என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பொன்னாடை"
- மேயர் மகேஷ் பாராட்டி பொன்னாடை அணிவித்தார்
- கொட்டாரம் பேரூர் தி.மு.க. செயலாளர் வைகுண்ட பெருமாள் முதல் பரிசு பெற்றார்.
கன்னியாகுமரி :
கொட்டாரம் பேரூர் தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் கொட்டாரத்தில்உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது. கொட்டாரம் பேரூர் தி.மு.க. செயலாளர் வைகுண்ட பெருமாள் தலைமை தாங்கினார். அகஸ்தீஸ்வரம்தெற்கு ஒன்றிய தி.மு.க.செயலாளர் பாபு முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான மகேஷ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார்.கூட்டத்தில் குமரி கிழக்கு மாவட்டத்தில் தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களைஅதிகப்படியாக நியமித்து சிறப்பாக பணியாற்றியதில் கொட்டாரம் பேரூர் தி.மு.க. செயலாளர் வைகுண்ட பெருமாள் முதல் பரிசு பெற்றார். அவரை கவுரவிக்கும் வகையில் அவருக்கு மேயர் மகேஷ் பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. வர்த்தகர் அணி மாநில இணை செயலாளர்தாமரை பாரதி உள்பட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் தி.மு.க. கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரின்வெற்றிக்காக அயராது பாடுபடுவது என்று தீர்மானம்நிறைவேற்றப்பட்டது.
- இந்து மேனிலைப்பள்ளி கூடுதல் மதிப்பெண் மற்றும் தேர்ச்சி விழுக்காடு இரண்டிலும் முதலிடம்.
- பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு கலெக்டர் மகாபாரதி பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
சீர்காழி:
சீர்காழியில் நடைபெற்ற மரபு சார் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இவ்விழாவில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் ஏ.பி.மகாபாரதி கலந்து கொண்டு பேசினார்.
பின்னர் இக்கல்வியாண்டில் மேல்நிலை 2-ம் ஆண்டு மாணவர்கள் அரசு பொதுத்தேர்வில் சீர்காழி தாலுக்காவில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேனிலைப்பள்ளி கூடுதல் மதிப்பெண் மற்றும் தேர்ச்சி விழுக்காடு இரண்டிலும் முதலிடம் பெற்றமைக்காக பள்ளியின் தலைமை ஆசிரியர் எஸ்.அறிவுடைநம்பியை மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
இதில் சீர்காழி நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகர், மயிலாடுதுறை வேளாண்மை இணை இயக்குநர் ஜே.சேகர், சீர்காழி நகர மன்ற உறுப்பினர் வேல்முருகன் மற்றும் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர்கள் எஸ்.முரளிதரன் , என்.துளசிரங்கன் , ஏ.வரதராஜன் கலந்து கொண்டனர்.
- உயிரை காப்பவர்கள் மருத்துவ ர்களும், செவிலியர்களும் தான்.
- இரவு பகல் பாராமல் கடமையை செய்பவர்கள்.
திருத்துறைப்பூண்டி:
உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு, திருத்துறைப்பூண்டி நகர அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் செவிலியர்களை கவுரவப்படுத்தும் விதமாக நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.
அப்போது அவர் கூறும்போது, ஒரு உயிரை படைப்பவன் இறைவன் என்றால் உயிரை காப்பவர்கள் மருத்துவ ர்களும், செவிலியர்களும் க்தான்.
இரவு பகல் பாராமல் கடமையை செய்பவர்கள்.
இவர்களின் சேவையை மதித்து இவர்களுடன் ஒத்துழைத்து மனித உயிர்களையும், மனிதநேயத்தை காப்போம் என்றார். நிகழ்ச்சியில் மருத்துவர் ஷைமா, பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார், நகராட்சி வருவாய் ஆய்வாளர் கார்த்தி, நகர்மன்ற தலைவரின் நேர்முக உதவியாளர் செந்தில்குமார், மருத்துவ பணியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாலு, செந்தில்குமார் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.
- கட்டிமேடு ஊராட்சியில் 31 குடும்பங்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணையும் விழா நடைபெற்றது.
- முன்னாள் எம்.எல்.ஏ கலந்துகொண்டு கட்சியில் இணைந்த அனைவருக்கும் பொ ன்னாடை அணிவித்தார்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி ஒன்றியம் கட்டிமேடு ஊராட்சியில் 31 குடும்பங்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணையும் விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கலந்துகொண்டு கொடியேற்றி சிறப்புரையா ற்றினார்.
