என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சுவர்"
- மதியம் சுமார் 12.30 மணியளவில் உணவு இடைவேளையின்போது திடீரென இடிந்து விழுந்தது.
- வகுப்பில் சுவர் இடிந்தபோது சுவரின் அருகே இருந்த மாணவனும் சுவரோடு கீழே விழும் காட்சிகள் வெளியாகி காண்போரை அதிரச் செய்து வருகிறது.
குஜராத் மாநிலத்தில் 7 ஆம் வகுப்பு மாணவர்கள் அமர்ந்திருந்த பள்ளியின் வகுப்பறை இடிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தில் உள்ள வதோதராவில் இயங்கி வரும் ஸ்ரீ நாராயண் குருகுல் பள்ளியின் முதல் தளத்தில் இருந்த 7 வகுப்பு மாணவர்கள் அமர்ந்திருந்த வகுப்பறையின் பக்கவாட்டுச் சுவர் நேற்று மதியம் சுமார் 12.30 மணியளவில் உணவு இடைவேளையின்போது திடீரென இடிந்து விழுந்தது.
வகுப்பறையில் இருந்த மாணவர்களின் அலறல் சத்தம் கேட்டு தலைமையாசிரியர் உட்பட அனைவரும் அங்கு ஓடி வந்து மாணவ்ர்களை அங்கிருந்து மீட்டனர். இந்த விபத்தில் ஒரு மாணவனுக்கு தலையில் காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. வகுப்பறையின் சுவரானது கீழ் தளத்தில் இருந்த, மாணவர்கள் சைக்கிள் நிறுத்தும் இடத்த்தின்மீது விழுந்துள்ளது.
வகுப்பில் சுவர் இடிந்தபோது சுவரின் அருகே இருந்த மாணவனும் கீழே விழும் காட்சிகள் வெளியாகி காண்போரை அதிரச் செய்து வருகிறது. இதற்கிடையில் இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து பள்ளிக் கட்டடங்களின் தரம் குறித்த பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
- கடந்த கஜா புயலின் போது கல்லூரி கட்டிடத்தின் முன்பக்க சுவர் மற்றும் கண்ணாடிகள் பாதிக்கப்பட்டது.
- இதனை அப்பகுதி மக்கள் வெகுவாய் பாராட்டி வருகின்றனர்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி அடுத்த தண்டலை ச்சேரியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த கஜா புயலின் போது கல்லூரி கட்டிடத்தின் முன்பக்க சுவர் மற்றும் கண்ணாடிகள் பாதிக்கப்பட்டது.
மேலும், சில ஆண்டுகளாக அந்த சுவர் சரிசெய்ய ப்படாமல் இருந்தது. இதனை சீரமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். அதனை அடுத்து மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீயின் பரிந்துரையின் பேரில் உடனடியாக காவேரி படுகை ஓ.என்.ஜி.சி. நிறுவனம் மூலம் ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை அப்பகுதி மக்கள் வெகுவாய் பாராட்டி வருகின்றனர்.
- சாரல் மழை கடந்த சில நாட்களாக விட்டு விட்டு பெய்து வந்தது.
- வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பத்மா என்ற பெண் காயம் அடைந்தார்.
கும்பகோணம்:
கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார் கோவில் செம்மங்குடி மேலத் தெருவில் அரசால் கட்டித் தரப்பட்ட தொகுப்புவீடுகள் உள்ளன. சாரல் மழை விட்டு விட்டு கடந்த சிலநாட்களாக பெய்து வந்த நிலையில் நேற்று இரவு பத்மா (வயது50) என்பவருடைய தொகுப்பு வீட்டின் சுவர்திடீரென இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி பத்மா காயம் அடைந்தார்.
அவரை மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் தொகுப்பு வீடுகளின் நிலை குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து தகுதி இல்லாத தொகுப்பு வீடுகளை இடித்து, புதிதாக வீடு கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கூரை வீட்டின் மேற்கூரையை பிரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
- வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்து தனமணி மீது விழுந்தது.
நீடாமங்கலம்:
வலங்கைமான் அருகே பூந்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் தனமணி (வயது 55).
கூலி தொழிலாளி சம்பவத்தன்று இவர், அதே கிராமத்தை சேர்ந்த அன்பரசி என்பவரின் கூரை வீட்டின் மேற்கூரையை பிரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது திடீரென்று அந்த வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்து தனமணி மீது விழுந்தது.
