என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அழைப்பிதழ்"
- ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட பலருக்கு திருமண அழைப்பிதழை வழங்கினர்.
- பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பிதழ் வழங்கி உள்ளனர்.
புதுடெல்லி:
நடிகை வரலட்சுமி சரத்குமார் தமிழ் சினிமாவில் போடா போடி, சர்கார், சண்டக்கோழி 2, தாரை தப்பட்டை போன்ற பல படங்களில் கதாநாயகியாகவும், வில்லியாகவும் நடித்து அவரது அபார நடிப்பு திறமையை வெளிப்படுத்தி மக்கள் கவனத்தைப் பெற்றார். தற்போது இவர் குணசித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். கடைசியாக ஹனுமான் திரைப்படத்தில் நடித்திருந்தார் வரலட்சுமி.
அதைத்தொடர்ந்து தனுஷின் ராயன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதேசமயம், வரலட்சுமி சரத்குமாருக்கும் மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவுக்கும் கடந்த சில தினங்களுக்கு முன் இரு வீட்டாரின் சம்மதத்துடன் எளிய முறையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
விரைவில் இவர்களின் திருமணமும் நடைபெற இருக்கிறது. இதற்காக நடிகர் சரத்குமார், ராதிகா சரத்குமார், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் திரை பிரபலங்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் என பலருக்கும் திருமண அழைப்பிதழை வழங்கி வருகின்றனர்.
சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருக்கு நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழை வழங்கினர்.
இந்நிலையில், தலைநகர் டெல்லிக்கு நேரடியாக சென்று பிரதமர் நரேந்திர மோடியை நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் ஆகியோர் இன்று சந்தித்தனர். அப்போது அவர்கள், தேர்தலில் வெற்றி பெற்றதற்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன் மகள் வரலட்சுமி சரத்குமாரின் திருமண அழைப்பிதழையும் வழங்கினர்.
பாரத பிரதமர் திரு.நரேந்திரமோடிஜி அவர்களை இன்று காலை டெல்லியில் அமைந்துள்ள பாராளுமன்ற இல்லத்தில் குடும்பத்தினருடன் சென்று சந்தித்து பேசியதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
— R Sarath Kumar (@realsarathkumar) June 28, 2024
நானும், எனது மனைவி திருமதி.ராதிகா சரத்குமார் அவர்களும் நாடாளுமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றியடைந்து,… pic.twitter.com/J03SHZER6t
- பிரேம்ஜியும் நடிகர், இசையமைப்பாளர், பாடகர் என பல திறமைகளை கொண்டு திரையுலகில் இயங்கி வருகிறார்.
- வெங்கட்பிரபு எக்ஸ் தளத்தில் பிரேம்ஜியின் திருமணம் குறித்த தகவலை சில நாட்களுக்கு முன் வெளியிட்டார்.
தமிழ் சினிமாவின் பன்முக திறமையாளர்களில் ஒருவரான கங்கை அமரனுக்கு வெங்கட் பிரபு, பிரேம்ஜி என இரு மகன்கள் உள்ளனர். இவர்களில் வெங்கட் பிரபுவுக்கு திருமணமாகி விட்ட நிலையில் அவர் சினிமாவில் பிரபலமான இயக்குநராக வலம் வருகிறார்.
அதேசமயம் பிரேம்ஜியும் நடிகர், இசையமைப்பாளர், பாடகர் என பல திறமைகளை கொண்டு திரையுலகில் இயங்கி வருகிறார். 45 வயதாகும் பிரேம்ஜி நீண்ட நாட்களாக திருமணம் செய்துக் கொள்ளாமல் இருந்தார்.
இந்நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் அவரது அண்ணனான வெங்கட்பிரபு எக்ஸ் தளத்தில் பிரேம்ஜியின் திருமணம் குறித்த தகவலை சில நாட்களுக்கு முன் வெளியிட்டார்.
