search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிராம"

    • கிராம நிர்வாக அலுவலர்களை ஈடுபடுத்துவதில் விலக்களிக்க வேண்டும்அரங்க. வீரபாண்டியன் வலியுறுத்தல்
    • கணினி பயிற்சியையும் புறக்கணிப்பதாக நாங்கள் தெரிவித்தோம்

    புதுக்கோட்டை, 

    தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் மாநில செயலாளர் அரங்க. வீரபாண்டியன் வெளியி ட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    டிஜிட்டல் பயிர் சர்வே முறையை அடிப்படையாகக் கொண்டு சாகுபடியை பதிவேற்ற தமிழக அரசு திட்ட மிட்டுள்ளது.

    மேற்படி திட்டம் அண்டை மாநிலமான ஆந்திராவில் முதலில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வேளாண் அதிகாரிகள் மற்றும் நில அளவர்கள் ஆகியோர் மூலம் செய்து வந்தனர்.

    பின்னர் தற்போது 2022 -2023-ல் ஒவ்வொரு கிராமங்களிலும் "சச்யவாலா" என்று பல துறைகளை சார்ந்த ஒருங்கிணைந்த குழு மூலம் இத்திட்டம் பயிர் சர்வே எடுக்கப்பட்டு வருகிறது.

    அதே நேரம் பேரிடர் காலங்களில் மட்டும் கிராம நிர்வாக அலுவலர்கள் இழப்பீடுகளை கணக்கிட இப்பணியில் நேரடியாக செயல்படுத ்தப்படுகிறார்கள்.

    கர்நாடக மாநிலத்தில் ஒவ்வொரு கிராமத்திற்கும் டிஜிட்டல் பயிர் சர்வே பணியை செய்ய 1000 முதல் 1500 உட்பிரிவுகளுக்கு தலா ஒரு நபர் வீதம் என நியமித்து ஒரு உட்பிரிவுக்கு ரூபாய் பத்து என கர்நாடக வேளாண்மை துறை மூலம் வழங்கப்படுகிறது.

    எனவே இதுபோன்று தனி நபர்களை நியமித்து நமது மாநிலத்திலும் இப்ப பணியை செய்ய வேண்டும்.

    இதற்காக கடந்த 8-ந் தேதி தமிழ்நாடு அரசின் வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் வருவாய் செயலாளர் ஆகியோர்களை தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் நிர்வாகிகள் சுரேஷ், ராஜேந்திரன், முத்துச்செல்வன், நல்ல கவுண்டன், விஸ்வநாதன் உள்ளிட்டவருடன் சென்று இடர்பாடுகளை கூறியுள்ளோம்.

    இது தொடர்பான கணினி பயிற்சியையும் புறக்கணிப்பதாக நாங்கள் தெரிவித்தோம் . இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பொன். ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
    • நாகர்கோவில் மாநகரில் பல இடங்களில் மான்கி பாத் நிகழ்ச்சி நேரில் காண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    கன்னியாகுமரி:

    பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிப் பொறுப்பு ஏற்றது முதல் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை தோறும் மான்கி பாத் என்ற மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் மக்களிடம் உரையாற்றி வருகிறார். இந்த நிலையில் 100-வது மான் கி பாத் நிகழ்ச்சி இன்றுநாடு முழுவதும் ஒளிபரப்பப்பட்டது.

    நாகர்கோவில் மாநகரில் பல இடங்களில் மான்கி பாத் நிகழ்ச்சி நேரில் காண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதுபோல நெச வாளர் காலனியில் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சி யை முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. ஸ்ரீ வைகுண்டத்தில் மணல் கொள்ளையை தடுத்த கிராம நிர்வாக அதிகாரி வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.

