என் மலர்
நீங்கள் தேடியது "வினியோகம்"
- குடிநீர் வினியோகம் செய்யும் பிரதான குழாய் பழுதடைந்துள்ளது.
- குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை மாநகராட்சி பகுதிகளுக்கு திருமானூர் தலைமை நீரேற்று நிலையத்தில் இருந்து வெண்ணாறு தலைமை நீரேற்று நிலையத்திற்கு வரும் குடிநீர் வினியோகம் செய்யும் பிரதான குழாய் பழுதடைந்துள்ளது.
இதனை ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் சரி செய்யும் பணிகள் நாளை (திங்கள் கிழமை ) முதல் 30-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
எனவே 1-வது வார்டு முதல் 51-வது வார்டு வரையிலான அனைத்து வார்டுகளிலும் வருகிற 29-ந் தேதி முதல் அடுத்த மாதம் (டிசம்பர்) 1-ந் தேதி வரை 3 நாட்கள் குடிநீர் வினியோகம் இருக்காது.
பொதுமக்கள் தேவையான அளவு குடிநீரை சேமித்து வைத்து கொள்ள வேண்டும். குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மயிலாடுதுறை, மணக்குடி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
- சுற்றியுள்ள கிராமங்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை, மணக்குடி ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இதை முன்னிட்டு இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான மயிலாடுதுறை நகரம், மூவலூர், வடகரை, சோழசக்கரநல்லூர், மங்கநல்லூர், ஆனதாண்டவபுரம், வழுவூர், கிளியனூர் ஆகிய பகுதிகளுக்கும் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை மயிலாடுதுறை மின்வாரிய இயக்குதல் மற்றும் பராமரித்தல் செயற்பொறியாளர் (பொறுப்பு) கலியபெருமாள் தெரிவித்துள்ளார்.
- குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
- ரூ.15 அதிகமாக பெற்றது நேர்மையற்ற வணிக நடைமுறை
நாகர்கோவில்:
நாகர்கோவிலை அடுத்த வட்டகரையை சேர்ந்தவர் மேரி புஷ்பராணி.
இவர் நாகர்கோவிலில் உள்ள தனியார் கியாஸ் நிறுவனத்திடம் கியாஸ் சிலிண்டர் முன் பதிவு செய்திருந்தார். இதற்காக கொடுத்த கட்டண ரசீதில் சிலிண்டரின் விலை ரூ.969 மற்றும் ரூ.15 ஆக மொத்தம் ரூ.984 என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால் சிலிண்டரின் விலை, வரிகள் உள்பட சேர்த்து ரூ.969 மட்டுமே. எனவே ரூ.15 அதிகமாக பெற்றது நேர்மையற்ற வணிக நடைமுறை என அவர் நிறுவனத்திடம் கூறினார். மேலும் தன்னிடம் கூடுதலாக வாங்கிய ரூ.15-ஐ திருப்பி தர வேண்டுமென்று கியாஸ் சிலிண்டர் சப்ளை செய்யும் நிறுவனத்திடம் மேரி புஷ்பராணி கேட்டார்.
அதோடு பல நுகர்வோர் குறைதீர்க்கும் அரசு அமைப்புகளிடமும் இது குறித்து புகார் செய்தார். மேலும் வக்கீல் மூலம் விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன் பின்னரும் அவருக்கு உரிய பதில் கிடைக்கவில்லை. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மேரி புஷ்பராணி குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் விசாரித்தனர்.
இதைத் தொடர்ந்து கியாஸ் நிறுவனத்தின் சேவை குறைப்பாட்டினை சுட்டிக்காட்டி பாதிக்கப்பட்ட மேரி புஷ்பராணிக்கு நஷ்ட ஈடு (அபராதம்) ரூ.7500 வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது. மேலும் மேரி புஷ்பராணியிடம் கூடுத லாக வசூலிக்கப்பட்ட ரூ.15 மற்றும் வழக்கு செலவு தொகை ரூ.2,500 என மொத்தம் ரூ.10,015-ஐ ஒரு மாத காலத்துக்குள் வழங்க வேண்டும் என்றும் உத்தர விடப்பட்டது.
