search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வட மாநில தொழிலாளர்"

    • நொச்சிபாளையம் அருகில் ரேஷன் பொருட்கள் பதுக்கல் மற்றும் கடத்தல் தடுப்பு சம்மந்தமாக சோதனை செய்தனர்.
    • 450 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    திருப்பூர் :

    கோவை மண்டல குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வு துறை போலீஸ்சூப்பிரண்டு பாலாஜி உத்தரவுப்படி திருப்பூர் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் திருப்பூர் நொச்சிபாளையம் அருகில் ரேஷன் பொருட்கள் பதுக்கல் மற்றும்கடத்தல் தடுப்பு சம்மந்தமாக சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை செய்தனர்.

    அந்த வழியாக வந்த மொபட்டை பின் தொடர்ந்து சென்று சோதனை செய்ததில் ரேஷன் அரிசி 450 கிலோ பதுக்கி வைத்துஇருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அரிசி கடத்தி பதுக்கி வைத்திருப்பவர் குறித்து விசாரணை நடத்தியபோது அவர் திருப்பூர் செல்லம் நகரைசேர்ந்த அன்புமணி (வயது 23) என்பதும் இவர் நொச்சிபாளையம், வீரபாண்டி பகுதிகளில்உள்ள பொது மக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி அதனை பதுக்கி வைத்துவட மாநில தொழிலாளர்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அன்புமணியை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 450 கிலோ ரேஷன் அரிசிகளை பறிமுதல் செய்தனர்.

    • வீண் வதந்தி மற்றும் பொய் செய்திகளை நம்ப வேண்டாம்.
    • தொழிலாளர்கள் எந்த அச்சுறுத்தலுமின்றி தொடர்ந்து பணியாற்றலாம்.

    திருப்பூர் :

    திருப்பூரில் பணியாற்று ம் வட மாநில தொழிலாளர்க ளுக்கு எந்த பிரச்சினையும் இல்லை, என கட்டிட பொறியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

    இது குறித்து, திருப்பூர் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேசன் தலைவர் ஸ்டாலின் பாரதி கூறியதாவது:- திருப்பூரில் பணியாற்றும் வட மாநில தொழிலாளர்கள், வீண் வதந்தி மற்றும் பொய் செய்திகளை நம்ப வேண்டாம். வேறு பகுதிகளில் நடந்த சம்பவங்களை திரித்து தமிழகத்தில் நடந்தது போல் சிலர் சமூக வலை தளங்களில் பதிவுகள் செய்துள்ளனர். அது உண்மையில்லை.திருப்பூரில் வசிக்கும் வட மாநில கட்டிட தொழிலாளர்கள் எப்போதும் போல் எந்த அச்சமும் இன்றி தொடர்ந்து பணியாற்றுகின்றனர். அவர்கள் பாதுகாப்பை அரசு உறுதி செய்துள்ளது. தொழிலாளர்கள் எந்த அச்சுறுத்தலுமின்றி தொடர்ந்து பணியாற்றலாம். இவ்வாறு, அவர் கூறினார்.

    • வதந்தி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல்வர் எச்சரிக்கை விடுத்தார்.
    • பீகாரில் 10 பேர் கொண்ட குழு விசாரணை நடத்தி வருவதாக ஏடிஜிபி கூறினார்.

    பாட்னா:

    தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற வீடியோ சில நாட்களுக்கு முன்பு சமூக வலை தளங்களில் பரவியது. இது தமிழகத்தில் பதற்றமான சூழலை ஏற்படுத்தி உள்ளது. பீகார் சட்டசபையிலும் இது எதிரொலித்தது.

    புலம்பெயர்ந்த வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக உண்மைக்கு புறம்பான, பொய்யான தகவல் சமூக ஊடகங்களில் சிலரால் பரப்பப்பட்டுள்ளதாகவும், இந்த பொய் செய்தி பரப்பியவர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டு வருகிறார்கள் என்றும் தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது. வதந்தி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்தார்.

    இந்நிலையில், தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பிய ஒரு நபரை பீகார் காவல்துறை கைது செய்திருப்பதாக ஏடிஜிபி ஜிதேந்திர சிங் கங்காவர் தெரிவித்தார். போலியான பதிவை வெளியிட்டவர்கள் மற்றும் பகிர்ந்தவர்கள் கைது செய்யப்படுவார்கள். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக 10 பேர் கொண்ட குழு விசாரணை நடத்தி வருகிறது எனவும், ஏடிஜிபி கூறினார்.

    கைது செய்யப்பட்ட நபர் பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தைச் சேர்ந்த அமன் குமார் என்பது தெரியவந்துள்ளது. தவறான தகவலை சமூக வலைத்தளங்கள் மூலம் பரப்பியதாக பலர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. அவரது செல்போனில், அதுபோன்ற பல வீடியோக்கள் இருந்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 7 நாட்களாக பசியும் பட்டினியுமாக இங்கு போராடிவரும் குழந்தைகளை அதிகாரிகள் திரும்பி பார்க்கவில்லை.
    • வட மாநிலத்தவர் குறித்த சர்ச்சையை தி.மு.க.வும், காங்கிரசும் திட்டமிட்டு பரப்பி வருகின்றனர்.

