search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டென்மார்க்"

    • இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
    • ஒரு வெற்றி, ஒரு டிரா என 4 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணி முதலிடத்தில் உள்ளது.

    ஜெர்மனியில் நடைபெற்று வரும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் 24 அணிகள் பங்கேற்றுள்ளன. நேற்று நடைபெற்ற போட்டியில் குரூப் 'சி' பிரிவில் உள்ள டென்மார்க் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின.

    ஆட்டத்தின் 18-வது நிமிடத்தில் இங்கிலாந்து அணி வீரர் ஹாரி கேன் ஒரு கோல் அடித்தார். இதையடுத்து ஆட்டத்தின் 34-வது நிமிடத்தில் டென்மார்க் அணி வீரர் மோர்டன் ஹூல்மண்ட் ஒரு கோல் அடித்தார்.

    இதனால் ஆட்டத்தின் முதல் பாதி முடிவில் இரு அணிகளும் 1-1 என சமநிலை வகித்தன. ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் கடைசி வரை போராடிய இரு அணி வீரர்களால் கூடுதலாக ஒரு கோல் அடிக்க முடியவில்லை. இதனால் ஆட்டநேர முடிவில் போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

    ஒரு வெற்றி, ஒரு டிரா என 4 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணி முதலிடத்தில் உள்ளது.

    • குரூப் ‘சி’ பிரிவில் நடைபெற்ற போட்டியில் டென்மார்க்- ஸ்லோவேனியா அணிகள் மோதின.
    • ஆட்டத்தின் முதல் பாதியில், 17-வது நிமிடத்தில் டென்மார்க் வீரர் கிறிஸ்டியன் எரிக்சென் முதல் கோல் அடித்து அணிக்கு முன்னிலை பெற்றுத்தந்தார்.

    ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் பரிசுத்தொகை கொண்ட இந்தப் போட்டியில் ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட 24 அணிகள் பங்கேற்றுள்ளன.

    ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் என 6 பிரிவுகளாக பிரித்து லீக் போட்டி நடைபெறுகிறது. இதில் நேற்று குரூப் 'சி' பிரிவில் நடைபெற்ற போட்டியில் டென்மார்க்- ஸ்லோவேனியா அணிகள் மோதின.


    ஆட்டத்தின் முதல் பாதியில், 17-வது நிமிடத்தில் டென்மார்க் வீரர் கிறிஸ்டியன் எரிக்சென் முதல் கோல் அடித்து அணிக்கு முன்னிலை பெற்றுத்தந்தார். இதற்கு ஸ்லோவேனியா அணியினரால் பதிலடி தர முடியவில்லை. முதல் பாதி முடிவில் டென்மார்க் அணி 1-0 என முன்னிலையில் இருந்தது.

    ஆட்டத்தின் 2-வது பாதியில் ஸ்லோவேனியா வீரர் எரிக் ஜான்சா 77-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து, ஆட்டத்தை சமனுக்கு கொண்டுவந்தார். அதன் பின்னர் இரு அணி வீரர்களும் கோல் எதுவும் அடிக்காததால் ஆட்டம் டிரா ஆனது.

    • காரம் மற்றும் சுவை காரணமாக நூடுல்சுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் பரவி கிடக்கிறார்கள்.
    • பொதுமக்கள் தங்களிடம் உள்ள இந்த நூடுல்ஸ் பாக்கெட்டுகளை உடனடியாக கடைகளில் ஒப்படைக்குமாறு தெரிவித்துள்ளது.

    கோபன்ஹேகன்:

    தென் கொரியாவை சேர்ந்த பிரபல நூடுல்ஸ் தயாரிப்பு நிறுவனம் ஒன்று உலகின் அதிக காரம் சுவை கொண்ட நூடுல்சை தயாரித்து விற்று வருகிறது. உலகம் முழுவதும் இந்த நூடுல்ஸ் ஏற்றுமதி செய்யப்படுகிறது. காரம் மற்றும் சுவை காரணமாக இந்த நூடுல்சுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் பரவி கிடக்கிறார்கள்.

