search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சமுதாய வளைகாப்பு"

    • அமைச்சர் ஆர்.காந்தி சீர்வரிசை பொருட்கள் வழங்கினார்
    • ஏராளமாேனார் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பில் 200 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.

    விழாவிற்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி பேசினார். ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் வசந்தி ஆனந்தன் வரவேற்று பேசினார்.

    சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு, குத்து விளக்கேற்றி,அங்கன்வாடி பணியாளர்கள் அமைத்திருந்த ஊட்டச்சத்து குறித்த உணவு கண்காட்சி அரங்கை பார்வையிட்டு, 200 கர்ப்பிணிகளுக்கு தனது சொந்த செலவில் சீர்வரிசை தட்டுகளை வழங்கி வாழ்த்தி பேசினார்.

    நிகழ்ச்சியில் ஆற்காடு ஜெ.எல்.ஈஸ்வரப்பன்.எம்.எல்.ஏ, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, நகரமன்றத் தலைவர்கள் சுஜாதா வினோத்,ஹரிணி தில்லை, முகமது அமீன், ஒன்றிய குழு தலைவர்கள் சேஷா வெங்கட், புவனேஸ்வரி சத்தியநாதன், நகரமன்ற துணை தலைவர் ரமேஷ் கர்ணா,ஒன்றியக் குழு துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன் உள்பட மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், நகரமன்ற உறுப்பினர்கள்,குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.
    • திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள செய்களத்தூர் சமத்துவபுரத்தில் சமுதாயக்கூடத்தில் சமூக நலன் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.

    இதில் சுமார் 100 கர்ப்பிணி பெண்களுக்கு மானாமதுரை தமிழரசி

    எம்.எல்.ஏ. மஞ்சள், குங்குமம் வைத்து வளையல் அணிவித்தார். அதை தொடர்ந்து கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த 5 வகையான உணவு வகைகளை பரிமாறி அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார்.

    விழாவில் திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், யூனியன் தலைவர் லதாஅண்ணா துரை, துணை தலைவர் முத்துச்சாமி, திருப்புவனம் பேரூராட்சி துணைத் தலைவர் ரஹ்மத்துல்லா கான், திருப்புவனம் ஒன்றிய கவுன்சிலர் லாடனேந்தல் சுப்பையா, செய்களத்தூர் மகேந்திரன் மற்றும் ஊட்டச்சத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • சீர்வரிசை பொருட்களை வழங்கினார்
    • ரூ.15 கோடி மதிப்பில் நவீன பரிசோதனை கருவிகள் அமைக்கப்பட்டுள்ளது

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கி பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    பெண்கள் முன்னேற்றம் மற்றும் ஆரோக்கியத்தில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் தனி கவனம் செலுத்தி பல திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார். கர்ப்பிணி தாய்மார்களுக்கு ரூ.18 ஆயிரம் உதவித்தொ கையை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தாயுள்ளத்தோடு வழங்கி வருகிறார்.

    கர்ப்பிணி தாய்மார்கள் ஆரோக்கியமான குழந்தைகளை பெற வேண்டும் என்பதற்காகவே இது போன்ற சமுதாய வளைகாப்பு நடத்தப்படுகிறது.

    வளைகாப்பு விழாவில் கலந்து கொள்ளும் தாய்மார்கள் மகிழ்ச்சியான சூழலுக்கு சென்று ஆரோக்கி யமான குழந்தைகளை பெற்று எடுக்கிறார்கள்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 ஆயிரத்து 127 அங்கன்வாடி மையங்களில் 12 ஆயிரத்து 714 கர்ப்பிணி தாய்மார்கள் பதிவு செய்து பயன் அடைந்துள்ளனர்.

    மாவட்டத்தில் உள்ள 900 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு ரூ.4 லட்சத்து 75 ஆயிரம் செலவில் நடத்தப்பட உள்ளது. அதன் தொடக்க மாக தான் 550 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு நடைபெற்றது.

