என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் கே.என்.நேரு"

    • கன்னியாகுமரிக்கு நாளை வருகை
    • நாகர்கோவில் மாநகராட்சி புதிய கட்டிடத்தையும் பார்வையிடுகிறார்

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநகராட்சி அவசரக் கூட்டம் இன்று மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது.கூட்டத்திற்கு மேயர் மகேஷ் தலைமை தாங்கினார். ஆணையாளர் ஆனந்த மோகன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் மண்டல தலைவர்கள் முத்துராமன், செல்வக்குமார், அகஸ்டினா கோகிலவாணி கவு ன்சிலர்கள் மீனாதேவ், ஸ்ரீலிஜா, அக்சயா கண்ணன், நவீன் குமார், சேகர்,அனிலா சுகுமாறன், அய்யப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து மேயர் மகேஷ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நாக ர்கோவில் மாநகராட்சி வார்டுக்கு உட்ப ட்ட பகுதியில் பகுதி சபா கூட்டம் நடத்தி பொது மக்களிடமிருந்து குறைகள் கேட்க ப்படுகிறது.

    அதன் அடிப்படையில் நாளை 52 வார்டுகளிலும் அந்தந்த கவுன்சிலர்கள் தலைமையில் பகுதி சபா கூட்டம் நடக்கிறது. இந்த பகுதி சபா கூட்டமானது 3 மாதத்திற்கு ஒருமுறை வார்டு பகுதிகளில் நடத்தப்படும். மேலும் நாளைமறுநாள் 2-ந் தேதி மாநகர சபை கூட்டம் நடத்தப்படுகிறது.

    நாகர்கோவில் பெருவிளையில் காலை 9 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். இதைத் தொடர்ந்து வடசேரி பஸ் நிலையத்தில் ஆய்வு பணியை மேற்கொள்கிறார் .

    பின்னர் நாகர்கோவில் மாநகராட்சி புதிய அலுவலக கட்டிடத்தை அமைச்சர் கே. என். நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். இதை தொடர்ந்து மாலை நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொள்கிறார்.

    இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அமைச்சர்கே.என்.நேரு நாளை 1-ந் தேதி தேதி சென்னையில் இருந்து விமானம் மூலமாக தூத்துக்குடி வருகிறார்.

    பின்னர் மாலை கன்னியாகுமரி வருகை தரும் அவருக்கு கன்னியாகுமரி கிழக்கு, மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    நாகர்கோவில் மாநகர பகுதியில் சாலைகள் குண்டும் குழியுமாக மோசமான நிலையில் உள்ளது. இந்த சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கவுன்சிலர்கள் அனைவரும் கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில் சாலை சீரமைப்புக்குரூ.30 கோடி நிதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியை கொண்டு மிகவும் பழுதான சாலைகள் முதல் கட்டமாக சீரமைக்கப்படும் என்று மேயர் மகேஷ் தெரிவித்தார்.

    • தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன், அமைச்சர் கே.என்.நேருவிடம் நேரில் சென்று மனு கொடுத்தார்.
    • தார்சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மனுவில் கூறபட்டிருந்தது.

    சாம்பவர் வடகரை:

