என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஓட்டல்கள்"
- விமானங்களுக்கு தொடர்ந்து வெடி குண்டு மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன.
- மிரட்டல் விடுத்தது யார்? என்பது குறித்து விசாரணை.
கொல்கத்தா:
நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக விமானங்களுக்கு தொடர்ந்து வெடி குண்டு மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன. இதனால் விமானங்கள் தரையிறக்கப்பட்டு சோதனை நடைபெற்ற நிலையில் அவை வெறும் புரளி என்பது உறுதியானது.
சமூக வலைதளங்கள் மற்றும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர்களை கண்டு பிடிக்கும் நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா, குஜராத் மாநிலம் ராஜ்கோட், ஆந்திரா மாநிலம் திருப்பதியில் உள்ள 23 ஓட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொல்கத்தாவில் 10 பெரிய ஓட்டல்களுக்கு இ-மெயில் மூலம் வெடி குண்டு மிரட்டல் வந்தது. இதில் பெரும்பாலான ஓட்டல்கள் நட்சத்திர அந்தஸ்து கொண்டவை. இதைத்தொடர்ந்து அந்த ஓட்டல்களில் போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் சோதனை நடத்தினர். அதில் மிரட்டல் வெறும் புரளி என்பது உறுதி செய்யப்பட்டது.
இது தொடர்பாக கொல்கத்தா போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், இ-மெயில் மூலம் புனை பெயரை பயன்படுத்தி மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. அதில் ஓட்டல் வளாகத்தில் வெடிகுண்டுகளை கருப்பு பைகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ளது. அதை விரைவில் வெடிக்கும். உடனடியாக அங்கிருந்து வெளியேறுங்கள் என கூறப்பட்டிருந்தது.
அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் மிரட்டல் வெறும் புரளி என்பது உறுதியானது. எனினும் இ-மெயில் மூலம் மிரட்டல் விடுத்தவர் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.
குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் உள்ள 10 ஓட்டல்களுக்கு நேற்று மதியம் 12.45 மணி அளவில் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. கான்டென் என்ற பெயரில் இ-மெயில் மூலம் அந்த வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது.
அதில் 10 ஓட்டல்களில் வெடிகுண்டுகளை வைத்துள்ளதாகவும், அது சில மணி நேரத்தில் வெடித்து விடும். இன்று பல அப்பாவி உயிர்கள் பலியாகும். விரைந்து சென்று ஓட்டல்களை காலி செய்யுங்கள் என தெரிவித்து இருந்தார்.
உடனடியாக வெடி குண்டு செயலிழக்கும் படையினர் மூலம் ஓட்டல் களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. சுமார் 5 மணி நேரம் சோதனை நீடித்த நிலையில் ஓட்டல்களில் சந்தேகத்திற் கிடமாக எதுவும் சிக்க வில்லை என போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து இ-மெயில் மூலம் மிரட்டல் விடுத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
இதே போல திருப்பதியி லும் 3 ஓட்டல்களுக்கு இ-மெயில் மூலம் மிரட்டல் வந்தது. போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் பெயரை தொடர்புபடுத்தி இந்த மிரட்டல் வந்துள்ளது. உடனடியாக சம்பந்தப் பட்ட போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப் பட்டு மோப்ப நாய், வெடி குண்டு நிபுணர்கள் மூலம் சோதனை நடத்தப்பட்டது.
ஓட்டல் அறைகளில் இருந்தவர்களை வெளியே அனுப்பி விட்டு அங்குள்ள விடுதிகளில் தீவிர சோதனை நடத்தியதில் மிரட்டல் வீண் புரளி என தெரியவந்தது. மேலும் ஜாபர் சாதிக் பெயரில் போலியான இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார்? என்பது குறித்து திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பள்ளிகள் மற்றும் விமானங்களுக்கு சமூக வலைதளங்கள் வாயிலாக தொடர்ந்து மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.
- வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள 4 தனியார் ஓட்டல்களுக்கு, ஆன்லைன் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இது தொடர்பாக அனுப்பப்பட்ட இ-மெயிலில், போதைப்பொருள் வழக்கில் கைதான தமிழகத்தைச் சேர்ந்த ஜாபர் சாதிக் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதிர்ச்சி அடைந்த ஓட்டல் நிர்வாகத்தினர், உடனே போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
இதனால், ஓட்டல்களில் தங்கியிருந்த மக்கள் பதறியடித்து வெளியேறினர். வெடிகுண்டு செயலிழப்பு குழுவினர் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சென்று சோதனை நடத்தினர்.
