என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அர்ச்சகர்"
- பூச்சந்தை சுப்பிரமணியசாமி கோவில் குடமுழுக்கு அடுத்த மாதம் 3-ம் தேதி நடைபெற உள்ளது.
- தமிழ் அர்ச்சகர்களையும் பங்கெடுக்க செய்ய வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் தெய்வ தமிழ்ப் பேரவை நகர அமைப்பாளர் பழ.ராசேந்திரன் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
தஞ்சாவூர் பூக்கார தெரு பூச்சந்தை சுப்பிரமணிய சுவாமி கோவில் குடமுழுக்கு அடுத்த மாதம் 3-ம் தேதி (ஞாயிற்றுகிழமை) நடைபெற உள்ளது.
இந்த குடமுழுக்கின் போது நிகழும் வேள்விச்சாலை, கருவறை, கோபுரகலசம் ஆகிய மூன்று இடங்களிலும் தமிழ் மந்திரம் ஓதி அர்ச்சனை செய்ய வேண்டும்.
வேள்விசாலை, கோபுர கலசம் ஆகிய இடங்களில் சமஸ்கிருத அர்ச்சகர் எண்ணிக்கைக்கு இணையாக தமிழ் அர்ச்சகர்களையும் பங்கெடுக்க செய்ய வேண்டும். எனவே குடமுழுக்கை தமிழ் மந்திரங்கள் ஓதி நடத்திட உரிய ஏற்பாடுகள் செய்து உயர்நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஞானசுந்தரம் திருவாரூர் தெற்கு வீதியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் உதவி அர்ச்சகராக பணிபுரிந்து வந்தார்.
- எதிர்பாராத விதமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திருவாரூர்:
திருவாரூர் அருகே உள்ள புலிவலம் பகுதியை சேர்ந்தவர் ஞானசுந்தரம் (வயது 42) .இவரது மனைவி அபிநயா. இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகனும்,4 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
இந்நிலையில் ஞானசுந்தரம் திருவாரூர் தெற்கு வீதியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் உதவி அர்ச்சகராக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் காசி விஸ்வநாதர் கோவிலில் நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு காசி விஸ்வநாதருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதனை முன்னிட்டு பணியிலிருந்த அர்ச்சகர் ஞானசுந்தரம் மந்திரங்கள் கூறுவதற்காக மைக்கை கையில் எடுத்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி ஞானசுந்தரம் தூக்கி வீசப்பட்டார். இதில் அவருக்கு நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் எதிர்பாராத விதமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து திருவாரூர் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அப்சராவை கோவில் பின்புறத்தில் எரித்து சுமார் இரண்டு லாரி மணலால் மூடி கொலையை மறைத்துள்ளார்.
- கொலை வழக்கை பதிவு செய்த போலீசார் சாய் கிருஷ்ணாவை கைது செய்தனர்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் ஷரூர்நகர் பகுதியை சேர்ந்தவர் சாய் கிருஷ்ணா (36). கட்டிட ஒப்பந்ததாரராக பணியாற்றி வரும் சாய் கிருஷ்ணா ஷரூர்நகர் பகுதியில் உள்ள பங்காரு மைசம்மா கோவிலில் பூசாரியாக இருந்து வந்தார். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தையுடன் வசித்து வருகிறார்.
நற்குடா கிராமத்தைச் சேர்ந்த அப்சரா (30) தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், அப்சராவுக்கும் பூசாரி சாய் கிருஷ்ணாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் காதலித்து நெருக்கமாக பழகி வந்துள்ளனர். இதில், அப்சரா கர்ப்பமானதாக தெரிகிறது. பின்னர், சாய் கிருஷ்ணாவின் வற்புறுத்தலால் அப்சரா கர்ப்பத்தை கலைத்துள்ளார்.
