என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிணமாக மீட்பு"

    • அந்த சமயத்தில் இப்ராஹிம் காரில் இருந்து இறங்கி பக்கிங்காம் கால்வாயில் குளிக்க சென்றுள்ளான்.
    • மரக்காணம் போலீஸ் நிலையம், தீயணைப்பு நிலையம் ஆகிவற்றுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

    விழுப்புரம்:

    மரக்காணம் இ.பி. சாலையில் வசிப்பவர் பாபு. இவர் தனது மகன் இப்ராஹிம் (வயது 15) என்பவரை காரில் அழைத்துக் கொண்டு மரக்காணம் மேட்டு தெரு பகுதியில் உள்ள பக்கிங்காம் கால்வாய்க்கு சென்றுள்ளார் அப்போது பாபு தனது காரை பக்கிங்காம் கால்வாய் ஓரம் நிறுத்தி உள்ளார். அந்த சமயத்தில் இப்ராஹிம் காரில் இருந்து இறங்கி பக்கிங்காம் கால்வாயில் குளிக்க சென்றுள்ளான். அவன் குளிக்க சேர்ந்த சிறிது நேரத்திலேயே நீரில் மூழ்கி மாயமாகி விட்டான். இதனைப் பார்த்த அவனது தந்தை பாபு மகனைத் தேடி உள்ளார். ஆனால் அவன் கிடைக்கவில்லை. இந்த சம்பவம் குறித்து பாபு தனது உறவினர்கள் மரக்காணம் போலீஸ் நிலையம், தீயணைப்பு நிலையம் ஆகிவற்றுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

    இதனைத் தொடர்ந்து காவல்துறை, தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் பொதுமக்கள் மாயமான பள்ளி மாணவன் இப்ராஹீமை கால்வாயில் தேடி வந்தனர். ஆனால் நேற்று இரவு வரை அவன் கிடைக்கவில்லை. இன்று காலை மீனவர்களின் உதவியுடன் மாயமான மாணவனை தேடினர். அப்போது மாணவன் இப்ராஹிம் இறங்கி குளித்த அதே இடத்தில் சேற்றில் மூழ்கி உயிரிழந்து விட்டான். இதனால் அவனது உடலை மட்டும் இன்று காலை மீனவர்கள் மீட்டு கரைக்கு எடுத்து வந்தனர் கால்வாயில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த மாணவன் மரக்காணத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். பள்ளி மாணவன் நீரில் மூழ்கி உயிர் இழந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்துள்ளது.

    • 2 தினங்களுக்கு முன்பு நிஷாந்தி பெற்றோரிடம் வெளியில் செல்வதாக கூறி விட்டு சென்றார்.
    • போலீசார் நிஷாந்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

    வடவள்ளி,

    கோவை வீரகேளம் பகுதியை சேர்ந்தவர் ராஜநாயுடு. இவருக்கு பத்மாவதி, நிஷாந்தி(26) என 2 மகள்கள் உள்ளனர்.

    2 தினங்களுக்கு முன்பு நிஷாந்தி பெற்றோரிடம் வெளியில் செல்வதாக கூறி விட்டு சென்றார். ஆனால் மாலை நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர், உறவினர்கள் வீடு மற்றும் அக்கம்பக்கத்தினர் வீடுகளில் தேடி பார்த்தனர்.

    ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து வடவள்ளி போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான நிஷாந்தியை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை வீரகேளம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே சாலையோரத்தில் தேங்கி கிடந்த குப்பைகளை அகற்றுவதற்காக தூய்மை பணியாளர்கள் வந்தனர்.

