search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயிகள் அச்சம்"

    • பெரிய அளவிலான மலைப்பாம்பை கண்ட விவசாயிகள் அச்சம் அடைந்தனர்.
    • பாம்புகள் அடிக்கடி குளங்களுக்கு வருவதாகவும் இதனால் காலையில் வயல் பணிக்கு செல்வது ஆபத்தாக உள்ளது என்றும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே உள்ள பதினெட்டாம் படி பகுதியில் நெல் வயல்கள் மற்றும் பாசன குளங்கள் உள்ளன. இங்கு முதல் பருவ நெல் சாகுபடி பணிகளை விவசாயிகள் தொடங்கி உள்ளனர்.

    அவர்கள் அதிகாலையிலேயே வயல்களுக்கு சென்று பணி செய்து வருகின்றனர். அதன்படி இன்று அதிகாலை வயல் பணிகளுக்குச் சென்ற அவர்கள், பதினெட்டாம்படி அருகே சென்றபோது, சாலையின் குறுக்கே ஏதோ ஊர்ந்து செல்வதை பார்த்தனர். அருகில் சென்று பார்த்தபோது, அது மலைப்பாம்பு என தெரியவர அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    பெரிய அளவிலான மலைப்பாம்பை கண்ட விவசாயிகள் அச்சம் அடைந்தனர். மேலும் சிலர் அங்கு வந்ததும் மலைப்பாம்பை பிடிக்க முயன்றனர். ஆனால் அதற்குள் அந்த பாம்பு வேறு எங்கோ சென்று பதுங்கி விட்டது.

    அந்த பகுதியில் உள்ள குளங்களில் மீன் பிடிப்பவர்கள் வலை விரித்துள்ளதால், அருகில் உள்ள மலைகளில் இருந்து பாம்புகள் அடிக்கடி குளங்களுக்கு வருவதாகவும் இதனால் காலையில் வயல் பணிக்கு செல்வது ஆபத்தாக உள்ளது என்றும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

    • ஏரி தற்போது சுற்று வட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக முழுவதும் நிரம்பி உள்ளது.
    • ஏரிக்கரை தொடர்ந்து சேதமடைந்து உடையும் நிலையில் உள்ளது.

    ஓசூர்,

    ஓசூர் அருகே உள்ள தொரப்பள்ளி கிராமத்தில் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மூலம் அப்பகுதியில் விவசாயிகள் தென்னை, வாழை, நெல் வயல் மற்றும் மலர் தோட்டங்கள் ஆகியவற்றை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர்.

    கடந்த 8 ஆண்டுகளாக நிரம்பாத இந்த ஏரி தற்போது சுற்று வட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக முழுவதும் நிரம்பி உள்ளது.

    ஏரி நிரம்பியதையடுத்து ஏரி கரையின் மையப்பகுதியில் தாழ்வான இடத்தில் தண்ணீர் வெளியேறி கரையில் அரிப்பு ஏற்பட்டு பெரிய அளவில் கரை சேதமடைந்தது. தொடர்ந்து அப்பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு வருவதால் ஏரிக்கரை தொடர்ந்து சேதமடைந்து உடையும் நிலையில் உள்ளது. இதுகுறித்து அறிந்த ஓசூர் வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏரி பகுதிக்கு சென்று சேதமடைந்த கரையை பார்வையிட்டனர்.

    ஆனால் கரை உடைப்பை சீர் செய்யும் எந்த பணிகளையும் அவர்கள் மேற்கொள்ளவில்லை, மாறாக ஏரியின் கடைக்கோடியில் ஜே.சி.பி. இயந்திரம் கொண்டு ஒரு பாதையை ஏற்படுத்தி ஏரியில் உள்ள தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர்.

    இதனால் கனமழைக்கு நிரம்பிய ஏரியின் தண்ணீர் அனைத்தும் அவ்வழியாக வெளியேறி வீணாக தென்பெண்ணை ஆற்றுக்கு செல்கிறது. மழை நேரத்தில் ஏரியில் சேமிக்கப்பட்ட தண்ணீர் வீணாகி செல்வதால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    தொடர்ந்து தண்ணீர் அனைத்தும் சென்றால் விவசாயத்திற்கும் குடிநீருக்கும் தண்ணீர் இல்லாத நிலை ஏற்படும், அப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்தால் சேதமான ஏரிக்கரை உடைந்து விவசாய நிலங்கள் மற்றும் கிராமத்திற்குள் தண்ணீர் புகும் அபாய நிலை உருவாகும்,

    எனவே ஏரிக்கரை உடைப்பை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், ஏரியிலிருந்து வீணாக வெளியேற்றப்பட்டு வரும் தண்ணீரை நிறுத்த வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சேலம் பூலாவாரியில் விவசாயிகள் மாடுகளை பிடித்த படி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • போராட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாடுகளுடன் பங்கேற்றனர்.

    சேலம்:

    சேலம்-சென்னை 8 வழிசாலைக்கு எதிராக விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். அதன் தொடர்ச்சியாக இன்று சேலம் பூலாவாரியில் விவசாயிகள் மாடுகளை பிடித்த படி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    8 வழி சாலை எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழு தலைவர் மோகனசுந்தரம் தலைமையில் நடந்த போராட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாடுகளுடன் பங்கேற் றனர்.தொடர்ந்து அவர்கள் கூறுகையில், செலம்-சென்னை 8 வழி சாலைக்கு ஆதரவாக தமிழக அமைச்சர்கள் கருத்துகளை கூறி வருகிறார்கள். இதனால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.இது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெளிவு படுத்த வேண்டும், எந்த நிலையிலும் 8 வழி சாலையை அமைக்க விட மாட்டோம், அதற்காக விவசாய நிலங்களை எப்போதும் விட்டு கொடுக்க மாட்டோம் என்பதில் உறுதியாக உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர். 

    ×