    சாம்பவர்வடகரை பேரூராட்சி மன்ற தலைவர் சீதாலட்சுமி முத்து சார்பாக தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேருவிடம் நேரில் சென்று மனு கொடுத்தார்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை பேரூராட்சியில் 14 -வது வார்டு பெரியகுளம் சாலை- விந்தன் கோட்டை அழகிய மணவள பெருமாள் கோவில் இணைப்பு சாலை முற்றிலும் சிதிலமடைந்து உள்ளது. சிதிலமடைந்த தார் சாலையையும் மீதமுள்ள மண் சாலையையும் தார்சாலையாக அமைத்து, சாலை இருபுறமும் வெள்ளை பாதுகாப்பு சுவர்கள் அமைத்திட நிதி ஒதுக்கீடு செய்து தர வேண்டும், சாம்பவர் வடகரை பேரூராட்சி 12- வது வார்டு வேலாயுதபுரம் சாலையில் அமைந்துள்ள டாக்டர் அப்துல் கலாம் நகரில் வீடுகள் கட்டி அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதி மக்களின் நலன் கருதி சுமார் 550 மீட்டர் தொலைவுக்கு கழிவுநீர் கால்வாய் அமைத்து குடிநீர் பைப் லைன் அமைத்திடவும் மற்றும் ஃபேவர் பிளாக் சாலை அமைத்திட நிதி ஒதுக்கீடு செய்து தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கேளிக்கைகள் வரி விதிக்கவும், வசூலிக்கவும் அதிகாரமளிக்கவும் வரைமுறை இல்லை.
    • அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அக்ரி கிருஷ்ணமூர்த்தி எதிர்ப்பு தெரிவித்தார்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் கேளிக்கை வரி திருத்த சட்ட முன் வடிவை தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    உள்ளாட்சி அமைப்புகள் கேளிக்கை வரி சட்டமானது அதில் குறிப்பிட்டுள்ள கேளிக்கைகள் மற்றும் பொழுதுபோக்குகள் மீது வரி விதிப்பதற்கும், வசூலிப்பதற்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்குகிறது.

    ஆனால் கல்வி நிறுவனம் உள்ளடங்களாக எந்த ஒரு நிறுவனத்தாலும் அனுமதிக்கான கட்டணத்தின் பேரில் நடத்தப்படும் இசை நிகழ்ச்சி, நாடகம், காட்சி அல்லது ஏதேனும் பிற நிகழ்ச்சிகள் மீது கேளிக்கைகள் வரி விதிக்கவும், வசூலிக்கவும் அதிகாரமளிக்கவும் எந்த ஒரு வரைமுறையும் இல்லை.

    எனவே மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சிகளுக்கும் அனுமதிக்கான கட்டணம் ஒவ்வொன்றின் மீதும் 10 விழுக்காடு வீதத்தில் கேளிக்கைகள் வரி விதிப்பதற்கும் வசூலிப்பதற்கும் தகுந்தவாறு சட்டத்தை திருத்த அரசு முடிவு செய்துள்ளது.

    இதன்படி எந்த ஒரு கல்வி நிறுவனம் அல்லது நிறுவனம் சங்கம், குழுமம் எந்த பெயரிலும் அழைக்கப்படும் நபர்களின் பிற கழகம் ஆகியவை இதில் அடங்கும்.

    இதன் வளாகத்தில் அல்லது நுழைவு சீட்டு, பங்களிப்பு, சந்தா எந்த வகையிலும் வசூலிக்கப்படும் கட்டணங்கள் மற்றும் அனுமதிக்கான கட்டணம் வாங்கப்படும் கல்வி நிறுவன இடங்களில் நடத்தப்படும் இசை நிகழ்ச்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு 10 சதவீத கேளிக்கை வரி உள்ளாட்சி அமைப்புகளால் வசூலிக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த சட்ட மசோதாவை அறிமுக நிலையிலேயே எதிர்ப்பதாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அக்ரி கிருஷ்ணமூர்த்தி கூறினார்.

    • 7-வது மாதம் வரை குடிநீர் தட்டுப்பாடு ஏற்பாடாது.
    • ராயபுரம் தொகுதிக்கு கூடுதலாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

    ராயபுரம் தொகுதிக்கு கூடுதலாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று சட்டசபையில் உறுப்பினர் மூர்த்தி கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதில் அளித்து நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, கூறியதாவது:-

    சென்னைக்கு தற்போது தேவையான குடிநீர் கொள்ளளவு 13.22 டி.எம்.சி. ஆனால் தற்போது 15.560 டி.எம்.சி. குடிநீர் கொள்ளவு உள்ளது. எனவே போதுமான அளவுநீர் இருப்பு உள்ளதால் சென்னையில் இந்த ஆண்டின் 7-வது மாதம் வரை குடிநீர் தட்டுப்பாடு ஏற்பாடாது.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்த போது சென்னையில் குடிநீர் 900 எம்.எல்.டி வழங்கப்பட்டது. தற்போது 1040 எம்.எல்.டி அளவு குடிநீர் சென்னைக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • மீண்டும் தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி அமையும்.
    • பறவைகள் பூங்கா கட்டண குறைப்பு குறித்து மாவட்ட கலெக்டர் முடிவெடுப்பார்.