    அப்போது சாலையோரம் செல்லக்கூடிய சாக்கடை கால்வாயில் பெண் பிணம் மிதந்து கொண்டிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சியான அவர்கள் சம்பவம் குறித்து வடள்ளி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இளம்பெண்ணின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் சாக்கடைக்குள் பிணமாக கிடந்தது மாயமான நிஷாந்தி என்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் நிஷாந்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

    • பெரம்பலூர் அருகே மனைவியிடம் கோபித்து சென்ற கட்டிட தொழிலாளி ஆற்றில் பிணமாக மீட்கப்பட்டார்
    • வெள்ளாற்றில் ஆண் பிணம் ஒன்று அழுகிய நிலையில் கிடப்பதை அப்பகுதி பொதுமக்கள் பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு போலீசாருக்கு தகவல் அளித்தனர்

    பெரம்பலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுகா அரங்கூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 45). இவருக்கு மலர்க்கொடி என்ற மனைவியும், சதீஷ்குமார் (23), விக்னேஷ்வர் (20) ஆகிய இரண்டு மகன்களும் உள்ளனர்.

    இந்நிலையில் செந்தில்குமார் தமது மாமனார் வீட்டில் தங்கி கொத்தனார் வேலை செய்து வந்தார்.

    சம்பவத்தன்று குடும்பத் தகராறு காரணமாக வீட்டில் சண்டை போட்டுவிட்டு வெளியேறியவர் பின்னர் வீடு திரும்பவில்லை. 2 நாட்களாகியும் அவர் திரும்பாததால் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனாலும் எந்த தகவலும் இல்லை.

    இந்நிலையில் குன்னம் தாலுகா வெள்ளாற்றில் ஆண் பிணம் ஒன்று அழுகிய நிலையில் கிடப்பதை அப்பகுதி பொதுமக்கள் பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து வெள்ளாற்றுக்கு விரைந்து சென்ற மங்களமேடு போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பிணமாக மிதந்தவரை மீட்டனர்.

    தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர் மாயமான செந்தில்குமார் என்பது தெரியவந்தது. பின்னர் அவரது உடலை பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து மங்களமேடு போலீசார் ஒரு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புஷ்பா என்கிற குள்ளாகி ( வயது57). இவரது கணவர் மணி ஏற்கனவே இறந்து விட்டதால் புஷ்பா தனது அக்கா சரசு வீட்டில் தங்கிகூலி வேலைக்கு சென்று வந்தார்.
    • இந்நிலையில் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வரும்போது, புஷ்பா தினமும் மது அருந்திவிட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பாண்டமங்கலம் அருகே உள்ள பூசாரிபாளையத்தைச் சேர்ந்தவர் மணி. இவரது மனைவி புஷ்பா என்கிற குள்ளாகி ( வயது 57). இவரது கணவர் மணி ஏற்கனவே இறந்து விட்டதால் புஷ்பா தனது அக்கா சரசு வீட்டில் தங்கிகூலி வேலைக்கு சென்று வந்தார். இந்நிலை யில் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வரும்போது, புஷ்பா தினமும் மது அருந்திவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனை அவரது அக்கா சரசு மற்றும் உறவினர்கள் கண்டித்ததாக கூறப்படுகிறது.

    கடந்த 12-ந் தேதி மீண்டும் புஷ்பா மது அருந்தி உள்ளார். அவரை உறவினர்கள் கண்டித்துள்ளனர். இதையடுத்து இரவு வீட்டில் இருந்து வெளியே சென்ற புஷ்பா, பின்னர் வீடு திரும்ப வில்லை. அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி வந்துள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று காலை பாண்டமங்கலம், வட்டாரக்காடு பகுதியில் உள்ள கிணற்றில் பெண் சடலம் ஒன்று மிதப்பதாக பரமத்திவேலூர் போலீசாரு க்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கிணற்றில் சடலமாக மிதந்த பெண்ணின் உடலை மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக சேர்த்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பிணமாக மீட்கப்பட்டவர் காணாமல் போன பூசாரி பாளையத்தை சேர்ந்த புஷ்பா என்பது தெரிய வந்தது.இச்சம்பவம் குறித்து பரமத்திவேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

    • பொன்னம்மாளுக்கு கடந்த சில வருடங்களாக உடல்நிலை சரியில்லாமல் திருப்பூரில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
    • கிணற்றில் பொன்னம்மாள் நீரில் மூழ்கி இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது.

    அன்னூர்,

    கோவை மாவட்டம் அன்னூரை அடுத்த ஆயகவுண்டர் புதூரை சேர்ந்தவர் சண்முகம். இவரது தாயார் பொன்னம்மாள் (வயது 63).

