search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோட்டாட்சியர்"

    • குமரிக்கு தேனிலவு வந்தவருக்கு நேர்ந்த சோகம்
    • சாப்பிட்ட உணவு காரணமாக உடல் பிரச்சினை ஏற்பட்டதால் இறந்தாரா?

    கன்னியாகுமரி :

    கரூர் மாவட்டம் பசுபதி பாளையத்தை சேர்ந்தவர் என்ஜினீயர் சுரேஷ்குமார். இவரது மனைவி கிருபா (வயது25). இவர்களுக்கு திருமணமாகி 3 மாதங்களே ஆகின்றன. அவர்கள் தேனிலவு பயணமாக குமரி மாவட்டத்துக்கு வந்தனர்.

    களியலை அடுத்த சிற்றாறில் உள்ள சொகுசு விடுதியில் அறை எடுத்து தங்கினர்.பல்வேறு இடங்களுக்கு ஆனந்தமாக சென்று வந்த அவர்கள், நேற்று மதியம் சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது கிருபாவுக்கு விக்கல் ஏற்பட்டுள்ளது.

    அது மூச்சுத்திணறலை உருவாக்கியதாக கூறப்படுகிறது. இதனை பார்த்த சுரேஷ்குமார் மற்றும் அருகில் இருந்தவர்கள் கிருபாவை உடனடியாக குலசேகரம் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

    இருந்தபோதிலும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    தேனிலவுக்கு வந்த இடத்தில் புதுப்பெண் இறந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றிய தகவல் கிடைத்ததும் கடையாலமூடு போலீசார் விரைந்து வந்து கிருபா உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    அவர் உடல் ரீதியாக பாதிக்கப்பட்டு இறந்தாரா? அல்லது சாப்பிட்ட உணவு காரணமாக உடல் பிரச்சினை ஏற்பட்டதால் இறந்தாரா? என்ற கோணங்களில் விசாரித்தனர். பின்பு கிருபாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கிருபா இறந்த தகவல், அவரது பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் நேற்றே குமரி மாவட்டத்துக்கு வந்தனர். மகள் உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதனர்.

    கிருபாவுக்கு திருமணமாகி 3 மாதங்களே ஆவதால், அவரது சாவு குறித்து கோட்டாட்சியர் இன்று விசாரணை நடத்தினார். இதற்கிடையில் இந்த சம்பவம் குறித்து குளச்சல் போலீஸ் துணை சூப்பிரண்டு தங்கராமனும் விசாரணை நடத்தி வருகிறார்.

    • இரு சமூகத்தை சேர்ந்த 80 பேருக்கு விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் மூலம் சம்மன் வழங்கப்பட்டு இருந்தது.
    • இரு தரப்புக்கும் சமரசம் ஏற்படாத சூழ்நிலையில் மீண்டும் இரு தரப்பினரிடையேயும் விசாரணை நடத்தப்படும்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே உள்ள மேல்பாதி கிராமத்தில் தர்மராஜா, திரவுபதியம்மன் கோவில் உள்ளது.

    இங்கு பட்டியலின மக்கள் வழிபடக் கூடாது என மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு சமூக மக்களிடையே மோதல் நிலவி வருகிறது.

    இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சமரச பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. அதில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.

    இதையடுத்து சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் திரவுபதியம்மன் கோவில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

    இக்கோவில் பிரச்சினை தொடர்பாக இரு சமூகத்தை சேர்ந்த முக்கியஸ்தர்களும் விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி தங்கள் தரப்பு விளக்கத்தை எழுத்துப் பூர்வமாக அளிக்க நேற்று அழைக்கப்பட்டனர்.

    அதன்படி இரு சமூகத்தை சேர்ந்த 80 பேருக்கு விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் மூலம் சம்மன் வழங்கப்பட்டு இருந்தது.

