என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போக்குவரத்து விதி"

    • போக்குவரத்து விதிகளை மீறியதாக நடவடிக்கை
    • விபத்தில் 29 பேர் உயிரிழந்தனர்

    போளூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உத்தரவின் பேரில் போளூர் டி.எஸ்.பி. குமார் மேற்பார்வையில் போளூர், கலசப்பாக்கம், கடலாடி, சேத்துப்பட்டு, ஜமுனாமுத்தூர் ஆகிய 5 போலீஸ் நிலைய எல்லைக்குள் இன்ஸ்பெக்டர்கள் ஜெயபிரகாஷ், ராமச்சந்திரன், லட்சுமிபதி, பிரபாவதி, சப்- இன்ஸ்பெக்டர்கள். சிவக்குமார், சீனிவாசன் மகாலிங்கம் ராஜ் ஜெய்குமார் சரவணன், மற்றும் போலீசார் ஆண்டு முழுவதும் வாகன தணிக்கை செய்தனர்.

    கடந்த 12 மாதங்களில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்கள் ஒட்டிய 34 ஆயிரத்து 503 பேர் மீதும் கார் ஓட்டும் போது சீட்டு பெல்டு அணியாமல் இருந்ததாக 7ஆயிரத்து 677மீதும் செல்போன் பேசியவாறு வாகனம் ஓட்டிய 7 ஆயிரத்து 581, பேர் மீதும் இருசக்கர வாகனங்களில் 3 பேர் பயணம் செய்த வழக்கில் 4 ஆயிரத்து 910 பேர் மீதும் சீருடை அணியாமல் வாகனம் ஓட்டியதாக 4 ஆயிரத்து 840 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    மேலும் அதிகம்பாரம் ஏற்றி செல்லுதல், உரிமை இன்றி வாகனம் ஓட்டியது, போன்ற பல்வேறு போக்குவரத்து விதிகளை மீறியதாக 65 ஆயிரத்து 350 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    இந்த தகவலை டி.எஸ்.பி. குமார் கூறினார்.

    அவர் மேலும் கூறுகையில்:-

    கடந்த ஆண்டு 39 திருட்டு வழக்குகளில் 31 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டது. குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் 20 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர், விபத்தில் 29 பேர் உயிரிழந்தனர், 177 பேர் காயம் அடைந்தனர் என்றார்.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் போக்குவரத்து விதிகள் குறித்த கண்காட்சி நடந்தது.
    • இதற்கான ஏற்பாடுகளை சட்ட விழிப்புணர்வு கழக ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகபாண்டி செய்திருந்தார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் சட்ட விழிப்புணர்வு மன்றம் ''போக்குவரத்து விதிகள்'' என்ற தலைப்பில் கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்தது. இதில் போக்குவரத்து விதிகள் அடங்கிய விளக்கப்படம், போக்குவரத்து சின்னங்கள் மற்றும் வண்ணங்களுடன் கூடிய போக்குவரத்து சிக்னல்கள் காட்சிப்படுத்தப்பட்டன. அதில் அபராதம், போக்குவரத்து விதிகளை மீறுவதால் ஏற்படும் விளைவுகள், போக்குவரத்து விதிகளைக் கடைபிடிக்க வேண்டியதன் முக்கியத்துவம் ஆகிய விவரங்களும் கொடுக்கப்பட்டிருந்தன. கண்காட்சியை கல்லூரி முதல்வர் பாலமுருகன் தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சியை பல்வேறு துறைகளைச் சேர்ந்த 100 மாணவ-மாணவிகள் பார்வையிட்டு பயனடைந்தனர். இதற்கான ஏற்பாடுகளை சட்ட விழிப்புணர்வு கழக ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகபாண்டி செய்திருந்தார்.

    • ஆட்டோக்களுக்கு எப்சி புதுப்பிக்க ரூ.10,000 தமிழக அரசு வழங்க வேண்டும்
    • அரசு வீடு திட்டத்தில் முன்னுரிமை தந்து ஒதுக்க வலியுறுத்தல்

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    மாவட்ட தலைவர் தனசேகர் தலைமை தாங்கினார்.மாவட்ட செயலாளர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார்.