பிரேம்ஜிக்கு இன்று ஆம் தேதி திருத்தணி முருகன் கோவிலில் மிக நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் கல்யாணம் நடந்து முடித்தது. இந்த திருமண நிகழ்ச்சியில் கங்கை அமரன், வெங்கட் பிரபு, நடிகர் ஜெய், வைபவ், பாடகர் கிருஷ் போன்றவர் கலந்துக் கொண்டனர். பிரேம்ஜி மணப்பெண்ணான இந்துவிற்கு தாலி கட்டிவிட்டு கன்னத்தில் முத்தம் கொடுத்தார். இந்த வீடியோ காட்சி தற்பொழுது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பிரேம்ஜியும் நடிகர், இசையமைப்பாளர், பாடகர் என பல திறமைகளை கொண்டு திரையுலகில் இயங்கி வருகிறார்.
- பிரேம்ஜியின் திருமணம் அழைப்பிதழின் புகைப்படம் சில நாட்களுக்கு முன் வைரலாகியது.
பிரேம்ஜிக்கு நாளை ஜூன் 9 ஆம் தேதி திருத்தணி முருகன் கோவிலில் மிக நெருங்கிய உறவினர்கள் சாட்சியில் கல்யாணம் நடக்கவிருக்கிறது. இந்நிலையில் இன்று திருத்தணி கோவிலிற்கு சென்று திருமண முன்ஏற்பாடுகளை பணிகளை பார்வையிட்டார். இவருடன் நடிகர் வைபவ், அவரது உதவி இயக்குனர்கள் சிலர் கலந்துக் கொண்டனர்,
பிரேம்ஜி க்கு நாளை கல்யாணம் நடக்க இருக்கும் நிலையில் இன்று அவருக்கு ரிசப்ஷன் நடந்துக் கொண்டு இருக்கிறது. அவரது அண்ணனான இயக்குனர் வெங்கட் பிரபு பிரேம்ஜியின் கல்யாண கோலத்தில் புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் அதில் ஃபைனலி.... லவ் யூ என்று பதிவிட்டுள்ளார். மணப்பெண்ணின் பெயர் இந்து என தெரிய வந்துள்ளது. தற்பொழுது நடந்து கொண்டு இருக்கும் விழாவில் சென்னை 28 படக்குழுவினர் , நெருங்கிய நண்பர்கள், நடிகர் ஜெய், மிர்ச்சி சிவா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பிரேம்ஜியும் நடிகர், இசையமைப்பாளர், பாடகர் என பல திறமைகளை கொண்டு திரையுலகில் இயங்கி வருகிறார்.
- பிரேம்ஜியின் திருமணம் அழைப்பிதழின் புகைப்படம் சில நாட்களுக்கு முன் வைரலாகியது.
தமிழ் சினிமாவின் பன்முக திறமையாளர்களில் ஒருவரான கங்கை அமரனுக்கு வெங்கட் பிரபு, பிரேம்ஜி என இரு மகன்கள் உள்ளனர். இவர்களில் வெங்கட் பிரபுவுக்கு திருமணமாகி விட்ட நிலையில் அவர் சினிமாவில் பிரபலமான இயக்குநராக வலம் வருகிறார்.
அதேசமயம் பிரேம்ஜியும் நடிகர், இசையமைப்பாளர், பாடகர் என பல திறமைகளை கொண்டு திரையுலகில் இயங்கி வருகிறார். 45 வயதாகும் பிரேம்ஜி இதுவரை திருமணம் செய்துக் கொள்ளவில்லை. இவரது திருமணம் குறித்து ரசிகர்கள் அடிக்கடி கேள்வி எழுப்புவது உண்டு. அதற்கு எப்பொழுதும் வித்தியாசமான முறையில் அவரது பாணியில் பதிலளத்து கடந்து விடுவார்.