    இந்த நிலையில் பொன்னம்மாளுக்கு கடந்த சில வருடங்களாக உடல்நிலை சரியில்லாமல் திருப்பூரில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் அடிக்கடி வீட்டை விட்டு வெளியே சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்புவார்.இதேபோன்று சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சண்முகம் தாயாரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் கிடைக்கவில்லை. இதையடுத்து அவர் அன்னூர் போலீசில் தாய் மாயமானதாக புகார் அளித்துள்ளார்.

    இந்த நிலையில் அன்னூர் போலீசாருக்கு பூலுவபாளையம் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் பொன்னம்மாள் நீரில் மூழ்கி இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பொன்னம்மாளின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாயமான மூதாட்டி கிணற்றில் பிணமாக மீட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கங்காதேவியின் உடல் கீழ்வாணி ஆற்று பாலத்திற்கு கீழே உள்ள பாறை இடுக்குக்குள் சிக்கி கிடந்தது.
    • ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆப்பக்கூடல்:

    அந்தியூர் தவுட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கங்காதேவி (வயது 74). இவர் தனியாக வசித்து வந்தார்.

    இந்நிலையில், கங்காதேவி சம்பவத்தன்று காலை அத்தாணி-பவானி ஆற்றில் குளித்து விட்டு வருவதாக சென்றவர் நீண்ட மணி நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.

    இதனால் உறவினர்கள் அத்தாணி-பவானி பகுதியில் தேடிச்சென்று பார்த்தனர். அப்போது கங்காதேவியின் உடல் கீழ்வாணி ஆற்று பாலத்திற்கு கீழே உள்ள பாறை இடுக்குக்குள் சிக்கி கிடந்தது.

    ஆற்றின் ஆழமான பகுதியில் குளிக்க சென்ற கங்காதேவி தண்ணீரில் மூழ்கி இழுத்து செல்லப் பட்டு இறந்திருக்கலாம் என்றும் தெரியவந்தது.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஆப்பக்கூடல் போலீசார் கங்காதேவியின் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இச்சம்பவம் குறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • லாரன்ஸ் பிரேம்குமார் மீண்டும் அரக்கன் கோட்டை வாய்க்காலில் குளிக்க சென்றார்.
    • இன்று காலை அரக்கன்கோட்டை வாய்க்காலில் லாரன்ஸ் பிரேம்குமார் பிணமாக மீட்கப்பட்டார்.

    டி.என்.பாளையம்:

    கோவை மாவட்டம் போத்தனூர் அருகே உள்ள காந்தி நகர் மேட்டு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் லார ன்ஸ் பிரேம்குமார் (40). இவர் கோவையில் கார் பெண்டராக வேலை செய்து வந்தார். இவருக்கு திரு மணமாகி ரீனா என்ற மனைவியும் மற்றும் 2 குழ ந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் சத்திய மங்கலம் வடக்கு பேட்டை யில் உள்ள உறவி னர் வீட்டுக்கு லாரன்ஸ் பிரேம்குமார் குடும்பத்துடன் வந்தார். தொடர்ந்து லாரன்ஸ் பிரேம்குமார் மற்றும் அவரது உறவினர்கள் கொடிவேரி அணைக்கு குளிக்க சென்றனர்.

    இதை தொடர்ந்து அவர்கள் கொடிவேரி அணைப்பகுதியில் குளித்து விட்டு கொடிவேரி அரக்கன் கோட்டை வாய்க்கால் பகுதி யில் மீன் சாப்பிட்டனர்.

    தொடர்ந்து லாரன்ஸ் பிரேம்குமார் மீண்டும் அரக்கன் கோட்டை வாய்க்காலில் குளிக்க சென்றார். அங்கு குளித்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார்.

    இதையடுத்து நீண்ட நேரமாகியும் லாரன்ஸ் பிரேம்குமார் வராததால் அவரது குடும்பத்தினர் கொடிவேரி அரக்கன் கோட்டை வாய்க்காலில் அவரை தேடி பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்க வில்லை.

    இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பங்களாப்புதூர் போலீசார் மற்றும் சத்திய மங்கலம் தீயணைப்புத்துறை வீரர்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட லாரன்ஸ் பிரேம்குமாரை நேற்று தேடினர்.

    ஆனால் அவர் கிடைக்கவில்லை. இரவு நீண்ட நேரம் ஆனதால் அவர்கள் திரும்பி சென்று விட்டனர்.

    இந்நிலையில் இன்று அதிகாலை மீண்டும் லாரன்ஸ் பிரேம்குமாரை, கொடிவேரி மீனவர்கள் உதவியுடன் சத்தியமங்கலம் தீயணைப்புத்துறை வீரர்கள் மற்றும் பங்களாப்புதூர் போலீசார் கொடிவேரி அரக்கன் கோட்டை வாய்க்காலில் தேடினர்.

    அப்போது இன்று காலை அரக்கன்கோட்டை வாய்க்காலில் லாரன்ஸ் பிரேம்குமார் பிணமாக மீட்கப்பட்டார். இதையடுத்து போலீசார் அவரது உடலை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • சில நாட்கள் வீட்டில் இருந்த அவர் திடீரென மாயமானார்.
    • மதுபோதையில் கிணற்றில் தவறி விழுந்த மணி, தண்ணீரில் மூழ்கி பலியானது தெரியவந்தது.

    பென்னாகரம்,

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள எரகொல்லனூரை சேர்ந்தவர் மணி (வயது 37). இவர் பெங்களூருவில் உறவினர் ஒருவரின் பழைய இரும்பு கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    இவருக்கு பிரபாவதி என்ற மனைவியும், ஒரு மகன், மகள் உள்ளனர். மணி கடந்த மாதம் பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு வந்தார். சில நாட்கள் வீட்டில் இருந்த அவர் திடீரென மாயமானார்.

    இதனால் குடும்பத்தினர் அவர் பெங்களூருவுக்கு வேலைக்கு சென்று விட்டதாக நினைத்தனர். நாட்கள் செல்ல செல்ல மணியிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை.

    மேலும் அவர் குடும்பத்தினரிடம் செல்போனில் பேசவும் இல்லை. இதனால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர், பெங்களூருவுக்கு சென்றனர். அங்கு பழைய இரும்பு கடைக்காரரிடம் மணி குறித்து விசாரித்தனர். ஆனால் மணி வேலைக்கு வரவில்லை என்று அவர் கூறினார். இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    மேலும் மணியை பல்வேறு இடங்களில் தேடினர். இந்தநிலையில் எரகொல்லனூர் பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றில் தண்ணீரில் மணியின் உடல் மிதந்தது. இதுகுறித்து பென்னாகரம் போலீஸ் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் விரைந்து சென்றனர்.

    பின்னர் அழுகிய நிலையில் கிடந்த மணியின் உடல் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், மதுபோதையில் கிணற்றில் தவறி விழுந்த மணி, தண்ணீரில் மூழ்கி பலியானது தெரியவந்தது.

    இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கடலாடி அருகே காணாமல் போன விவசாயி பிணமாக மீட்கப்பட்டார்.
    • இவர் இந்தப்குபதியில் உள்ள பனை மட்டைகளை மொத்தமாக எடுத்து வெளியூர்களுக்கு அனுப்பும் வேலையை செய்து வந்தார்.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள கீழச் செல்வனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மயில்வாகனம் (வயது45), விவசாயி. இவர் இந்தப்குபதியில் உள்ள பனை மட்டைகளை மொத்தமாக எடுத்து வெளியூர்களுக்கு அனுப்பும் வேலையை செய்து வந்தார்.

    கடந்த 13-ந்தேதி வீட்டில் இருந்து சென்ற மயில்வாகனம் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து செய்யப்பட்டது.

    அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் மயில்வாகனத்தின் செல்போன் சிக்னலை வைத்து போலீசார் ஆய்வு செய்ததில், சிக்கல் அருகே உள்ள ஆண்டிச்சிகுளம் கண்மாய் மேற்கு பகுதியில் விவசாயியின் உடல் அழுகிய நிலையில் கிடந்ததை கண்டுபிடித்தனர்.