    இந்த 80 பேரில் பட்டியலினத்தை சேர்ந்த 24 பேரும், மற்றொரு சமூகத்தை சேர்ந்த 38 பேரும் என 62 பேர் விழுப்புரத்தில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் முன்னிலையில் நேரில் ஆஜர் ஆனார்கள்.

    இரு தரப்பினரையும் தனித்தனியாக அழைத்து கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் விசாரணை நடத்தி எழுத்துப் பூர்வமான விளக்கத்தை பெற்றுக் கொண்டார். சுமார் இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்றது.

    அப்போது தனி நபருக்கு சொந்தமான கோவில் என்பதால் பட்டியலின மக்களை கோவிலுக்குள் அனுமதிப்பது என்பது எங்களது தனிப்பட்ட விருப்பம். இது தொடர்பாக நாங்கள் நீதி மன்றத்தை நாட உள்ளதாக ஒரு தரப்பில் ஆஜரானவர்கள் விளக்கம் அளித்தனர்.

    இதே போல் கோவிலுக்குள் எங்களை அழைத்து செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்கவும், எங்கள் உயிரை காப்பாற்றி கொள்ளவும் நாங்கள் ஊரை விட்டு வெளியேற தயாராக இருப்பதாக மறு தரப்பில் ஆஜரானவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

    இதனால் பேச்சு வார்த்தையில் இழுபறி நிலவியது. இரு தரப்புக்கும் சமரசம் ஏற்படாத சூழ்நிலையில் மீண்டும் இரு தரப்பினரிடையேயும் விசாரணை நடத்தப்படும். விசாரணை நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளர்.

    • வருகிற 9-ந்தேதி வாடிப்பட்டி தாலுகாவில் ஜமாபந்தி தொடங்குகிறது.
    • இதில் அந்தந்த கிராம மக்கள் பங்கேற்று தங்களது கோரிக்கை மனுக்களை நேரில்கொடுத்து பயனடையலாம்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்களுக்கான வருவாய் தீர்வாயம் ஜமாபந்தி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. வாடிப்பட்டி தாலுகாவில் அலங்காநல்லூர், வாடிப்பட்டி என 2 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அதில் உள்ள 7 உள்வட்டங்களில் 77 வருவாய் கிராமங்களின் கணக்கு தணிக்கை ஆய்வு செய்தும், பொதுமக்களின் குறைதீர்க்கும் மனுக்கள் பெற்று உரியஆவணங்கள் உள்ளவைகளுக்கு உடனடி தீர்வு செய்தும் நலத் திட்டங்கள் வழங்கப்படும்.

    வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் வருகிற 9-ந்தேதி (செவ்வாய்கிழமை) காலை 9 மணிக்கு மதுரை வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் ஜமாபந்தி தொடங்குகிறது. முதல்நாள் தென்கரை உள்வட்டத்தை சேர்ந்த அயன்தென்கரை, கோவில் தென்கரை, முள்ளிப்பள்ளம், கருப்பட்டி, நாச்சிகுளம், இரும்பாடி, அயன் குருவித்துறை, கோவில் குருவித்துறை, மேலக்கால், கச்சிராயிருப்பு, மன்னாடி மங்கலத்தில் ஜமாபந்தி நடக்கிறது.

    2-ம்நாளான 10-ந்தேதி (புதன்கிழமை) சோழவந்தான் உள்வட்டத்தை சேர்ந்த திருமால்நத்தம், நெடுங்குளம், திருவேடகம், சித்தலாங்குடி, திருவாலவாயநல்லூர், நகரி, தட்டான்குளம், சேலைக் குறிச்சி, பேட்டை, சோழ வந்தானிலும் 3-ம்நாளான 11-ந்தேதி (வியாழக்கிழமை) தனிச்சியம் உள்வட்டம் சின்ன இலந்தைக்குளம், அமரடக்கி, கொண்டையம் பட்டி, தனிச்சியம், சம்பக்குளம், கள்வே லிப்பட்டி, பெரிய இலந்தைக்குளம், கட்டிமேய்க்கிப்பட்டி, கீழக்கரையிலும் ஜமாபந்தி நடக்கிறது.

