search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்"

    • மத்திய அமைச்சரே பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு இந்த அதிர்ச்சிகரமான பதிலை அளித்துள்ளார்.
    • ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொள்கிறார்.

    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்சி துறை தலைவர் எம்.பி. ரஞ்சன்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மத்தியில் பா. ஜனதா அரசு பொறுப்பேற்றது முதலே எஸ்சி, எஸ்.டி மக்களுக்கு எதிராக அடக்குமுறைகள் கட்ட விழ்த்துவிடப்பட்டு உள்ளது. எஸ்.சி., எஸ்.டி. பெண்களுக்கு எதிராக வன்முறையை கட்ட விழ்த்து விட்ட ஆட்சியாளர்கள், இந்த சமுதாயத்தைச்சேர்ந்த மாணவர்களின் எதிர்காலத்தையும் பாழடிப்பதை நோக்கமாக கொண்டு உள்ளார்கள்.

    கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள மத்திய பல்கலைக்கழ கங்கள், ஐஐடி மற்றும் ஐஐஎம் ஆகிய உயர் கல்வி நிறுவனங்களில் பயின்ற எஸ்சி, எஸ்.டி மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த 13 ஆயிரத்து 626 பேர் சாதிய பாகுபாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கல்வியைத் தொடர முடியாமல் பாதியில் வெளியேறியதாக மத்திய கல்வித் துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இப்போது மத்திய அமைச்சரே பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு இந்த அதிர்ச்சிகரமான பதிலை அளித்துள்ளார். சாதிய பாகுபாடு காரணமாக ஒடுக்கப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த மக்கள் கல்வி பயில முடியாமல் வெளியேறுவதாக அமைச்சரே சொல்வதற்கு வெட்கப்பட வேண்டும்.

    மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் இருந்து வெளியேறும் வகையில், எஸ்சி, எஸ்டி மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு அழுத்தம் தரப்படுகிறது.

    இட ஒதுக்கீட்டுப் பயனால் இப்போதுதான் படிப்படியாக ஒடுக்கப்பட்ட மக்கள் முன்னேறி வருகிறார்கள். இந்த சூழலில் முதுகலைப் படிப்பு வரை படிக்க முடியாத சூழலை பா.ஜ.க. அரசே ஏற்படுத்துகிறதோ என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது. இந்த அராஜக செயலை கண்டித்து கோவையில் 18-ந்தேதி எனது தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி கலந்து கொள்கிறார்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • மின்கொள்முதல் கட்டணத்தை 10 சதவீதம் உயர்த்த மின் வினியோக நிறுவனங்கள் ஒப்புதல் பெற்றுள்ளன.
    • மின்கட்டண உயர்வை கண்டித்து டெல்லியில் காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.

    டெல்லியில் மின்சார கட்டணத்தை உயர்த்த மின் வினியோக நிறுவனங்களுக்கு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் அனுமதி அளித்து இருக்கிறது. அந்த வகையில் மின்கொள்முதல் கட்டணத்தை 10 சதவீதம் உயர்த்த மின் வினியோக நிறுவனங்கள் ஒப்புதல் பெற்றுள்ளன.

    இந்த நிலையில் மின்கட்டண உயர்வை கண்டித்து டெல்லியில் காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் கோஷமிட்டனர்.

    • சிவகங்கை நகரில் அரண்மனை வாசல் முன்பு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி தலைமையில் 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.

    மேலூர்:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதையடுத்து எம்.பி. பதவியில் இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதை கண்டித்து மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கீழையூர் பஸ் நிலையம் முன்புள்ள காந்தி சிலை முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கிராம கமிட்டி தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர்கள் துரைபாண்டி, பொன்.கார்த்திக், வட்டார தலைவர் வைரவன், மணியன், ஒன்றிய கவுன்சிலர் மலைச்சாமி, தனியாமங்கலம் மாதவன், சண்முக வேல், பஞ்சவர்ணம் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து கோஷமிட்டனர்.

    இதே போல் சிவகங்கை நகரில் அரண்மனை வாசல் முன்பு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி தலைமையில் 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். அப்போது அவர்கள் திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட முயன்றனர். உடனே அங்கிருந்த பாதுகாப்பு போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

    • கவர்னரை கண்டித்து நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    அரக்கோணம்:

    அரக்கோணம் பழைய பஸ் நிலையத்தில் மாநில பொது செயலாளர் ராஜ்குமார் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட காங்கிரசார், அரக்கோணம் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    மத்திய அரசு தமிழக கவர்னரை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் அவர் செயல்பாடுகளை வன்மையாக கண்டிக்கின்றோம் என கோஷமிட்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் ஜம்பு ஜவகர்பால் மஞ்சு மாநிலத் தலைவர் நரேஷ் குமார் தக்கோலம் காங்கிரஸ் தலைவர் காந்தி எட்வின் ராஜ் பரிதா உலகநாதன் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • வத்தலக்குண்டுவில் வட்டார காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • காங்கிரஸ் நிர்வாகிகள் ஏராளமானார் கலந்து கொண்டனர்.

    வத்தலக்குண்டு:

    விலைவாசி உயர்வவை குறைக்க வேண்டும். அமலாக்கத்துறை மூலம் காங்கிரஸ் தலைவர்களை பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்பதுஉள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வத்தலக்குண்டுவில் வட்டார காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டார காங்கிரஸ் தலைவர் காமாட்சி தலைமை வகித்தார்.