    கடலாடி இன்ஸ் பெக்டர் ஜான்சிராணி, கீழச் செல்வனூர் சப்-இன்ஸ்பெக்டர் செல்லச் சாமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி பிணமாக கிடந்தது. மயில்வாகனம் என்பதை உறுதி செய்தனர். அவரது உடலை போலீசார் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.விவசாயி மயில்வாகனம் எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • பவானி ஆற்றில் ஒரு பெண்ணின் உடல் மிதந்து வந்தது.
    • ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த குப்பண்டாம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மனைவி விஜயகுமாரி (48). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

    கடந்த 15 வருடத்திற்கு முன்பு வேலுச்சாமி இறந்து விட்டார்.அதன் பின்பு விஜயகுமாரி கருவல் வாடிபுதூரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வந்தார். விஜயகுமாரி அத்தாணி அரசு தொடக்கப்பள்ளியில் சத்துணவு சமையலராக வேலை பார்த்து வந்தார்.

    அவரது மகள் கோவையில் விடுதியில் தங்கி கல்லூரியில் படித்து வந்தார். தினமும் தந்தையிடம் பேசி வந்த விஜயகுமாரி கடந்த 2 நாட்களாக தந்தையிடம் போனில் பேசவில்லை.

    இதனையடுத்து விஜயகுமாரின் தந்தை மகளை தேடி அவரது வீட்டுக்கு சென்றார். அப்போது வீடு பூட்டப்பட்டு இருந்தது.

    பின்னர் வீட்டிற்கு பின்புறம் உள்ள பவானி ஆற்றில் ஒரு பெண்ணின்உடல் மிதந்து வருவதாக தகவல் அறிந்து விஜயகுமாரின் தந்தை அங்கு சென்ற பார்த்தபோது இறந்து கிடந்தது தனது மகள் என்று உறுதி செய்தார்.

    இதனையடுத்து அந்தியூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விஜயகுமாரி உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விஜயகுமாரி குளிக்கும்போது தவறி விழுந்து இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு என்ன காரணம் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நேற்று கிணற்றில் சத்யா பிணமாக மிதந்தார்.
    • கிணற்றில் மிதந்த மாணவி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர் அடுத்துள்ள கொலகன்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சிவா. இவரது மகள் சத்யா (வயது17). இவர் கம்பைநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு சத்யா தனது பாட்டியுடன் விவசாய கிணற்றில் உள்ள மின்மோட்டாரை ஆன் செய்து வீட்டிற்கு வந்துள்ளனர். பின்னர் மோட்டாரை அனைப்பதற்காக சத்யா மட்டும் சென்றார். பின்னர் அவர் வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.

    இதையடுத்து நேற்று கிணற்றில் சத்யா பிணமாக மிதந்தார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து கம்பைநல்லூர் போலீசாருக்கும், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    கிணற்றில் மிதந்த மாணவி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குளித்து கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக நீரில் அடித்து செல்லப்பட்டார்
    • உறவினர்கள் முயற்சி செய்தும் இவரை காப்பாற்ற முடியவில்லை.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருேக உள்ள புதுஏரி பகுதியை சேர்ந்தவர் முனுசாமி (வயது33). இவர் உறவினரின் துக்க நிகழ்ச்சிக்காக கடந்த 9-ம் தேதி ஒகேனக்கல் சென்றுள்ளார்.

    இந்நிலையில் முனுசாமி காவிரி ஆற்றங்கரையில் உள்ள அய்யப்பன் கோவில் அருகே குளித்து கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக நீரில் அடித்து செல்லப்பட்டார்.

    இவருடைய உறவினர்கள் முயற்சி செய்தும் இவரை காப்பாற்ற முடியவில்லை. நீரில் அடித்து செல்லப்பட்ட முனுசாமி ஊட்டமலை பரிசல்துறை அருகே இறந்த நிலையில் மீட்கப்பட்டார்.

    இது குறித்து ஓகேனக்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    ×