    4-ம்நாளான 12-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அலங்காநல்லூர் உள்வட்டம் அழகாபுரி, தண்டலை, மணியஞ்சி, குமாரம், அலங்காநல்லூர், அச்சம்பட்டி, இலவன்குளம், பண்ணைக்குடி, கல்லணை, வாவிடமருதூர், பரளி யிலும், 5-ம் நாளான 16-ந் தேதி (செவ்வாய்கிழமை) பாலமேடு உள்வட்டம் வலையபட்டி, சத்திர வெள்ளாளப்பட்டி, மேட்டுப்பட்டி, ராஜாக்காள் பட்டி, கிருஷ்ணாபுரம், கோணப்பட்டி, ராமக்கவுண்டன்பட்டி, செம்பட்டி, சேந்தமங்கலம், தெத்தூர், பாலமேட்டிலும் ஜமாபந்தி நடக்கிறது.

    6-ம்நாளான 17-ந்தேதி (புதன்கிழமை) முடுவார்பட்டி உள்வட்டம் சுக்காம்பட்டி, கோடாங்கி பட்டி, பாறைப்பட்டி, சரந்தாங்கி, வெள்ளையம்பட்டி, மாணிக்கம்பட்டி, தேவசேரி, அய்யூர், ஊர்சேரி, அ.கோவில்பட்டி, வைகாசிப்பட்டி, எர்ரம்பட்டியிலும், 7-ம்நாளான 18-ந்தேதி (வியாழக்கிழமை) நீரேத்தான் உள்வட்டம் டி.ஆண்டிபட்டி, தும்பிச்சம்பட்டி, சின்னமநாயக்கன்பட்டி, கட்டக்குளம், நீரேத்தான், தாதம்பட்டி, ஜாரி விராலிப்பட்டி, குலசேகரன்கோட்டை, கச்சைகட்டி, போடிநாயக்கன்பட்டியிலும் ஜமாபந்தி நடக்கிறது.

    இதில் அந்தந்த கிராம மக்கள் பங்கேற்று தங்களது கோரிக்கை மனுக்களை நேரில்கொடுத்து பயனடையலாம் என்று வாடிப்பட்டி தாசில்தார் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

    • சம்பவ இடத்திற்கு போலீசார், வருவாய்த்துறை, தாசில்தார் ஆகியோர் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
    • இதற்காக இன்று காலை முதலே 700-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் திரண்டு வந்தனர்.

    தஞ்சாவூா்:

    தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை மறியல் , சிலோன் காலனி மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் ஏராளமான ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

    இவர்களில் பலருக்கு குடிமனை கிடையாது. இதனால் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி நாஞ்சிக்கோட்டை சாலை பால்பண்ணை எதிரில் உள்ள வாரியை ஒட்டிய ஒரு காலியிடத்தில் திரண்டு அங்கு குடியேறுவதற்காக கொட்டகை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இதை அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார், வருவாய்த்துறை, தாசில்தார் ஆகியோர் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெறும்.

    இதனால் நீங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லுங்கள் என கூறினர். இதை ஏற்றுக்கொண்டு அன்றைய தினம் போராட்டம் கைவிடப்பட்டது.

    இந்த நிலையில் ஏற்கனவே அறிவித்தபடி இன்று தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மறியல், சிலோன் காலனி உள்ளிட்ட பகுதி பொதுமக்களுடன், கோட்டாட்சியர் ரஞ்சித் அமைதி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்.

    இதற்காக இன்று காலை முதலே

    700-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் திரண்டு வந்தனர். அவர்களில் சிலரை மட்டும் பேச்சு வார்த்தைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

    பொதுமக்களுடன் விடுதலை சிறுத்தை கட்சி, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியினரும் கலந்து கொண்டனர்.

    நாங்கள் பல ஆண்டுகளாக குடிமனைக் பட்டா கேட்டு போராடி வருகிறோம். எங்களுக்கு உடனடியாக குடிமனை பட்டா வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கூறினர்.