    இந்தநிலையில் ஐரோப்பிய நாடான டென்மார்க்கில் அதிக கார சுவை கொண்ட இந்த நூடுல்சுக்கு தடை விதித்துள்ளது. டென்மார்க்கின் உணவு கட்டுப்பாடு அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி அந்த நூடுல்சில் அளவுக்கதிகமான காப்சைசின் என்னும் வேதிப்பொருள் உள்ளதாக கூறியுள்ளது. காப்சைசின் என்பது மிளகாய், மிளகு உள்ளிட்டவற்றில் காரத்தன்மைக்கு வித்திடும் இயற்கையான கூட்டு வேதியியல் கலவையாகும். இதனால் பொதுமக்கள் தங்களிடம் உள்ள இந்த நூடுல்ஸ் பாக்கெட்டுகளை உடனடியாக கடைகளில் ஒப்படைக்குமாறு தெரிவித்துள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட நிறுவனம் இதனை திரும்ப பெறுமாறும் கேட்டு கொண்டுள்ளது.

    • ஜூன் 20 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
    • கழுத்து பகுதியில் லேசான காயம் ஏற்பட்டது கண்டறியப்பட்டது.

    டென்மார்க் பிரதமர் மேட் ஃப்ரெடெரிக்சன் கோபென்ஹாகென் சென்றிருந்த போது, மர்ம நபரால் தாக்குதலுக்கு ஆளானார். இந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனினும், பிரதமரை தாக்கிய மர்ம நபர் கைது செய்யப்பட்டார். கைதாகியுள்ள 39 வயது நபருக்கு ஜூன் 20 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

    தாக்கப்பட்ட பிரதமர் மேட் ஃப்ரெடெரிக்சன் உடனடியாக மருத்துவமனை அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில், பிரதமரின் கழுத்து பகுதியில் லேசான காயம் ஏற்பட்டது கண்டறியப்பட்டது.

    இந்த நிலையில் தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மேட் ஃப்ரெடெரிக்சன், "அன்று நடந்த சம்பவத்தால் அதிர்ச்சியும், கவலையும் அடைந்ததேன். எனினும், தற்போது நலமாகவே இருக்கிறேன். எனக்காக குரல் கொடுத்தவர்கள், ஊக்கமளித்தவர்களுக்கு நன்றி," என தெரிவித்துள்ளார்.

    மேலும், இந்த சமயத்தில் தனது குடும்பத்தாருடன் இருக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். கடந்த 2019 ஆம் ஆண்டு டென்மார்க்-இன் இளம் வயது பிரதமர் என்ற பெருமையுடன் மேட் ஃப்ரெடெரிக்சன் பதவியேற்றார். அப்போது அவருக்கு வயது 41. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிரபாகரனின் அண்ணன் வேலுப்பிள்ளை மனோகரன் முன்னெடுப்பில் வீரவணக்க நிகழ்ச்சி.
    • விடுதலைப் புலிகளும், ஆதரவு அமைப்புகளும் பிரபாகரனுக்கு வீரவணக்கம் செலுத்தும் வழக்கம் இல்லை.

    பிரபாகரனின் மரணம் தொடர்பான சர்ச்சை உலகெங்கும் தொடரும் நிலையில், அவரது சகோதரர் மனோகரன் தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    2009 ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் பிரபாகரன், மனைவி மதிவதனி, பிள்ளைகள் மரணமடைந்து விட்டதாக பிரபாகரனின் அண்ணன் மனோகரன் கூறியிருந்தார்.

    மேலும், ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் 2009, மே 18ல் பிரபாகரன் இறந்துவிட்டார் என இலங்கை ராணுவம் அறிவித்தது. பிரபாகரனுக்கு முதல்முறையாக வீர வணக்க நிகழ்வை டென்மார்க்கில் வரும் 18-ந்தேதி நடத்த உள்ளோம் என்றும் தெரிவித்தார்.

    அதன்படி, டென்மார்க்கில் இன்று முதல் முறையாக பிரபாகரனுக்கு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.

    பிரபாகரனின் அண்ணன் வேலுப்பிள்ளை மனோகரன் முன்னெடுப்பில் வீரவணக்க நிகழ்ச்சி நடந்தது.