    காங்கிரஸ் நகர தலைவர்அப்துல் அஜீஸ்,மாநில செயற்குழு உறுப்பினர் கோபால்,மாவட்ட நிர்வாகி அஜிஸ்,மாநில மகிளா காங்கிரஸ் செயலாளர்ஸ்டெல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பட்டிவீரன்பட்டி நகர செயலாளர் பிரசன்னா, தம்பி,மகாதேவன், சேவுகம்பட்டி காங்கிரஸ் கமிட்டி தலைவர்நாகராஜ்,வட்டார பொதுச் செயலாளர் பாஸ்கரன்,வத்தலகுண்டு வட்டார அவைத்தலைவர் ராஜா,செயலாளர் கணேசன்,நிர்வாகி பழனிமுத்து உள்பட ஏராளமானார் கலந்து கொண்டனர்.

    • இந்தியாவில் ஜனநாயகம் கொஞ்சம் கொஞ்சமாக செத்துக்கொண்டிருப்பதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு
    • ராகுல் காந்தி செய்த செயலுக்கான விளைவுகளை சந்திக்க நேரிடும் என ரவி சங்கர் பிரசாத் பதிலடி

    புதுடெல்லி:

    விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி வரி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் இன்று நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் கட்சியின் முக்கிய தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாஜக ஆட்சியில் இந்தியாவில் ஜனநாயகம் கொஞ்சம் கொஞ்சமாக செத்துக்கொண்டிருக்கிறது என்றும், இந்தியாவே அதை பார்த்துக் கொண்டிருக்கிறது என்றும் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்தார்.

    காங்கிரசின் இந்த போராட்டம், காந்தி குடும்பத்தை ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து காப்பாற்றுவதை நோக்கமாகக் கொண்டது என பாஜக பதிலடி கொடுத்துள்ளது.

    இதுபற்றி பாஜக தலைவர் ரவி சங்கர் பிரசாத் கூறியதாவது:-

    காங்கிரஸ் தலைவர் வெட்கக்கேடான மற்றும் பொறுப்பற்ற கருத்துக்களை கூறுகிறார். ராகுல் காந்தியின் பாட்டியும், அப்போதைய பிரதமருமான இந்திரா காந்திதான் எமர்ஜென்சியை விதித்து, மக்களின் ஜனநாயக உரிமைகளை பறித்தார். மக்கள் உங்களை மீண்டும் மீண்டும் நிராகரிக்கும் போது நீங்கள் ஏன் ஜனநாயகத்தை குறை கூறுகிறீர்கள்? உங்கள் கட்சிக்குள் ஜனநாயகம் இருக்கிறதா?

    நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோருக்கு எதிராக அமலாக்கத்துறை விசாரணை நடத்துகிறது. இரண்டு காந்திகளுக்கு 76 சதவீத பங்குகள் உள்ள யங் இந்தியன் நிறுவனம் எப்படி ரூ.5,000 கோடிக்கு மேல் மதிப்புள்ள நேசனல் ஹெரால்டு சொத்துக்களை வெறும் ரூ.5 லட்சம் முதலீட்டில் வாங்கியது என்பது குறித்து ராகுல் காந்தி பதில் அளிக்க வேண்டும்.

    அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை ரத்து செய்ய நீதித்துறை மறுத்துவிட்டது. இப்போது அவர் விசாரணை அமைப்புகளை குற்றம் சாட்டுகிறார். ராகுல் காந்தி செய்த செயலுக்கான விளைவுகளை சந்திக்க நேரிடும். நீங்கள் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் மற்றும் அமலாக்கத்துறையின் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். விலைவாசி உயர்வு மற்றும் வேலையில்லா திண்டாட்டம் என்று சாக்குபோக்கு சொல்லி ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பாராளுமன்றத்தில் இருந்து வீதிக்கு வந்து காங்கிரஸ் நடத்திய பேராட்டங்களால், அக்கட்சியின் தலைவர்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளின் உண்மை நிலவரத்தை மாற்ற முடியாது என மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.

    • ஜி.எஸ்.டி உயர்வுக்கு எதிர்ப்பு
    • ஏராளமானோர் பங்கேற்றனர்

    ஆரணி:

    ஆரணி டவுன் மணிகூண்டு அருகில் காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் அண்ணாமலை தலைமையில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மேலும் ஜி.எஸ்.டி உயர்வு எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட விலையை உயர்த்திய மத்திய அரசை கண்டித்து ஆர்பாட்டத்தில் எடுத்துரைக்கபட்டடன.

    இந்நிகழ்ச்சியில் முன்னாள் பாராளுமன்ற மாணவர் அணி தலைவர் பொன்னையன் எஸ்.டி.செல்வம் பிரபு உதயகுமார், உள்ளிட்டோர் பங்கேற்பு.

    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • திண்டுக்கல்லில் தலைமை தபால் அலுவலகம் முன்பு காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    திண்டுக்கல்:

    விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், வேலை வாய்ப்பை அதிகரிக்க வேண்டும், ராகுல்காந்தி, சோனியா காந்தி மீது அமலாக்கத்துறை மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை கைவிடவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    திண்டுக்கல் தலைமை தபால் அலுவலகம் முன்பு மாநகர் மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் மச்சக்காளை, முகமதுசித்திக், ரோஜாபேகம், கிழக்கு மண்டலதலைவர் கார்த்திக், ஜெகநாதன், வேங்கைராஜா, ஷாஜகான், அப்துல்ரகுமான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×