என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தனியார் வங்கி"
- வேலையில் இருக்கும்போதே நாற்காலியிலிருந்து சரிந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.
- மிகுந்த அழுத்தத்தில் இருந்ததாக அவரது சக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
பணியிடத்தில் சூழலால் ஏற்படும் அழுத்தங்களால் ஏற்படும் மரணங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் அளவுக்கு அதிகமான பணிச்சுமையால் கேரளாவைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் அன்னா செபாஸ்டின் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் தற்போது லக்னோவில் தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்த பெண் பணிச்சுமையால் உயிரிழந்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் இயங்கிய தனியார் வங்கியில் பணியாற்றி வந்த சதப் பாத்திமா என்ற 45 வயது பெண்மணி நேற்றைய தினம் வேலையில் இருக்கும்போதே நாற்காலியிலிருந்து சரிந்து விழுந்து உயிரிழந்துள்ளார். அதிக பணிச்சுமையினால் பாத்திமா மிகுந்த அழுத்தத்தில் இருந்ததாக அவரது சக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
பாத்திமாவின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே இதுகுறித்து மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க முடியும் என்று காவல் உதவி ஆணையர் ரதராமன் சிங் தெரிவித்துள்ளார்.
- சக ஊழியர்களுடன் ராஜேஷ் குமார் லேப்டாப் முன்பு வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.
- திடீரென மாரடைப்பால் அவதிப்படும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
உத்தரப் பிரதேசம் மாநிலம், மஹோபா நகரத்தில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் 30 வயது மதிக்கத்தக்க மேலாளர் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தனியார் வங்கியின் கிளை மேலாளர் ராஜேஷ் குமார் ஷிண்டே கடந்த 19ம் தேதி வழக்கம்போல் பணிக்கு சென்றுள்ளார்.
அங்கு சக ஊழியர்களுடன் ராஜேஷ் குமார் லேப்டாப் முன்பு வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, அவர் திடீரென நாற்காலியில் சரிந்து கண்கள் மேலே சென்றவாரு மூச்சு பேச்சின்றி ஆனார்.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சக ஊழியர்கள் ராஜேஷ் குமாரை காப்பாற்ற முயன்றனர். அவரது முகத்தில் தண்ணீர் தெளித்தும், சிபிஆர் கொடுத்து காப்பாற்றவும் முயன்றனர்.
பிறகு, அவரது உடல்நலம் மோசமடைந்ததால் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், ராஜேஷ் குமார் இறந்துவிட்டதாக பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அவர் திடீரென மாரடைப்பால் அவதிப்படும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், 30 வயது மதிக்கத்தக்க நபர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்த சம்பவம், இளம் இந்தியர்களிடையே இதய நோய்கள் குறித்த கவலையை அதிகரித்துள்ளது.
- வாங்கிய கடனுக்கு இன்னும் 10 வாரங்கள் மட்டுமே தவனை உள்ளது.
- வங்கி ஊழியர் கடன் தொகையை கட்ட சொல்வதற்காக பிரசாந்தை தொடர்புக் கொண்டுள்ளார்.
சேலம் மாவட்டம், வாழப்பாடியை சேர்ந்த கூலித் தொழிலாளி பிரசாந்த் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஐடிஎப்சி வங்கியில், ரூ.35 ஆயிரம் கடன் தொகை பெற்றுள்ளார்.
அவர், வாரந்தோறும் பணத்தை வட்டியுடன் சரியாக செலுத்தி வந்துள்ளார். அவரது மனைவி கவுரிக்கு உடல் நலம் பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் கடந்த இரண்டு வாரங்களாக ரூ.770 தவனை தொகையை வங்கியில் செலுத்த முடியாமல் போயுள்ளது.
வாங்கிய கடனுக்கு இன்னும் 10 வாரங்கள் மட்டுமே தவனையும் உள்ளது.
இந்நிலையில், ஐடிஎப்சி வங்கியின் பெண் ஊழியர் சுபா என்பவர் நேற்று பிரசாந்தை தொடர்புக் கொண்டுள்ளார். பிரசாந்த் செல்போன் எடுக்கவில்லை. இதனால், பிரசாந்த் வீட்டிற்கு சென்ற சுபா வெகு நேரம் காத்திருந்த நிலையில், பணம் செலுத்திவிட்டு மனைவியை அழைத்துச் செல்லட்டும் என்று கவுரியை தன்னுடன் ஐடிஎப்சி வங்கிக்கு சுபா அழைத்துச் சென்றுள்ளார்.
பின்னர், பிரசாந்த் நண்பரின் செல்போன் எண்ணை தொடர்புக் கொண்ட கவுரி விவரத்தை தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, நேற்று இரவு 7.30 மணியளவில் பணத்துடன் வங்கிக்கு விரைந்த பிரசாந்த் தவனை தொகையை செலுத்திவிட்டு மனைவியை மீட்டுள்ளார்.