    உங்களுக்கு வேறு இடத்தில் பட்டா வழங்க பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோட்டாட்சியர் கூறினார்.

    இதையடுத்து அலுவலகத்தின் வழியே திரண்டு இருந்த ஏராளமான பொதுமக்கள் கோட்டாட்சியர் ரஞ்சித்திடம் மனு அளித்தனர்.

    அதில், எங்கள் பகுதியில் பலருக்கு குடிமனை பட்டா இல்லாமல் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். 10 ஆண்டுகளாக பட்டா கேட்டு போராடியும் நடவடிக்கை இல்லை. உடனடியாக அனைவருக்கும் குடிமகனை பட்டா வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

    அனைவரும் மனு அளித்த பின்னர் கலைந்து சென்றனர். இதனை முன்னிட்டு அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.

    • நாகை மாவட்ட கூடுதல் கலெக்டர் பிரிதிவிராஜ் தலைமை வகித்தார்.
    • தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் கட்டிடம்கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் -நாகை சாலையில் அரசு கலைக் கல்லூரி எதிரே வேதாரண்யம் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு ரூ.3 கோடியே 69 லட்சத்தில்கட்டும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது .

    நாகை மாவட்ட கூடுதல் கலெக்டர் பிரிதிவிராஜ் தலைமை வகித்தார்.

    தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் கட்டிடம்கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

    நிகழ்ச்சியில் வேதாரண்யம் கோட்டாட்சியர் (பொ)மதியழகன், நகர மன்ற தலைவர் புகழேந்தி, கூட்டுறவு சங்க இயக்குனர் உதயமுருகையன், நகராட்சி ஆணையர் ஹேமலதா, பொறியாளர் முகமது இப்ராஹிம், ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் ராஜு, பாஸ்கர்மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • 2017 ம் ஆண்டு 96 குடும்பங்களுக்கு குடிமனைபட்டா வழங்கப்பட்டது.
    • இதுவரை இடம் அளந்து ஒப்படைக்கப்படவில்லை.

    உடுமலை :

    அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் உடுமலை வருவாய் கோட்டாட்சியரிடம் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:- மடத்துக்குளம் தாலுகா குமரலிங்கம் பகுதியில் கடந்த 2017 ம் ஆண்டு 96 குடும்பங்களுக்கு குடிமனைபட்டா வழங்கப்பட்டது.

    ஆனால் இதுவரை இடம் அளந்து ஒப்படைக்கப்படவில்லை. தற்போது இந்த இடம் தனியார் நபர் ஆக்கிரமிப்பில் உள்ளது. எனவே ஆக்கிரமிப்பை அகற்றிவிட்டு 96 குடும்பங்களுக்கு இடத்தை பிரித்து வழங்க வேண்டும். பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை என அதில் கூறியுள்ளனர்.

    • கிழவயல் ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது.
    • தேவகோட்டை கோட்டாட்சியர் பிரபாகரன் தலைமை தாங்கினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூர் ஒன்றியம் கிழவயல் ஊராட்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. தேவகோட்டை கோட்டாட்சியர் பிரபாகரன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் அருள் பிரசாந்த் முன்னிலை வகித்தார்.

    இம்முகாமில் கணினி திருத்தம், முதியோர் ஊக்கத்தொகை வழங்குதல், பட்டா வழங்குதல் போன்ற பலதரப்பட்ட மனுக்கள் கோரிக்கைகளாக கிராம மக்களிடம் பெறப்பட்டது. அதில் உடனடியாக 2 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள மனுக்களுக்கு வருவாய் துறையினரால் சம்பந்தப்பட்ட நபர்களிடத்தில் நேரடியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு அதற்கும் விரைந்து தீர்வு காணப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. நடைபெற்ற இம்மாமில் ஒன்றிய கவுன்சிலர் சிங்காரம், வட்டாட்சியர் கயல்விழி மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    ×