என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வயல்வெளி"

    • மகாராஜபுரம் வயல்வெளியில் ஐயப்பன் என்பவர் வலை வைத்து 6 மடையான் பறவைகளை பிடித்தார்.
    • போலீசார் விசாரணை செய்து வழக்குபதிவு செய்து ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த மகாராஜபுரம் பகுதியில் திருச்சி மண்டல தலைமை வனப்பாதுகாவலர் சதீஷ், நாகை வனஉயிரின காப்பாளர் (கூடுதல் பொ) தஞ்சாவூர் மாவட்ட வன அலுவலர் அகில் தம்பி ஆகியோர் உத்தரவின் பேரில் கோடியக்கரை வனச்சரக அலுவலர் அயூப் கான் தலைமையில் வனவர் ராமதாஸ், மகாலெட்சுமி, வேட்டை தடுப்பு காவலர்கள் லோகநாதன், நவநீத கிருஷ்ணன், பாண்டியன் குழுவினருடன் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது மகாராஜபுரம் வயல்வெளியில் வலை வைத்து 6 மடையான் பறவைகள் பிடித்த தலைக்காடு பகுதியை சேர்ந்த ஐயப்பன் (வயது 40) என்பவரை பறவைகள் மற்றும் வலைகளுடன் பிடித்து விசாரணை செய்து வழக்குபதிவு செய்யப்பட்டு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

    பின்பு, அவரிடமிருந்த 6 மடையான் பறவைகளை கால்நடை உதவி மருத்துவர் சிவசூரியன் மற்றும் வன பணியாளர்கள் முன்னிலையில் முனியப்பன் ஏரி சரணாலய பகுதியில் பறக்கவிட்டப்பட்டது.

    • மாத்தூர் வயல்வெளி பகுதியில் வலை வைத்து மடையான் பறவைகளை வேட்டையாடினர்.
    • வழக்குப்பதிவு செய்து இருவருக்கும் தலா ரூ.20 ஆயிரம் அபராதம்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வனசரகத்திற்கு உட்பட்ட வயல்வெளிகள், சமவெளிப் பகுதிகளில் மடையான், கொக்கு பறவைகளை வேட்டையாடியவர்களை பிடிக்க திருச்சி மண்டல தலைமை வன பாதுகாவலர் சதீஷ் உத்தரவின் பேரில் சீர்காழி வன சரக அலுவலர் ஜோசப் டேனியல் தலைமையில் தனி குழு அமைத்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது தரங்கம்பாடி வட்டம் ஆக்கூர் புங்கையன் தோப்பு மாத்தூர் வயல்வெளி பகுதியில் வலை வைத்து மடையான் பறவைகளை வேட்டையாடியவர்களை பிடித்து வனத்துறையினர். விசாரணை செய்ததில் ஆக்கூர் புங்கையன் தோப்பு பகுதியை சேர்ந்த சத்தியராஜ் (40) மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் (37) என்பது தெரிய வந்தது.

    வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்த வனத்துறையினர் தலா ரூ.20 ஆயிரம் வீதம் ரூ.40 ஆயிரம் இருவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டு அவர்களிடம் இருந்து வலைகள் மற்றும் பறவைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • ஆண்டிபட்டியில் வயல்வெளி பள்ளி கருத்தரங்கு நடந்தது.
    • வாடிப்பட்டி வட்டாரத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் நடந்தது.