    இந்நிகழ்ச்சியில், பிரபாகரன், அவரது மனைவி மதிவதனி, மகள் துவாரகா, மகன்கள் சார்ல்ஸ், பாலச்சந்திரன் உள்ளிட்டோருக்கு வீரவணக்கம் செய்யப்பட்டது.

    விடுதலைப் புலிகளும், ஆதரவு அமைப்புகளும் பிரபாகரனுக்கு வீரவணக்கம் செலுத்தும் வழக்கம் இல்லை.

    காசி ஆனந்தன் உள்ளிட்ட ஈழ ஆதரவாளர்கள் பிரபாகரனுக்கு வீரவணக்கம் செலுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

    • பசுமையான மற்றும் குப்பைகள் நிறைந்த புது டெல்லிக்கு உங்களை வரவேற்கிறேன்.
    • இங்கே எங்களின் டென்மார்க் தூதரகம் உள்ளது, அங்கே கிரேக்க தூதரகம் உள்ளது.

    இந்தியாவுக்கான டென்மார்க்கின் தூதரக அதிகாரி ஃப்ரெடி ஸ்வேன் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்.

    அதில், 'பசுமையான மற்றும் குப்பைகள் நிறைந்த புது டெல்லிக்கு உங்களை வரவேற்கிறேன்'என்று தூதரக கட்டிடத்திற்கு வெளியே உள்ள குப்பைக் கிடங்கை அவர் காட்டுகிறார்.

    இங்கே எங்களின் டென்மார்க் தூதரகம் உள்ளது, அங்கே கிரேக்க தூதரகம் உள்ளது. இது ஒரு சர்வீஸ் ரோடாக இருக்க வேண்டும், ஆனால் அது குப்பைகளால் நிரம்பியுள்ளது. இது குறித்து யாராவது நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறேன்" என்று அவர் தெரிவித்தார்.

    தூதரக கட்டிடத்திற்கு வெளியே குப்பைக் கிடங்கு உள்ளதை காட்டிய அவர் யாராவது இதைக் கேட்டு நடவடிக்கை எடுப்பார்கள் என்று நான் நம்புகிறேன்," என்று தெரிவித்துள்ளார்.

    அந்த வீடியோவில், டெல்லி முதல்வர் அலுவலகம் மற்றும் டெல்லி கவர்னர் ஆகியோரின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்குகளை அவர் டேக் செய்துள்ளார்.

    • ஆன்-மேரி கப்பலை அதில் உள்ள சரக்குகளுடன் இங்கிலாந்து கைப்பற்றியது
    • லேட்சன் என்பவருக்கு நீல் வின்தர் எனும் கார்பென்டர் இப்பார்சலை அனுப்பியுள்ளார்

    1807 காலகட்டத்தில் ஐரோப்பிய நாடான டென்மார்க்கிலிருந்து, ஃபேரோ தீவுகள் (Faroe Islands) ஜலசந்திக்கு ஆன்-மேரி (Anne-Marie) எனும் கப்பல் புறப்பட்டது. அப்போதைய டென்மார்க் மன்னருக்கு சொந்தமான 2 கப்பல்களில் ஆன்-மேரி கப்பலும் ஒன்று.

    பிரான்ஸ் நாட்டு மன்னராக இருந்த நெப்போலியனுக்கும், பிற ஐரோப்பிய நாடுகளின் கூட்டணிக்கும் போர் (Napoleonic wars) நடந்த அந்த காலத்தில் ஆன்-மேரி கப்பல், தனது பயணத்தின் போது, செப்டம்பர் 2 அன்று ஹெச்எம்எஸ் டிஃபென்ஸ் (HMS Defence) எனும் இங்கிலாந்து கடற்படை கப்பலால் தாக்கப்பட்டது.

    அந்த தாக்குதலை எதிர்கொள்ள முடியாத ஆன்-மேரி கப்பலை அப்போதைய போர் மரப்புப்படி, தாக்குதலில் வென்ற இங்கிலாந்து கடற்படை, அதில் இருந்த சரக்குகள் மற்றும் தபால்களுடன் கைப்பற்றியது.

     அந்த பொருட்கள் இங்கிலாந்திற்கு கொண்டு செல்லப்பட்டன.

    அவையனைத்தும் தற்போது வரை இங்கிலாந்தின் தேசிய காப்பகத்தில் (National Archives) பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வந்தன.