    பொருளாளர் சம்பத் வரவேற்பு உரையாற்றினார்.இந்து ஆட்டோ முன்னணி மாநில பொதுச் செயலாளர் மகேஷ் கண்டன உரையாற்றினார். ஆட்டோ மீட்டர் கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தி வழங்க வேண்டும் பெட்ரோல் டீசல் கியாஸ் வரியை மத்திய, மாநில அரசுகள் ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர வேண்டும். ஆட்டோ தொழிலாளர்களுக்கு அரசு வீடு திட்டத்தில் முன்னுரிமை தந்து ஒதுக்க வேண்டும்.

    ஆந்திர மாநிலத்தில் உள்ளது போல் ஆட்டோக்களுக்கு எப்சி புதுப்பிக்க ரூ.10,000 வழங்குவது போல் தமிழக அரசும் வழங்க வேண்டும் தமிழ்நாடு முழுவதும் ஆட்டோ தொழிலாளர் நல வாரியத்தில் ஆன்லைன் பதிவு மிகவும் சிரமப்பட்டு பதிய வேண்டியிருக்கிறது.

    எனவே ஆன்லைன் பதிவினை எளிதாக பதிய ஆவணம் செய்ய வேண்டும் ஆட்டோ தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ.5,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் போக்குவரத்து விதி மீறல் செய்தால் ஆட்டோவை நிறுத்தி ஆவணங்களை சரிபார்த்து ஆட்டோ டிரைவர் கையெழுத்துடன் அபராதம் விதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் கோட்ட பொருளாளர் பாஸ்கரன், மாநில செயலாளர் இந்து வழக்கறிஞர் முன்னணி ரத்தின குமார், இந்து ஆட்டோ முன்னணி மாநில பொருளாளர் மூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தக்கலையில் போலீசார் அதிரடி நடவடிக்கை
    • போதையில் வாகனம் ஓட்டியவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட போலீஸ் சுப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் தக்கலை துணை போலீஸ் சூப்பிரண்டு உதயசூரியன் தலைமையில் தக்கலை போக்குவரத்து இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன் மற்றும் போலீசார் பழைய பஸ் நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட னர்.

    அப்போது குமார கோவில் பகுதியை சேர்ந்த சுரேஷ் (வயது 43) என்பவர் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்தார். அவரை போலீ சார் பிடித்து சோதனை செய்த போது அவர் போதையில் இருந்தது தெரியவந்தது. தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதனை செய்தபோது அவர் மது போதையில் வாகனம் ஓட்டியது உறுதியானது.

    உடனே அவர் மீது மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக வழக்குப்பதிவு செய்து ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் தொடர்ந்து ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியது. குடித்துவிட்டு வாகனம் ஓட்டியது, நோ பார்க்கிங்கில் வாகனத்தை நிறுத்தியது, வேகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சுமார் 100 வாகனங்கள் மீது வழக்கு பதிவுசெய்து ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

    தக்கலை போக்குவரத்து போலீசாரின் அதிரடி நடவடிக்கை போதையில் வாகனம் மற்றும் ஹெல்மெட் அணியாமல் ஓட்டுபவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • வாகன ஓட்டிகளுக்கு டி.எஸ்.பி. அறிவுரை
    • 5 நபர்களுக்குதலா ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டது

    செய்யாறு:

    செய்யாறு டிஎஸ்பி வெங்கடேசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஜீவராஜ் மணிகண்டன், உதவி ஆய்வாளர்கள் சங்கர், கன்னியப்பன் உள்பட போலீசார் நேற்று ஆற்காடு சாலை அரசு கல்லூரி அருகே வாகன தணிக்கை செய்தனர்.

    போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளை நிறுத்தி, அனைவரும் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்றும், தலைக்கவசம் அணிய வேண்டும் என்றும், வாகனத்திற்குரிய ஆவணங்கள் கைகளில் வைத்திருக்க வேண்டும் என்றும், மது அருந்திவிட்டு வாகன ஓட்டக்கூடாது என்றும், டிஎஸ்பி வெங்கடேசன் அறிவுரை வழங்கி எச்சரித்து அனுப்பினார்.

