search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சர்வேயர்"

    • கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் 18-ந்தேதி எனது நிலத்தை அளப்பதற்காக பணம் செலுத்தினேன்.
    • தென்காசி தாலுகா அலுவலகத்தில் பிளக்ஸ் பேனர் வைக்க அனுமதி தர வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

    தென்காசி:

    தென்காசி தாலுகாவிற்கு உட்பட்ட பாப்பான்குளம் பஞ்சாயத்து மயிலப்பபுரம் கிராமத்தை சேர்ந்த சுப்பையா என்னும் விவசாயி தென்காசி மாவட்ட கலெக்டரிடம் மனு ஒன்றை வழங்கினார்.

    அதில் கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் 18-ந்தேதி எனது நிலத்தை அளப்பதற்காக பணம் செலுத்தினேன். பலமுறை தென்காசி தாசில்தார் அலுவலகத்தில் உள்ள நில அளவை பிரிவு சென்று கோரிக்கையை தெரிவித்தும் இன்று வரை எந்தவிதமான பதிலும் தெரிவிக்காத காரணத்தினால் எனக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. எனவே வருகிற 18-ந்தேதி தென்காசி தாலுகா அலுவலகத்தில் எனது புகைப்படத்துடன் கூடிய டிஜிட்டல் பிளக்ஸ் பேனர் ஒரு வார காலம் வைத்துக்கொள்ள அனுமதியும், எனக்கு பாதுகாப்பு வசதியும் ஏற்படுத்தி தர வேண்டும் என்று அதில் கூறியிருந்தார்.

    அவர் அனுமதி கேட்ட பிளக்ஸ் பேனரில் தென்காசி வட்டம் வடக்கு பாப்பான்குளத்தில் இடத்தை சர்வே செய்வதற்கு அரசுக்கு பணம் செலுத்தி இருந்தேன். இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் அரசு பணியை செய்கின்ற சர்வேயர் மற்றும் கண்காணிப்பாளர் ஆகியோரை நான் மனதார பாராட்டுகிறேன் என்று எழுதி வைக்கப்போவதாக அவர் கூறினார்.

    • பொதுமக்களிடம் இருந்து 621 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.
    • சர்வேயர் பெருமாள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் தாலுகாவில் கடந்த 9-ந் தேதி ஜமாபந்தி தொடங்கி 4 நாட்கள் நடைபெற்றது. மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் கோட்டைக் குமார் தலைமை தாங்கினார்.

    நேற்று நடந்த ஜமாபந்தியில் பன்னிகுண்டு, கொக்குளம், திருமங்கலம் டவுன் உள்ளிட்ட 3 பிர்காக்களை சேர்ந்த பொதுமக்கள் மனுக்கள் கொடுத்தனர்.

    இந்த ஜமாபந்தியில் மொத்தம் 621 மனுக்கள் பெறப்பட்டன. இதில் முதியோர் உதவித் தொகை, வீட்டு மனைபட்டா, இலவச வீட்டு பட்டா, முழு புலம், சப் டிவிஷன் என 80 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு பொதுமக்களுக்கு நலத்திட்டங்களை ஆய்வு குழு அலுவலர் கோட்டைக்குமார் வழங்கினார்.

    இதில் திருமங்கலம் தாசில்தார் சிவராமன், சர்வேயர் பெருமாள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • பயிர்களுக்கு இலை வழியாக யூரியா உரம் இடும் பணி நடக்கிறது.
    • நில அளவை பிரிவில் 8 சர்வேயர் உள்ள இடத்தில் 4 பேர் மட்டுமே உள்ளனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

    இதில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான விவசாயிகள் கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர்.

    விவசாயி வீரசேனன் அளித்த மனுவில், தஞ்சை மாவட்டத்தில் தற்போது சம்பா நெற்பயிர்கள் வளர்ந்து வருகிறது. பயிர்களுக்கு இலை வழியாக யூரியா உரம் இடும் பணி நடக்கிறது.

    இந்த சூழ்நிலையில் பல இடங்களில் உரம் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதனை உடனடியாக போக்க வேண்டும் என்ற குறிப்பிட்டிருந்தார். தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் அளித்த மனுவில்,

    கூட்டுறவு சங்க ங்களில் உடனடியாக விவசாயிகளுக்கு கடன் மற்றும் உரம் வழங்க வேண்டும், ஒரத்தநாடு நில அளவை பிரிவில் 8 சர்வேயர் உள்ள இடத்தில் 4 பேர் மட்டுமே உள்ளனர்.