    கர்ப்பிணி தாய்மார்கள் குழந்தையின் வளர்ச்சி குறித்து அறிந்து உரிய மருத்துவ சிகிச்சை பெற திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.15 கோடி மதிப்பில் நவீன பரிசோதனை கருவிகள் அமைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, மாநில தடகள சங்க துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், பெ.சு.தி.சரவணன் எம்.எல்.ஏ, செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குநர் தரணிவேந்தன், குழந்தை வளர்ச்சி திட்ட மாவட்ட அலுவலர் கந்தன், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சரண்யா, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஆராஞ்சி ஆறுமுகம், வேங்கிக்கால் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி தமிழ்ச்செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 70 பேருக்கு சீர்வரிசை வழங்கினர்
    • பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்

    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை, மாவட்டம் பெரணமல்லூர் தனியார் திருமண மண்டபத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் பெரணமல்லூர், வட்டார கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்ற தலைவர் வேணிஏழுமலை, தலைமை தாங்கினார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாண்டுரங்கன், ஒன்றிய குழு தலைவர் இந்திரா இளங்கோவன், துணைத் தலைவர் லட்சுமி லலிதா வேலன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி மாவட்டதிட்ட அலுவலர் கந்தன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைவரையும் வட்டார திட்ட அலுவலர் ரேவதி, வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக வந்தவாசி அம்பேத்குமார் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு சீர்வரிசை பொங்கல் 70 கர்ப்பிணிகளுக்கு வழங்கினார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை, குழந்தைகள் வட்டார கண்காணிப்பாளர் சிவகுமார், மேற்பார்வையாளர்கள் முத்தழகி, மகேஸ்வரி, அலமேலு, பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ஆண்டாள் அண்ணாதுரை, மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சிங்கம்புணரி அருகே 50 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.
    • அர்களுக்கு சர்க்கரை பொங்கல், லெமன் சாதம், புளிசாதம், தயிர் சாதம், வெஜிடேபிள் பிரியாணி உள்ளிட்ட 5 வகையான உணவுகள் பரிமாறப்பட்டது.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள ஏரியூரில் திருமலை மருதீஸ்வரர் திருமண மண்டபத்தில் அரசு சார்பில் 50 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு விழா நடந்தது.

    சமூகநலன் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணை ந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் ஆகிய துறைகளின் சார்பில் இந்த வளைகாப்பு விழா நடைபெற்றது. ஒன்றிய தலைவர் திவ்யாபிரபு தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார்.

    விழாவில் 50 கர்ப்பிணி பெண்களுக்கு மாலை அணிவித்து கன்னத்தில் சந்தனம் பூசி, நெற்றியில் குங்குமமிட்டு, கைகளில் கண்ணாடி வளையல் அணிந்து வளைகாப்பை நடத்தினர். அதனை தொடர்ந்து அவர்களுக்கு சில்வர் கிண்ணம், வாழைப்பழம், மஞ்சள், குங்குமம், ரவிக்கைதுணி, மஞ்சள் கயிறு, தாம்பூலத்தில் வைத்து சீதனமாக வழங்கப்பட்டது.

    இதை தொடர்ந்து கர்ப்பிணி பெண்களுக்கு சர்க்கரை பொங்கல், லெமன் சாதம், புளிசாதம், தயிர் சாதம், வெஜிடேபிள் பிரியாணி உள்ளிட்ட 5 வகையான உணவுகள் பரிமாறப்பட்டது.

    இந்த விழாவில் மாவட்ட திட்ட அலுவலர், வட்டார குழந்தைகள் திட்ட அலுவலர், ஏரியூர் ஊராட்சி மன்றத்தலைவர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.