இதன் முடிவில், வெடிகுண்டு மிரட்டல் போலியானது என்பது தெரியவந்தது. மேலும் மிரட்டல் விடுக்கப்பட்ட ஆன்லைன் முகவரிகள் ஜாபர் சாதிக் உடன் தொடர்புடையவை அல்ல இந்த மிரட்டல் வீண் வதந்தி என போலீசார் தெரிவித்தனர்.
சமீபகாலமாக பள்ளிகள் மற்றும் விமானங்களுக்கு சமூக வலைதளங்கள் வாயிலாக தொடர்ந்து மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.
திருப்பதியில் ஓட்டல்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருநங்கைகளுக்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான காசோலையை வழங்கினார்.
- தனியார் அறக்கட்டளை மூலம் ரூ 40 லட்சம் செலவில் 2 இடங்களில் ஓட்டல்கள் நிறுவப்பட்டு உள்ளது.
திருப்பதி:
தெலுங்கானா மாநில அரசு திருநங்கைகளை வறுமையில் இருந்து மீட்பதற்காகவும் பாகுபாடுகளில் இருந்து காப்பாற்றுவதற்காகவும் தேசிய நெடுஞ்சாலையில் ஓட்டல்கள் நடத்த அனுமதி அளித்துள்ளது.
இதற்காக தேசிய விருந்தோம்பல் மேலாண்மை நிறுவனத்தில் உணவு வணிக ஆபரேட்டர்கள் மூலம் திருநங்கைகளுக்கு 3 மாத கால பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி நிறைவு விழா நேற்று நல்கொண்டாவில் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் தெலுங்கானா சாலை மற்றும் கட்டிடங்கள் துறை மந்திரி கோமதி ரெட்டி வெங்கட் ரெட்டி கலந்து கொண்டு பயிற்சி முடித்த திருநங்கைகள் ஐதராபாத்-விஜயவாடா தேசிய நெடுஞ்சாலையில் ஓட்டல்கள் நடத்துவதற்கான ஆணையை வழங்கினார்.
மேலும் தன்னுடைய அறக்கட்டளை மூலம் திருநங்கைகளுக்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான காசோலையை வழங்கினார். தனியார் அறக்கட்டளை மூலம் ரூ 40 லட்சம் செலவில் 2 இடங்களில் ஓட்டல்கள் நிறுவப்பட்டு உள்ளது.
சமையல் செய்வது, வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறுவது, நிர்வகிப்பது என முழுக்க திருநங்கைகள் மட்டுமே இந்த ஓட்டல்களை நடத்த உள்ளனர்.
- கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்திய மக்கள் அனைவருமே வீடுகளிலேயே சமைத்தனர்.
- கடந்த 2022 ஆண்டை காட்டிலும் கடந்த 2023-ம் ஆண்டு ஒவ்வொரு குடும்பங்களின் மளிகை பட்ஜெட்டும் அதிகரித்துள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவில் ஓட்டல்களில் வாங்கி சாப்பிடும் பழக்கம் அதிகரித்து வருகிறது. அதே போல் பாக்கெட் உணவுப் பொருட்களை வாங்கி உண்ணும் பழக்கமும் அதிகரித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்திய மக்கள் அனைவருமே வீடுகளிலேயே சமைத்தனர்.
ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக வீடுகளில் சமைக்கும் பழக்கம் குறைந்து வருகிறது. இதன் காரணமாக தற்போது ஓட்டல்களும் பெருகி விட்டன. பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் உணவு பொருட்களின் விற்பனையும் அதிகரித்து விட்டது. இதன் காரணமாக இந்தியர்கள் உணவுக்கு செலவு செய்யும் தொகையும் 2 மடங்கு எகிறியது.
கடந்த 10 வருடங்களை ஒப்பிடும்போது நகரங்களில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் ஓட்டல் உணவுகள் மற்றும் பாக்கெட் உணவுகள் வீடுகளுக்கு டெலிவரி செய்யப்படுவது 41.2 சதவீதம் அதிகரித்துள்ளது.
நடுத்தர வருமானம் கொண்ட குடும்பங்களின் உணவு பட்ஜெட்டில் ஒரு பகுதியாக பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் உணவு மற்றும் பானங்களுக்கான செலவு 16 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்த கால கட்டத்தில் நகரங்களில் உயர் வருவாய் கொண்ட மக்கள், பாக்கெட்டு களில் விற்கப்படும் உணவுகளுக்கு 2.2 மடங்கு அதிகம் செலவு செய்கின்றனர்.