     வாடிப்பட்டி

    வாடிப்பட்டி வட்டாரத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்தில் சாத்தையாறு உபவடி நில பகுதியான ஆண்டிபட்டியில் வயல்வெளி பள்ளி கருத்தரங்கு நடந்தது. வேளாண்மை துணை இயக்குநர் (மாநிலத் திட்டம்) சுப்புராஜ் தலைமை தாங்கினார். வயல்வெளி பள்ளியின் நோக்கம் மற்றும் வட்டார அளவில் செயல்படும் திட்டங்கள் பற்றி வேளாண்மை உதவி இயக்குநர் வாசுகியும், விதை நேர்த்தி பூச்சி அடையாளம் காணுதல், பயிர் கண்காணிப்பு பற்றி வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சுப்பிரமணியும், தீமை தரும் பூச்சிகளை வயல்வெளிகளில் அடையாளம் காணுதல், பூச்சிக்கொல்லி இல்லாமல் பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறைகள் பற்றி மண்ணியல் துறை உதவி பேராசிரியர் கிருஷ்ணகுமார், வேளாண்மை விரிவாக்க உதவி பேராசிரியர் ஜெகதீசன் ஆகியோர் செயல்முறை விளக்கமளித்தனர்.விவசாயி வெங்கடசாமி வயலில் டிரோன் மூலம் நானோ யூரியா தெளிப்பு செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. இதில் 30 விவசாயிகள் கலந்து கொண்டனர். வேளாண்மை அலுவலர் சத்தியவாணி நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை வேளாண்மை உதவி அலுவலர்கள் சரவணகுமார், பாண்டியராஜன், வட்டார தொழில்நுட்ப மேலாளர் அருணா தேவி ஆகியோர் செய்திருந்தனர். முன்னதாக வேளாண்மை துணை இயக்குனர் சுப்புராஜ் நெல்கோ 51 மற்றும் துவரை எல்.ஆர்.ஜி 52 விதைப்பண்ணையை ஆய்வு செய்தார். உதவி விதை அலுவலர் முத்துபாண்டியன் உடன் இருந்தார்.

    • வயல்வெளியில் பிணத்தை தூக்கிச் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.
    • விரைவாக பாலம் கட்டி தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள போடிநாயக்கன்பட்டி, மேல் நாச்சிகுளம், கீழ் நாச்சிகுளம், கரட்டுப்பட்டி ஆகிய கிராமங்களில் வசிக்கும் ஒரு சமுதாயத்திற்கு தனி சுடுகாடு உள்ளது.

    இந்த சுடுகாடு கோட்டை மேடு-நரிமேடு 2 கிராமங்களுக்கும் மைய பகுதியில் அமைந்துள்ளது. இந்த சுடுகாட்டுக்கு செல்ல முன்பு பெரியாறு பாசன கிளை கால்வாய் வழியாக படிக்கட்டு அமைக்கப்பட்டிருந்தது. அதையொட்டி உள்ள கரை ஓரமாக சென்று மயானத்திற்கு சென்று வந்தனர்.

    சில ஆண்டுகளுக்கு முன்பு கிளை கால்வாய் அகலப்படுத்தப்பட்ட போது படிக்கட்டுகள் இருந்த இடத்தில் மீண்டும் படிக்கட்டு அமைக்காமல் சமதளமாக பூசி விட்டனர்.இதனால் மயானத்திற்கு செல்லும் வழி தடைபட்டது.

    தற்போது நரிமேடு சாலை வழியாக வயல்வெளியில் பிணத்தை தூக்கி செல்ல வேண்டிய அவல நிலை உருவாகியுள்ளது. இதுகுறித்து மதுரை மாவட்ட கலெக்டருக்கு மனு கொடுத்து பொதுப்பணித்துறை மூலம் சிறுபாலம் அமைக்க உத்தரவு பெறப்பட்ட பிறகும் பாலம் கட்டுவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. இந்த அவல நிலை தொடராமல் இருக்க விரைவாக பாலம் கட்டி தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • பூதராயநல்லூர் கிராமத்தில் வயல்வெளிகளில் இரும்பு கம்பங்கள் நட்டு மின்சாரம் கொண்டு வரப்படுகிறது.
    • சிறிய மின் கம்பத்திற்கு இடையில் மரம் ஒன்று முளைத்து கிளை விட்டு உயர்ந்து வளர்ந்து நிற்கிறது.

