என் மலர்
நீங்கள் தேடியது "ஆசிட்"
- சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை
- மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் லதா மீது ஆசிட் வீசிவிட்டு தப்பிச் சென்றனர்.
கன்னியாகுமரி:
குலசேகரம் அருகே உண்ணியூர்கோணம் மாடத்தூர்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் லதா (வயது 46). இவரது மகன் சுபாஷ் வயது (26).
இவர் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். தற்போது விடுமுறையில் வந்து இருக்கிறார். லதா சித்திரங்கோடு அருகே ரைஸ் மில் நடத்தி வருகிறார். நேற்று இரவு 7.30 மணி அளவில் உண்ணியூர்கோணம் பகுதியில் பஸ்சில் இருந்து இறங்கி வீட்டிற்கு நடந்து சென்றார்.
அப்போதுமோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் லதா மீது ஆசிட் வீசிவிட்டு தப்பிச் சென்றனர். அதிர்ச்சி அடைந்த லதா கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அவரை மீட்டு முதலுதவி அளித்து, குலசேகரம் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தகவல் அறிந்து குலசேகரம் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.
இது தொடர்பாக விசாரிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் லதா மீது ஆசிட் வீசிய மர்ம நபர்களை அடை யாளம் காணும் விதமாக அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. ஆய்வு செய்து வருகிறார்கள். லதாவிடமும் விசாரணை நடத்தப்பட்டது. பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினை காரணமாக ஆசிட் வீசப்பட்டதா? வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தக்கலை டி.எஸ்.பி. உதயசூரியன் நேரடியாக சென்று அந்த பகுதியை ஆய்வு செய்தார்.
- 4 ஏக்கரில் தென்னை சாகுபடி செய்துள்ளார்.
- 40 தென்னை மரங்கள் திடீரென கருகியது.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள வடக்கு அவினாசி பாளை யம் ஊராட்சிக்கு உட்பட்டது புதுப்பாளையம். இந்த ஊரைச் சேர்ந்த ஜெகநாதன் என்பவரது மகன் கவின் குமார் (வயது 31). இவர் சுமார் 4 ஏக்கரில் தென்னை சாகுபடி செய்து ள்ளார். இந்த நிலையில் இவரது தோட்டத்தில் இருந்த சுமார் 40 தென்னை மரங்கள் திடீரென கருகியது. இதனை ஆய்வு செய்த கவின்குமார் அதற்கு ஆசிட் மற்றும் களைக்கொல்லி மருந்துகள் ஊற்றி இருப்பது தெரிய வந்தது. இது குறித்து கவின் குமார் அவினாசிபாளையம் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.
தென்னை மரங்களுக்கு ஆசிட் ஊற்றிய மர்ம நபர் யார்? முன்விரோதம் காரணமாக யாராவது இதனை செய்தார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- கடந்த ஏப்ரல் மாதம் 25ந் தேதி இரவு சுப்பிரமணியன், கவின்குமாருக்கு சொந்தமான 40 தென்னை மரங்கள் மீது ஆசிட் ஊற்றியதாக கூறப்படுகிறது.
- பல்லடம் நீதிமன்றத்தில் விவசாயி கவின்குமார் வழக்கு தொடர்ந்தார்.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் வடக்கு அவினாசி பாளையம் ஊராட்சிக்குட்பட்ட புதுப்பாளையத்தை சேர்ந்தவர் கவின்குமார் (வயது 37). இவருக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தில் சுமார் 300 தென்னங்கன்றுகள் நட்டு வளர்த்து வருகிறார். கவின் குமார் என்பவருக்கும் அவரது பக்கத்து தோட்டத்துக்காரர் சுப்பிரமணியன் என்பவருக்கும் ஏற்கனவே நிலத்தகராறு இருந்ததாக கூறப்படுகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் 25ந் தேதி இரவு சுப்பிரமணியன், கவின்குமாருக்கு சொந்தமான 40 தென்னை மரங்கள் மீது ஆசிட் ஊற்றியதாக கூறப்படுகிறது. இதில் மரங்கள் முழுவதுமாக பட்டு போனது. இதுகுறித்து கவின்குமார் அவிநாசி பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர்.
இதுகுறித்து பல்லடம் நீதிமன்றத்தில் விவசாயி கவின்குமார் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி இச்சம்பவம் குறித்து உடனடியாக அவிநாசி பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசிட் ஊற்றிய நபரை விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.
நீதிமன்ற உத்தரவுப்படி சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி கவிதா ஆகியோர் மீது அவிநாசி பாளையம் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
வழக்கு பதிவு செய்து 15 நாட்கள் ஆகியும் இன்னும் சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி கவிதா ஆகியோரை போலீசார் கைது செய்யவில்லை எனவும், வேளாண்மை துறை சார்பில் ஆசிட் ஊற்றியதால் பட்டுப்போன 40 தென்னை மரங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் விவசாயி கவின்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
- கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்து விட்டார்.
- குலசேகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்
திருவட்டார் :
குலசேகரம் அருகே உள்ள குளச்சவிளாகம் பொன்மனை பகுதியை சேர்ந்தவர் ராதாகுமாரி (வயது 77). கணவர் இறந்துவிட்ட நிலையில் மகள் அஜிதாகுமாரி பரா மரிப்பில் வாழ்ந்து வந்தார்.
இவர்களுடன் ராதா குமாரியின் தங்கை மகன் பிரபாத் குமார் (48) என்பவரும் வசித்து வந்தார். அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். இந்த சம்பவம் ராதாகுமாரியை மிகவும் பாதித்தது.
இதுபற்றி உறவினர்க ளிடம் அடிக்கடி கூறி வேதனைப்பட்டு வந்துள் ளார். இந்த நிலையில் சம்ப வத்தன்று வீட்டில் இருந்த ரப்பர் பால் ஊற வைக்கும் ஆசிட்டை குடித்துவிட்டு ராதாகுமாரி மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு அஜிதா குமாரி குல சேகரம் அரசு ஆஸ்பத்திரி யில் சேர்த்தார். பின்னர் மேல்சிகிச்சைக்காக நாகர் கோவில் ஆசாரிப் பள்ளம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதனை செய்துவிட்டு, ராதாகுமாரி இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இது தொடர்பாக அஜிதாகுமாரி கொடுத்த புகாரின் பேரில் குலசேகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து ராதா குமாரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
- தர்மேந்திர சிங் என்ற இளைஞர் குடிக்க தண்ணீர் கேட்டபோது, போலீசார் அவரை ஆசிட் குடிக்க வைத்துள்ளனர்.
- இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தில் தடுப்புக் காவலில் கைது செய்யப்பட்ட தர்மேந்திர சிங் என்ற இளைஞர் குடிக்க தண்ணீர் கேட்டபோது, போலீசார் அவரை ஆசிட் குடிக்க வைத்ததால் ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக பேசிய தர்மேந்திர சிங்கின் சகோதரர், "அக்டோபர் 14 அன்று 2 தரப்பினர் சண்டையிட்டு கொண்டிருந்தனர். அந்த சண்டையை தர்மேந்திர சிங் தடுக்க சென்றார். ஆனால் போலீசார் தர்மேந்திர சிங்கை கைது செய்தனர். போலீஸ் லாக்-அப்பில் தர்மேந்திரா தண்ணீர் கேட்டபோது, போதையில் இருந்த போலீசார் அவரை ஆசிட் குடிக்க வைத்துள்ளனர். இதனால் எனது சகோதரரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. ஆசிட் குடிக்க வைப்பதற்கு முன்பு தர்மேந்திர சிங்கை போலீசார் கடுமையாக தாக்கியுள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.
இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட இளைஞரின் குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் காவல்துறை உயர் அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.
லக்னோவில் போலீஸ் காவலில் மோகித் பாண்டே என்ற நபர் உயிரிழந்த சில நாட்களுக்குப் பிறகு இந்த சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- போலீஸ் நிலையத்தில் இளம்பெண்ணிடம் அவரது தாய் முன்னிலையில் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
- வெளியே வந்த அந்த இளம்பெண் திடீரென வாந்தி எடுத்தார்.
புதுச்சேரி:
கும்பகோணத்தைச் சேர்ந்த 24 வயது என்ஜினீயரிங் பட்டதாரி பெண். புதுச்சேரி தட்டாஞ்சாவடி தனியார் விடுதியில் தங்கி சுத்துக்கேணியில் உள்ள தனியார் மருந்து கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார்.
கடந்த 11-ந் தேதி இரவு விடுதியில் இருந்து வெளியேறிய அவர் திரும்பி வரவில்லை.
இதுகுறித்து பெண்ணின் பெற்றோருக்கு விடுதி நிர்வாகம் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பெண்ணின் பெற்றோர் கோரிமேடு போலீசில் புகார் அளித்தனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பெண்ணை தேடி வந்தனர். அந்த பெண் மதுரைக்கு சென்றிருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் அந்த பெண்ணிடம் செல்போனில் பேசி போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்தனர்.
போலீஸ் நிலையத்தில் இளம்பெண்ணிடம் அவரது தாய் முன்னிலையில் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது இளம்பெண் கழிவறைக்கு செல்வதாக கூறி சென்றார். ஆனால் இளம்பெண் வெகு நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பெண் போலீசார் கழிவறை கதவை தட்டி அந்த பெண்ணை வெளியே வர செய்தனர். அப்போது வெளியே வந்த அந்த இளம்பெண் திடீரென வாந்தி எடுத்தார்.
விசாரணையில் கழிவறைக்கு பயன்படுத்தும் ஆசிட்டை இளம்பெண் குடித்தது தெரிய வந்தது. மாயமானது குறித்து தாய் முன்பு போலீசார் விசாரணை நடத்தியதால் அவமானத்தில் ஆசிட் குடித்ததாக அந்த இளம்பெண் கூறினார்.