மேலும், அப்சரா சாய் கிருஷ்ணாவிடம் தன்னை திருமணம் செய்துக் கொள்ளும்படி வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் இதற்கு பூசாரி சாய் கிருஷ்ணா மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சுல்தான்பல்லி பகுதியில் உள்ள பசு கொட்டகத்தில் இருவரும் சந்தித்துள்ளனர். அங்கு, திருமணம் குறித்து அப்சரா பேசியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சாய் கிருஷ்ணா அப்சராவை அடித்து தாக்கியுள்ளார். பின்னர், அப்சராவை கோவில் பின்புறத்தில் எரித்து சுமார் இரண்டு லாரி மணலால் மூடி கொலையை மறைத்துள்ளார்.
தொடர்ந்து, சாய் கிருஷ்ணா அப்சராவை காணவில்லை என்றும் போலீசில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் சாய் கிருஷ்ணாவிடம் நடத்திய விசாரணையின் மூலம் அப்சராவை கொலை செய்ததை அவர் ஒப்புக் கொண்டார்.
இதையடுத்து, கொலை வழக்கை பதிவு செய்த போலீசார் சாய் கிருஷ்ணாவை கைது செய்தனர். பூசாரி செய்த இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- குமாரவயலூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பிரபு, ஜெயபாலன் ஆகியோரை தமிழக அரசு அர்ச்சகர்களாக நியமித்தது.
- தமிழகத்தில் நூற்றுக்கணக்கான கோவில்களில் பல அர்ச்சகர்கள் சம்பளம் பெறாமலேயே, கோவில்களில் தங்களின் பணியை செய்து வருகின்றனர்.
மதுரை:
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் குமாரவயலூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில், தமிழ்நாடு அரசு அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தின்கீழ் ஜெயபாலன், பிரபு ஆகியோரை அர்ச்சகர்களாக நியமித்து உத்தரவிடப்பட்டது.
இதை ரத்து செய்து, அந்த கோவிலில் நீண்ட காலமாக பணியாற்றும் தங்களை அர்ச்சகர்களாக நியமிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி கார்த்திக், பரமேசுவரன் ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது ஜெயபாலன், பிரபு ஆகியோர் சார்பில் ஆஜரான வக்கீல், ஜெயபாலன், பிரபு ஆகியோர் 2021-ம் ஆண்டிலேயே அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். ஆனால் அவர்களின் நியமனத்துக்கு எதிராக 2022-ம் ஆண்டில்தான் இந்த வழக்கை தொடர்ந்துள்ளனர். இது ஏற்புடையதல்ல என்று வாதாடினார். முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
குமாரவயலூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பிரபு, ஜெயபாலன் ஆகியோரை தமிழக அரசு அர்ச்சகர்களாக நியமித்தது. இந்த நியமனம் குறித்து மனுதாரர்கள் கேள்வி எழுப்பி இந்த வழக்கை தொடர்ந்து உள்ளனர். மனுதாரர்களும் அர்ச்சகர் பணிக்கு விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் அவர்கள் இந்த பணிக்கு தேர்வு செய்யப்படவில்லை.
இந்த வழக்கை பொறுத்தவரை மனுதாரர்கள் பல ஆண்டுகளாக அர்ச்சகர்களாக கோவிலில் பணியாற்றி உள்ளனர். அவர்களை முறைப்படி அர்ச்சகராக கோவில் அறங்காவலர் நியமிக்கவில்லை. தமிழகத்தில் நூற்றுக்கணக்கான கோவில்களில் பல அர்ச்சகர்கள் சம்பளம் பெறாமலேயே, கோவில்களில் தங்களின் பணியை செய்து வருகின்றனர். அந்த வகையில், ஆகம விதிகளுக்கு எதிராக குமாரவயலூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற அர்ச்சகர் நியமன உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இந்த கோவிலில் அர்ச்சகர்களாக பல ஆண்டுகளாக பணியாற்றிய, மனுதாரர்களை அர்ச்சகர்களாக நியமிப்பது தொடர்பாக கோவிலின் அறங்காவலர் 8 வாரத்தில் பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
- பொங்கல் பண்டிகையையொட்டி வழங்கப்பட்டது
- விழாவில் மேயர் மகேஷ் கலந்து கொண்டு வழங்கினார்
நாகர்கோவில்:
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பொங்கல் பண்டிகையையொட்டி அர்ச்சகர்களுக்கு புத்தாடை களும் பணியாளர்களுக்கு சீருடைகளும் வழங்கப்படுகிறது.
