என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சிமெண்ட் சாலை"
- காசிநாதபுரம் கிராமத்தில் புதிய சிமெண்ட் சாலை பணிகளை யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
- புதிய பள்ளிக் கட்டிடங்களை யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் பள்ளி மாணவர்களுடன் திறந்து வைத்தார்.
ஆலங்குளம்:
ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட புதுப்பட்டி ஊராட்சி காசிநாதபுரம் கிராமத்தில் ஒன்றிய குழு உறுப்பினர் நிதியில் ரூ. 7 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள புதிய சிமெண்ட் சாலை பணிகளை ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் புதுப்பட்டி ஊராட்சி தலைவர் பால்விநாயகம், ஒன்றிய குழு உறுப்பினர் சண்முகராம், புதுப்பட்டி கூட்டுறவு சங்கம் மாரியப்பன் மற்றும் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மருதம்புத்தூர் ஊராட்சியில் பேராசிரியர் அன்பழகன் கல்வி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 31 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பள்ளிக் கட்டிடங்களை யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் பள்ளி மாணவர்களுடன் திறந்து வைத்தார்.
இதில் மருதம்புத்தூர் ஊராட்சி தலைவர் பூசத்துரை, ஒன்றிய குழு உறுப்பினர்கள் சங்கீதா, பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியைகள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- போலீசார் அந்த வாலிபரிடம் இருந்து உட னடியாக பெட்ரோல் கேனை பறிமுதல் செய்தனர்.
- எங்களது இடத்தில் திடீரென்று அத்துமீறி சிமெண்ட் சாலை அமைத்துவிட்டனர்.
கடலூர், செப்.26-
கடலூர் கலெக்டர் அலு வலகத்திற்கு இன்று காலை வாலிபர் ஒருவர் தனது தந்தை மற்றும் உறவினருடன் வந்தார். பின்னர் மனு கொடுப்பதாக கூறி கலெக்டர் அலுவலகத்திற்கு செல்ல முயன்றார். அப்போது அங்கு பாது காப்பு பணியில் இருந்த போலீசார் அந்த நபரை சோதனை செய்தபோது பெட்ரோல் கேன் இருந்தது தெரியவந்தது. இதனை பார்த்த போலீசார் அந்த வாலிபரிடம் இருந்து உட னடியாக பெட்ரோல் கேனை பறிமுதல் செய்த னர்.
அந்த வாலிபரிடம் விசா ரணை நடத்திய போது, விருத்தாச்சலம் முதனை கிராமத்தை சேர்ந்த சத்திய மூர்த்தி என்பது தெரிய வந்தது.அவர் போலீசாரிடம் கூறியதாவது:-எங்களது இடத்தில் திடீரென்று அத்துமீறி சிமெண்ட் சாலை அமைத்து விட்டனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் சிமெண்ட் சாலை அமைத்த இடம் எங்க ளுக்கு சொந்தமான இடம். அதனால் அதிகாரிகள் உரிய அளவீடு செய்து நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி எங்கள் இடத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறுஅவர் கூறினார். பின்னர் தாசில்தார் பலராமன் அந்த வாலிபரி டம் இருந்த மனுவை பெற்று விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவத் தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
- நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் சுதா மோகன்லால் தலைமை தாங்கினார்.
- புதிய சிமெண்ட் சாலை பணியை சிவபத்மநாதன் தொடங்கி வைத்தார்.
ஆலங்குளம்:
ஆலங்குளம் பேரூராட்சியில் உள்ள 11, 12, 14 ஆகிய வார்டுகளில் தமிழ்நாடு நகர்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் மூலம் ரூ.85 லட்சம் மதிப்பீட்டில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணியின் தொடக்க விழா நடந்தது.
