலீசாருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் அந்த நபர் சுட்டு கொல்லப்பட்டார்.

    இந்த நிலையில் இது வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதல் என்பதும் தீவிரவாதத்துடன் தொடர்புடையது என்பதும் தெரியவந்தது.

    கார் தாக்குதலை நடத்தியவர் டெக்சாஸை சேர்ந்த 42 வயதான ஷாம்ஷத் டின் ஜப்பார் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. முன்னாள் அமெரிக்க கடற்படை வீரரான அவர் ஒருமுறை ஆப்கானிஸ்தானில் பணியாற்றி உள்ளார்.

    அவர் தாக்குதலுக்கு பயன்படுத்திய காரில் வெடிகுண்டு, துப்பாக்கி, ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் கொடி ஆகியவை இருந்தது. அவர் பலரை கொலை செய்யும் நோக்கத்துடன் இத்தாக்குதலை நடத்தி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து எப்.பி.ஐ அதிகாரிகள் கூறும்போது, ஷாம்ஷத் டின் ஜப்பார் ஒரு பயங்கரவாதி. அவரது வாகனத்தில் ஐ.எஸ் கொடி இருந்தது. பயங்கரவாத அமைப்புகளுடன் அவரது தொடர்புகள் பற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது. இவர் ராணுவத்தில் ஐ.டி நிபுணராக பணியாற்றினார். அவர் ராணுவத்தில் 10 ஆண்டுகள் பணியாற்றினார்.

    தற்போது ஹூஸ்டனில் ஒரு ரியல் எஸ்டேட் முகவராக வேலை பார்த்து வந்தார். இந்த தாக்குதலில் ஜப்பாருக்கு மட்டும் தொடர்பு இருப்பதாக நம்பவில்லை. மேலும் பலருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கிறோம்.

    அவர் தனியாக செயல் பட்டதாக தெரியவில்லை. இந்த சம்பவத்தை பயங்கர வாத செயலாக கருதி விசாரித்து வருகிறோம் என்றார்.

    இதற்கிடையே ஜப்பார், ஜ,எஸ் அமைப்பில் சேர முடிவு செய்து இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில் தெரிவித்து உள்ளார். அந்த வீடியோக்களில் ஜப்பார் தனது விவாகரத்து குறித்து தெரிவித்துள்ளார்.

    அப்போது தனது குடும்பத்தை கொல்ல திட்டமிட்டதாகவும் பின்னர் அந்த முடிவை மாற்றிக்கொண்டு ஜ.எஸ் அமைப்பில் இணைய முடிவு செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

    மேலும் தாக்குதலுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு சமூக ஊடகங்களில் வீடியோக்களை வெளியிட்டிருந்தார்.

    • 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
    • 10 மணி நேரத்திற்கு மேல் மின் தடை

    ராணிப்பேட்டை:

    ஆந்திர மாநிலம், சித்தூர் பகுதியை சேர்ந்தவர் திருக்குமரன் (50). இவர் குடும்பத்தினருடன் காரில் சென்னை வந்துவிட்டு சொந்த ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தார்.

    காரை அவரே ஓட்டிச்சென்றார். ராணிப்பேட்டை எம்.பி.டி சாலையில் நவல்பூர் அருகே சென்றபோது திடீரென நிலை தடுமாறிய கார் சாலையோரத்தில் இருந்த மின் கம்பத்தில் மோதியது.

    இதில் மின் கம்பம் சேதம் அடைந்து, காரின் மீது உடைந்து விழுந்தது. நல்லவேளையாக காரை ஓட்டி சென்ற திருக்கும ரன், மற்றும் அதில் பயணம் செய்த அவரது மனைவி, மகன், மகள் ஆகியோர் தப்பினர்.

    மின் கம்பம் உடைந்து விழுந்ததில், மின்சாரம் தடை ஏற் பட்டது. சுமார் 10 மணி நேரத்திற்கு மேல் மின் தடை நீடித்தது. மின் ஊழியர்கள் கடுமையாக முயற்சி எடுத்து மின் வினியோகம் வழங்கும் பணியில் ஈடுபட்டனர்.