    பூதலூர்:

    பூதலூர் அருகே உள்ள பூதராயநல்லூர் கிராமத்தில் வயல்வெளிகளில் இரும்பு கம்பங்கள் நட்டு மின்சாரம் கொண்டு வரப்படுகிறது. 30 அடி உயரமுள்ள மின்கம்பத்தில் அடியில் இருந்து 6 உயரத்திற்கு சிறிய அளவிலான மற்றொரு இரும்பு கம்பம் நடப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வரிசையாக நடப்பட்டுள்ள மின் கம்பங்களில் ஒன்றில் பெரிய மின் கம்பத்துக்கும் அதற்கு பாதுகாப்பாக அமைக்கப்பட்டுள்ள சிறிய மின் கம்பத்திற்கு இடையில் மரம் ஒன்று முளைத்து கிளை விட்டு உயர்ந்து வளர்ந்து நிற்கிறது.

    இந்த மின்கம்பம் அமைந்துள்ள வயல் தற்போது தரிசாக காணப்படுகிறது. இன்னும் ஓரிரு வாரங்களில் வயலில் தண்ணீர் பாய்ச்சி விவசாய பணிகள் தொடங்கிவிடும். அப்போது இதில் வளர்ந்துள்ள மரம் மேலே உள்ள மின்சாரக் கம்பியை தொடுவதற்கு வாய்ப்பு உள்ளது. இதனால் இந்த மின்சார வயர்களின் வழியாக செல்லும் கிராமங்களில் மின்தடைஏற்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது.

    எனவே பூதராய நல்லூர் கிராமத்தின் அருகில் வயல்வெளியில் உள்ள மின்சாரக் கம்பத்தில் வளர்ந்துள்ள மரத்தை அகற்றி சீரான மின்விநியோகத்திற்கும் எதிர்காலத்தில் மின் பாதிப்புகளில் இருந்து காத்துக் கொள்ளவும் வழி செய்ய வேண்டும் என்று விவசாயிகள். சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • இதைப் பார்த்து அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அவரை காப்பாற்ற முயன்றனர்.
    • உடலை மீட்டு பாசார் கிராம நிர்வாக அலுவலர் குழந்தைவேலுவிடம் ஒப்படைத்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட ரிஷிவந்தியம் அடுத்த பாசார் கிராமத்தை சேர்ந்தவர் பச்சமுத்து மகன் ராமலிங்கம் (வயது 38) விவசாயி. இவர் வயல்வெளிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த கிணற்றில் தவறி விழுந்தார். இதைப் பார்த்து அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் நீச்சல் தெரியாததால் ராமலிங்கம் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

    இது பற்றி தகவல் அறிந்த தியாகதுருகம் தீயணைப்பு நிலைய வீரர் ராஜா மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் 50 அடி ஆழமுள்ள கிணற்றில் இறங்கி ராமலிங்கத்தின் உடலை மீட்டு பாசார் கிராம நிர்வாக அலுவலர் குழந்தைவேலுவிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இது குறித்து ரிஷிவந்தியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மத்திய மந்திரி குமாரசாமி சீதாபுரா கிராமத்தில் நாற்று நட்டார்.
    • முன்னதாக அவர் காவிரி ஆற்றுக்கு பூஜை செய்து வழிபட்டார்.

    மாண்டியா:

    பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையில் கனரக தொழில்துறை மந்திரியாக பதவி வகித்து வருகிறார் குமாரசாமி.

    இந்நிலையில், கர்நாடக மாநிலத்தின் மாண்டியா மாவட்டம் பாண்டவபுராவின் சீதாபுரா கிராமத்தில் நிலம் ஒன்றில் மத்திய மந்திரி குமாரசாமி இன்று நாற்று நட்டார்.

    காவிரி ஆற்றுக்கு பூஜை செய்த குமாரசாமி, அதன்பின் நிலத்தில் இறங்கி நாற்று நட்டார்.

    ஏற்கனவே கடந்த 2018-ம் ஆண்டில் முதல் மந்திரியாக இருந்த குமாரசாமி நிலத்தில் இறங்கி நாற்று நட்டு, பயிரிடும் பணிகளை தொடங்கி வைத்து விவசாயிகளை உற்சாகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.



    • சாய்ந்துள்ள மின்கம்பம் வரை மின்சார கம்பிகள் சாலை ஓரத்தில் தரையோடு தரையாக கிடக்கின்றன.
    • மின்சார கம்பிகளை பாதுகாப்பாக எடுத்து மேலே கட்டாமல், வயல்வெளியில் விடப்பட்டுள்ளது.