    திருச்சி:

    தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு திருச்சி மத்திய பேருந்து நிலைய பகுதியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக அடிப்படை வசதிகள் அனைத்தையும் தரமாக அமைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் முடிவுற்று மக்கள் பயன்பாட்டிற்கு வருவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளோம்.

    திருச்சி மத்திய பஸ் நிலையத்தை அகற்றி அந்த இடத்தில் வணிக வளாகம் கட்டப்படும் என தகவல்கள் வெளியாகி இருந்தது. அதற்கு, திருச்சி மத்திய பேருந்து நிலையத்தை ஒருபோதும் அகற்ற மாட்டோம். எப்போதும் போல் வழக்கமாக மக்கள் பயன்பாட்டிற்கு பேருந்து நிலையம் செயல்படும் என தெரிவித்தார்.

    திருச்சி பறவைகள் பூங்கா கட்டண குறைப்பு குறித்து மாவட்ட கலெக்டர் முடிவெடுப்பார்.

    மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை வழங்கவில்லை. பட்ஜெட்டில் கூட தமிழ்நாடு என்ற பெயர் இல்லை தொடர்ந்து புறக்கணித்து வருகிறார்கள். மும்மொழிக் கொள்கையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என தெரிவித்து விட்டோம்.

    ஆகையால் தான் மத்திய அரசு நிதி வழங்க மறுக்கிறது. பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பேசியது எதுவும் நடக்கப் போவதில்லை. மீண்டும் திராவிட மாடல் ஆட்சி தமிழ்நாட்டில் அமையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருச்சி ராம்ஜி நகர் கே. கள்ளிக்குடியில் என்.ஆர். ஐ.ஏ.எஸ். அகாடமி அமைந்துள்ளது.
    • அமைச்சர் கே.என்.நேரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குரூப் 1 தேர்வில் டி.எஸ்.பி. பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முசிறி எஸ். காயத்ரி, சி.சிந்து, கபிலன்,வேளாண்துறை அதிகாரியாக தேர்வு செய்யப்பட்ட அருண் ஜூலியஸ் உள்ளிட்ட மாணவ மாணவியரை பாராட்டி பரிசு வழங்கி பேசுகிறார்

    திருச்சி,

    திருச்சி ராம்ஜி நகர் கே. கள்ளிக்குடியில் என்.ஆர். ஐ.ஏ.எஸ். அகாடமி அமைந்துள்ளது. இங்கு மத்திய மாநில அரசு பதவிகளுக்கு நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி மையத்தில் பயின்ற 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் நாடு முழுவதும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., ஐ.ஆர்.எஸ்.தேர்வுகளில் வெற்றி பெற்று பணியாற்றி வருகிறார்கள்.

    இந்த நிலையில்சமீபத்தில் நடந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்விலும் என்.ஆர்.ஐ.ஏ. எஸ். அகாடமி மாணவர்கள் சாதித்தனர். இதை தொடர்ந்து அந்த மாணவர்களுக்கு நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு பாராட்டு விழா நடத்தப்படுகிறது.

    என்.ஆர்.ஐ. ஏ.எஸ்அ காடமி தலைவர் ஆர். விஜயாலயன் வரவேற்று பேசுகிறார். தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குரூப் 1 தேர்வில் டி.எஸ்.பி. பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முசிறி எஸ். காயத்ரி, சி.சிந்து, கபிலன்,வேளாண்துறை அதிகாரியாக தேர்வு செய்யப்பட்ட அருண் ஜூலியஸ் உள்ளிட்ட மாணவ மாணவியரை பாராட்டி பரிசு வழங்கி பேசுகிறார்.