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் தாலுகா அலுவலகத்தில் குறவன் (எஸ்.சி.) சாதி சான்றிதழ் கேட்டு மாணவ-மாணவிகள் பிச்சை எடுக்கும் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். நேற்று 7-வது, நாளாக ஆண்கள், பெண்கள் கூடைகள் பின்னி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இன்றும் 8-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த போராட்டத்துக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவு தெரிவித்து சாதி சான்றிதழ் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    பட்டியல் சான்றிதழ் கேட்டு பசியும் பட்டினியுமாக மக்கள் நடத்தி வரும் போராட்டத்தை கண்டு மனம் வருந்துகிறது. ஆதி தமிழ் குடி குறவன் குடிதான். வெள்ளைக்காரன் காலத்தில் குறவன் இன மக்கள் மிகுந்த ஆக்ரோஷத்துடன் போராடக்கூடியவர்கள் என்பதால் அவர்களை அடக்கி வைக்க குற்றப்பரம்பரை என பிரித்து வைத்தனர்.

    இன்று வரை அவர்களுக்கு சான்றிதழ் கொடுக்காமல் மறுக்கப்பட்டுள்ளது. ஆட்சியில் இருப்பவர்கள், நரிக்குறவர்கள் வீட்டுக்கு சென்று சாப்பிடுகிறார்கள். ஆனால் அவர்கள் சாப்பிடுவதை சாப்பிடுகிறார்களா? இந்த மக்களுக்காக போராட புரட்சி படை உருவாகியுள்ளது. 7 நாட்களாக பசியும் பட்டினியுமாக இங்கு போராடி வரும் குழந்தைகளை அதிகாரிகள் திரும்பி பார்க்கவில்லை.

    நீங்கள் நினைத்தது நடக்கும் வரை போராட வேண்டும். இது உங்கள் போராட்டம் இல்லை. என்னுடைய போராட்டம். இந்த அரசு முதலில் சான்றிதழ் வழங்கி விட்டு சமூக நீதி பற்றி பேச வேண்டும். இன்று ஆட்சியில் இருப்பவர்கள் நாளைக்கு வீதிக்கு வருவார்கள். இன்று வீதியில் இருக்கும் நீங்கள் ஒருநாள் ஆட்சி அதிகாரத்தில் அமர்வீர்கள்.

    மாவட்ட கலெக்டருக்கு அன்பாக கோரிக்கை வைக்கின்றோம், பசியும், பட்டினியுமாக போராடுபவர்களுக்கு உடனடியாக சாதி சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். ஆட்சியாளர்கள் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு, இன்று போராடி கொண்டிருக்கும் உங்களை தேடி வருவார்கள். நமது கோரிக்கைகள் நிறைவேறும் வரை அனைவரும் இணைந்து போராடுவோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் அவர் அளித்தபேட்டியில் கூறியதாவது:-

    குறவன் இன மக்கள் கடந்த 7 நாட்களாக பசியும் பட்டினியுமாக போராடி வரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் இதை கருத்தில் கொண்டு உடனடியாக சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

    இதுகுறித்து நடவடிக்கை இல்லை என்றால் துறை சார்ந்த அமைச்சரை சந்திக்க வேண்டிய நிலை உருவாகும். இந்த போராட்டத்தை மக்கள் தொடர்ந்து நடத்த வேண்டும்.

    வட மாநிலத்தவர் குறித்த சர்ச்சையை தி.மு.க.வும், காங்கிரசும் திட்டமிட்டு பரப்பி வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சமீபத்திய வதந்திகள், மொழி அடிப்படையில் வெறுப்பு, அமைதியின்மை, வன்முறையைப் பரப்புவதற்கான முயற்சியாகும்.
    • அதானி பிரச்சினையை திசை திருப்பவே அண்ணாமலை இவ்வாறு பேசுகிறார்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் வடமாநிலத் தொழிலாளா்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக பீகாா் உள்ளிட்ட மாநிலங்களில் சமூக வலைதளங்களில் தவறான செய்தி பரப்பப்பட்டு வருகிறது. இது தொடா்பாக மாவட்ட நிா்வாகம், காவல் துறையினா் விழிப்புணா்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

    வட மாநிலத் தொழிலாளா்கள் குறித்து வதந்தி பரப்புபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வடமாநில தொழிலாளர்கள் பிரச்னைகளுக்கு பாஜக தான் காரணம் என்று மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

    இது தொடர்பாக துரை வைகோ கூறியதாவது:

    புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீதான தாக்குதல் தொடர்பான சமீபத்திய வதந்திகள், மொழி அடிப்படையில் வெறுப்பு, அமைதியின்மை, வன்முறையைப் பரப்புவதற்கான முயற்சியாகும். வதந்திகளைப் பரப்பும் இந்த முயற்சியானது தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை நாசமாக்குவதற்கும் வட இந்தி பேசும் மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டுவதற்குமான முயற்சியாகும்.