கட்சியின் ஒன்றிய செயலாளர் வி. ஜவகர் அனைவரையும் வரவேற்று பேசினார். மாநில கட்டு ப்பாட்டு குழு உறுப்பினர் கோ. பழனிச்சாமி, முன்னாள் எம்எல்ஏ கலந்துகொண்டு கட்சியில் இணைந்த அனைவருக்கும் பொ ன்னாடை அணிவித்தார்.
நிகழ்ச்சியில் மாநில நிர்வாக குழு உறுப்பினரும் திருவாரூர் மாவட்ட செயலாளருமான வை. செல்வராஜ் மாநில நிர்வாக குழு உறுப்பினரும் சட்டமன்ற உறுப்பினருமான கே. மாரிமுத்து, மாநில குழு உறுப்பினரும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான கே. உலகநாதன், வட்டார ஊராட்சி தலைவரும் விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளருமான அ. பாஸ்கர், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் ஞானமோகன், பி.வி சந்திர ராமன் கே ஆர் ஜோசப் விவசாய சங்கத்தின் ஒன்றிய செயலாளர் கோ ஜெயபால் விவசாய தொழிலாளர் சங்கத்தின்ஒன்றிய செயலாளர் எம். மகாலிங்கம்
மாதர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் சு. தமிழ்ச்செல்வி ராஜா மாதர் சங்கத்தின் ஒன்றிய தலைவர் எஸ் கவிதா மாவட்ட ஊராட்சி உறுப்பினர் கே சுஜாதா வட்டார ஊராட்சி உறுப்பினர் இந்திரா வெள்ளைச்சாமி இராயநல்லூர் ஊராட்சி தலைவர் எம் ரஜினி சுப்பிர மணியன், ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர் எஸ்.ஜெயபால் வங்கிஊழியர்சங்கத்தின் பொறுப்பாளர்கள் தோழர் சி.பாஸ்கர், தோழர் எஸ்.ராமச்சந்திரன்உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டனர்.
- திட்ட அலுவலரும், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியருமான ராமச்சந்திரன் வரவேற்றார்.
- நிகழ்ச்சியில் நிர்வாகிகள், ஆசிரியர்கள் என அனைவரும் பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டனர்.
மதுக்கூர்:
மதுக்கூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரிய கோட்டை- வெட்டிக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மதுக்கூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் தொடக்க விழா நடைபெற்றது. முக்கிய நிர்வாகிகள், ஆசிரியர்கள் என அனைவரும் குத்துவிளக்கேற்றி விழாவினை தொடங்கி வைத்தனர்.
விழாவிற்கு திட்ட அலுவலரும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியருமான ராமச்சந்திரன் வரவேற்றார். மதுக்கூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் பிரகாஷ் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் உலகநாதன், வட்டார கல்வி அலுவலர் மனோகரன், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் மகாலிங்கம், செயலாளர் ராஜகோபால், துணைத் தலைவர் ஹாஜாமுகைதீன், ஜே.சி.ஐ. முன்னாள் தலைவர் மணிகண்டன், பெரியகோட்டை ஊராட்சி மன்ற தலைவர் பாலசுப்பிரமணியன், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பொன்மணி, ஓய்வு பெற்ற பதிவறை எழுத்தர் நாகராஜன், ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் ராமலிங்கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
நிகழ்ச்சியில் நிர்வாகிகள், ஆசிரியர்கள் என அனைவரும் பொன்னாடை போர்த்தி கவரவிக்கப்பட்டனர். இநத முகாம் வருகிற 4-ந் தேதி வரை நடைபெறுகிறது. முடிவில் மதுக்கூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் முதுகலை ஆசிரியர் இளவரசன் நன்றி கூறினார்.
- அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் நடந்தது.
- மாவட்ட செயலாளர் தர்மருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து பெற்றனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் ஓ.பி.எஸ். அணி பிரிவின் அ.தி.மு,க. ஆலோசனைக் கூட்டம் மாவட்டச் செயலாளர் தர்மர் எம்.பி. தலைமையில், அவை தலைவர் ராஜேந்திரன் முன்னிலையில் பாரதி நகர் தனியார் மகாலில் நடைபெற்றது.
