என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "செலவு"
- முகேஷ் அம்பானியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.7.65 லட்சம் கோடியாகும்
- சராசரி இந்திய குடும்பம் ஒன்று தங்களது சொத்துமதிப்பில் 10 முதல் 15 சதவீதம் வரை திருமணத்துக்கு செலவு செய்கிறது
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இன்று நடைபெறும் ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்தில் முன்னணி இந்திய மற்றும் சர்வதேச பிரபலங்கள், அரசியல்வாதிகள் மற்றும் பெருநிறுவனப் பெருமுதலாளிகள் பங்கேற்கின்றனர். பாடகி கிம் கர்தாஷியன், குத்துச்சண்டை வீரர் மைக் டைசன், முன்னாள் இங்கிலாந்து பிரதமர்களும் இதில் அடங்குவர்.
கடந்த நான்கு மாதங்களாக நடந்து வந்த நட்சத்திரங்கள் நிறைந்த திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களுக்குப் பிறகு, 29 வயதான ஆனந்த் அம்பானி, மருந்து அதிபர்களான வீரேன் மற்றும் ஷைலா மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சண்டை மணக்கவுள்ளார்.
ஆரம்பம் முதலே ஆடம்பரமாக நடைபெறும் அம்பானி வீட்டுத் திருமணம் குறித்து இந்தியாவின் அதிகம் உள்ள நடுத்தர மற்றும் ஏழை வர்க்க மக்களிடையே பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது. பணம் இருப்பதனால் அம்பானி கண்மண் தெரியாமல் காசை வாரி இரைத்து வருவதாக மக்கள் அங்கலாய்த்தனர்.
அதன்படி தற்போது வெளியாகியுள்ள ஆனந்த் அம்பானியின் மொத்த கல்யாண செலவு எவ்வளவு என்ற தகவல் மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதாவது, ஏறக்குறைய ரூ.4000 முதல் ரூ.5000 கோடி வரை அம்பானி தனது மகனின் திருமணத்துக்காக செலவிட்டுள்ளார்.
முகேஷ் அம்பானியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.7.65 லட்சம் கோடியாகும். அதில் மகனின் திருமணத்துக்காக அம்பானி செலவு செய்துள்ள தொகை அவரின் மொத்த சொத்துமதிப்பில் வெறும் 0.5 சதவீதம் மட்டுமே ஆகும். ஆனால் இந்தியாவில் சராசரி குடும்பம் திருமணத்துக்கு செலவு செய்வதை விட அம்பானி குறைவாகவே செலவு செய்துள்ளார். சராசரி இந்திய குடும்பம் ஒன்று தங்களது சொத்துமதிப்பில் 10 முதல் 15 சதவீதம் வரை திருமணத்துக்கு செலவு செய்வது குறிப்பிடத்தக்கது.
- அகமதாபாத்தில் உள்ள ஐ.ஐ.எம். சார்பில் நாடு முழுவதும் 25 மாநிலங்களில் ஆய்வு நடத்தப்பட்டது.
- தகவல்களின்படி ஆண்கள் சராசரியாக ரூ.2,484 ஆன்லைனில் ஷாப்பிங் செய்துள்ளனர்.
புதுடெல்லி:
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் அத்தியாவசிய பொருட்கள் முதல் ஆடம்பர பொருட்கள் வரை அனைத்துமே ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றை வாங்குபவர்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் ஆன்லைன் ஷாப்பிங்கில் பெண்களை விட ஆண்களே அதிகம் செலவு செய்வதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக அகமதாபாத்தில் உள்ள ஐ.ஐ.எம். சார்பில் நாடு முழுவதும் 25 மாநிலங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களிடம் கேள்வி கேட்கப்பட்டது.
இதில் கிடைத்த தகவல்களின்படி ஆண்கள் சராசரியாக ரூ.2,484 ஆன்லைனில் ஷாப்பிங் செய்துள்ளனர். ஆனால் பெண்களோ ரூ.1830 மட்டும் செலவு செய்கிறார்களாம். இதன்மூலம் பெண்களை விட ஆண்கள் 36 சதவீதம் அதிகம் ஷாப்பிங் செய்வதாக 'டிஜிட்டல் சேனல்கள் மற்றும் நுகர்வோர் தி இந்தியன் பெர்ஸ்பெக்டிவ்' அறிக்கை தெரிவித்துள்ளது.