    அப்போது மது அருந்தி விட்டு வந்த 5 நபர்களுக்குதலா ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டது.

    • பண்ருட்டியில் போக்குவரத்து விதி மீறிய 8 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • அனைத்து ஆவணம் வைத்திருக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டன.

    கடலூர்:

    பண்ருட்டி நகரத்தில் ஆட்டோக்கள் அதிக அளவு செல்கின்றன. ஒருசில ஆட்டோ உரிமையாளர்கள் முறையாக ஆவணம் இன்றி ஒட்டி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு மாவட்ட கலெக்டர், கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் சுதாகர் ஆகியோரின் அறிவுரையின் படி பண்ருட்டி மோட்டார் வாகன ஆய்வாளர் ரவிசந்திரன், போக்குவரத்து ஆய்வாளர் பரமேஸ்வரபத்மநாபன் ஆகியோர் இணைந்து நகரம் முழுவதும் திடீர் ஆய்வு செய்தனர்.

    அதில் எவ்வித ஆவணம் இன்றி ஆட்டோ ஓட்டுதல், உரிமை இல்லாதவை, திருச்சி, கோவை பகுதியிலிருந்து ஆவணமின்றி எடுத்து வந்து பண்ருட்டியில் ஓட்டுதல் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக 8 ஆட்டோக்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர். தொடர்ந்து ஆட்டோ ஓட்டுபவர்கள், ஆட்டோ முன் பகுதியில் பயணிகளை உட்கார வைத்து ஓட்ட கூடாது. யூனிபார்ம் அணிய வேண்டும். அனைத்து ஆவணம் வைத்திருக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டன.

    • இரு சக்கர வாகனங்களில் செல்கையில் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும்.
    • விதி மீறல்களால் பெரும் விபத்துக்கள் ஏற்பட்டு விலை மதிப்பில்லாத மனித உயிர்கள் பலியாகின்றன.

    பல்லடம் :

    பொதுமக்கள் சாலைகளில் இரு சக்கர வாகனங்களில் செல்கையில் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். குடிபோதையில் வாகனங்களை ஓட்டக்கூடாது, காரில் செல்கையில் சீட பெல்ட் அணிந்து ஓட்டவேண்டும், போக்குவரத்து சிக்னலில் சிவப்பு விளக்கு எரியும்போது செல்லக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து விதிமுறைகள் உள்ளன. இருந்தும் அவற்றை பின்பற்றாமல் சிலர் செய்யும் விதி மீறல்களால் பெரும் விபத்துக்கள் ஏற்பட்டு விலை மதிப்பில்லாத மனித உயிர்கள் பலியாகின்றன.

    இதனை தடுக்கும் பொருட்டு திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் உத்தரவின்பேரில் பல்லடம் துணை போலீ்ஸ் சூப்பிரண்டு சவுமியா மேற்பார்வையில் பல்லடம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு, மற்றும் போக்குவரத்து போலீசார் இணைந்து பல்லடம் பகுதியில் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் கடந்த ஜூலை மாதத்தில் இருசக்கரவாகனங்களில் செல்கையில் ஹெல்மெட் அணியாமல் சென்ற 176 பேர் மீதும், குடி போதையில் வாகனங்களை ஓட்டிச்சென்ற 15 பேர், மேலும் சிக்னலை மதிக்காமல் சென்றது, நான்குசக்கர வாகனங்களில் செல்கையில் சீட் பெல்ட் அணியாமல் செல்வது, அதிக பாரம் ஏற்றிச்செல்வது உள்பட பல்வேறு விதமான போக்குவரத்து விதிகளை மீறிய 679 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்களிடமிருந்து அபராதமாக ரூ.2,02,500 வசூலிக்கப்பட்டது.

    மேலும் போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்திற்காக திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டு 74 நபர்களின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டது .இவ்வாறு பல்லடம் போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.

    ×