இந்நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் அவரது அண்ணனான வெங்கட்பிரபு எக்ஸ் தளத்தில் பிரேம்ஜியின் திருமணம் குறித்த தகவலை சில நாட்களுக்கு முன் வெளியிட்டார். பிரேம்ஜியின் திருமணம் அழைப்பிதழின் புகைப்படம் சில நாட்களுக்கு முன் வைரலாகியது. அதன்படி பிரேம்ஜிக்கு நாளை ஜூன் 9 ஆம் தேதி திருத்தணி முருகன் கோவிலில் மிக நெருங்கிய உறவினர்கள் சாட்சியில் கல்யாணம் நடக்கவிருக்கிறது.இந்நிலையில் இன்று திருத்தணி கோவிலிற்கு சென்று திருமண முன்ஏற்பாடுகளை பணிகளை பார்வையிட்டார். இவருடன் நடிகர் வைபவ், அவரது உதவி இயக்குனர்கள் சிலர் கலந்துக் கொண்டனர்,
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நடிகர் அர்ஜுனின் மகளும், நடிகையுமான ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தம்பி ராமையாவின் மகன், நடிகர் உமாபதிக்கும் கடந்த நவம்பர் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
- ஐஸ்வர்யாவும் விஷாலுடன் 'பட்டத்து யானை' உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார்.
'ஆக்ஷன் கிங்' என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் அர்ஜுனின் மகளும், நடிகையுமான ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தம்பி ராமையாவின் மகன், நடிகர் உமாபதிக்கும் கடந்த நவம்பர் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. நடிகர் அர்ஜுனுக்கு சொந்தமான ஆஞ்சநேயர் கோவிலில் நண்பர்கள், உறவினர்கள் சூழ எளிமையாக இந்த நிகழ்வு நடந்தது.
அர்ஜுன் தொகுத்து வழங்கிய 'சர்வைவர்' நிகழ்ச்சி மூலம் ஐஸ்வர்யாவுக்கு அறிமுகமானவர் உமாபதி. நிகழ்ச்சியில் உமாபதியின் நற்குணம் அர்ஜுனுக்குப் பிடித்துப் போக தனது வீட்டு மாப்பிளையாக பச்சைக் கொடி காட்டினார்.
உமாபதி அதாகப்பட்டது மகாஜனங்களே, மணியார் குடும்பம், தண்ணி வண்டி, சேரன் இயக்கிய திருமணம் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
ஐஸ்வர்யாவும் விஷாலுடன் 'பட்டத்து யானை' உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார். திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிக்கக் கூடாது என தம்பி ராமையா குடும்பம் கேட்டுக் கொண்டதாக தகவல் பரவியது. ஆனால், இது குறித்து ஐஸ்வர்யா இன்னும் தெளிவுப்படுத்தவில்லை. இவர்களது திருமண நிச்சயதார்த்தம் நடந்து ஆறு மாதங்களான நிலையில் திருமணம் எப்போது என்று ரசிகர்கள் கேட்டு வந்தனர்.
வரும் ஜூன் 10-ம் தேதி கிருகம்பாக்கத்தில் உள்ள அர்ஜுனின் தோட்டத்தில் தான் ஐஸ்வர்யா அர்ஜுன் மற்றும் உமாபதி திருமணம் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலருக்கும் அழைப்பிதழ் வைக்கும் பணியை அர்ஜுன் ஆரம்பித்துள்ளார்.
தனது மகள் திருமணத்துக்காக அழைப்பிதழ் வைக்கும் பணியை ஆரம்பித்துள்ள நடிகர் அர்ஜுன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு குடும்பத்துடன் சென்று அழைப்பு விடுத்துள்ள புகைப்படம் தற்போது வெளியாகி இருக்கிறது. தம்பி ராமைய்யாவும் தனது குடும்பத்துடன் உடன் சென்று முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ராட்சத பலூன்கள், உறுதிமொழி, மாரத்தான் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தியும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
- தேர்தல் திருவிழா அழைப்பிதழை வழங்கி வாக்காளர்களை வாக்களிப்பதற்கு அழைத்தனர்.
பொள்ளாச்சி:
தமிழகத்தில் ஏப்ரல் 19-ந் தேதி பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடக்கிறது.
இந்த தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்ட நிர்வா கம், தேர்தல் பிரிவினர் சார்பில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்ப ட்டு வருகிறது.
பஸ் நிலையங்கள், மக்கள் அதிகமாக கூடக் கூடிய இடங்களில் தேர்தல் விழிப்புணர்வு செல்பி ஸ்பாட் வைத்து விழிப்புணர்வு, வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு வீடியோவும் ஒளிபரப்பப்படுகிறது.