தனியார் வங்கி பெண் ஊழியர் சுபா, கூலித் தொழிலாளியிடம் அடாவடியாக கடனை வசூலித்து அத்துமீறியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், இந்த விவகாரம் தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
- அமிர்தசரஸ் நகரில் தனியார் வங்கி ஒன்று உள்ளது.
- மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் துப்பாக்கியுடன் வங்கிக்குள் நுழைந்தனர்.
அமிர்தசரஸ்:
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் தனியார் வங்கி ஒன்று உள்ளது. நேற்று காலை இந்த வங்கி வழக்கம் போல் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் துப்பாக்கியுடன் வங்கிக்குள் நுழைந்தனர். அவர்கள் துப்பாக்கியை காட்டி வங்கி ஊழியர்களை மிரட்டி ரூ.12 லட்சத்தை கொள்ளையடித்து அங்கிருந்து தப்பி சென்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பொதுமக்கள் கட்டி வைத்து தாக்கினர்
- புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
நாகர்கோவில்:
நாகர்கோவில் சரலூர் பகுதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் நேற்று வாலிபர் ஒருவர் நகைகளை அடகு வைக்க வந்தார். அவர்தான் வைத்திருந்த நகைகளை வங்கியில் கொடுத்து பணம் கேட்டுள்ளார்.
இதையடுத்து வங்கி ஊழியர்கள் அவர் கொடுத்த நகையை பரிசோதனை செய்து பார்த்தபோது கவரிங் நகை என தெரியவந்தது.
இதையடுத்து ஊழியர்கள் பணம் கொடுக்கவில்லை. உடனே நகை கொடுத்த வாலிபர் வங்கி ஊழியர்க ளிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அங்கு திரண்டனர்.
அவர்கள் வங்கி ஊழி யர்களிடம் தகராறில் ஈடுபட்ட வாலிபரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.மேலும் அந்த பகுதியில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கினார்கள்.பின்னர் கோட்டார் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
பொதுமக்கள் பிடியில் இருந்த அந்த வாலிபரை மீட்டனர். மீட்கப்பட்ட வாலிபரிடம் விசாரணை நடத்திய போது அவர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. பொதுமக்கள் தாக்கியதில் அவருக்கு காயம் ஏற்பட்டிருந்ததையடுத்து அவரை சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சுங்கான்கடை அடுத்த களியங்காடு பகுதியை சேர்ந்தவர் சிதம்பரம் (வயது 44). இவர் பரசேரியில் தனியார் பள்ளிக்கூடம் மற்றும் நகை அடகு பிடிக்கும் கடை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 6-ந்தேதி காலை நகை அடகு பிடிக்கும் கடைக்கு வந்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் நகை அடகு வைக்க வேண்டும் என கூறியுள்ளார். அப்போது பணியில் இருந்த ஐஸ்வர்யா அவர் கொடுத்த சுமார் 20 கிராம் எடை கொண்ட நகையை பெற்றுக் கொண்டு ரூ.70 ஆயிரம் கொடுத்துள்ளார். பின்னர் அந்த நபரின் நடத்தையில் சந்தேகமடைந்த ஐஸ்வர்யா நகைகளை சோதனை செய்துள்ளார். அப்போது அந்த நபர் கொடுத்த நகை மற்றும் முகவரி போலி என தெரியவந்தது. இதுகுறித்து சிதம்பரம் இரணியல் போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி நகைகள் வைத்து ஏமாற்றிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.
- முன்னாள் வங்கி ஊழியர் நண்பர்களுடன் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக தகவல்.
- வங்கி காவலாளியை கட்டிப் போட்டு விட்டு கொள்ளை.
சென்னை அரும்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் பெடரல் வங்கிக்கு இன்று பட்ட பகலில் இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அதிரடியாக உள்ளே புகுந்தனர்.
அங்கிருந்த காவலாளி மற்றும் ஊழியர்களை கத்தியை காட்டி மிரட்டிய கட்டிப் போட்ட அவர்கள் வங்கியில் இருந்த பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து விட்டு தப்பினர்.
தகவல் அறிந்து விரைந்து சென்ற காவல்துறை கூடுதல் ஆணையர் அன்பு, துணை ஆணையர் விஜயகுமார் தலைமையிலான காவல்துறையினர் விசாரணை நடத்தினர். மோப்ப நாய் உதவியுடன் விசாரணை மேற் கொள்ளப்பட்டது. அந்த வங்கியில் இருந்த சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்தனர்.
முதல் கட்ட விசாரணையின் முடிவில் அந்த வங்கியில் வேலை பார்த்த முன்னாள் ஊழியரே தனது நண்பர்களுடன் வந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.
கொள்ளையடிக்கப்பபட்ட பணம் மற்றும் நகைகளின் மொத்த மதிப்பு 20 கோடி ரூபாய் இருக்கும் என தெரிய வந்துள்ளது. கொள்ளைர்களை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. பட்டப்பகலில் நடைபெற்ற வங்கிக் கொள்ளை அப்பகுதியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்