    • அமைச்சர், எம்.பி, எம்.எல்.ஏ. பங்கேற்பு
    • சீர்வரிசை தொகுப்புகள் வழங்கப்பட்டது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த மாந்தாங்கல் உள்ள தனியார் மண்டபத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் சார்பாக சமுதாய வளைகாப்பு விழா நேற்று நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். அரக்கோணம் எஸ். ஜெகத்ரட்சகன் எம்.பி., ஆற்காடு ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வசந்தி ஆனந்தன் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு சமுதாய வளைகாப்பு விழாவினை குத்து விளக்கு ஏற்றி வட்டார பகுதிகளில் உள்ள 200 கர்ப்பிணி களுக்கு சீர்வரிசை தட்டுக்களை அமைச்சர் சொந்த செலவில் வழங்கி னர். பின்னர் பேசியதாவது:-

    ஆட்சி பொறுப் பேற்கும் பொழு தெல்லாம் மகளிருக்கு பல்வேறு திட்டங்கள் முன்னாள் முதல்வர் கருணாநிதி செயல்படுத்தி இருக்கின்றார். ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காண வேண்டும் என்று சொல்லக்கூ டிய அண்ணா, கருணாநிதி ஆகியோர் பொதுமக்க ளுக்கும் மகளி ருக்கும் என்ன வெல்லாம் செய்ய வேண்டும் என்று நினைத்தா ர்களோ அதனை முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்.

    ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் எந்த கட்சியாயினும் குறிப்பாக தாய்மார்கள் நமது முதல்வரை மறக்க மாட்டார்கள்.அந்த அளவிற்கு மகளிருகளுக்கு பல்வேறு புதிய திட்டங்களை நமது முதலமைச்சர் மு க ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார்.

    அனைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கும் சத்தான உணவுகளை உட்கொண்டு ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    இதனைத் தொடர்ந்து தேசிய ஊட்டச்சத்து மாத விழாவில் அமைச்சர் காந்தி 200 கர்பிணிகளுக்கு மஞ்சள், குங்குமம், வளையல் சந்தனம் பல்வேறு பொருட்கள் அடங்கிய சீர்வரிசை தொகுப்புகளையும், மதிய உணவினையும் சொந்த செலவில் அமைச்சர் காந்தி வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி, நகர மன்ற தலைவர் சுஜாதா வினோத், நகர மன்ற துணைத் தலைவர் ரமேஷ் கர்ணா, ஒன்றிய குழு துணை தலைவர் ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ஹம்ச பிரியா நன்றி கூறினார்.

    • அமைச்சர் மனோதங்கராஜ் பங்கேற்பு
    • கர்ப்பிணி பெண்களுக்கான சமையல் போட்டி நடத்தப்பட்டது.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் சார்பில் திருவி தாங்கோடு துறப்பு எம்.எம். நினைவு மண்டபத்தில் மாவட்ட வருவாய் அலு வலர் சிவப்பிரியா தலைமை யில் கர்ப்பிணி தாய்மார்க ளுக்கான சமுதாய வளை காப்பு நிகழ்ச்சி நடை பெற்றது.

    நிகழ்ச்சியில், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் சமுதாய வளை காப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர்வரிசை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதா வது:-

    தமிழ்நாடு முதல்-அமைச்சர்மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு மக்களின் தேவைகளை அறிந்து அவற்றை உடனுக்கு டன் நிறைவேற்றி வருகிறது. கர்ப்பிணி தாய்மார்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்ற உயரிய நோக்கில் கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட 2500 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. ஒரு தொகுதிக்கு ரூ.15 ஆயிரம் வீதம் 50 தொகுதிக்கு ரூ.7.50 லட்சம் மதிப்பில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு நடத்துவதற்கு தமிழக அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை உண்டு என்ற சட்டத்தினை கொண்டு வந்தார். தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற நாளிலிருந்து பெண்கள் ஆண்களுக்கு நிகராக தங்களது வாழ்வில் ஏற்றம் பெற வேண்டுமென்ற உயரிய நோக்கில் அவர்களுக்கு தேவையான கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு உரிமைகளை ஏற்படுத்தி தந்து தமிழக பெண்களின் வாழ்வில் ஒளியேற்றி வைத்துள்ளார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆரோக்கிய குழந்தை களுக்குள் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற முதல் மூன்று இடம் பிடித்த குழந்தையின் தாய்மார்களுக்கு பரிசு களையும், ஆறுதல் பரிசையும் அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கி னர். மேலும், கர்ப்பிணி பெண்களுக்கான சமையல் போட்டிகளில் முதல் மூன்று இடத்தை பெற்று வெற்றி பெற்ற கர்ப்பிணி பெண்களுக்கு பரிசுகளையும், ஆறுதல் பரிசு ஒரு கர்ப்பிணிக்கும் வழங்கினார்கள்.

    மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலர் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் சரோஜினி, திருவிதாங்கோடு பேரூராட்சித் தலைவர் ஹாருன்றஷீது (நஸீர்), துணைத்தலைவர் சுல்பத் அமீர், செயல் அலுவலர் வினிதா, கோதநல்லூர் வட்டார மருத்துவ அலுவலர் அனீஸ், தக்கலை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கி ணைந்த குழந்தைவளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் 62 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.
    • அமைச்சர் மு.பெ.சாமிநாதன் விழாவினை தொடங்கி வைத்து சீர்வரிசை பொருட்கள் மற்றும் தனது சொந்த நிதியிலிருந்து தலா ரூ.1,000 ரொக்கம் மற்றும் வேட்டி, சேலைகளை வழங்கினார்.

    சென்னிமலை:

    சென்னிமலை டவுன், காமராஜர் நகரில் உள்ள சமுதாய நலக் கூடத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கி ணைந்த குழந்தைவளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் 62 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.

    ஈரோடு கணேசமூர்த்தி எம்.பி. முன்னிலையில் வகித்தார். அமைச்சர் மு.பெ.சாமிநாதன் விழாவினை தொடங்கி வைத்து சீர்வரிசை பொருட்கள் மற்றும் தனது சொந்த நிதியிலிருந்து தலா ரூ.1,000 ரொக்கம் மற்றும் வேட்டி, சேலைகளை வழங்கினார்.

    மேலும் 62 கர்ப்பிணிகளுக்கு 5 வகை உணவுகளும், சீர்வரிசை பொருட்களும் வழங்கப்பட்டது. தொடர்ந்து சென்னிமலை பேரூராட்சி அலுவலகத்தில், சென்னிமலை பேரூராட்சி மற்றும் அரசு மருத்து மனைக்கு இடம் வழங்கிய முத்துசாமி முதலியார் உருவப்படத்தினை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    மேலும் அவர்களின் வாரிசு தாரர்களுக்கு சால்வை அணிவித்து கவுரவித்தார். மேலும் முதல்- அமைச்சர் கடந்த ஆகஸ்ட் மாதம் 26-ந்தேதி பெருந்துறையில் நடந்த அரசு விழாவில் ரூ.46.66 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சென்னிமலை சென்குமார் தொடக்க கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் கட்டிடத்தில் கட்டப்பட்ட காட்சி அறையுடன் கூடிய சில்லறை விற்பனை நிலையம் மற்றும் சரக்கு இருப்பு கிடங்கினை திறந்து வைத்ததை தொடர்ந்து, அமைச்சர் சாமிநாதன் நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் எஸ்.ஆர்.எஸ்.செல்வம், கிழக்கு ஒன்றிய செயலாளர் சி. பிரபு, நகர செயலாளர் ராமசாமி, பொதுகுழு உறுப்பினர் சா. மெய்யப்பன், சென்னிமலை பேரூராட்சி தலைவர் ஸ்ரீதேவி, சென்னிமலை யூனியன் தலைவர் காயத்திரி, துணை தலைவர் பன்னீர் செல்வம், இளைஞர் அணி சதீஷ் என்கிற சுப்பிர–மணியம், அசோக், கைத்தறி துறை உதவி இயக்கு–நர் சரவணன், மேலாண்மை இயக்குநர் தமிழ்செல்வன், சென்னிமலை பேரூராட்சி செயல் அலு–வலர் ஆயிஷா உள்பட பலர் பங்கேற்றனர். 