மேலும் ராட்சத பலூன்கள், உறுதிமொழி, மாரத்தான் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தியும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
அதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி பகுதியில் திருமணத்திற்கு வெற்றிலை, பாக்கு, பழம் வைத்து அழைப்பது போன்று தேர்தல் தினத்தன்று வாக்களிக்க வருமாறு, அதிகாரிகள் அழைத்து வருகின்றனர்.
பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் கடந்த தேர்தல்களில் சில இடங்களில் 50 சதவீதத்துக்கும் குறைவாகவே வாக்குப்பதிவு இருந்துள்ளது.
அந்த இடங்களை கண்டறிந்து, அங்கு 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, தேர்தல் அதிகாரிகள் வீடு, வீடாக சென்று மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது, தேர்தல் அதிகாரிகள், ஒரு தட்டில் வெற்றிலை, பாக்கு, ஆப்பிள், ஆரஞ்சு உள்ளிட்ட பழங்களை வைத்து, தேர்தல் திருவிழா அழைப்பிதழை வழங்கி வாக்காளர்களை வாக்களிப்பதற்கு அழைத்தனர்.
பொள்ளாச்சி சப்-கலெக்டரும், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியுமான கேத்ரின் சரண்யா தலைமையில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளோடு வீடு, வீடாக சென்று அழைப்பிதழ் வழங்கி தேர்தலில் வாக்களிக்க அழைத்தனர். மேலும் வாக்களிப்பதன் அவசியம் குறித்து எரிவாயு சிலிண்டர், பஸ் நிலையம், ரெயில் நிலையம், உணவு விடுதி ஆகியவற்றில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஓட்டி வருவதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
- அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 22-ந்தேதி நடை பெறுகிறது.
- தமிழகம் முழுவதும் ஒரு கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்படுகிறது.
சென்னை:
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 22-ந்தேதி நடை பெறுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் வீடு வீடாக அழைப்பிதழ் மற்றும் அட்சதை பிரசாதம் வழங்கி அழைத்து வருகிறார்கள்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலினை ஆர்.எஸ்.எஸ். மற்றும் விசுவ இந்து பரிசத் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் நேரில் சந்தித்து ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை சார்பாக 22-ந்தேதி நடை பெறும் கும்பாபிஷேக அழைப்பிதழையும், ராமருக்கு பூஜை செய்த அட்சதையையும் வழங்கினார்கள்.
அவரும் பக்தியுடன் பெற்றுக் கொண்டு விரைவில் தரிசனம் செய்ய வருவதாக தெரிவித்து உள்ளார்.
தமிழகம் முழுவதும் ஒரு கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்படுகிறது. பொங்கல் திருநாளான நாளை (15-ந்தேதி) வரை இந்த பணிகள் நடக்கிறது.
- விருதுநகரில் நடைபெற்ற அரசு விழா அழைப்பிதழில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் புறக்கணிக்கப்பட்டது.
- ஜனநாயக பிரதிநிதித்துவ கொள்கைகளுக்கு முரணானது என மக்களவை சபாநாயகருக்கு, மாணிக்கம் தாகூர் எம்.பி. கடிதம் அனுப்பியுள்ளார்.
விருதுநகர்
விருதுநகர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
விருதுநகரில் நடைபெற்ற நிதியமைச்சர் பங்கேற்க உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியால் ஏற்பாடு செய்யப் பட்ட ஒரு பொது விழாவின் போது அதிகாரப்பூர்வ வழி காட்டுதல்கள் மீறப்பட்டுள்ளது தொடர்பான தீவிரமான கவலையை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருவதற்காக எழுதுகிறேன்.
விருதுநகரை பிரதிநிதித் துவப்படுத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில், மேற்படி நிகழ்ச்சிக்கான அழைப்பிதழில் எனது பெயர் விடுபட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்வது வருத்தமளிக்கிறது. மேலும், மாவட்டத்தில் உள்ள மேலும் இரண்டு எம்.பி.க்களின் (தனுஷ்குமார், நவாஸ்கனி) பெயர்களும் அழைப்பிதழில் இல்லை என்பது என் கவனத்துக்கு வந்தது.