கடந்த 2022 ஆண்டை காட்டிலும் கடந்த 2023-ம் ஆண்டு ஒவ்வொரு குடும்பங்களின் மளிகை பட்ஜெட்டும் அதிகரித்துள்ளது. பானங்கள் மற்றும் பாக்கெட் உணவுகளுக்கு செலவு செய்யும் தொகை 9 சதவீதத்தில் இருந்து 10.5 சதவீதமாகவும், பால் மற்றும் பால் பொருட்களுக்கான செலவு 7 சதவீதத்தில் இருந்து 7.2 சதவீதமாகவும், பழங்கள் மற்றும் உலர் பழங்களுக்கான செலவு 3.4 சதவீதத்தில் இருந்து 3.8 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.
அதே நேரத்தில் உணவு தானியங்களுக்கான செலவு 6.6 சதவீதத்தில் இருந்து 4.5 சதவீதமாகவும், காய்கறிகளுக்கான செலவு 4.6 சதவீதத்தில் இருந்து 3.8 சதவீதமாகவும், முட்டை, மீன், இறைச்சிக்கான செலவு 3.7 சதவீதத்தில் இருந்து 3.5 சதவீதமாகவும், பருப்பு வகைகளுக்கான செலவு 1.9 சதவீதத்தில் இருந்து 1.2 சதவீதமாகவும், சர்க்கரை மற்றும் உப்பு ஆகியவற்றுக்கான செலவு 1.2 சதவீதத்தில் இருந்து 0.6 சதவீதமாகவும் குறைந்துள்ளது.
- கூட்டத்துக்கு நகராட்சி தலைவர் கு.பாப்பு கண்ணன் தலைமை தாங்கினார்.
- ஆணையர் எஸ்.எம்.பாரிஜான், துணைத் தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தாராபுரம்:
தாராபுரம் நகராட்சி கவுன்சிலருக்கான ஆய்வு கூட்டம் நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு நகராட்சி தலைவர் கு.பாப்பு கண்ணன் தலைமை தாங்கினார். ஆணையர் எஸ்.எம்.பாரிஜான், துணைத் தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மன்ற பொருளாக 89 தீர்மானங்கள் வைக்கப்பட்டது.
கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு:-
துரைசந்திரசேகரன் (தி.மு.க.): எனது வார்டில் சி.எஸ்.ஐ.காம்பவுண்டில் சாக்கடை வசதி இல்லை. தண்ணீர் தேங்கி நிற்கிறது. நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தலைவர் பாப்பு கண்ணன்: நோட்டீஸ் அனுப்பலாம்.
நாகராஜ் (அ.தி.மு.க.): தாராபுரம் நகராட்சி பகுதி ஓட்டல்களில் விலை பட்டியல் வைப்பதில்லை.மேலும் பஸ் நிலையம் பகுதியில் சாப்பிட்ட பிறகு பில் கொடுப்பதில் தகராறு ஏற்படுகிறது.தலைவர்: இது குறித்து தொழிலாளர் நலன் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்படும்.
முருகானந்தம் (தி.மு.க.): பல லட்சம் மதிப்பில் தாராபுரம் ஹவுசிங் யூனிட்டில் அண்மையில் கட்டப்பட்ட பூங்காவில் செடி கொடிகள் முளைத்து சீர் கெட்டு உள்ளது.மேலும் எனது வார்டில் தெரு ஓரங்களில் மரம் முளைத்துள்ளதால் பள்ளி பஸ்கள் செல்வதற்கு சிரமமாக உள்ளது.