அறிக்கையின்படி 47 சதவீத ஆண்களும், 58 சதவீத பெண்களும் பேஷன் ஆடைகளை வாங்கி உள்ளனர். அதே நேரத்தில் 23 சதவீத ஆண்கள் மற்றும் 16 சதவீத பெண்கள் ஆன்லைன் மூலம் மின்னணு சாதனங்களை ஷாப்பிங் செய்துள்ளனர். ஜெய்ப்பூர், லக்னோ, நாக்ப்பூர், கொச்சி போன்ற நகரங்களில் இருப்பவர்கள் ஆன்லைனில் பேஷன் ஆடைகளுக்கு 63 சதவீதம் அதிகமாகவும், மின்னணு சாதனங்களுக்கு 21 சதவீதம் அதிகமாகவும் செலவழிப்பது தெரிய வந்துள்ளது.
- முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்
- மத்திய நிதி குழு மானியத்தில் அமைக்கப்படுகிறது
கன்னியாகுமரி:
ராஜாக்கமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட அம்மச்சியார் கோவில் வில்லிவிளை சாலை மிகவும் பழுதடைந்து காணப்பட்டது. அதனை ரூ.10 லட்சம் செலவில் தார் சாலையாக அமைக்கும் பணியினை முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதா கிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
மத்திய நிதி குழு மானியத்தில் அமைக் கப்படும் சாலை செப்பனிடும் நிகழ்ச்சிக்கு ராஜாக்கமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெகதீஸ்வரி சுகுமார் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் செல்லத்துரை அம்மச்சியார் கோவில் ஊர் தலைவர் சிவதாணுலிங்கம், வில்லிவிளை ஊர் தலைவர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சுகுமார், ஒன்றிய செயற்பொறியாளர் சுசிலா ஜெயக்குமார், ஒன்றிய பணி மேற்பார்வையாளர் சிவமணிகண்டன், ராமச் சந்திரன், காமராஜ் சுபின் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- கண்ணாடி கூண்டு பாலம் 97 மீட்டர் நீளமும் 4 மீட்டர் அகலமும் கொண்டதாக அமைக்கப்படுகிறது.
- பாலத்தின் மீது நடந்து செல்லும் போது நடந்து செல்லும் பாதையின் கீழே கடல் அலையை ரசிக்கும் வண்ணமாக அமைக்கப்பட உள்ளது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி வரும் சுற்றுலாப் பயணிகள் கடல் நடுவில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்ட பம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் பார்வை யிடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்தநிலையில் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை இடையேகண்ணாடி கூண்டுபாலம் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
அதன்படி ரூ.37 கோடி செலவில் கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கும் பணியினை சென்னையைச் சேர்ந்த பிரபல கட்டுமான நிறுவனம் டெண்டர் எடுத்துஉள்ளது. இந்த கண்ணாடி கூண்டு பாலம் 97 மீட்டர் நீளமும் 4 மீட்டர் அகலமும் கொண்டதாக அமைக்கப்படுகிறது. இந்தப் பாலத்தின் மீது சுற்றுலா பயணிகள் நடந்து செல்லும் போது தாங்கள் நடந்து செல்லும் பாதையின் கீழே கடல் அலையை ரசிக்கும் வண்ணமாக வெளிநாடுகளில் அமைக்கப்பட்டுஉள்ளது போல இந்த கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கப் பட உள்ளது.இதற்கான முதற்கட்ட ஆய்வு பணி இன்றுகாலை தொடங்கியது.விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை ஆகிய இரண்டு பாறைகளின் மாதிரிகளை சேகரித்து சென்னை ஐ.ஐ.டி. க்கு அனுப்பி பாறைகளின் சிறத்தன்மையை ஆய்வு செய்யும் பணி தொடங்கியது. இந்த ஆய்வுகளின் முடிவுகள் வந்த பிறகு விரைவில் பாலத்துக்கான கட்டுமான பணிகள் தொடங்கும் என்றும் ஒரு வருடத்துக்குள் பாலப் பணிகள் நிறைவடையும் என்றும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
- ஏக்கருக்கு ரூ.50,000 வரை செலவு செய்துள்ளோம்.
- பூக்களுக்கு உரிய விலை கிடைக்காததால் தங்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டத்தில் நெல், கரும்பு, வாழை, உளுந்து, கடலை உள்ளிட்ட பயிர்களுக்கு அடுத்தபடியாக பல்வேறு பகுதிகளில் செண்டி, ரோஜா பூ ஆகியவை பயிரிடப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்நிலையில் செம்மண் பகுதியான தஞ்சாவூர் அடுத்த திருக்கானூர்பட்டியில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் சென்டி பூ சாகுபடி செய்யப்பட்டு, தற்போது அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இது குறித்து விவசாயி கள் கூறுகையில், 45 நாட்களில் செடி வைத்து பூ பூத்து விடும். பனி காலம் தொடங்குவதற்கு முன்பே பூ அறுவடைப்பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது சபரிமலை சீசன் தொடங்கியும் விற்பனை என்பது மந்தமாகவே உள்ளது.