இப்படி மக்களின் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை அழைப்பிதழில் புறக்கணிப்பது ஜனநாயகப் பிரதிநிதித்துவத்தின் கொள்கைகளுக்கு முரணானது மட்டுமல்லாமல், நிர்வாகம் மற்றும் நாடாளுமன்ற மற்றும் மாநில சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இடை யேயான உத்தியோக பூர்வ பரிவர்த்தனைகள் குறித்த ஒருங்கிணைந்த வழிகாட்டுதல்களுக்கு எதிரானது.
அரசாங்க அலுவலகங்களால் ஏற்பாடு செய்யப்படும் பொது நிகழ்ச்சிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தவறாமல் அழைக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் அலுவலக குறிப்பாணையினை உங்களது கவனத்தை ஈர்க்கிறேன். அழைப்பிதழ் அட்டைகளில் எங்கள் பெயர்கள் விடுபட்டிருப்பது இந்த வழிகாட்டு தல்களுக்கு முரணானது.
இந்த விஷயத்தைச் சீர் செய்வதில் உங்கள் அவசரத் தலையீடு தேவை என்பதை நான் கேட்டுக்கொள்கிறேன். வழிகாட்டுதல்களில்படி, அமைப்பாளர்கள் பரிந்து ரைக்கப்பட்ட நடைமுறை களை கடைபிடிப்பதையும், சம்பந்தப்பட்ட அனைத்து எம்.பி.க்களுக்கும் அழைப்பி தழ்களை வழங்குவதையும் உறுதிப்படுத்துவது கட்டாயமாகும்.இந்த விஷயத்தில் உங்கள் உடனடி கவனத்தை நான் பாராட்டுகிறேன். மற்றும் தேர்ந்தெ டுக்கப்பட்ட பிரதி நிதிகளின் கண்ணி யத்தை நிலை நிறுத்தவும், ஜனநாயகக் கொள்கைகளின் ஒரு மைப்பாட்டைப் பேணவும் சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று நம்புகி றேன். இந்த சிக்கலைத் தீர்ப்பதில் உங்கள் புரிதலுக்கும் விரைவான நடவ–டிக்க்கும் நன்றி.
இவ்வாறு அவர் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
- ஆர்.எஸ்.எஸ்., தேசிய செயற்குழு கூட்டம், குஜராத் மாநிலம், புஜ் நகரில் நவம்பர் 5-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை நடந்தது.
- அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம், ஜனவரி 22-ந் தேதி நடக்க உள்ளது.
சென்னை:
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாநில தலைவர் குமாரசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஆர்.எஸ்.எஸ்., தேசிய செயற்குழு கூட்டம், குஜராத் மாநிலம், புஜ் நகரில் நவம்பர் 5-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை நடந்தது.
ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டையொட்டி, ஜாதி வேறுபாடுகளை களைந்து, சமுதாய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது, குடும்ப அமைப்பை பாதுகாப்பது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுதேசி வாழ்க்கை முறை, சமூக ஒழுக்கத்தை ஏற்படுத்துவது ஆகிய ஐந்து முக்கிய விஷயங்கள் குறித்து முடிவெடுக்கப்பட்டது.
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம், ஜனவரி 22-ந் தேதி நடக்க உள்ளது. அதை முன்னிட்டு ஜனவரி 1 முதல் 15-ந் தேதி வரை, வீடு, வீடாகச் சென்று ஸ்ரீராம ஜென்மபூமி படம், அயோத்தியில் பூஜிக்கப்பட்ட அட்சதையுடன் அழைப்பிதழ் கொடுக்க முடிவு செய்துள்ளோம்.
உலகம் தழுவிய அமைப்பாக, ஆர்.எஸ்.எஸ்., வளர்ந்துள்ளது. தமிழகத்தில் பயிற்சி பெற்ற ஊழியர்கள், 20 ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளனர்.