- மத்திய, மாநில அரசுகள் சார்பில் பழ வகை சாகுபடிக்கு ஏராளமான மானிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
- மாம்பழம் காய்ப்புக்கு வரும் வரை ஊடுபயிராக காய்கறி பயிர்களை சாகுபடி செய்யலாம்.
மடத்துக்குளம்:
மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலைத்துறை சார்பில் மா ஒட்டுச்செடிகள் மானிய விலையில் வழங்கப்படுகிறது.இது குறித்து மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் சுரேஷ்குமார் கூறியதாவது:-
முக்கனிகளில் முதலிடத்திலுள்ள மாம்பழம் உற்பத்தி 55 சதவீதம் இந்தியாவில் உற்பத்தியாகிறது. மத்திய, மாநில அரசுகள் சார்பில் பழ வகை சாகுபடிக்கு ஏராளமான மானிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.மா சாகுபடிக்கு நல்ல வடிகாலுடன் கூடிய செம்மண் ஏற்றதாகும். ஜூலை முதல் டிசம்பர் வரை மா சாகுபடிக்கு ஏற்ற பருவமாகும்.தமிழகத்தில் நீலம், பெங்களூரா, நடுச்சாலை, செந்தூரம், அல்போன்சா, ஹி மாயூதீன், மல்கோவா ஆகிய ரகங்கள் அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது.
மா சாகுபடிக்கு முன் நிலத்தை நன்கு உழவு செய்து தலா ஒரு மீட்டர் நீளம், அகலம் மற்றும் ஆழம் தோண்டி குழி ஒன்றுக்கு 10 கிலோ தொழு உரம் மற்றும் மேல் மண் உரம் நன்கு கலந்து குழியின் முக்கால் பாகம் வரை மூடி ஒட்டுக்கட்டிய செடிகளை நட வேண்டும்.செடிக்கு செடி, 5 மீட்டர் முதல் 10 மீட்டர் வரை அடர் நடவு முறையில் அல்போன்சா, பங்கனபள்ளி மல்லிகா போன்ற ரகங்கள் நடலாம். மாம்பழம் காய்ப்புக்கு வரும் வரை ஊடுபயிராக காய்கறி பயிர்களை சாகுபடி செய்யலாம்.தழை, மணி சாம்பல் சத்து கொண்ட உரங்களை செப்டம்பர் , அக்டோபர் மாதங்களில் இட வேண்டும். மூன்று ஆண்டுக்கு ஒரு முறை கவாத்து செய்ய வேண்டும்.
மடத்துக்குளம் வட்டாரத்தில் ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட கிராமங்களிலுள்ள விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியத்தில் மா செடிகள் வழங்கப்படுகிறது.
சிட்டா, அடங்கல், உரிமைச் சான்று, ரேஷன் கார்டு நகல், ஆதார் நகல், வங்கி கணக்கு நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ-2 ஆகியவற்றுடன் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம்.மேலும் விபரங்களுக்கு உதவி தோட்டக்கலை அலுவலர்கள், தாமோதரன் 96598 38787; நித்யராஜ் 63821 29721 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் தெரிவித்தார்.
- தினமும் 200 பேருக்கு வழங்க ஏற்பாடு
- பொது மக்களுக்கு ரூ.1000 ரொக்கப் பணத்தை வழங்கவும் அதிகாரிகள் நடவடிக்கை
நாகர்கோவில்:
பொங்கல் பண்டிகையை யொட்டி அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ஒரு கிலோ பச்சை அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு, ரூ.1000 ரொக்கம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இதையடுத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க நடவடிக்கை எடுக் கப்பட்டு வருகிறது.குமரி மாவட்டத்தை பொருத்த மட்டில் 764 ரேசன் கடைகள் மூலமாக 5 லட்சத்து 74 ஆயிரத்து 764 ரேசன் கார்டு தாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணியில் ரேசன் கடை ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
அந்தந்த ரேஷன் கடை ஊழியர்கள் ரேசன் கார்டு தாரர்களுக்கு டோக்கன் வழங்கி உள்ளனர். தினமும் காலை 100 பேருக்கும் மாலையில் 100 பேருக்கும் பொங்கல் தொகுப்பு வழங்க டோக்கன் வழங்கப் பட்டுள்ளது. நாளை 9-ந் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்புகள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளது.