    மேலும் குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்றவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழாவில் கல்வியாளர்கள்,என்.ஆர். ஐ.ஏ.எஸ். அகாடமி மாணவ- மாணவிகள், அவர்களின் பெற்றோர்கள், அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் என்.ஆர். பப்ளிக் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    முடிவில் மாணவர் எம்.மணிவண்ணன் நன்றி கூறுகிறார்.

    • திருச்சி ஒருங்கிணைந்த பஸ் முனைய பணியின் இரண்டாவது டெண்டர் விடப்பட்டுள்ளது.
    • பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் பைப்புகளை பதிப்பதற்கு சாலைகளை தோண்டி தான் ஆக வேண்டி இருக்கிறது.

    திருச்சி :

    திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு இன்று திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் மா.பிரதீப் குமார் தலைமை தாங்கினார். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு போதைப்பொருள் ஒழிப்பு உறுதி மொழியை வாசிக்க மாணவிகள் அந்த உறுதியை ஏற்றுக்கொண்டனர்.

    பின்னர் அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் அந்த மாவட்ட கலெக்டர் மற்றும் உயர் காவல்துறை அதிகாரிகளை வைத்து இந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்வினை நடத்தி இருக்கிறார். இதில் வழங்கி உள்ள அறிவுரைகளை இங்கு இருக்கக்கூடிய ஐ.ஜி., டி.ஐ.ஜி., கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் பின்பற்றுவார்கள்.

    சட்டமன்ற உறுப்பினர்களிடமும் போதைப்பொருளை தடுக்க காவல்துறைக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என கேட்டிருக்கிறோம். இங்கே பேசிய சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது ஒவ்வொரு பள்ளிகளிலும் இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட வேண்டும் என தெரிவித்திருக்கிறார். போலி லாட்டரி சீட்டு விற்பனையை தடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    திருச்சி ஒருங்கிணைந்த பஸ் முனைய பணியின் இரண்டாவது டெண்டர் விடப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் பைப்புகளை பதிப்பதற்கு சாலைகளை தோண்டி தான் ஆக வேண்டி இருக்கிறது. அந்த பணிகள் முடிவடைந்த இடங்களில் சாலைகள் போடும் பணி வேகமாக நடக்கிறது. மழைக்காலங்களில் சாலை போட்டால் தார் ஒட்டாது. பத்து ஆண்டுகளாக சாலையே போடாதவர்களிடம் எதையும் நீங்கள் கேட்கவில்லை. சாலை போடும் எங்களிடம் மட்டும் கேள்வியாக கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக சென்னையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்ட போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. திருச்சி நிகழ்ச்சியில் மேயர் மு.அன்பழகன், எம்.எல்.ஏ.க்கள் சௌந்தரபாண்டியன், இனிகோ இருதயராஜ், கதிரவன், பழனியாண்டி, அப்துல் சமது, மத்திய மண்ட ஐ.ஜி. சந்தோஷ் குமார், டி.ஐ.ஜி. சரவணசுந்தர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார், மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன், மண்டல தலைவர்கள் துர்காதேவி, ஜெய நிர்மலா மற்றும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவிகள் பங்கேற்றனர்.

    இந்த உறுதி ஏற்பு நிகழ்வில் பங்கேற்ற ஐந்து மாணவிகள் லேசான மயக்கம் அடைந்தனர். அவர்களுக்கு விளையாட்டு மைதானத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மயக்கம் தெளிந்தனர். நீண்ட நேரம் வெயிலில் நீண்ட காரணத்தினால் அவர்களுக்கு சோர்வு ஏற்பட்டதாக கூறப்பட்டது. இந்த சம்பவத்தில் ஆசிரியை ஒருவரும் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    • திருச்சியில் மேலும் ஒரு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை அமைக்க முதல்வருக்கு கோரிக்கை விடுத்திருக்கின்றோம்.
    • மற்ற மாவட்டங்களை விட திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கூடுதல் வசதிகளுடன் இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    திருச்சி :