விழாவுக்கு பேரூராட்சி தலைவர் சுதா மோகன்லால் தலைமை தாங்கினார். பேரூ ராட்சி துணைத்தலைவர் ஜான்ரவி, பேரூராட்சி கவுன்சிலர்கள் சாலமோன் ராஜா, சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
செயல் அலுவலர் ஜா.மாணிக்கராஜ் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் கலந்து கொண்டு புதிய சிமெண்ட் சாலை பணியை தொடங்கி வைத்தார். விழாவில் முன்னாள் கவுன்சிலர்கள் மோகன் லால், அருணாசலம், ராஜ துரை, மாவட்ட பிரதிநிதி அன்பழகன், ஒன்றிய பிரதிநிதி ஆதி விநாயகம் , தொழிலதிபர் மணிகண்டன், சீதாராமன், கிளை செயலாளர் அல்போ ன்ஸ், லிங்க வேல் ராஜா, மகளிரணி சரஸ்வதி, கிளை செயலாளர் சாலமோன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- ரூ.9 லட்சத்தில் அமைகிறது
- பூமிபூஜை போடப்பட்டது
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட பன்னியூர் ஊராட்சி, பிள்ளையார் கோவில் தெருவில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கு நேற்று பூமிபூஜை போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பன்னியூர் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி லோகநாதன் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் யுவராஜ் முன்னிலை வகித்தார்.
சாலையை மேம்படுத்தி தர வேண்டி கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ரூ.9 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு சாலை அமைக்கும் பணி நேற்று பூமிபூஜை போடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது.
இதில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
- வாறுகால் அமைக்கும் பணியை மாவட்ட ஊராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி போஸ் தொடங்கி வைத்தார்.
- நிகழ்ச்சியில் கடங்கநேரி ஊராட்சி துணை தலைவர் தங்ககிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே உள்ள வெங்கடேஸ்வபுரம் என்ற ரெட்டியார்பட்டியில் ரூ. 17.1 லட்சம் மதிப்பில் திட்டப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது.
மாவட்ட ஊராட்சி நிதியில் இருந்து ரூ. 9.9 லட்சம் மதிப்பில் வாறுகால் அமைக்கும் பணி மற்றும் ரூ. 7.20 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை மாவட்ட ஊராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி போஸ் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் கடங்கநேரி ஊராட்சி துணை தலைவர் தங்ககிருஷ்ணன், காங்கிரஸ் நிர்வாகி மகராஜசிங், வார்டு உறுப்பினர்கள் அசோக், சுந்தரி, ஊராட்சி செயலர் அந்தோணி, அரசு ஒப்பந்ததாரர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ரூ.6 இலட்சம் செலவில் புதிய நெற்களம் அமைக்கும் பணியினை கலெக்டர் ஆய்வு செய்தார்.
- நெற்களத்திற்கு வாகனம் செல்ல சாலை அமைத்துத்தர சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ஊராட்சி ஒன்றியம் ஆலங்குடியில் ரூ.54.36 லட்சம் மதிப்பீட்டில் கிராம ஊராட்சிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டார்.
குத்தாலம் ஊராட்சி ஒன்றியத்தி ற்குட்பட்ட ஆலங்குடி கிராம ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.1.67 லட்சம் செலவில் கங்காரு தேங்காய் விதைப்பண்ணை நிலையத்தையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.6 இலட்சம் செலவில் புதிய நெற்களம் அமைக்கும் பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, உடனடியாக நெற்களத்திற்கு வாகனம் செல்ல சாலை அமைத்துத்தர சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
அதனை தொடர்ந்து, பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.6.33 லட்சம் செலவில் பள்ளி உட் கட்டமைப்பு செய்யும் பணியினையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.3.84 லட்சம் செலவில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினையும், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.2.40 லட்சம் செலவில் வீடு கட்டப்பட்டு வரும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைவாகவும், துரிதமாகவும், தரமாகவும் முடிக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து குத்தாலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது ஊரக வளர்ச்சித் துறை இணை இயக்குனர் ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன், மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் செல்வபாலாஜி, குத்தாலம் ஒன்றிய குழு தலைவர் மகேந்திரன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) மஞ்சுளா, மாவட்ட ஆட்சித்தலைவர் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ரமேஷ்குமார், ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் பிரேம்குமார், குத்தாலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கஜேந்திரன் சுமதி, ஆலங்குடி ஊராட்சி மன்ற தலைவர்கவிதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- புதிய சாலை அமைக்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது.