ஏக்கருக்கு ரூ.50,000 வரை செலவு செய்துள்ளோம். ஒரு கிலோ பூவின் விலை ரூ.60-க்கு விற்பனை செய்தால் மட்டுமே லாபம் பார்க்க முடியும்.
ஆனால் பூவின் விலை ரூ.20 முதல் ரூ.30 வரை மட்டுமே வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர்.
பூக்களுக்கு உரிய விலை கிடைக்காததால் தங்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே தமிழக அரசு பூ சாகுபடியை மேம்படுத்த வங்கி கடன், மானிய விலையில் உரம், விதை ஆகியவை வழங்க வேண்டும்.
சொட்டு நீர் குழாய் உள்ளிட்ட கருவிகளை மானிய விலையில் வாங்கினால் தங்களுக்கு மேலும் அதிக மகசூல் கிடைக்கும். இதனால் கூடுதல் லாபம் பெற முடியும் என்றனர்.
- பிரின்ஸ் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
- பெற்றோர்கள் உள்பட கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி:
குளச்சல் அரசு நடுநிலைப்பள்ளியில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் புதிய 3 வகுப்பறைகள் கொண்ட கட்டிடத்தை பிரின்ஸ் எம்.எல்.ஏ திறந்து வைத்தார். குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டில் ரூபாய் 25 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக மூன்று வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது.
இதையடுத்து புதிய வகுப்பறைகள் கட்டிடம் திறப்பு விழா பள்ளி தலைமை ஆசிரியை பிஷி ஜாஸ்மின் தலைமையில் நடைபெற்றது. புதிய வகுப்பறைகளை பிரின்ஸ் எம். எல். ஏ., நகர்மன்ற தலைவர் நசீர், வட்டார கல்வி அலுவலர் ஹரிகுமார் ஆகியோர் திறந்து வைத்தனர். குமரி கிழக்கு மாவட்ட காங். தலைவர் கே. டி. உதயம், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சாமுவேல்சேகர், லாரன்ஸ், செயற்குழு உறுப்பினர் யூசுப்கான், மாவட்ட துணைத்தலைவர் முனாப், செயலாளர் ஜெயராஜ், நகர தலைவர் சந்திரசேகர், நகர்மன்ற முன்னாள் துணைத்தலைவர் லதா ராபின்சன், கவுன்சிலர்கள் ரமேஷ் செல்வகுமாரி, சுரேஷ் குமார், முன்னாள் மாணவர்கள் சங்க தலைவர் மோகன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராதாகிருஷ்ணன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் பசீலா, துணைத்தலைவர் சமீனுதீன், பெற்றோர்கள் உள்பட கலந்து கொண்டனர்.
- பசிப்பிணி இல்லா உலகினை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
- பசியால் வாடுபவர்களுக்கு உணவளிக்க முன்வரவேண்டும்.
தஞ்சாவூர்:
தமிழ்ப் பல்கலைக்கழக தமிழ்ப் பண்பாட்டு மையம், அனைத்தித்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் சென்னை மற்றும் அருட்பெருஞ்ஜோதி அறக்கட்டளை தஞ்சாவூர் இணைந்து அருட்பிரகாச வள்ளலாரின் 200-வது பிறந்த நாள் பெருமங்கல விழாவில் வள்ளலார் காட்டும் வாழ்வியல் நெறி என்ற தலைப்பில் தேசியக் கருத்தரங்கம் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
இவ்விழாவில் பல்கலக்கழக துணைவேந்தர் திருவள்ளுவன், பசிப்பிணி இல்லா உலகினை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.
இவ்விழாவில்தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் பஞ்சநதம் பேசுகையில், மக்கள் அனைவரும் பசியில்லாமல் வாழவேண்டுமென்றால் பெண்கள் தங்களுடைய அலங்கார செலவின ங்களுக்காக செலவிடும் தொகையை குறைத்தும் ஆண்கள் தீயப்பழக்க வழக்கத்திற்காக செலவிடும் தொகையைத் தவிர்த்தும் பசியால் வாடுபவர்களுக்கு உணவளிக்க முன்வ ரவேண்டும் என்றார்.
இவ்விழாவில் தமிழ்ப் பல்கலைக்கழக துணைவே ந்தருக்கு வள்ளலார் விருது வழங்கப்பட்டது.
இவ்விழாவில் தமிழ்ப் பண்பாட்டு மையம் இயக்குனர் திலகவதி வரவேற்புரை ஆற்றினார்.
