என் மலர்
நீங்கள் தேடியது "அமைதிப்பேரணி"
- முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாளையொட்டி அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணியினர் அமைதிப்பேரணி நடத்தினர்.
- மதுரை தமிழ்ச் சங்கத்தில் இருந்து மாவட்ட நீதிமன்றம் வரை அமைதி ஊர்வலம் நடைபெற்றது.
மதுரை
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினம் மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணி சார்பில் அனுசரிக்கப்பட்டது. மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.பி. கோபால கிருஷ்ணன் தலைமை வகித்தார்.
மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் அய்யப்பன் எம்.எல்.ஏ., வடக்கு மாவட்ட செயலாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதுரை தமிழ்ச் சங்கத்தில் இருந்து மாவட்ட நீதிமன்றம் வரை அமைதி ஊர்வலம் நடைபெற்றது.
பின்னர் அங்குள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மாவட்ட செயலாளர்கள் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் பி.எஸ். கண்ணன், வி.கே.எஸ்.மாரிசாமி, முத்து இருளாண்டி,அண்ணா தொழிற்சங்க செயலாளர் வையமாரி துரை, மீனவரணி செயலாளர் ராமநாதன், ஒத்தக்கடை பாண்டியன், உசிலைபிரபு, கருப்பையா, கொம்பையா,கண்ணன், வேல்முருகன், ஆரைக்குடி முத்துராமலிங்கம், மிசா செந்தில் மற்றும் 200 பெண்கள் உள்பட 1000- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
- கருணாநிதியின் 6-வது ஆண்டு நினைவு தினம்.
- தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்கின்றனர்.
சென்னை:
மறைந்த தி.மு.க. தலைவர் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 6-வது ஆண்டு நினைவு தினம் வருகிற 7-ந்தேதி நடைபெறுகிறது.

இதையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த பல்வேறு கட்சித்தலைவர்கள், பொது மக்கள் வருகை தருவார்கள் என்பதால் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வினர் அமைதிப் பேரணி செல்கின்றனர். அன்றைய தினம் காலை 7 மணிக்கு அண்ணாசாலை ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள கருணாநிதியின் சிலை அருகில் இருந்து அமைதிப் பேரணி புறப்பட்டு காமராஜர் சாலையில் உள்ள கருணாநிதியின் நினைவிடம் சென்றடைகிறது.
அங்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருணாநிதியின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார். அவருடன் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணைப் பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட தி.மு.க. முன்னணியினர், நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்கின்றனர்.
இதில் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், முன்னாள், இன்னாள் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், தலைமைக் கழக செயலாளர்கள், தலைமை செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட கழக பகுதி கழக, வட்டக்கழக நிர்வாகிகள், மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள், இளைஞரணி, மகளிரணி, மாணவரணி, இலக்கிய அணி, தொழிலாளர் அணி, வழக்கறிஞர் அணி, மகளிர் தொண்டர் அணி, தகவல் தொழில் நுட்ப அணி உள்பட அனைத்து அணியினரும் கருணாநிதியின் நினைவை போற்றி அஞ்சலி செலுத்த திரண்டு வாரீர் என சென்னை கிழக்கு, சென்னை வடக்கு, சென்னை வடகிழக்கு, சென்னை மேற்கு, சென்னை தென்மேற்கு, சென்னை தெற்கு ஆகிய மாவட்ட கழகங்களின் சார்பில் மாவட்டக் கழக செயலா ளர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
- துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், சேகர்பாபு, எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி செலுத்துகிறார்.
அண்ணாவின் 56-வது நினைவு தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வினரின் அமைதிப்பேரணி தொடங்கியது.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், சேகர்பாபு, எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அமைதி பேரணி வாலாஜா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலை அருகிலிருந்து புறப்பட்டு அண்ணா சதுக்கத்தை சென்றடையும். இதைத் தொடர்ந்து பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி செலுத்துகிறார்.
அண்ணா நினைவு தினத்தையொட்டி தி.மு.க.வினர் அமைதிப் பேரணியால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
போர் நினைவு சின்னத்தில் இருந்து நேப்பியார் பாலம் நோக்கி வரும் வாகனங்கள் காமராஜர் சாலையில் செல்ல அனுமதியில்லை. கொடி மரச்சாலை வழியாக திருப்பி விடப்படும்.
கலங்கரை விளக்கத்தில் இருந்து காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள், காந்தி சிலை வரை அனுமதிக்கப்பட்டு, ராதா கிருஷ்ணன் சாலை வழியாக திருப்பி விடப்படும்.
பெல்ஸ் சாலை மற்றும் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் இருந்து வரும் வாகனங்கள், உழைப்பாளர் சிலை செல்ல அனுமதிக்கப்படாது.
வாலாஜா சாலை - பெல்ஸ் சாலை மற்றும் வாலாஜா சாலை - திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை சந்திப்பில் திரும்பி அண்ணா சிலை வழியாக செல்லலாம்.
- அமைதி பேரணி வாலாஜா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலை அருகிலிருந்து புறப்பட்டு அண்ணா சதுக்கத்தை சென்றடைந்தது.
- பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
அண்ணாவின் 56-வது நினைவு தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வினரின் அமைதிப்பேரணி நடைபெற்றது.
அமைதிப்பேரணியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், சேகர்பாபு, எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, மேயர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அமைதி பேரணி வாலாஜா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலை அருகிலிருந்து புறப்பட்டு அண்ணா சதுக்கத்தை சென்றடைந்தது.
பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அவரைத்தொடர்ந்து துணை முதலமைச்சர், அமைச்சர்கள், எம்.பி.க்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
- திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயராமகிருஷ்ணன் அழைப்பு.
- காலை 9.30 மணிக்கு பழைய பேருந்து நிலையத்திலிருந்து அமைதிப் பேரணியாக சென்று புதிய பேருந்து நிலையம் வரை நடைபெற உள்ளது.
மடத்துக்குளம் :
திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் இரா.ஜெயராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 4-ம் ஆண்டு நினைவு நாளை யொட்டி நாளை 7-ந் தேதி காலை 9 மணியளவில் கலைஞரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும்.ஆட்சியில் இருந்த நேரங்களில் பல உன்னத சட்டதிட்டங்களை நிலை நாட்டிய தமிழினத் தலைவர், நம்மை விட்டுப் பிரிந்தாலும் அவர் மீது கொண்ட கொள்கையாலும், சரித்திர சாதனைகளாலும், கலாச்சார நினைவுகளோடு நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
கலைஞரின் நினைவு நாளையொட்டி ஏழை, எளிய பொதுமக்களுக்கும், ஆதரவற்றோர், முதியோர்களுக்கும், மாணவ, மாணவிகளுக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர், கழக செயலாளர்கள், பொறுப்பாளர்கள், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வார்டு செயலாளர்கள், மற்றும் கிளை கழக செயலாளர்கள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், ஏற்பாடு செய்திட வேண்டும்.மேலும் அவரவர் பகுதிகளில் வீட்டு முன்பு கலைஞரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நாளை காலை 9.30 மணி அளவில் உடுமலைப்பேட்டை பழைய பேருந்து நிலையத்திலிருந்து அமைதிப் பேரணியாக சென்று புதிய பேருந்து நிலையம் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா சிலை முன்பு வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.இந்நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள், துணை அமைப்புகளின் அமைப்பாளர்கள், கழக உடன்பிறப்புகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.