    பூதலூர்:

    திருக்காட்டுப்பள்ளி -கல்லணை சாலையில் திருச்செனம்பூண்டி கிராமத்தில் பிரதான சாலையில் குறுக்கே சென்ற மின்சாரக் கம்பியை அவ்வழியாக சென்ற வைக்கோல் ஏற்றி சென்ற லாரி இடித்ததில் மின்சார கம்பி அறுந்து விழுந்தது.

    இதனால் காவிரி ஆற்றின் கரையோரம் இருந்த இரும்பு மின்சார கம்பம் வளைந்து கீழே சாய்ந்தது.

    அதிர்ஷ்டவசமாக லாரிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

    அறுந்து தொங்கிய மின்சார கம்பிகள் அப்படியே விடப்பட்டுள்ளனமின்சாரம் மட்டும் துண்டிக்கப்பட்டுள்ளது.

    அருகில் டிரான்ஸ்பாரம் கம்பம் உள்ளது.

    இதிலிருந்து சாய்ந்துள்ள மின்கம்பம் வரை மின்சார கம்பிகள் சாலை ஓரத்தில் தரையோடு தரையாக கிடக்கின்றன.

    இந்த வழித்தடத்தில் மணல் குவாரி இருப்பதால் மணல் லாரிகள் குறுக்கும் நெடுக்குமாக சென்று வந்து கொண்டிருக்கின்றன.

    இரண்டு சக்கர வாகனத்தில் செல்வோர் சாலை ஓரத்தில் செல்லும்போது அறிந்து கிடக்கும் மின் கம்பியை பார்த்து அதிர்ச்சி அடைந்து தடுமாற்றம் ஏற்படுகிறது.

    மின்சாரம் துண்டிக்க ப்பட்டதாக சொல்லப்பட்ட போதிலும் அது குறித்து எந்தவித அறிவிப்பும் அந்த இடத்தில் செய்யப்படாததால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சிக்கு உள்ளாகின்றனர்.

    மின்சார கம்பிகளை பாதுகாப்பாக எடுத்து மேலே கட்டாமல், வயல்வெளியில் விடப்பட்டுள்ளதும் பாதுகாப்பாற்ற தன்மையாக சொல்லப்படுகிறது.உடனடியாக மின்வாரிய அதிகாரிகள் கவனத்துடன் செயல்பட்டு கீழே கிடக்கும் மின் கம்பியை அகற்றவும், விழுந்து கிடக்கும் மின் கம்பத்தை அகற்றி சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

    • வீடு தோறும் விருட்சம் என்கிற திட்டத்தின் கீழ் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • மிகப்பெரிய மரங்கள் சரணாலயம் தஞ்சை மாவட்டம் திருமலைசமுத்திரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விருட்சவனம் என்பது சிறப்புக்குரியது.

    கும்பகோணம்:

    கும்பகோணத்தில் வீடு தோறும் விருட்சம் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    இதில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கலந்து கொண்டு மரக்கன்று வழங்கினார்.

    தஞ்சை மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள வீடு தோறும் விருட்சம் என்கிற திட்டத்தின் கீழ் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மரக்கன்று நடும் நிகழ்ச்சியும், மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நேட்டிவ் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரவி கண்ணன் வரவேற்றார். மாவட்ட கல்வி அலுவலர் சண்முகநாதன் வாழ்த்துரை வழங்கினார்.

    நிகழ்ச்சிக்கு தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி, மாணவ-மாணவிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கி பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தஞ்சை மாவட்டம் செழிப்பான மாவட்டமாக இருந்து வருகிறது. ஆனாலும் தஞ்சை மாவட்டத்தில் வனங்களின் பரப்பளவு ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. இதேபோல் மரங்கள் அடர்ந்த பகுதியும் மிகவும் குறைவு.

    பார்க்கும் திசை அனைத்திலும் வயல்வெளிகளும் பசுமையும் இருந்தாலும் மாவட்டத்தில் மரங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.