இதற்கான தொடக்க விழா நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ் மேயர் மகேஷ், கலெக்டர் அரவிந்த் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். இதை தொடர்ந்து அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசுதொகுப்பு பொது மக்களுக்கு வழங்கப் படுகிறது. இதற்கு தேவையான பொருட்கள் அந்தந்த ரேஷன் கடை களுக்கு அனுப்பி வைக்கப் பட்டு வருகிறது.
ஏற்கனவே அரிசி சீனி வகைகள் முழுமையாக அனைத்து ரேசன் கடை களுக்கும் அனுப்பி வைக்கப் பட்ட நிலையில் கரும்பு அனுப்பும் பணி தற்பொழுது நடைபெற்று வருகிறது.
நாளை ரேஷன் கடை ஊழியர்களிடம் பொது மக்களுக்கு வழங்க உள்ள ரூ.1000 ரொக்கப் பணத்தை வழங்கவும் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதைத் தொடர்ந்து ரேஷன் கடை மூலமாக பொங்கல் தொகுப்பு வழங்கப்படும்.
கூட்டத்தினை கட்டுப்ப டுத்தும் வகையில் பொது மக்களுக்கு வழங்கப்பட்ட டோக்கனின் அடிப்படையில் அந்தந்த ரேஷன் கடை களுக்கு சென்று பொங்கல் தொகுப்புகளை பெற்று செல்லுமாறு அதிகா ரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
- பூண்டி மற்றும் ராகவம்மாள்புரம் துணை மின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
தஞ்சாவூர்:
தஞ்சை அருகே உள்ள பூண்டி மற்றும் ராகவம்மா ள்புரம் துணை மின் நிலையங்களில் நாளை ( வியாழக்கிழமை ) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளன.எனவே இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் பூண்டி, சாலியமங்கலம், திருபுவனம் , மலையர்நத்தம், குடிகாடு, செண்பகபுரம் , பள்ளியூர், களஞ்சேரி, இரும்பு தலை, ரங்கநாதபுரம், சூலியக் கோட்டை, கம்பர்நத்தம், அருந்தவபுரம், வாளமார்கோட்டை, ஆர்சுத்திப்பட்டு, அருமலை கோட்டை, சின்ன புலிகுடிகாடு, நார்த்தேவன், குடிக்காடு அரசப்பட்டு, வடக்கு நத்தம், மூர்த்தி அம்மாள்புரம், பனையக்கோட்டை, சடையார் கோவில், துறையு ண்டார் கோட்டை ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.மேற்கண்ட தகவலை மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்.
- சாலை விரிவாக்கம் பணி நடைபெறுவதால் மின்கம்பங்கள் மாற்றும் பணி நடக்க உள்ளது.
- காலை 9.30 மணி மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
தஞ்சாவூர்:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தஞ்சை நகர உதவி செயற்பொறியாளர் கருப்பையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை ஈஸ்வரி நகர் பகுதியில் நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை விரிவாக்கம் பணி நடைபெறுவதால் மின்கம்பங்கள் மாற்றும் பணி நடக்க உள்ளது.
இதனால் தஞ்சை தொகுப்பு துணை மின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் தோப்புகுளம், ராமகிருஷ்ணாநகர், ஸ்டேட் பேங்க் காலனி, விக்டோரியா நகர், முனிசிபல் காலனி, முத்தமிழ் நகர், சிலப்பதிகார வீதி , பெரியார் நகர், ரெயில் நகர், தமிழ் நகர், ரெட்டிபாளையம் ரோடு, மானோஜிப்பட்டி ரோடு, ஈஸ்வரி நகர், மருத்துவக்கல்லூரி சாலை 3-வது கேட் மற்றும் மேற்கு பகுதியில் உள்ள தனியார் செல்போன் கடை வரை மெயின் சாலையில் உள்ள வணிக வளாகங்களில் நாளை (சனிக்கிழமை) காலை 9.30 மணி மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 943 தொழிலாளர்களுக்கு ரூ3.58 கோடி வினியோகம் செய்யப்படுவதாக தொழிலாளர் நலத்துறை தெரிவித்துள்ளது.