இதில் இடிபாடுகளில் சிக்கி அவர் படுகாயம் அடைந்தார்.
அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆலங்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்கைகாக அனுமதித்தனர்.
அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
- 3000 சதுர அடியில் ஹாலோ பிளாக் கற்களை கொண்டு ஒரே கட்டிடமாக கட்டப்பட்டுள்ளது.
- ஊத்துக்குளி போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பெருமாநல்லூர்:
திருப்பூரில் இருந்து ஊத்துக்குளி செல்லும் சாலையில் உள்ள கூலிபாளையம் பகுதியில் தனியார் பனியன் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு 3000 சதுர அடியில் ஹாலோ பிளாக் கற்களை கொண்டு ஒரே கட்டிடமாக கட்டப்பட்டுள்ளது. மேற்கூரையில் அலுமினிய தகடுகளால் ஆன கூலிங் சீட் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் கட்டிங், டெய்லரிங், அயர்னிங் என அனைத்தும் ஒரே கூரையின் கீழ் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தில் வட மாநில தொழிலாளர்கள் மற்றும் தமிழ் நாட்டு தொழிலாளர்கள் என 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் வழக்கம்போல் நேற்றும் (செவ்வாய்க்கிழமை) பணிக்கு வந்த தொழிலாளர்கள் தங்களது அன்றாட வேலைகளை மேற்கொண்டனர்.
தொடர்ந்து மாலை வேளையில் டீ அருந்துவதற்கான இடைவேளையில் அனைவரும் வெளியே உள்ள கடைக்கு சென்று உள்ளனர். 10க்கும் மேற்பட்டோர் பனியன் நிறுவனத்திற்குள் இருந்து பணியை செய்து வந்தனர்.
அப்போது கனமழையோடு கூடிய சூறைக்காற்று வீசியதில், அலுமினியத்தால் ஆன தகர கொட்டகை, காற்றில் பறந்தது. மேலும் பலத்த சூறைக் காற்றின் வேகம் தாங்காமல் பனியன் நிறுவனத்தின் ஹரலோ பிளாக் சுவர்கள் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
திடீரென நடந்த இந்த விபத்தில் பனியன் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த 10க்கும் மேற்பட்டோர் உள்ளே சிக்கிக் கொண்டனர். இது குறித்து ஊத்துக்குளி போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனே சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் இடிபாடுகளை அகற்றி உள்ளே சிக்கி இருந்தவர்களை மீட்டனர் .இதில் 4 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து ஊத்துக்குளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மூதாட்டி மீது வீட்டு சுவர் இடிந்து விழுந்தது.
- உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.
கடலூர்:
சென்னையை சேர்ந்தவர் கலியபெருமாள் இவரது மனைவி மீனா (65) இவர் பண்ருட்டி ஒன்றியம் குடுமியான்குப்பத்திலுள்ள இவரது தங்கை கமலா வீட்டில் தங்கியிருந்தார். இந்நிலையில் நேற்று இரவு 10.00 மணி அளவில் மூதாட்டி மீது வீட்டு சுவர் இடிந்து விழுந்தது.இதனால் சம்பவ இடத்திலே மீனா பரிதாபமாக இருந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பள்ளிக்கூட சுவர்களின் இடுக்கில் ஆடு ஒன்று சிக்கி கத்திக் கொண்டிருந்தது.
- தீயணைப்பு துறையினர் சுமார் 1 மணி நேரம் போராடி ஆட்டை உயிருடன் மீட்டனர்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன்அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அரையாண்டு விடுமுறை காரணமாக அப்பள்ளியில் மைதா னத்தில் மாலை நேரத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது பந்து பள்ளிக்கூட கட்டிடம் அருகில் விழுந்தது. பந்தை மாணவர்கள் எடுக்க சென்ற போது பள்ளிக்கூடத்தின் சுவர்களின் இடுக்கில் ஆடு ஒன்று சிக்கி கத்திக் கொண்டு இருந்தது.
இது குறித்து மாணவர்கள் உடனடியாக தங்களது பெற்றோர்களிடம் கூறியு ள்ளனர்.
அதனைத் தொடர்ந்து திருவாரூர் தீயணைப்பு துறையி னருக்கு தக வல் தெரிவிக்க ப்பட்டது.
உடனடி யாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருவாரூர் தீயணைப்பு துறையினர் சுமார் 1 மணி நேரம் போராடி ஆட்டை உயிருடன் மீட்டனர்.