- மின் இணைப்புகள், கழிவுநீர் இணைப்புகள் மாற்றி அமைக்கப்பட்ட பிறகு புதிய சாலை அமைக்கும் பணி தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்போரூர்:
திருப்போரூர் பேரூராட்சியில் உள்ள தெற்கு மாடவீதி, கச்சேரி சந்து தெரு இணைப்பு சாலை, பேருந்து நிலைய இணைப்பு சாலை, விளம்பி வினாயகர் கோயில் தெரு, வேம்படி வினாயகர் கோயில் தெரு, ஏரிக்கரை 1வது தெரு, 2வது தெரு ஆகிய பகுதிகளில் பழைய சேதமடைந்த சாலைகளை அகற்றிவிட்டு புதிய சிமெண்ட் சாலைகள் அமைக்க பேரூராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து புதிய சாலை அமைக்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது.
இதைத்தொடர்ந்து நேற்று திருப்போரூர் பேரூராட்சி தலைவர் மு.தேவராஜ், துணைத்தலைவர் பரசுராமன், வார்டு உறுப்பினர் மீனாகுமாரி சந்திரன் ஆகியோர் முன்னிலையில், தெற்கு மாடவீதியில் சாலை அமைக்க பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் எடுக்கும் பணி நடந்தது. குடிநீர் குழாய்கள், மின் இணைப்புகள், கழிவுநீர் இணைப்புகள் மாற்றி அமைக்கப்பட்ட பிறகு புதிய சாலை அமைக்கும் பணி தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்
- சீவலசமுத்திரம் கிராமத்தில் 9.80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது.
- சாலை அமைக்கும் பணி தொடக்க நிகழ்ச்சிக்கு ஆலங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார்.
சுரண்டை:
தென்காசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலங்குளம் வடக்கு ஒன்றியம்,மருக்கலாங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட சீவலசமுத்திரம் கிராமத்தில் 9.80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. சிமெண்ட் சாலை அமைக்கும் பணி தொடக்க நிகழ்ச்சிக்கு ஆலங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். தென்காசி பழனி நாடார் எம்.எல்.ஏ முன்னிலை வகித்தார்.
புதிய சாலை அமைக்கும் பணியை தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்ச்செல்வி போஸ், ஆலங்குளம் யூனியன் தலைவர் திவ்யா மணிகண்டன், ஒன்றிய கவுன்சிலர் வீராணம் சேக் முகமது, மாவட்ட கவுன்சிலர் முத்துலட்சுமி அன்பழகன், ஒன்றிய கவுன்சிலர் வள்ளியம்மாள் முருகேசன், ஊராட்சி மன்ற தலைவர் மருதநாச்சியார் வெள்ளைத்துரை, நிர்வாகி கள் விஜயகுமார், விஜயராஜ், முருகையா, படித்துரை உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- குலசேகரபட்டி பஞ்சாயத்து சண்முகபுரம் தெற்கு தெருவில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
- மின்கம்பத்தின் 'ஸ்டே கம்பி'களை மாற்றி அமைக்காமல் சாலை அமைக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தென்காசி:
தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட குலசேகரபட்டி பஞ்சாயத்து சண்முகபுரம் தெற்கு தெருவில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அந்த சாலையில் மின்கம்பத்தின் 'ஸ்டே கம்பி'கள் சாலை நடுவே நின்றிருந்த நிலையில் அதனை மாற்றி அமைக்காமல் அப்படியே புதிய சாலை அமைக்கப்பட்டதால் அவ்வழியே செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே சாலையின் நடுவே அச்சுறுத்தும் வண்ணம் நிற்கும் மின்கம்பங்களின் 'ஸ்டே கம்பி'களை மாற்றி அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்