ஆர்.எஸ்.எஸ்., அணி வகுப்புக்கு, கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது அனுமதி அளித்தார். ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் படி, கடந்த ஆண்டு ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு நடந்தது.
இந்த ஆண்டு காவல் துறை அனுமதி மறுத்ததால் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் படி, வருகிற 19-ந் தேதி அணிவகுப்பு நடக்கவுள்ளது. இது தொடர்பாக, டி.ஜி.பி.,யை சந்தித்து பேசியுள்ளோம்.
ஆகம பயிற்சி பெற்றவர்கள் யாராக இருந்தாலும், எந்த ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதுதான் ஆர்.எஸ்.எஸ்.,சின் நிலைப்பாடு. ஆனால், அவர்கள் முறையான ஆகம பயிற்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
அதுபோல, கலப்பு திருமணத்தையும் ஆதரிக்கிறோம். ஆனால், திருமணத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தி, மதமாற்றம் போன்ற செயல்களில் ஈடுபடுவதை எதிர்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது, ஆர்.எஸ்.எஸ்., மாநிலச் செயலாளர் ஜெகதீசன், மாநில செய்தித் தொடர்பாளர் நரசிம்மன் ஆகியோர் உடனிருந்தனர்.
- உசிலம்பட்டியில் அ.தி.மு.க. மாநாடு அழைப்பிதழை முன்னாள் அமைச்சர் வழங்கினார்.
- இதற்கான அழைப்பிதழ் வழங்கும் நிகழ்ச்சி உசிலம் பட்டி நகர அலுவலகத்தில் நடந்தது.
உசிலம்பட்டி
மதுரையில் அ.தி.மு.க. எழுச்சி மாநாடு வருகிற 20- ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான அழைப்பிதழ் வழங்கும் நிகழ்ச்சி உசிலம் பட்டி நகர அலுவலகத்தில் நடந்தது. நகர செயலாளர் பூமாராஜா தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு மரக்கன்றுகளையும், அழைப்பிதழ்களையும் வழங்கினார்.
இதில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தமிழரசன், எஸ்.எஸ்.சரவணன், மாணிக்கம், பேரவை துணைச் செயலாளர்கள் வெற்றிவேல், இளங் கோவன், துரைதனராஜன், மாவட்ட கவுன்சிலர் சுதாகரன், மாணவரணி செயலா ளர் மகேந்திர பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் செல்லம்பட்டி ராஜா, சேடபட்டி பிச்சை ராஜன், ஏழுமலை வாசிமலை, நகர நிர்வாகிகள் லட்சுமணன், உக்கிரபாண்டி, ரகு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- அ.தி.மு.க. மாநாட்டில் பங்கேற்க வெற்றிலை பாக்கு வைத்து செல்லூர் ராஜூ அழைப்பிதழ் கொடுத்தார்.
- தொண்டர்களுக்கு வேட்டி, சேலை வழங்கி மாநாட்டில் உற்சாகமாக பங்கேற்க அழைப்பி தழ்களை வழங்கி வருகிறார்.
மதுரை
மதுரையில் அ.தி.மு.க. எழுச்சி மாநாடு வருகிற 20-ந் தேதி நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்கும் வகையில் பிரமாண்ட பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மாநாட்டில் பங்கேற்கும் தொண்டர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வசதிகளும் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் ஏராளமான தொண்டர்களை மாநாட்டில் பங்கேற்க செய்யும் வகையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் தீவிர களப்பணியாற்றி வருகி றார்கள்.
மதுரையில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் மற்றும் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் அ.தி.மு.க. தொண்டர்களை மாநாட்டில் திரளாக பங்கேற்க செய்யும் வகையில் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மாநாட்டுக்கான அழைப்பிதழ்களை சர்வ சமய பிரார்த்தனைகள் செய்து பொதுமக்களுக்கு வழங்கி வருகிறார்.