இரவு நேரம் என்பதால் ஒற்றை டார்ச் லைட் உதவியுடன் தீயணைப்புத் துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இதனை அப்பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் வீடியோவாக எடுத்து இணைய தளங்க ளில் பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
- அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 5 வாலிபர்கள்
- கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி நான்கு வழி சாலையில் நள்ளிரவில் சீறிப்பாய்ந்த சொகுசு கார் வீட்டு சுவர் மீது பயங்கரமாக மோதியது. இதில்இருந்த 5 வாலிபர்கள் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்கள். இந்த விபத்து பற்றிய சி.சி.டி.வி.காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.
கன்னியாகுமரிஅருகே உள்ள குண்டல் பகுதியில் நேற்று நள்ளிரவு சொகுசு கார் ஒன்று அதிவேகமாக வந்தது. அதில்இருந்த 5 வாலிபர்களும் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.அதிவேகமாக வந்த அந்த சொகுசு கார் வடக்கு குண்டல் பகுதியில் வளைவில் திரும்பிய போது கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த ஒரு வீட்டின் சுவர் மீது மோதியது.விபத்து ஏற்படுத்திய சொகுசு காரில் இருந்த அந்த 5 வாலிபர்கள் மது போதையில் இருந்ததால் போலீசாருக்கு பயந்து காரை அங்கேயே விட்டுச் சென்று உள்ளனர்.
இந்த விபத்துகுறித்து தகவல்அறிந்த கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துசென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.விபத்து நடந்த பகுதியின்அருகில் உள்ள ஒரு தங்கும்விடுதியில் இருந்தகண்காணிப்பு கேமராவில்விபத்துநடந்தது தெளிவாக பதிவாகி உள்ள து. அந்த சி.சி.டி.வி.காட்சி கள்சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
- மேயர் மகேஷ் உறுதி
- தெப்பக்குளம் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
நாகர்கோவில்:
நாகர்கோவில் வடசேரி யில் தழுவிய மகாதேவர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பின்புறம் உள்ள தெப்பக்குளத்தின் சுற்றுச்சுவர் சேத மடைந்து மோசமாக காட்சி அளிக்கிறது.
தற்போது இந்த தெப்பக் குளம் தூர்வார பட்ட நிலையில் குளத்தின் சுற்றுச்சுவரை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளரும் மேயருமான மகேசை சந்தித்து மனு அளித்தனர். இந்த நிலையில் மேயர் மகேஷ் தழுவிய மகாதேவர் கோவில் தெப்பக்குளத்தை நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது ஆணை யாளர் ஆனந்த மோகன் பொறியாளர் பாலசுப்பிர மணியன் கவுன்சிலர் சுனில் அரசு மற்றும் நிர்வாகிகள் இருந்தனர். ஆய்வு பணி மேற்கொண்ட மேயர் மகேஷிடம் தெப்பக்குளத்தை சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அங்கு குடியிருந்த மக்கள் தெரிவித்தனர். உடனடியாக மேயர் மகேஷ் இது தொடர்பாக இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளிடம் பேசினார்.
இதை தொடர்ந்து மேயர் மகேஷ் கூறுகையில், தெப்பக்குளம் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே இது தொடர்பாக அதிகாரிகளிடம் பேசி உள்ளோம். அவர்கள் இதை ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர். தெப்பக்குளத்தை தற்போது சீரமைக்க வேண்டும் என்றால் ரூ.30 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை செலவாகும்.மழை காலம் வந்துவிட்டால் சீரமைப்பது கடினம். எனவே மழைக்கு முன்னதாக அதை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
- பஸ்சில் 32 பயணிகள் இருந்தனர்.
- மோட்டார் சைக்கிளில் ஒரு நபர் தாறுமாறாக ரோட்டில் வந்துள்ளார்.
அவினாசி :
ஈரோட்டிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி அரசு பஸ் சென்றுகொண்டிருந்தது. பஸ்சை சுப்பிரமணியம் (வயது 49) ஓட்டி சென்றார்.ரவிச்சந்திரன்(55) நடத்துனராக இருந்தார். பஸ்சில் 32 பயணிகள் இருந்தனர்.