தலைவர்: நகராட்சி பூங்கா உடனடியாக சீரமைக்கப்படும் மரங்களை வெட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு விவாதம் நடைபெற்றது. கூட்டத்தில் 89 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அப்போது நகராட்சி தலைவர் கு.பாப்பு கண்ணன் கூறியதாவது:-
திட்ட குழு நிதியிலிருந்து ஒரு கோடியே 52 லட்சம் மதிப்பில் அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்தவும், பொது நிதியிலிருந்து ஒரு கோடியே 65 லட்சம் மதிப்பில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள ரூ.3.17 கோடிக்கு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும் முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கருணாநிதி உருவ சிலையை தாராபுரம் பழைய நகராட்சி பகுதியிலோ அல்லது பெரியார் உருவ சிலை அருகே வைப்பது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- தரமற்ற உணவுகள் ஓட்டல்களில் விநியோகிப்பதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
- ஆய்வின்போது 8 ஓட்டல்களில் கெட்டுப்போன சட்னி, மோர், உணவுகள் பொதுமக்களுக்கு வழங்கியது தெரியவந்தது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் தரமற்ற உணவுகள் ஓட்டல்களில் விநியோகிப்பதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி கதிரவன் தலைமையில் அதிகாரிகள் மாவட்ட முழுவதும் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 39 ஓட்டல்களில் உணவு பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் 8 ஓட்டல்களில் கெட்டுப்போன சட்னி, மோர், உணவுகள் பொதுமக்களுக்கு வழங்கியது தெரியவந்தது. இதையடுத்து அந்த ஓட்டல்களுக்கு ரூ.12 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் இதுேபான்று சோதனை தொடரும் என்றும், தரம் இல்லாத உணவுகள் ஓட்டல்களில் வைக்கப்பட்டால் கடைக்கு சீல் வைக்கப்படும் என்றும் வழக்குப் பதிவு செய்து உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
- விலை உயர்வு காரணமாக வீடுகளில் தக்காளி ரசத்தை கடந்த சில நாட்களாக இல்லத்தரசிகள் கைவிட்டு விட்டார்கள்.
- மதிய சாப்பாட்டிலும் சில ஓட்டல்களில் தக்காளி ரசத்துக்கு பதில் மிளகு ரசத்தை பயன்படுத்துகிறார்கள்
சென்னை:
சென்னையில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்து உள்ளது. கிலோ ரூ.80 முதல் ரூ.100 வரை விற்கிறது. வரத்து குறைவால் இந்த விலை உயர்வு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த விலை உயர்வு காரணமாக வீடுகளில் தக்காளி ரசத்தை கடந்த சில நாட்களாக இல்லத்தரசிகள் கைவிட்டு விட்டார்கள்.
ஓட்டல்களிலும் வழக்கமாக தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, மல்லி சட்னி இடம் பிடித்திருக்கும். ஆனால் இப்போது விலை உயர்வு காரணமாக கடந்த சில நாட்களாக ஓட்டல் மெனுவிலும் தக்காளி சட்னி இல்லை. விலை உயர்வு காரணமாக தக்காளி சட்னி கிடையாது. என்றே வாடிக்கையாளர்களிடம் கூறுகிறார்கள்.
குறைந்தது இன்னும் 2 வாரங்களாவது தக்காளி சட்னிக்கு வாய்ப்பில்லை என்கிறார்கள். வரத்து அதிகரித்து விலை குறைந்த பிறகுதான் தக்காளி சட்னி இடம்பெறும் என்றனர்.
மதிய சாப்பாட்டிலும் சில ஓட்டல்களில் தக்காளி ரசத்துக்கு பதில் மிளகு ரசத்தை பயன்படுத்துகிறார்கள். ஓட்டல்களுக்கு சாப்பிட செல்லும் வாடிக்கையாளர்கள் தக்காளி ரசத்தை கையில் வாங்கி குடிப்பதும் உண்டு. ஆனால் இப்போது ஏமாந்து போகிறார்கள்.
- அபிராமத்தில் செயல்படும் ஓட்டல்களில் சுகாதாரமற்ற உணவுகள் விற்பனை செய்யப்படுகிறது.
- பொது மக்களுக்கு வயிற்றுவலி, உடல் உபாதைகள் ஏற்படுகிறது.
அபிராமம்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் அபிராமம் பேரூராட்சி பகுதியில் உணவகங்கள், குளிர்பானக் கடை, பழக்கடைகளில் கடந்த சில மாதங்களாக சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படும் உணவுகள், குளிர்பானங்கள் விற்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது.
ஓட்டல்களில் அதிக விலை கொடுத்து உணவுகளை வாங்கும் பொதுமக்கள் அவைகளை உட்கொண்டு உடல்நலம் பாதிக்கப்படுகின்றனர். தற்போது மாம்பழ சீசன் என்பதால் அபிராமம் பகுதியில் உள்ள சில பழக்கடைகளில் கார்பைடு கல் வைத்து மாம்பழங்கள் பழுக்க வைத்து விற்பனை செய்கின்றனர்.