இன்று காமராஜர் சாலை பகுதியில் உள்ள கோவிலில் அழைப்பிதழ்களை வைத்து சாமி கும்பிட்ட செல்லூர் ராஜூ, அந்த பகுதியில் வீதி வீதியாக சென்று பொது மக்களுக்கு மாநாட்டு அழைப்பிதழ்களை வழங்கி னார். அப்போது வியாபா ரிகள், பொதுமக்கள் உள்ளிட்டோருக்கு வெற்றி லை பாக்குடன் அழைப்பி தழை வைத்து கொடுத்து மாநாட்டில் குடும்பத்துடன் பங்கேற்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
அ.தி.மு.க. நிர்வாகிகள் வில்லாபுரம் ராஜா, எம். எஸ்.பாண்டியன், அண்ணாதுரை, குமார், சோலை ராஜா, கலைச் செல்வம், சண்முகவள்ளி மற்றும் முக்கிய நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
மதுரை மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர், முன்னாள் அமைச்சர் ஆர். பி.உதயகுமார் மாநாட்டில் திரளான பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் அழைப்பிதழ்களை வழங்கி வருகிறார். பொது மக்களுக்கு மரக்கன்று களை வழங்கி மாநாட்டில் பங்கேற்கும்படி அழைப்பு விடுத்து வரும் ஆர்.பி. உதயகுமார் மதுரை புறநகர் மாவட்டத்தில் இருந்து சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்களை மாநாட்டிற்கு அழைத்துவர திட்டமிட்டு தீவிர பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் நல உதவிகளை வழங்கி மாநாட்டில் பங்கேற்க செய்யும் வகையில் அவர் அழைப்பு விடுத்து வருகிறார். மேலும் இருசக்கர வாகனங்கள், கார்களில் அ.தி.மு.க. மாநாட்டின் லோகோவை ஒட்டியும் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து வருகிறார்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கிழக்கு மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு வேட்டி, சேலை வழங்கி மாநாட்டில் உற்சாகமாக பங்கேற்க அழைப்பி தழ்களை வழங்கி வருகிறார்.
மதுரை மாவட்டத்தில் இருந்து அதிகப்படியான தொண்டர்களை பங்கேற்க செய்யும் வகையில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தீவிரப்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் மாநாட்டிற்கு இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில் தலைமைகழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் தமிழக முழுவதும் கட்சி தொண்டர்களை சந்தித்து மாநாட்டில் பங்கேற்க அழைப்பிதழ்களை வழங்கி வருகிறார்கள்.
- பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நாளை நடைபயணத்தை தொடங்க உள்ளார்.
- ராமநாதபுரத்தில் பா.ஜனதா கட்சியினர் வீடு, வீடாக சென்று அழைப்பிதழ் வழங்கி வருகின்றனர்.
ராமேசுவரம்
ராமேசுவரத்தில் நாளை மறுநாள் (28-ந்தேதி) பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை "என் மண், என் மக்கள்" என்ற பெயரில் நடைபயணத்தை தொடங்க உள்ளார். மத்திய மந்திரி அமித்ஷா நடைபயணத்தை தொடங்கி வைக்க உள்ளார். அ.தி.மு.க. பொதுச் செய லாளர் எடப்பாடி பழனி சாமி உள்பட கூட்டணி கட்சியினர் கலந்து கொள்கின்றனர்.
இந்த நிலையில் இந்த தொடக்க விழாவிற்கான அழைப்பிதழை பாரதிய ஜனதா கட்சியினர் ராமேசுவரத்தில் வீடு, வீடாக வழங்கி வருகின்றனர்.
ராமேசுவரம் பகுதியில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் அழைப்பிதழை வழங்க பா.ஜனதா திட்டமிட்டுள்ளது. ராமேசுவரம் நகர் பா.ஜனதா நிர்வாகிகள், தொண்டர்கள் நகர் தலைவர் ஸ்ரீதர் தலைமையில் வீடு வீடாக சென்று வெற்றிலை, பாக்குடன் அழைப்பிதழை கொடுத்து வருகின்றனர்.
இதில் ராமநாதபுரம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், செயலாளர் கணேசன் அய்யர், பொருளாளர் சுரேஷ், பொதுச்செயலாளர்கள் செல்வம், முருகன் உள்பட பலர் அழைப்பிதழ்களை வழங்கி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்