    இதனை கருத்தில் கொண்டு மரங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இந்த வீடு தோறும் விருட்சம் என்கிற திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

    மரங்களின் எண்ணிக்கை அதிகரிக்க லட்ச கணக்கில் மரக்கன்றுகளை எளிதில் நட்டு விட முடியும்.ஆனால் எத்தனை கன்றுகள் வளர்ந்து மரமாகும் என்பது கேள்விக்குறி.

    இதன் காரணமாக வருகிற ஒரு வருடத்தில் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நட்டு மரமாக வளர்ப்பது என்ற குறிக்கோளுடன் இந்த வீடு தோறும் விருட்சம் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

    இதுவரை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

    இசை வனம் தமிழகத்திலேயே மிகப்பெரிய மரங்கள் சரணாலயம் தஞ்சை மாவட்டம் திருமலைசமுத்திரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விருட்ச வனம் என்பது சிறப்புக்குரியது.

    திருவையாறு பகுதியில் உள்ள இசை கல்லூரி வளாகத்தில் இசைக்கருவிகள் செய்ய பயன்படும் மர வகைகள் நடவு செய்யப்பட்டுள்ளது இதற்கு இசை வனம் எனப்பெயரிடப்பட்டுள்ளது.

    தற்போது வீடுதோறும் விருட்சம் என்கிற திட்டத்தில் நடப்பட்டுள்ள மரக்கன்றுகள் அனைத்தும் நட்டவரின் பெயரிலேயே வளர்த்து உருவாக்கப்பட வேண்டும்.

    இதில் கும்பகோணம் தாசில்தார் தங்க.பிரபாகரன் மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகன், நகர் நல அலுவலர் பிரேமா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஜூனியர் ரெட் கிராஸ் அமைப்பாளர் ஜான் ஸ்டீபன் நன்றி கூறினார்.

    • தேசிய உணவு பாதுகாப்பு எண்ணெய்வித்து இயக்கம் திட்டத்தின் கீழ் தங்க பயிரான சோயா பீன்ஸ் செயல் விளக்கத் திடல் ஆய்வு செய்தார்.
    • நீடித்த நிலையான விவசாய நிலங்களில் பசுமை போர்வை இயக்கம் திட்டத்தில் வழங்கப்பட்டு விவசாயிகள் வயல்களில் நடப்பட்ட மரக்கன்றுகள் பராமரிக்க வேண்டிய வழி முறைகள் பற்றி விவசாயிகளிடம் கூறினார்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டாரத்தில் வேளாண்மை இணை இயக்குனர் கணேசன் முதலமைச்சரின் மாணவரி நில மேம்பாட்டு இயக்கம் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட சிவப்பு கடல்பாசி, ஹியூமினால் கோல்ட் பயன்படுத்தப்பட்ட வயல், தேசிய உணவு பாதுகாப்பு எண்ணெய்வித்து இயக்கம் திட்டத்தின் கீழ் தங்க பயிரான சோயா பீன்ஸ் செயல் விளக்கத் திடல் ஆய்வு செய்தார்.

    நீடித்த நிலையான விவசாய நிலங்களில் பசுமை போர்வை இயக்கம் திட்டத்தில் வழங்கப்பட்டு விவசாயிகள் வயல்களில் நடப்பட்ட மரக்கன்றுகளான மலைவேம்பு,தேக்கு, நாவல் ஆகியவற்றை ஆய்வு செய்து பராமரிக்க வேண்டிய வழி முறைகள் பற்றி விவசாயிகளிடம் கூறினார்.

    மேலும் விவசாயிகளி–டையே தங்கப்பயிர் சோயா பீன்ஸ் பயிர் சாகுபடி செய்வதின் தொழில்–நுட்பங்களை விவசாயிக–ளுக்கு எடுத்துக் கூறினார்.

    இந்த ஆய்வில் ஆத்தூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் குமாரசாமி மற்றும் வேளாண்மை அலுவலர் ஜானகி, உதவி வேளாண்மை அலுவலர் பெரியசாமி உடன் இருந்தனர்.

    ×