    வடமாநில தொழிலாளர்கள் பிரச்சினைகளுக்கு பாஜக தான் காரணம். ஆனால் திமுக கூட்டணி கட்சிகள் காரணம் என அண்ணாமலை பேசி வருகிறார். அதானி பிரச்னையை திசை திருப்பவே அண்ணாமலை இவ்வாறு பேசுகிறார். இவ்வாறு துரை வைகோ கூறினார்.

    • தமிழர்களுக்கும், வட மாநில தொழிலாளர்களுக்கும் இடையே பிரச்சினையை தோற்றுவிக்கும் வகையில் சீமான் பேசிவருகிறார்.
    • வடமாநில தொழிலாளிகள் விவகாரத்தில் அம்பு எய்தவர்களை விட்டு விட்டு, அம்பை குறிவைக்க கூடாது.

    சென்னை:

    காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.சம்பத் பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் காங்கிரசார் அவரது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். அதன் பிறகு கே.எஸ்.அழகிரி நிருபர்க ளிடம் கூறியதாவது:

    வடமாநில தொழிலாளர்கள் குறித்து ஒருசிலர் வேண்டுமென்றே திட்டமிட்டு அவதூறு பரப்பி வருகின்றனர்.

    பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ். மறைமுகமாகவும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரடியாகவும் பேசிவருகிறார். இந்த பிரச்சினைக்கு இவர்கள் தான் காரணம்.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இவர்கள் மீது நேரடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழர்களுக்கும், வட மாநில தொழிலாளர்களுக்கும் இடையே பிரச்சினையை தோற்றுவிக்கும் வகையில் சீமான் பேசிவருகிறார்.

    சீமான் தனது பல்வேறு உரைகளில் தண்டனைக்கு உகந்தவாறு பேசி வருகிறார்.

    வடமாநில தொழிலாளிகள் விவகாரத்தில் அம்பு எய்தவர்களை விட்டு விட்டு, அம்பை குறிவைக்க கூடாது. அம்பு ஏய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏ., கு.செல்வப் பெருந்தகை எம்.எல்.ஏ., நாசே ராமச்சந்திரன், கோபண்ணா, உ.பலராமன், பொன்.கிருஷ்ணமூர்த்தி, ஏ.ஜி.சிதம்பரம், தாம்பரம் சிவராமன், ஷெரிப், பி.வி.தமிழ்ச்செல்வன், தளபதி பாஸ்கர், அகரம் கோபி, சூளை ராஜேந்திரன், சந்திர சேகர், முகமது அலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • புதிதாக 10 ஆயிரம் பேர் வந்தால் கூட வேலை வாய்ப்பு வழங்கக்கூடிய சூழல் உள்ளது.
    • வட மாநில தொழிலாளர்கள் விரைவாக தங்களுக்குரிய வேலையை கற்று கொள்கின்றனர்.

    திருப்பூர் :

    கொரோனா தொற்று, ஊரடங்கு என சவாலான காலகட்டத்திலும் கூட திருப்பூர் தொழில் துறையினர், தொழில் வளர்ச்சி சார்ந்த விஷயங்களில் விடாமல் சாதித்து வருவது வியப்புக்குரிய விஷயம் தான்.கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகளை வசப்படுத்த, வட மாநில தொழிலாளர்கள் ஆர்வம் காட்டுகின்றனர் என்பது தான் தற்போதைய யதார்த்த நிலை.

    ஆரம்ப காலங்களில் பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட குறிப்பிட்ட சில மாநிலங்களில் இருந்து மட்டுமே வட மாநில தொழிலாளர்கள் வந்த நிலையில் சமீபநாட்களாக நேபாளம், சட்டீஸ்கர், அசாம், ஒடிசா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வட மாநில தொழிலாளர்கள் வரத்துவங்கியுள்ளனர்.

    பின்னலாடை நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெறுகின்றனர்.திருப்பூரில் நடந்த தேசிய ஆயத்த ஆடை கண்காட்சி ஏற்பாடு குறித்து தகவல் பரிமாற்றத்தின் போது இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு (பியோ) தலைவர் சக்திவேல் கூறுகையில், ''ஒரு நாளில், புதிதாக 10 ஆயிரம் பேர் வந்தால் கூட வேலை வாய்ப்பு வழங்கக்கூடிய சூழல், திருப்பூரில் உள்ளது என்றார்.ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழக (ஏ.இ.பி.சி.,) செயற்குழு உறுப்பினர் சுப்ரமணியம் கூறுகையில், பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள் விரைவாக தங்களுக்குரிய வேலையை கற்று கொள்கின்றனர்.தங்கள் வேலையை பாதியில் விட்டு செல்லாமல், அதில் தங்களை நிலைப்படுத்தி கொள்கின்றனர். வட மாநில தொழிலாளர்கள் இல்லாமல் பின்னலாடை நிறுவனங்களை இயக்குவது கடினம் என்றார்.

    ×