இதையடுத்து போலீஸ் வாகனம் மூலம் அவரை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போலீஸ் விசாரணையின்போது, இளம்பெண் ஆசிட் குடித்த சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- அரசு பள்ளி ஆசிரியர் ஆசிட் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
- ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் என்.ஜி.ஓ. நகர் பகுதியை சேர்ந்தவர் காந்திசாந்தகிரன் (வயது 58). இவர் கீழ உரப்பனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
இவரது மனைவி செந்தில்குமாரி அம்மாபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.
இந்த நிலையில் காந்திசாந்தகிரன் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார். இதில் மனமுடைந்த அவர் ஆசிட்டை குடித்து மயங்கி விழுந்தார். அவரை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த பரிதாப சம்பவம் குறித்து திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
முதியவர்
மதுரை மாவட்டம் திருமங்கலம் ஆஸ்டின்பட்டி அருகே உள்ள நிலையூர் கைத்தறி நகரை சேர்ந்தவர் கோபால் (வயது 71). இவர் கடந்த சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். இதில் மனம் உடைந்த அவர், வீட்டில் யாரும் இல்லாதபோது விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
இந்த சம்பவம் குறித்து ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- ஆசிட் குடித்தவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்
- கணவன், மனைவி பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்
கரூர்
குளித்தலை வைகநல்லூர் அக்ரகாரம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்ராஜ் (வயது 54). இவருக்கு 23 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக கணவன், மனைவி பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். ரமேஷ்ராஜ் கடந்த 7 ஆண்டுகளாக தனது தம்பி வெங்கடேஷ்ராஜ் குடும்பத்தாருடன் வசித்து வந்துள்ளார். ரமேஷ்ராஜ் சற்று மனநிலை சரியில்லாதவர் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இவர் ஆசிட்டை குடித்து விட்டாராம். ஆபத்தான நிலையில் இருந்த அவரை அவரது உறவினர்கள் மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி ரமேஷ்ராஜ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வெங்கடேஷ்ராஜ் ெகாடுத்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்."
- கால்நடைகளின் வால் உள்ளிட்ட பாகங்களை ஒரு சிலர் சட்டவிரோதமாக அறுத்து கொடுமைப்படுத்தி இருந்தனர்.
- தோட்டத்தில் 40 எருமை மாடுகளை வளர்த்து பால் கறந்து விற்பனை செய்து வருகிறார்.
மேட்டுப்பாளையம்:
மேட்டுப்பாளையம் அருகே கல்லாறு ெரயில்வே கேட் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 39). விவசாயி. இவரது தோட்டத்தில் 40 எருமை மாடுகளை வளர்த்து பால் கறந்து விற்பனை செய்து வருகிறார்.
கடந்த 5 நாட்களுக்கு முன்பு மேய்ச்சலுக்கு சென்ற வந்த 25-க்கும் மேற்பட்ட எருமை, மாடுகளுக்கு கொப்புளங்கள் ஏற்பட்டது.
முதலில் இதனை பெரிதாக எடுத்து கொள்ளதாக ராஜ்குமார் 4 நாட்கள் கழித்து எருமைகள் மீது இருந்த கொப்புளங்களில் சீல் வடிந்து தோல் உரிய ஆரம்பிப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஒரு சில மாடுகள் மீது அதன் சதைகளை தொங்கும் நிலையில் காணப்பட்டன. பாதிக்கப்பட்ட சில எருமை கள் வயிற்றில் குட்டியுடனும், பால்கறக்கும் தன்மையுடன் இருக்கின்றன.
இதுதொடர்பாக கால்நடை மருத்துவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சிகிச்சை அளித்து ஆய்வு செய்தனர். அதில் கால்நடைகள் மீது ஆசிட் வீசப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதுதொடர்பாக ராஜ் குமார் மேட்டுப் பாளையம் போலீஸ் நிலை யத்தில் புகார் செய்தார். அதன் பேரில் தனியார் நர்சரி உரிமையாளர் மகன் ரவிச்சந்திரன், ஊழியர் மணிகண்டன் ஆகியோர் மீது புகார் அளித்தார்.
இது தொடர்பாக மேட்டுப் பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து தலை மறைவாகி உள்ள ரவிச் சந்திரன், மணி கண்டன் ஆகியோர் தேடி வருகின்றனர். இதுகுறித்து விவசாயி ராஜ்குமார் கூறுகையில் ஏற்கனவே பழத்தோட்டம் பகுதியில் மேய்ச்சலுக்கு சென்று வந்த கால்நடைகளின் வால் உள்ளிட்ட பாகங்களை ஒரு சிலர் சட்டவிரோதமாக அறுத்து கொடுமைப்படுத்தி இருந்தனர்.
ஆனால் இந்த முறை கால்நடைகள் மீது ஆசிட் வீசி இருப்பது வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.