கலைப்புல முதன்மையர் இளையாப்பிள்ளை, அருட்பெருஞ்ஜோதி அறக்கட்டளை பா. தம்பையா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
முதுகலை இரண்டாம் ஆண்டு மாணவர் வாசுதேவன் இவ்விழாவிற்கு இணைப்புரை வழங்கினார்.
இதில் டாக்டர் சிவராமன், அனைந்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்க தலைவர் பெரியண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- விஜய்வசந்த் எம்.பி. அடிக்கல் நாட்டினார்
- கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட அஞ்சு கூட்டு விலை அருந்ததியார் காலனியில் விஜய்வசந்த் எம்.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டநிதியில் இருந்து ரூ.11 லட்சத்து 80 ஆயிரம் செலவில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு கன்னியா குமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநாதன் முன்னிலை வகித்தார். விஜய் வசந்த் எம். பி. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிதாக கட்டப்பட உள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு, தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் தாமரைபாரதி, மற்றும் கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மழை நீரோடையின் மேல் அமைக்கப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்
- மழை நீர் தேங்கி சுகாதார கேட்டையும் ஏற்படுத்தி வந்தது.
கன்னியாகுமரி:
கருங்கல் சந்திப்பில் இருந்து புதுக்கடை செல்லும் சாலையில் ரோட்டோரம் அமைக்கப்பட்டு இருந்த மழை நீரோடைகள் ஆக்கிர மிக்கப்பட்டு இருந்ததோடு, சில பகுதிகள் சேதமடைந்தும் காணப்பட்டது.
இதனால் மழைக்காலங் களில் மார்த்தாண்டம் சாலையிலிருந்தும் சந்திப் பில் இருந்தும் மழைநீர் ரோடு வழியாக ஓடி ஆர்.சி. தெருவில் ஆறுபோல் பெருக்கெ டுத்து ஓடி வந்தது. மட்டுமல்லாமல் சேதமடைந்து இருந்த பகுதியில் மழை நீர் தேங்கி சுகாதார கேட்டையும் ஏற்ப டுத்தி வந்தது.
இதனால் அப்பகுதி மக்க ளும், வியாபாரிகளும் பெரும் பாதிப்புக்கு உள் ளாகி வந்தனர். எனவே கருங்கல் புதுக்கடை சாலை யில் உள்ள மழை நீரோடை களை சீரமைக்க வேண் டும் என பேரூராட்சி நிர்வா கத்திடம் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் இந்த மழை நீரோடையை சீர மைப்பதற்கு 15-வது நிதிக்குழு மானியத்தின் கீழ் தமிழக அரசு ரூ.18 லட்சம் ஒதுக்கீடு செய்தது. இந்நிதியில் கருங்கல் சந்திப் பில் இருந்து புதுக்கடை செல்லும் சாலையில் ரோட்டின் வலதுபுறம் கூனாலுமூடு வரை மழை நீரோடையின் மேல் அமைக் கப்பட்டிருந்த ஆக்கிரமிப்பு கள் அகற்றப்பட்டு, மழை நீரோடை சீரமைக்கும் பணி தொடங்கியது.இப்பணியை கருங்கல் பேரூராட்சி தலைவர் சிவராஜ் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பேரூ ராட்சி துணைத்தலைவர் மரிய செல்வம், பேரூராட்சி உறுப்பினர்கள் டெல்பின், ராஜசேகர், ஜெயக்குமார், முன்னாள் பேரூராட்சி உறுப்பினர் அருள்ராஜ் உட்பட பலர் கலந்து கொண் டனர்.
- பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- கொட்டாரம் முதல் நிலை பேரூராட்சி மன்ற கூட்டம் பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள அவை கூடத்தில் நடந்தது.
கன்னியாகுமரி:
கொட்டாரம் பேரூராட்சி பகுதியில் 15-வது நிதிக்குழு அடிப்படை மானிய திட்டத்தின் கீழ்ரூ.30 லட்சம் செலவில் குடிநீர் மற்றும் சாலை பணிகள் மேற்கொள்வது என்று பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கொட்டாரம் முதல் நிலை பேரூராட்சி மன்ற கூட்டம் பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள அவை கூடத்தில் நடந்தது. கூட்டத்துக்கு பேரூராட்சி தலைவி செல்வகனி தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் ராஜநம்பி கிருஷ்ணன் பேரூராட்சி துணைத் தலைவி விமலா ஆகியோர் முன்னிலைவகித்தனர்.