இந்த நிலையில் பஸ் நேற்று இரவு 9.45 மணி அளவில் அவினாசியை அடுத்து வெள்ளியம் பாளையம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது மோட்டார் சைக்கிளில் ஒரு நபர் தாறுமாறாக ரோட்டில் வந்துள்ளார். எனவே அவர்மீது மோதாமல் இருப்பதற்காக ஓட்டுனர் பஸ்சை திருப்பியுள்ளார். எதிர்பாராதவிதமாக பஸ் ரோட்டோரம் இருந்த ஒரு வீட்டின் சுவற்றில் மோதி நின்றது. இதனால் வீட்டின் சுவர் இடிந்தது. வீட்டில் இருந்தவர்கள் காயமின்றி தப்பினர். இதில் பஸ்டிரைவர், ஒட்டுனர் மற்றும் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த கார்த்தி (40) ஆகிய மூவருக்கும் கை, கால்களில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவினாசி போலீசார் சம்பவ இடம் வந்து காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அவினாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- வடசேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை
- சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு
நாகர்கோவில்:
நாகர்கோவில் அருகே பார்வதிபுரத்தைச் சேர்ந்தவர் ஜாண் செல்வன் (வயது 58).
இவர் பார்வதிபுரத்தி லிருந்து அழகம்பாறை செல்லும் சாலையில் பல சரக்கு கடை வைத்துள்ளார். நேற்று இரவு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.இன்று காலையில் ஜாண் செல்வன் கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் பின் பக்க சுவரில் துளை போடப் பட்டு இருந்தது.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் கடையின் ஷட்டரை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது மேஜையில் இருந்த பணம் மற்றும் பொருட்கள் திருடப்பட்டு இருந்தது. இதுகுறித்து வடசேரி போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். கடையில் இருந்த ரூ.20 ஆயிரம் மற்றும் பல சரக்கு பொருட்கள் கொள்ளை போயிருப்பதாக ஜாண் செல்வன் தெரிவித்தார். அப்போது பக்கத்தில் உள்ள வெல்டிங் கடை ஒன்றில் இருந்து குத்து விளக்கை மர்மநபர்கள் திருடி இருந்தது தெரிய வந்தது. அந்த குத்து விளக்கு அந்தப் பகுதியில் கிடந்ததை போலீசார் கைப்பற்றினார்கள்.
மேலும் வெல்டிங் கடையில் இருந்து ட்ரில்லிங் மெஷின் ஒன்றை எடுத்து வந்து பல சரக்கு கடையில் பின்பக்க சுவரில் துளை போட்டு உள்ளே புகுந்து கொள்ளையடித்து உள்ளனர்.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து வடசேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த பகுதி யில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளையும் கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள்.
- சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 90 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது.
- 180 மீட்டருக்கு மையத்தடுப்புச்சுவர் வைக்கும் பணி தொடங்கியது.
மங்கலம் :
திருப்பூர் - மங்கலம் ரோட்டில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதால் சாலையை அகலப்படுத்த வேண்டும். வளைவு, விபத்து ஏற்படக்கூடிய இடங்கள், நான்கு, மூன்று ரோடு சந்திப்பு பகுதியில் வாகனங்கள் விதிமீறி முந்தி செல்வதை தடுக்க மையத்தடுப்புச்சுவர் வைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.ஒரு மாதம் முன் நெடுஞ்சாலைத்துறையினர் இப்பகுதியில் ஆய்வு நடத்தினர்.
இந்நிலையில் 2021 - 22ம் ஆண்டு சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 90 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு, முதல்கட்டமாக 180 மீட்டருக்கு மையத்தடுப்புச்சுவர் வைக்கும் பணி தொடங்கியது. லாரிகளில் கொண்டு வந்த மையத்தடுப்புக்கற்களை கிரேன் உதவியுடன் நிறுவும் பணியை நெடுஞ்சாலைத்துறையினர் மேற்கொண்டனர்.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், மங்கலம் - திருப்பூர் ரோட்டில் அதிக நெரிசல் மற்றும் விபத்து அபாயம் உள்ளதாக கண்டறியப்பட்ட பாரப்பாளையம், பெரியாண்டிபாளையம் சந்திப்பில் முதல்கட்டமாக மையத்தடுப்பு கற்கள் வைக்கப்பட்டு வருகிறது. வாகன ஓட்டிகள் விதிமீறி முன்னேறி செல்லக்கூடாது.தங்களுக்கென ஒதுக்கப்பட்ட இடதுபுறத்தில் மட்டுமே பயணிக்க வேண்டும். ஆக்கிரமிப்புகள் விரைவில் அகற்றப்பட்டு மேலும் சில சந்திப்புகளில் மையத்தடுப்புச்சுவர் ஏற்படுத்தப்படும் என்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்