    • கர்ப்பிணிகள் சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும்
    • கலெக்டர் குமாரவேல் பாண்டியன் அறிவுரை

    வேலூர்:

    வேலூர் சத்துவாச்சா ரியில் உள்ள தனியார் அரங்கத்தில் இன்று ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் தேசிய ஊட்டச்சத்து வார விழா மற்றும் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது‌. இதில் 200 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு செய்யப்பட்டு சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன.

    நிகழ்ச்சிக்கு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். கார்த்திகேயன் எம் எல் ஏ, துணை மேயர் சுனில் குமார், 2-வது மண்டல குழு தலைவர் நரேந்திரன், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கோமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    விழாவில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பேசியதாவது

    கர்ப்பிணிகளுக்கும் குழந்தைகளுக்கும் நாம் அரணாக இருக்க வேண்டும் என்பதை நினைவுபடுத்தும் வகையில் இது போன்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சிகள் நமது முன்னோர்களால் நடத்தப்பட்டு தொடர்ந்து நடந்து வருகிறது.

    தமிழக முதல்அமைச்சர் மு க ஸ்டாலின் பெண்களுக்கு எந்தெந்த சலுகைகள் வழங்க வேண்டும் என யோசித்து எண்ணிலடங்கா திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

    பெண்களுக்கு இலவச பஸ் பயணம் கொண்டு வந்தார். அதனைத் தொடர்ந்து கல்லூரி மாணவிகளுக்கு ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். கர்ப்பிணிகளுக்காக சமுதாய வளைகாப்பு நடத்தப்பட்டு வருகிறது.

    கர்ப்பிணி தாய்மார்கள் நல்ல சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் மூலம் உங்களுடைய ஆரோக்கியத்தை வளர்த்து நல்ல முறையில் குழந்தைகளை வளர்க்க வேண்டும்.

    சரியான உணவு விகிதத்தை கடைபிடித்து உங்களுக்கு சிவப்பு அணுக்கள் அதிகரிக்க கூடிய மாதுளை மற்றும் பழ வகைகள் நாட்டு காய்கறிகள் தானிய வகைகளை சாப்பிட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு செய்து சீர்வரிசை வழங்கினார்.
    • பிரசவ காலத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து நலக்கல்வி கையேடு வழங்கப்பட்டது.

    ராயக்கோட்டை, 

    கிருஷ்ணகிரி மாவட்டம் தளி சட்டமன்றத் தொகுக்குட்பட்ட கெலமங்கலம் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உட்பட்ட இருதுகோட்டையில் சுமார் 250 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜேஷ்குமார் தலைமையில் நடந்தது.

    இருதுகோட்டை ஊராட்சி தலைவர் சதீஷ்குமார், அனுமந்தபுரம் யசோதாமணி, ஒன்றிய கவுன்சிலர் கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் நடந்த விழாவில் தளி சட்டமன்ற உறுப்பினர் டி.ராமச்சந்திரன் கலந்து கொண்டு கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு செய்து சீர்வரிசை வழங்கினார்.

    தாய்மார்கள் கர்ப்ப காலத்தில் உட்கொள்ள வேண்டிய உணவு மற்றும் சத்து மாத்திரைகள், பிரசவ காலத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து நலக்கல்வி கையேடு வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை மருத்துவர்கள் சங்கீதா, கோபி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சேகர், சுகாதார மேற்பார்வையாளர் சிவகுருநாதன், சுகாதார ஆய்வாளர்கள் ரங்க நாதன், ராமச்சந்திரன், அசோக், சந்தோஷ் மற்றும் செவிலியர்கள் செய்திருந்தனர்.

    ×