இதனால் பொது மக்களுக்கு வயிற்றுவலி, உடல் உபாதைகள் ஏற்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், அபிராமம் பகுதியில் உள்ள உணவகம் டீக்கடை, குளிர்பா னக்கடை தண்ணீர் கேன், பழக்க டைகளில் கால வதியான தரம் குறைவான பொருட்கள் விற்கப்படு கிறது. எனவே சமந்தப்பட்ட உணவு பாதுகாப்பு துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- வாழை இலை விலை அதிகரிப்பால் ஓட்டல்களில் பார்சல், சாப்பிட மெழுகு பேப்பர் இலை பயன்பாடு அதிகரித்துள்ளது.
- பேப்பர் இலை தட்டை பயன்படுத்துகின்றனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் காய்கறிகள், பழங்கள் குறைந்த அளவே சாகுபடி செய்யப்படுகிறது. இதனால் காய்கறிகள், பழங்கள், அதிக அளவில் வெளி மாவட்டங்களில் இருந்தே கொண்டு வரப்படுகிறது.
தற்போது ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் உள்ள கோவில்களில் வைகாசி திருவிழா, சுபமுகூர்த்த தினங்களால் வாழை இலை யின் தேவை அதிகரித்து உள்ளது. இதனால் வெளியூர்க ளில் இருந்து வரத்து குறைந்துள்ளது. கடந்த மாதம் ரூ.800 வரை விற்ற ஒரு கட்டு வாழை இலை (180 முதல் 200 எண்ணிக்கை) தற்போது ரூ.900 முதல் ரூ.1000 வரை விற்கப்படு கிறது. இதனால் ஓட்டல்களில் சாப்பிடவும், பார்சல் வழங்க வும் பேப்பர் இலை தட்டை பயன்படுத்துகின்றனர்.
விலை உயர்வால் ஓட்டல்களில் மொத்தமாக இலை வாங்குவது குறைந்து உள்ளது. மேலும் காற்று காரணமாக இலைகள் கிழிந்தும் வருகிறது. இத னால் வாழை இலை தட்டுப்பாடு ஏற்பட்டு பேப்பர் இலை தட்டு பயன்பாடு அதிகரித்து உள்ளது.
- மதுரை ஓட்டல்களில் உணவுப்பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.
- பல கடைகளில் பொருட்களை கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக கூறப்படுகிறது.
மதுரை
பெட்ரோல்-டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை அடிக்கடி அதிகரிக் கப்பட்டு வருகிறது. இந்த விலையேற்றம் சாமானிய மக்களின் தலையில் இடி யாக இறங்குகிறது.
பெட்ரோல்-டீசல், கியாஸ் சிலிண்டர் விலை யேற்றம் காரணமாக அன்றா டம் பயன்படுத்தும் அத்தி யாவசிய பொருட்களின் விலையும் உயர்த்தப்படுகி றது. இதனால் பொது மக்கள் கடும் அவதியடை கின்றனர்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் உள்ள சுங்கச் சாவடிகளில் 10 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப் பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வும் பொதுமக்களுக்கு மேலும் மேலும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.
அனைத்து பொருட்களின் விலையும் அதிகரிக்கப்பட்டு இருப்பதால் மதுரை மாநக ரில் பெரும்பாலான ஓட் டல்கள், டீக்கடைகளில் உணவுப் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
உணவுப் பொருட்களின் விலையை ரூ.1 முதல் ரூ.10 வரை அதிகரித்துள்ளனர். மார்ச் 31-ந்தேதி வரை ஓட்டல்களில் இட்லி, பொங்கல், தோசைக்கு ரூ.3 வரை விலை ஏற்றப் பட்டுள்ளது. சாப்பாடு ரூ.5 வரை விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது.
இதுகுறித்து ஓட்டல் நிர்வாகத்தினரிடம் கேட்ட போது, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, சுங்கச்சாவடி கட்டண விலை அதிகரிப்பு உள்ளிட்டவைகளை சமாளிக்க உணவுப் பொருட் களின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளோம் என தெரிவித்தனர்.
உணவுப் பொருட்களை போன்று பல கடைகளில் டீ, காபியின் விலை ரூ.1 வரை உயர்த்தப்பட்டு உள்ளது. சில கடைகளில் விலை உயர்த்தப்படாத நிலையில், வழக்கத்தை விட குறைவான அளவில் டீ, காபி கொடுப் பதாக பொதுமக்கள் தரப்பில் தெரிவித்தனர்.
தற்போது வெயில் சுட்டெரித்து வருவதால் வெப்பத்தை தணிக்கக்கூடிய பழங்கள் மற்றும் பழச்சாறு உள்ளிட்டவைகளும் பல கடைகளில் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக கூறப்படுகிறது.