    • ெபண் பலி
    • 3 குழந்தைகள் உள்ளனர்

    திருவண்ணாமலை:

    கலசப்பாக்கம் அடுத்த பில்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அசோக் இவருடைய மனைவி கண்ணம்மா (வயது 32) அதே பகுதியைச் சேர்ந்த செல்வரசு என்பருடன் பைக்கில் பில்லூரில் இருந்து திருவண்ணாமலை அருகே உள்ள தனது தாய் வீடான மல்லவாடி கிராமத்திற்கு திருவண்ணாமலை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

    நாயுடு மங்கலம் கூட்ரோடு அருகே பின்புறமாக வந்த கார் ஒன்று அதிவேகமாக மோதியதில் நிலைத்தலைமாறி கீழே விழுந்தனர்.

    இதில் கண்ணம்மாவிற்கு தலையில் படுகாயம் ஏற்பட்டு கலசப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கண்ணம்மா பரிதாபமாக இறந்தார்.

    அவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இது சம்பந்தமாக கலசப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • டிரைவருக்கு பொதுமக்கள் தர்ம அடி
    • விரட்டி பிடித்தனர்

    திருப்பத்தூர்:

    ஜோலார்பேட்டையில் இருந்து நேற்று இரவு 8 மணி அளவில் ஜோலார்பேட்டை யில் இருந்து திருப்பத்தூர் நோக்கி அதி வேகமாக வந்த கார் நுகர்பொருள் வாணிபக்கழகம் அருகே ஒரு கார் மீது மோதியது.

    பின்னர் அங் கிருந்து நிற்காமல் வேகமாக சென்ற கார் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே முதிய வர் மீது மோதியது . இதில் முதியவர் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார் . அப்போதும் கார் நிற்காமல் சென்றது . உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள் துரத்தி சென்று திருப்பத்தூர் பஸ் நிலையம் அருகே காரை மடக்கி பிடித்த னர் .

    அப்போது கார் டிரைவர்குடி போதையில் இருந்ததாக கூறப்படுகிறது . அவரை அடித்து வெளியே இழுத்த னர் . அதற்குள் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் பொதுமக்கள் காரை ஓரமாக எடுத்துச் சென்று நிறுத்தி பார்த்தபோது காரின் பின் சீட்டில் குடிபோதையில் ஒரு வர் மயங்கி கிடந்தார். அவ ரையும் வெளியே இழுத்துப் போட்டு அடித்தனர். அதற்குள் காரை ஓட்டி வந்த டிரைவர் அங்கிருந்து மோட்டார் சைக்கிள் தப்பி ஓடிவிட்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த தும்டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து காரை பறிமுதல் செய்து, குடி போதையில் இருந்தவரை திருப்பத்தூர் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பி ஓடிய டிரைவர் மீது வழக்குப் பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள் . இந்த சம்பவம் திருப்பத்தூரில் பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தி உள்ளது .

    • திண்டுக்கல் - திருச்சி 4 வழிச்சாலையில் திடீரென நிலை தடுமாறிய கார் தாறுமாறாக ஓடியது
    • இதில் சென்டர் மீடியனில் கார் மோதி விபத்துக்குள்ளானது

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே செங்குளத்துப்பட்டியைச் சேர்ந்தவர் செந்தில்முருகன் (வயது 34). இவரது மனைவி கற்பகம் (32). தந்தை அழகர்சாமி (57), மகள் மதுமிதா (11), மகன் யோகதர்ஷன் (9), உறவினர்கள் ஆசை பிரியா, பால்பாண்டி, யோகிசாய் (2), உள்பட 9 பேர் காரில் திருச்சி சமயபுரத்துக்கு சென்றனர்.

    சாமி தரிசனம் முடித்து விட்டு மீண்டும் காரில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். திண்டுக்கல் - திருச்சி 4 வழிச்சாலையில் மாணிக்கம் பிள்ளை சத்திரம் பகுதியில் வந்தபோது திடீரென நிலை தடுமாறிய கார் தாறுமாறாக ஓடியது. சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் சிறுவன் யோகி சாய் படுகாயமடைந்தான். மற்றவர்களும் காயமடைந்ததால் அவர்களை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×