கூட்டத்தில் கட்சி வளர்ச்சி குறித்து பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. கூட்டத்தில் ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் முத்து முருகன், ராமநாதபுரம் நகர செயலாளர் (கிழக்கு) பாலசுப்பிரமணியன், (மேற்கு) சீனிவாசன், மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணியன், பரமக்குடி நகர் செயலாளர் வின்சென்ட் ராஜா, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கோட்டைச்சாமி, திருப்புல்லாணி ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர்கள் உடையத்தேவன், சரவணன் உள்பட ஏராளமானோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
முன்னதாக ஒன்றிய ஒன்றிய செயலாளராக தேர்வு செய்யப்பட்ட உடையத்தேவன், சரவணன் ஆகியோர் மாவட்ட செய லாளர் தர்மருக்கு பொன்னா டை அணிவித்து வாழ்த்து பெற்றனர்.
- மாணவர்களுக்கு சீருடை, இனிப்பு, பட்டாசு மற்றும் நோட்டுகள் வழங்கப்பட்டது.
- பணிகளை பாராட்டி நினைவுப்பரிசு, பொன்னாடைகள் வழங்கி கவுரவிப்பு.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி ரோட்டரி சங்கம் சார்பில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு பள்ளி பெயர் பொறித்த சீருடை, தீபாவளி இனிப்புகள், பட்டாசுகள் மற்றும் நோட்டுகள் வழங்கப்பட்டது.
முன்னதாக தலைமை–யாசிரியர் வேதரெத்தினம், உதவிஆசிரியை சுசீலா, ஆட்டோ ஓட்டுநர் அன்புமணி ஆகியோரின் பணிகளை பாராட்டி நினைவுப்பரிசு, பொன்னாடைகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க தலைவர் பாலசுப்பிரமணியன், செயலாளர் அண்ணாதுரை, பொருளாளர் கருணாநிதி, வட்டார கல்வி அலுவலர்கள் பாலசுப்பிரமணியம், அறிவழகன், ரோட்டரி துணை ஆளுநர் சிவக்குமார், ஆதப்பன், இளங்கோவன், திலகமணி, முத்து சாமி, அறிவழகன், உறுப்பினர் அஜித் ராஜா, ஹாஜா அலாவுதீன், தலைமையாசிரியர்கள் சுபாஷ், முருகாdந்தம், ஆசிரியர்கள் வேதரெத்தினம், ஹரி கிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
- தஞ்சை மணிமண்டபம் முன்பு உள்ள எனது தந்தை சிவாஜியின் சிலை அலங்கரிக்கப்பட்டு வருகிறது.
- மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை செயல்படுத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர்:
தஞ்சைக்கு இன்று நடிகர் பிரபு வந்தார்.
திடீரென அவர் மாநகராட்சி அலுவல கத்திற்கு சென்றார். அங்கு மாநகராட்சி மேயர் சண் ராமநாதன், ஆணையர் சரவணகுமார், துணை மேயர் அஞ்சுக்கும் பூபதி ஆகியோரின் சிறப்பான பணிக்கு பாராட்டு தெரிவித்து அவர்களுக்கு பொன்னாடை அணிவித்தார்.
மேலும் பணியாளர்களை ஊக்கப்படுத்தினார்.
இது குறித்து பிரபு கூறும் போது, தஞ்சை மாநகராட்சி தமிழ்நாட்டின் சிறந்த மாநகராட்சியாக செயல்பட்டு வருகிறது.
மேயர் சண்.ராமநாதன், ஆணையர் சரவணகுமார், துணை மேயர் அஞ்சுகம் பூபதி மற்றும் பணியாளர்கள் சிறப்பாக பணிபுரிந்து வருகின்றனர்.
மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை செயல்படுத்தி வருகின்றனர்.
இதனால் தஞ்சை மாநகராட்சி முன்னோடி மாநகராட்சியாக மாறி உள்ளது.
தஞ்சை மணிமண்டபம் முன்பு உள்ள எனது தந்தை சிவாஜியின் சிலை அலங்கரிக்கப்பட்டு வருகிறது.
இதே போல் பல்வேறு வளர்ச்சிபணிகளை மாநகராட்சியில் செயல்படுத்தி விடுகின்றனர்.
இதற்காக அவர்களை பாராட்டி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தேன் என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்