    சுமார் 200 வருடங்கள் கடந்த நிலையில், அக்கப்பலின் பொருட்கள் தற்போது முதல்முறையாக ஃபேரோ தீவுகளை சேர்ந்த பல்கலைக்கழக பேராசிரியர்கள் முன்னிலையில் இங்கிலாந்தில் திறக்கப்பட்டன.

    49 ஆயிரம் ஜோடி கம்பளியினால் பின்னப்பட்ட "ஸாக்ஸ்"கள், பல பறவைகளின் இறகுகள், மற்றும் ஒரு பார்சலும் அந்த பொருட்களில் இருந்தன.

    அந்த பார்சலை பிரித்த போது, அதில் இயந்திர உதவியின்றி, கைகளாலேயே பின்னப்பட்ட ஒரு அழகிய ஸ்வெட்டர், தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அக்கால ஃபேரோ தீவுகளின் பாரம்பரியத்தை உணர்த்தும் வகையில், ஒளிரும் வண்ணத்தில் காண்போர் கண்களை அந்த ஸ்வெட்டர் கவர்கிறது.


    200 வருடங்கள் கடந்தும் அதன் தரம், வடிவம், வண்ணம், மற்றும் வேலைப்பாடு சிறிதும் குறையாமல் அப்படியே இருப்பது காண்போரை வியக்க வைத்தது.

    1807 ஆகஸ்ட் 20 அன்று டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனை சேர்ந்த லேட்சன் (Ladsen) என்பவருக்கு நீல்ஸ் வின்தர் (Niels Winter) எனும் கார்பென்டர் அனுப்பியுள்ள இந்த பார்சலுடன் டேனிஷ் மொழியில் வின்தர் அனுப்பியுள்ள கடிதமும் இருந்தது.

    அதில், "உங்களுக்கு எனது மனைவியின் வாழ்த்துக்கள். உங்கள் வருங்கால மனைவிக்கு என் மனைவி ஒரு ஸ்வெட்டரை இத்துடன் அனுப்பியுள்ளார். உங்கள் வருங்கால மனைவிக்கு இது பிடிக்கும் என நாங்கள் நம்புகிறோம்" என எழுதப்பட்டுள்ளது.

    இந்த ஸ்வெட்டர் கலைப்பொருளாக இங்கிலாந்தில் பத்திரமாக பாதுகாக்கப்பட உள்ளது.

    • ஆயத்த ஆடை இறக்குமதியில் இந்திய ஆடை பங்களிப்பு 4.5 சதவீதமாக உள்ளது.
    • அக்டோபர் 12,13 ஆகிய தேதிகளில் டென்மார்க் நாட்டில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    திருப்பூர் :

    டென்மார்க் நாட்டின் மொத்த ஆயத்த ஆடை இறக்குமதியில் இந்திய ஆடை பங்களிப்பு 4.5 சதவீதமாக உள்ளது. நம் நாட்டில் இருந்து ஆண்கள், சிறுவர்களுக்கான டிரவுசர், ஓவரால், ஷார்ட்ஸ், புல்ஓவர், டி-சர்ட், பெண்களுக்கான டிரவுசர், ஜாக்கெட்டுகள் அதிக அளவில் ஏற்றுமதியாகிறது.

    டென்மார்க் நாட்டின் மொத்த ஆயத்த ஆடை இறக்குமதி, ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. அந்நாட்டுக்கான இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகத்தை மேலும் உயர்த்துவதற்காக ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.,) தொடர்ந்து முயற்சித்து வருகிறது. வருகிற அக்டோபர் 12, 13 ஆகிய தேதிகளில் டென்மார்க் நாட்டில் வர்த்தகர் - ஏற்றுமதியாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    இதில் இந்திய ஏற்றுமதியாளர் பங்கேற்க ஏ.இ.பி.சி., ஏற்பாடு செய்துள்ளது.டென்மார்க் நாட்டின் இறக்குமதியில் பின்னலாடை ரகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அந்நாட்டில் நடைபெற உள்ள வர்த்தகர் சந்திப்பு நிகழ்ச்சியில் திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு, 0421 2232634 என்ற எண்ணில் ஏ.இ.பி.சி., அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×