    தமிழக முதல்-அமைச்சர் கட்டுப்பாட்டில் இருக்கும் துறையில் கூட மணல் கொள்ளையை தடுக்க முடியவில்லை. நேர்மையான அதிகாரிகள் பணி செய்ய முடியவில்லை. தமிழகத்தில் ரேஷன் பொருட்கள் வீடு தேடி கொண்டு கொடுக்கப்படும் என்று கூறியது போன்று மதுவை வீடு தேடிக் கொண்டு கொடுக்காமல் இருந்தால் சரி. காங்கிரஸ் ஆட்சியின் மிசா. பா.ஜ.க. ஆட்சியில் வருமானவரித்துறை சோதனை. இந்த இரண்டுக்கும் வித்தியாசம் இல்லை என்று கூறிய உதயநிதி ஸ்டாலின் குறித்து கேள்வி எழுப்பிய போது மிசாவின் கொடுமைகளை அவரது தந்தையிடம் கேட்டு தெரிந்துகொள்வது நல்லது. அல்லது ஆர்காடு வீராசாமியிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் முன்பு எப்போதும் இல்லாத அளவில் இந்த முறை பா.ஜ.க. மகத்தான வெற்றி பெறும்.

    குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு அதிக அளவில் கனிம வளங்கள் கடத்தப்பட்டு வருகிறது. பலமுறை குற்றம் சாட்டியும் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை. அச்சம் காரணமாக குமரி மாவட்ட அதிகாரிகள் ஒதுங்கி நிற்கிறார்கள். நாடாளு மன்றத் தேர்தலில் பா.ஜ.க., அ.தி.மு.க. கட்சிகளுக்கு இடையேயான சீட்டு ஒதுக்கீடு பேச்சுவார்த்தை முடிந்த பிறகு தான் தெரியும். பா.ஜ.க. மீதான குற்றச்சாட்டுகளுக்கு முறையான நடவடிக்கை எடுக்கட்டும். இதுதொடர்பாக மாநில தலைவர் ஏற்கனவே பதில் கூறியிருக்கிறார். கலைஞர் முதல்வராக, திரைப்பட தயாரிப்பாளராக, திரைக்கதை எழுத்தாளராக பல முகங்கள் அவருக்கு உண்டு. அவருடைய நல்ல விஷயங்களை பார்க்க வேண்டும். அவருக்கு நிறைய புகழ் சேர்க்க முடியும். ஒரு பேனா மட்டும் போதும் என்று கூறுவது பேதமை. பேனாவிற்கு அப்பாற்பட்டு தமிழகத்தில் அவர் மிக முக்கிய தலைவர். இது எனது சொந்த கருத்து. பேனா மட்டுமல்ல அவருக்கு நிறைய செய்ய முடியும். அதனையும் அவர்கள் யோசிக்க வேண்டும். கலைஞருக்கு உரிய மரியாதை அவருக்கு கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி ஊராட்சி ஒன்றியம் கூடச்சேரியில் உள்ளாட்சி தின சிறப்பு கிராம சபா கூட்டம் நடைபெற்றது.
    • இணைய வழி வீட்டு வரி மற்றும் சொத்து வரி செலுத்துதல். மகளிர் சுய உதவி குழு உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி ஊராட்சி ஒன்றியம் கூடச்சேரியில் உள்ளாட்சி தின சிறப்பு கிராம சபா கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் சுப்பிரமணி தலைமை வகித்தார். ஊராட்சி துணைத் தலைவர் சத்யா முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் உதயகுமார் வரவேற்றார்.

    கூட்டத்தில், உள்ளாட்சி தின சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்த உத்தரவிட்ட முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்தல். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவ டிக்கை எடுத்தல். இணைய வழி வீட்டு வரி மற்றும் சொத்து வரி செலுத்துதல். மகளிர் சுய உதவி குழு உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் ஊராட்சி உறுப்பினர்கள், மகளிர் சுய உதவி குழுவினர், சுகாதாரத் துறையினர், மருத்துவத் துறையினர், கிராம நிர்வாக அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள், வேளாண்மை துறையினர், ஊர் பொது மக்கள் உள்ளிட்ட ஏராள மான கலந்து கொண்டனர்.

    • கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் ராஜு தலைமையில் நடைபெற்றது.
    • கூட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் தலைமை ஆசிரியர், அங்கன் வாடி பணியாளர்கள், கிராம செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றியம் ஆலத்தம்பாடி ஊராட்சியில் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் ராஜு தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் தலைமை ஆசிரியர், அங்கன் வாடி பணியாளர்கள், கிராம செவிலியர்கள் மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர் மற்றும் பெற்றோர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • பரமத்தி வட்டாரத்தில் வேளாண்மை உழவர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகளை குடுமியான் மலை, சமிதி-ஸ்டாமின் இயக்குநர் சங்கரலிங்கம் ஆய்வு மேற்கொண்டார்.
    • கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் இருட்டணை கிராமத்தில் செயல்படுத்தப்படும் தரிசு நிலத்தொகுப்பு ஆய்வு செய்தார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி வட்டாரத்தில் வேளாண்மை உழவர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகளை குடுமியான் மலை, சமிதி-ஸ்டாமின் இயக்குநர் சங்கரலிங்கம் ஆய்வு மேற்கொண்டார். ச.செருக்கலை, இருட்டணை, மேல்சாத்தம்பூர், குன்னமலை வருவாய் கிராமங்களில் இந்த ஆய்வு நடந்தது. அப்போது செருக்கலை கிராமத்தில் தரிசு நில மேம்பாடு தொகுப்பில் பருத்தி, சோளம், ஆமணக்கு பயிர்களின் வளர்ச்சி அதன் மூலம் விவசாயிகள் பெற்ற பலன்களை ஆய்வு செய்தார்.

    கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் இருட்டணை கிராமத்தில் செயல்படுத்தப்படும் தரிசு நிலத்தொகுப்பு ஆய்வு செய்தார். ஆய்வின் போது விவசாயி சுமதி தனது நிலத்தில் உள்ள சீமை கருவேல் மரங்களை வயலில் இருந்து வெட்டி எடுத்து மீண்டும் பயிர் செய்ய உள்ளதை எடுத்துக்கூறினார்.

    விதை கிராம திட்டத்தின் கீழ் மேல்சாத்தம்பூர் கிராமத்தில் நிலக்கடலை டி.எம்.வி-14 (சான்று விதை) விவசாயி சந்திரசேகர் பயிர் செய்துள்ளார் அவரது வயலில் ஆய்வு மேற்கொண்டு மேற்கொள்ளப்பட்ட தொழில் நுட்பங்களான விதை நேர்த்தி செய்தல், அடியுரம், மேலுரம், களவன்கள் களைதல், நுண்ணூட்டம் இடுதல், விதை கிராம திட்டத்தின் கீழ் பதிவுகள் செய்யும் பதிவேடுகளை ஆய்வு செய்தார்.

    விவசாயிகளுக்கு கோடைஉழவு, விதைசான்று பெற்ற விதைகளை பயன்படுத்துவது, விதை நேர்த்தி செய்தல், நுண்ணூட்டங்கள், பயறு வகை பயிர்களுக்கு டி.ஏ.பி கரைசல் தெளிப்பு, பருவத்திற்கேற்ற பயிர், பயிர் சுழற்சி, பயிர் இடைவெளியினை பராமரிப்பது, ஊற்றமேற்றிய தொழு உரமிடுதல், உயிர் உரங்களை பயன்படுத்துதல், நுண்ணீர் பாசனம், மழை நீரை சேமித்தல் போன்றவைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளித்தார். ஆய்வின்போது நாமக்கல் வேளாண்மை இணை இயக்குநர் அசோகன், வேளாண்மை துணை இயக்குநர்கள் ஜெகதீசன் (மத்தியத்திட்டம்),.ராஜ கோபால் (மாநிலத்திட்டம்) மற்றும் பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்தசாமி, வேளாண்மை அலுவலர் பாபு, துணை வேளாண்மை அலுவலர் குழந்தைவேல், உதவி விதை அலுவலர்கள் மோகன்ராஜ், ராதாகிருஷ்ணன், உதவி வேளாண்மை அலுவலர்கள் நாகராஜன், பிரபு, பூபதி, கவுசல்யா ஆகியோர் உடன் இருந்தனர்.

    ×