    இவர்களை இடமாற்றம் செய்வதை தடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.இதேபோல் ஏராளமான விவசாயிகள் தங்களது கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர்.

    • சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள பக்காளியூரைச் சேர்ந்தவர் லாரி உரிமையாளருக்கு சொந்தமான கஸ்தூரிபட்டி கிராமத்தில் நிலம் உள்ளது.
    • இதையடுத்து வைத்தீஸ்குமார் ரூ.2 ஆயி ரம் லஞ்சம் வாங்கியபோது லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கையும் களவுமாக சிக்கினார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள பக்காளியூரைச் சேர்ந்தவர் லாரி உரிமையாளர் கணே சன் (வயது 50). இவருக்கு சொந்தமான கஸ்தூரிபட்டி கிராமத்தில் நிலம் உள்ளது. அந்த நி லத்தை அளவீடு செய்து உட்பிரிவு செய்து தரக் கோரி சங்ககிரி வட்ட நில அளவை துறையில் விண்ணப்பித்தார்.

    அதனை செய்து கொடுக்க சங்ககிரி நில அளவைத் துறை சுற்றுக்குழு நில அளவையராக பணியாற்றி வந்த வைத்தீஸ்குமார் (வயது 40) ரூ.2000 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. லஞ்சம் கொடுக்க விரும்பாத கணேசன் இது தொடர்பாக சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து வைத்தீஸ்குமார் ரூ.2 ஆயி ரம் லஞ்சம் வாங்கியபோது லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கையும் களவுமாக சிக்கினார்.

    இதையடுத்து அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்திய போலீசார் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் வைத்தீஸ்கு மாரை மேலம் மாவட்ட நில அளவை உதவி இயக்குனர் (பொறுப்பு) சுப்பிரமணியன் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும் அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

    • லாரி உரிமையாளர் கணேசன் (வயது 50). இவருக்கு சொந்தமான கஸ்தூரிபட்டி கிராமத்தில் நிலம் உள்ளது.
    • நிலத்தை அளவீடு செய்து உட்பிரிவு செய்து தரக் கோரி சங்ககிரி வட்ட நில அளவை துறையில் விண்ணப்பித்தார்.

    சங்ககிரி:

    சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள பக்காளியூரைச் சேர்ந்தவர் லாரி உரிமையாளர் கணேசன் (வயது 50). இவருக்கு சொந்தமான கஸ்தூரிபட்டி கிராமத்தில் நிலம் உள்ளது. அந்த நிலத்தை அளவீடு செய்து உட்பிரிவு செய்து தரக் கோரி சங்ககிரி வட்ட நில அளவை துறையில் விண்ணப்பித்தார்.

    ரு. 2 ஆயிரம் லஞ்சம்

    அதனை செய்து கொடுக்க சங்ககிரி நில அளவைத் துறை சுற்றுக்குழு நில அளவையராக பணியாற்றி வந்த நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் அத்திமரபட்டி பகுதியைச் சேர்ந்த வைத்தீஸ்குமார் (வயது 40) ரூ.2000 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத கணேசன் இது தொடர்பாக சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார்.

    இதையடுத்து வைத்தீஸ்குமாரை பொறி வைத்து பிடிப்பதற்காக திட்டமிட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார், கணேசிடம் 2 ஆயிரம் ரூபாய்க்கு ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பினர்.

    அந்த பணத்துடன் சங்க–கிரி தாலுகா அலுவலகத்திற்கு நேற்று மாலை சென்ற அவர் வைத்தீஸ்குமாரிடம் பணத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையிலான போலீசார் வைத்தீஸ் குமாரை கையும் களவுமாக மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    சிறையில் அடைப்பு

    இதையடுத்து, கைது செய்யப்பட்ட வைத்தீஸ்கு–மாரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். பின்னர் நேற்றிரவு கோர்ட்டில் ஆஜர் படுத்திய போலீசார் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    2 ஆண்டுகளுக்கு முன்பு பணியில் சேர்ந்த வைத்தீஷ்குமார் நேற்று 3-ம் ஆண்டு தொடக்க நாளில் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடதக்கது.

    ×