- பணியாற்றிய நிறுவனங்களில் இருந்து பெற்று கொடுக்கப்பட்டுள்ளது.
மதுரை
மதுரை மண்டல தொழிலாளர் இணை கமிஷனர் மற்றும் குறைந்த பட்ச சம்பள சட்ட கமிஷனர் சுப்பிரமணியன் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தொழிலாளர் கமிஷனர் அறிவுறுத்தலின்படி மதுரை மண்டல தொழிலாளர் இணை கமிஷனர் அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள தொழில்நிறுவனங்களில் குறைந்தபட்ச சம்பள சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு மாதமும் ஒரு தொழில்நிறுவனத்தில் சிறப்பாய்வு செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி மேற்கண்ட மாவட்டங்களில் உள்ள தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் கடந்தாண்டு ஆய்வு மேற்கொண்டதில், குறைந்தபட்ச சம்பள சட்டம் 1948-ன்படி, தொழில் வணிக நிறுவனங்களில் இந்த சட்டத்தின்படி சம்ப ளம் வழங்காத பணியா ளர்கள் தரப்பில் கேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. மதுரை மாவட்டத்தில் 462 தொழிலாளர்கள் தங்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் வழங்கப்படவில்லை என்று புகார் தெரிவித்திருந்தனர்.
- தஞ்சை நகர துணை மின் நிலையத்தில் கம்பி தரம் உயர்த்தும் பணி நாளை நடைபெற உள்ளது.
- அலிகுப்தா தைக்கால் ஆகிய இடங்களில் மின் வினியோகம் இருக்காது.
தஞ்சாவூர்:
தஞ்சை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கருப்பையா வெளியி–ட்டுள்ள செய்தி–க்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை நகர துணை மின் நிலையத்தில் கம்பி தரம் உயர்த்தும் பணி நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது.
இதனால் கீழவாசல் மின் வழித்தடத்தில் உள்ள கரம்பை முதல் புறவழி–ச்சாலை வரையும், வ.உ.சி. நகரில் மின் வழித்தடத்தில் ராமநாதன் மருத்துவமனை, மைனர் ஜெயில் ரோடு, திருச்சி ரோடு, தீர்க்க சுமங்கலி மகால், அலிகுப்தா தைக்கால் ஆகிய இடங்களில் மின் வினியோகம் இரு–க்காது.
இவ்வாறு அதில் கூற–ப்பட்டுள்ளது.
- பூக்குளம் மின்பாதையில் மின்கம்பிகள் மாற்றும் பணி நாளை நடக்கிறது.
- நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.
தஞ்சாவூர்:
தஞ்சை கரந்தை துணை மின் நிலையத்தில் பூக்குளம் மின்பாதையில் மின்கம்பிகள் மாற்றும் பணி நாளை (செவ்வாய்கிழமை) நடக்கிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அன்பழகன்நகர், ஆனந்தம்நகர், மேட்டுத்தெரு, சுங்கான்திடல், சின்னத்தெரு, பெரியதெரு, ஜெகநாதன்நகர், வடுகத்தெரு, ராஜராஜசோழன்நகர், திருவள்ளுவர் காலனி, பள்ளியக்கிரஹாரம் கடைதெரு மற்றும் பைபாஸ் ஆகிய இடங்களிலும், கம்பம் மாற்றும் பணிக்காக மூலைஅனுமார்கோவில், போலீஸ் ராமசாமி நாயக்கர் தெரு மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களில் மின்வினியோகம் இருக்காது.
மேற்கண்ட தகவலை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தஞ்சை நகர உதவி செயற்பொறியாளர் கருப்பையா தெரிவித்து உள்ளார்.
- துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
தஞ்சாவூர்:
தஞ்சை நகர மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கருப்பையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை நீதிமன்ற சாலையில் அமைந்துள்ள நகர துணை மின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) துணை மின் நிலைய பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
ஸ்டேடியம் மின்வழித்தடத்தில் மேம்பாலம், சிவாஜிநகர், சீதாநகர், சீனிவாசபுரம், ராஜன்ரோடு, தென்றல் நகர், கிரி ரோடு, காமராஜ் ரோடு, ஆபிரகாம் பண்டிதர் நகர், திருநகர், ஆண்டாள் நகர், எஸ்.பி.குளம், விக்னேஸ்வராநகர், உமாசிவன் நகர், வெங்கடாசலபதி நகர், ஆர்.ஆர்.நகர், ஜெபமாலைபுரம், சுந்தரபாண்டியன்நகர், டி.சி.டபிள்யூ.எஸ்.காலனி, களிமேடு.திலகர் திடல் மின்வழித்தடத்தில் மேலவீதி, தெற்கு வீதி, பெரியகோவில், செக்கடிரோடு, மேலஅலங்கம். வண்டிக்காரத்தெரு மின்வழித்தடத்தில் ரெயிலடி, சாந்தப்பிள்ளைகேட், மகர்நோன்புச்சாவடி, வண்டிக்காரத்தெரு, தொல்காப்பியர் சதுக்கம், வி.பி.கோவில் தெரு, சேவியர் நகர், சோழன்நகர்.
கீழவாசல் மின்வழித்தடத்தில் பழைய மாரியம்மன்கோவில் ரோடு, ராவுத்தாபாளையம், கரம்பை, சாலக்காரத்தெரு, பழைய பஸ் நிலையம், கொண்டிராஜபாளையம். சர்க்யூட் ஹவுஸ் வழித்தடத்தில் ஜி.ஏ.கேனல் ரோடு, திவான் நகர், சின்னையாபாளையம், மிஷன்சர்ச்ரோடு, ஜோதிநகர், ஆடக்காரத்தெரு, ராதாகிருஷ்ணன் நகர்.மார்க்கெட் வழித்தடத்தில் பர்மாபஜார், ஜூபிடர் தியேட்டர் ரோடு, ஆட்டுமந்தை தெரு, கீழவாசல், எஸ்.என்.எம். நகர், அரிசிக்காரத்தெரு, கொள்ளுப்பேட்டை தெரு, வாடிவாசல் கடைத்தெரு. வ.உ.சி. நகர் மின் வழித்தடத்தில் மகளிர் போலீஸ் ஸ்டேசன், வ.உ.சி.நகர். எனவே பொதுமக்கள் மின்தடை குறித்த விவரங்களுக்கு 9498794987 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வருகிற 13-ந் தேதி வரை விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.
- விடைத்தாளின் நகல் பெற ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ.275 கட்டணத்தை அந்தந்த பள்ளிகளில் செலுத்தலாம்.
திருப்பூர் :
பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியாகி மாணவ-மாணவிகள் உயர் படிப்புக்கு தயாராகி வருகிறார்கள். விடைத்தாள் நகல், மறுகூட்டல் கோரி விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் வருகிற 13-ந் தேதி வரை விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. விடைத்தாளின் நகல் பெற ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ.275-ம், மறுகூட்டல் செய்ய உயிரியல் பாடத்துக்கு மட்டும் ரூ.305, மற்ற பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ.205 கட்டணத்தை அந்தந்த பள்ளிகளில் செலுத்தலாம்.
பிளஸ்-2 தேர்வு முடித்த மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் மூலமாகவும் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் மதிப்பெண் பட்டியலை பெற்றுக்கொள்ளலாம்.
பள்ளி தலைமை ஆசிரியர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில், தங்கள் பள்ளிக்கென்று வழங்கப்பட்ட யூசர் ஐ.டி., பாஸ்வேர்டை பயன்படுத்தி பள்ளி மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மதிப்பெண் விவரங்களை சரிபார்த்து பள்ளி முத்திரையிட்டு வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.