    திருச்சி மாவட்டத்தில் இன்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். அதன்படி மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட லாவண்யா கார்டன் பகுதியில் புதிய நியாய விலைக்கடையினை அமைச்சர் கே.என்.நேரு திறந்துவைத்து, பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், சட்டமன்ற உறுப்பினர்கள் சவுந்தரபாண்டியன், ஸ்டாலின்குமார், தியாகராஜன், அப்துல் சமது, கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் ஜெயராமன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

    இதையடுத்து திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை நுண்கதிரியல் பிரிவில் மேம்பட்ட மார்பக ஊடுகதிர் பரிசோதனை எந்திரம், டிஜிட்டல் புளூரோஸ்கோபி எந்திரம், டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி, டாப்ளர் அல்ட்ரா சவுண்ட் எந்திரம் என ரூ.3.70 கோடி மதிப்பிலான 4 அதிநவீன கதிரியக்க எந்திரங்கள் வழங்கும் நிகழ்வு இன்று நடந்தது. நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு இந்த அதிநவீன எந்திரங்களை மக்கள் பயன்பாட்டிற்காக மருத்துவ சேவைக்காக தொடங்கி வைத்தார்.

    பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதுவரை இருந்த மார்பக புற்றுநோய் கண்டறியும் எந்திரத்தின் வாயிலாக 5 மி.மீ. வரை இருந்தால் மட்டுமே பாதிப்பு தெரியும். இந்த புதிய நவீன எந்திரத்தில் 1 மி.மீ. அளவுக்கு இருந்தாலும் தெரிந்துவிடும். மேலும் அதிநவீன எக்ஸ்ரே கருவிகளையும் முதலமைச்சரும், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சரும் இந்த நுண் கதிரியல் துறைக்கு வழங்கி உள்ளார்கள்.

    திருச்சியில் மேலும் ஒரு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை அமைக்க முதல்வருக்கு கோரிக்கை விடுத்திருக்கின்றோம். மற்ற மாவட்டங்களை விட திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கூடுதல் வசதிகளுடன் இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் முதலமைச்சர் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளார். கலெக்டர் பிரதீப் குமார் இரவு 1 மணிக்கு முக்கொம்பு அணைக்கு சென்று அதிகாலை 2 மணி வரை அங்கே இருந்து ஊரக உள்ளாட்சி அதிகாரிகள், தாலுகா அதிகாரிகள், காவல்துறையுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனைகள் வழங்கி உள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கலெக்டர் பிரதீப் குமார் பேசும்போது, இப்போது முக்கொம்பு அணைக்கு ஒரு லட்சத்து 40 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேட்டூரில் இருந்து திறந்து விடப்பட்ட ஒரு லட்சத்து 50 ஆயிரம் கன அடி நீர் ஜேடர்பாளையம் அணைக்கு வந்துவிட்டது. தண்ணீர் வேகமாக வருவதால் ஐந்து, ஆறு மணி நேரத்தில் அந்த தண்ணீர் அணைக்கு வந்து விடும். கரையோரம் வசித்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

    காவிரி மற்றும் கொள்ளிடத்தில் நீர் வரத்து அதிகமாக இருப்பதால் யாரும் தண்ணீரில் இறங்க வேண்டாம். தண்ணீரின் மேற்பகுதியை பார்க்கும் போது நீரோட்டம் இல்லாதது போன்று இருக்கும். ஆனால் அடியில் மிக மிக வேகமாக தண்ணீர் சென்று கொண்டிருக்கும். எனவே மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளித்து ஆற்றில் குளிப்பதை தவிர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்

    மாநகராட்சி மேயர் மு‌.அன்பழகன், மாநகராட்சி ஆணையர் ஆர். வைத்தியநாதன், அரசு மருத்துவமனை முதல்வர் டாக்டர்.த.நேரு, சட்டமன்ற உறுப்பினர்கள் அ.சௌந்தர பாண்டியன், செ.ஸ்டாலின் குமார், ந.தியாகராஜன், எம்.பழனியாண்டி, ப.அப்துல் சமது, மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர். அருண்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×