- ஏர்வாடி ஓட்டல்களில் தொடர்ந்து சுகாதார குறைபாடு ஏற்பட்டு வருகிறது.
- நடவடிக்கை எடுக்கப்படுமா? என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் உள்ள பாதுஷா நாயகம் தர்காவிற்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வேண்டுதலுக்காக வருகின்றனர்.
அதிக மக்கள் வந்து செல்வதால் மற்ற கடைகளை விட சிறிய ஓட்டல்கள், ரோட்டோர கடைகள் அதிக ளவில் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் பிரி யாணி, சாப்பாடு, இட்லி, தோசை, புரோட்டா, என காலை, மாலை, இரவு நேரங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
குறிப்பிட்ட ஒரு சில ஒட்டல்கள் தவிர பல ஒட்டல்களில் உள்ளே நுழையவே அருவருப்பாக உள்ளது. சில ஓட்டல்களில் சுத்தம் செய்யப்படாத மேஜை, கழுவப்படாத கிளாஸ், தூசுகளுடன் குடிநீர் தொட்டி, வாழை இலை இல்லாமல் பிளாஸ்டிக் பேப்பரில் உணவு வழங்கப்படுகிறது.
ஏர்வாடி ஓட்டல்கள் மற்றும் சாலையோர கடைகளில் ஏற்கனவே பலகாரங்கள் தயாரிக்க பயன்படுத்திய எண்ணை களை மீண்டும் மீண்டும் பயன்படுத்துகின்றனர். சுகாதாரம் மிக மோசமாக உள்ளதை சுகாதாரத்துறை, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை.
இதுபோன்ற பாதுகாப்பு இல்லாத உணவுகளினால் ஏற்படும் உடல்நல பாதிப்பு களை உணர்ந்தாலும் வேறு வழியில்லாமல் வெளிமாவட்ட பக்தர்கள் இந்த ஒட்டல்களில் உணவு சாப்பிடுகின்றனர்.
ஏர்வாடியில் செயல் படும் ஓட்டல்களில் சுகாதார குறைபாடு உள்ளதை அதிகாரிகள் கவனிக்காமல் மெத்தனமாக செயல்படுவதாக பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கூறுகின்றனர்.
இங்குள்ள சுகாதாரமற்ற ஒட்டல்களில் அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஏர்வாடியில் சுகாதாரமின்றி செயல்படும் ஓட்டல்களில் அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
- இங்கு செயல்படும் ஒரு சில ஒட்டல்கள் தவிர பல ஒட்டல்களில் உள்ளே நுழையவே அருவருப்பாகஉள்ளது.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் உள்ள பாதுஷா நாயகம் தர்காவிற்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள்வே ண்டுதலுக்காக வருகின்றனர்.
இங்கு சிறிய ஓட்டல்கள், ரோட்டோர கடைகள் அதிகளவில் செயல்படுகின்றன. அவற்றில் பிரியாணி, சாப்பாடு, இட்லி, தோசை, புரோட்டா ஆகியவை காலை, மாலை, இரவு நேரங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
இங்கு செயல்படும் ஒரு சில ஒட்டல்கள் தவிர பல ஒட்டல்களில் உள்ளே நுழையவே அருவருப்பாகஉள்ளது. சில ஓட்டல்களில் சுத்தம் செய்யப்படாத மேஜை, கழுவப்படாத கிளாஸ், தூசுகளுடன் குடிநீர் தொட்டி, வாழை இலை இல்லாமல் பிளாஸ்டிக் பேப்பரில் உணவு வழங்கப்படுகிறது.
ஏர்வாடி ஓட்டல்கள், சாலையோர கடைகளில் ஏற்கனவே பலகாரங்கள் தயாரிக்க பயன்படுத்திய எண்ணைகளைமீண்டும் மீண்டும் பயன்படுத்துகி ன்றனர். இதனால் சுகாதாரமற்ற உணவுகளை சாப்பிடும் பொதுமக்கள் உடல்நலம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
இது போன்ற உணவுகளி னால் ஏற்படும் பாதிப்புகளை உணர்ந்தாலும் வேறு வழியில்லாமல் வெளி மாவட்ட பக்தர்கள் இந்த ஓட்டல்களில் உணவு சாப்பிடுகின்றனர்.
இங்குள்ள சுகாதாரமற்ற ஒட்டல்களில் அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்