கூட்டத்தில் பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் பொன்முடி, கணேசன், கிறிஸ்டோபர் சந்திரமோகன், சரோஜா, செல்வன், நாகம்மாள், ரெத்தினம், வனிதா வசந்தகுமாரி இந்திரா அனிதா தங்க குமார் மற்றும் இளநிலை உதவியாளர் சசிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
கொட்டாரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 15- வது நிதிக்குழு அடிப்படை மானிய திட்டத்தின் கீழ் ரூபாய் 31 லட்சத்து15 ஆயிரம் செலவில் குடிநீர் மற்றும் சாலை வசதிகள் செய்வது, கொட்டாரம் சார் பதிவாளர் அலுவலகம் சாலை முதல் அருகில் உள்ள தனியார் பள்ளிக்கூடம் வரை ரூ.8 லட்சம் செலவில் வண்ணத் தரைத்தளம் அமைப்பது, கொட்டாரம் பேரூராட்சிக்குஉட்பட்ட லட்சுமிபுரம் கோட்டக்கரை சாலையில் தடுப்புச் சுவர் அமைத்து வண்ண தரைத்தளம் அமைப்பது, கொட்டாரம் பேரூராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.5 லட்சம் செலவில் குடிநீர் திட்டபராமரிப்பு பணிகளை மேற்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது.
- புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
- படுகாயமடைந்தவர் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் மேல் சிகிச்சைக்காக அனுமதி
கன்னியாகுமரி:
புதுக்கடை அருகே உள்ள தேங்காப்பட்டணத்தை அடுத்த பனங்காலமுக்கு பகுதியை சேர்ந்த அல்போ ன்ஸ் மகன் பிரபு (வயது 36). கடல் தொழில் செய்து வரு கிறார்.
இவரது மனைவி சுபலதா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 8 வருடங்களாக கருத்து வேறுபாடு காரண மாக கணவன்- மனைவி இடையே பிரச்சினை உள்ளது. இதனால் அடிக்கடி சண்டைகள் நடப்பது உண்டு.
சம்பவத்தன்று வீட்டுச் செலவுக்கு பணம் கொடுப்பது தொடர்பாக அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்ப்பட்டது. பிரபு குறைவாக பணம் கொடுத்ததால் ஆத்திரம் அடைந்த சுபலதா வெட்டுக்கதியால் வெட்டியுள்ளார்.
இதில் தலையில் படுகாயம் அடைந்த பிரபு, குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு முதலுதவி பெற்று, ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்தி ரியில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இது தொடர்பான புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- தமிழ்நாட்டில் நடைபெறும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் கட்டுமான பணிகளுக்கு தமிழக தொழிலாளர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.
- கொடியேற்றும் நிகழ்ச்சியும், தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகளும் நடைபெற்றது.
கபிஸ்தலம்:
தஞ்சை மாவட்டம், கபிஸ்தலத்தில் தஞ்சை மாவட்ட கட்டுமான தொழிலாளர்கள் சங்கம் சார்பில் 8-வது மாவட்ட மாநாடு நடைபெற்றது. முன்னதாக, கபிஸ்தலம் கடைவீதியில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் கைகளில் கொடிகளை ஏந்தி பேரணியாக சென்றனர். தொடர்ந்து கொடியேற்றும் நிகழ்ச்சியும், தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகளும் நடைபெற்றது. முன்னதாக கொடியினை அர்ஜூனன் ஏற்றி வைத்தார். தியாகிகளுக்கு கலியமூர்த்தி அஞ்சலி செய்தார். அனைவரையும் மாவட்ட துணை செயலாளர் சுகுமாரன் வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளர்கள் தில்லைவனம் வேலை அறிக்கை வாசித்தார். வரவு செலவு அறிக்கைகளை மாவட்ட பொருளாளர் சௌந்தரராஜன் வாசித்தார். பின்பு, ஏ.ஐ.டி.யு.சி யின் மாநில செயலாளர் சந்திரகுமார் தொடக்க உரை நிகழ்த்தினார்.
இதில் தமிழ்நாட்டில் நடைபெறும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் கட்டுமான பணிகளுக்கு தமிழக தொழிலாளர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். இந்தியாவின் ஜனநாயகத்தையும், மதசார்பின்மையும் பாதுகாக்க போராடுவோம் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் சட்ட ஆலோசகர் பாரதி, மாவட்ட தலைவர் சேவையா, மாவட்ட செயலாளர் அன்பழகன், மாவட்ட துணைச் செயலாளர் மதிவாணன், மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜன், மாவட்ட துணை செயலாளர் மணி மூர்த்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில குழு சாமு. தர்மராஜ் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் அமைப்பின் மாவட்ட ஒன்றிய கிளை நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்