குமரி மாவட்டத்தை பொருத்த மட்டில் 490 கோவில் களில் பணிபுரியும் அர்ச்ச கர்களுக்கு புத்தாடை களும் பணியாளர்களுக்கு சீருடைகளும் வழங்குவ தற்கான தொடக்க விழா நாகர்கோவில் நாகராஜா கோவில் வளாகத்தில் இன்று நடந்தது. விழாவிற்கு இணை ஆணையர் ஞானசேகர் தலைமை தாங்கினார்.
விழாவில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் மேயருமான மகேஷ் கலந்து கொண்டு அர்ச்சகர்களுக்கு புத்தாடை களையும் பணியாளர்களுக்கு சீருடைகளையும் வழங்கினார். அப்போது மேயர் மகேஷ் பேசியதாவது:-
தி.மு.க. அரசு பொறுப் பேற்றதும் கோவில்கள் மேம்பாட்டிற்கு தனி கவனம் செலுத்தி பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப் பாட்டில் உள்ள கோவில்கள் கும்பாபிஷே கத்திற்காக ரூ.48 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வரு கிறது.
தி.மு.க. அரசு பொறுப் பேற்ற பிறகு கோவில் பணி யாளர்களுக்கான சம்ப ளத்தை உயர்த்தி உள்ளது. குமரி மாவட்டத்தில் 100 கோவில்களை புனர மைக்க ரூ.5 கோடியே 87 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது கோவில்களில் புனரமைப்பு பணி நடை பெற்று வருகிறது. பறக்கைப் பகுதியில் கூருடைகண்டன் சாஸ்தா கோவில் இயற்கை எழில் கொஞ்சும் வயல் பகுதியில் உள்ளது.வயல் வரப்பு வழியாக சென்று தான் அந்த கோவிலில் பூஜைகள் செய்ய வேண்டும்.
இந்த கோவிலில் வயல் அறுவடை மற்றும் நடவு பணியின்போது மட்டுமே பூஜைகள் நடைபெற்று வந்தது. இந்த கோவிலை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இந்த கோவிலை நான் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தேன். வாரம் 2 நாட்கள் பூஜைகள் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோவில் அர்ச்சகர்களும் பணியாளர்களும் அதிகம் பயன்பெறும் வகையில் ஒரு அரசு செயல்படுகிறது என்றால் அந்த அரசு தி.மு.க. அரசாகத்தான் இருக்க முடியும். முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கோவில் பணியாளர்கள் மீது தனி கவனம் செலுத்தி நடவ டிக்கை எடுத்து வருகிறார்.
நிகழ்ச்சியில் துணை மேயர் மேரி பிரின்சி லதா, மண்டல தலைவர்கள் அகஸ்டினா கோகிலவாணி, ஜவகர் கவுன்சிலர்கள் கலா ராணி, ரோசிட்டா மராமத்து பொறியாளர் அய்யப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- கடந்த 5 நாட்களுக்கு முன்பு கோவில் அருகில் உள்ள தனது வீட்டின் கழிவறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- பல மாதங்களாக ஆன்லைன் ரம்மி விளையாடி வந்துள்ளார். இதன் மூலம் அவர் பணத்தை இழந்ததுள்ளார்.
நாமக்கல்:
நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தலைமை அர்ச்சகராக நாகராஜ் என்பவர் இருந்தார். இவர் கடந்த 5 நாட்களுக்கு முன்பு கோவில் அருகில் உள்ள தனது வீட்டின் கழிவறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பக்தர்கள், அர்ச்சகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், கடன் தொல்லையால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. போலீசார் தொடர் விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு:
நாகராஜ் கடந்த பல மாதங்களாக ஆன்லைன் ரம்மி விளையாடி வந்துள்ளார். இதன் மூலம் அவர் பணத்தை இழந்ததுள்ளார். மேலும் 3 நம்பர் லாட்டரி சீட்டு வாங்கி, அதன் மூலமும் ரூ.30 லட்சத்தை இழந்துள்ளார். இதனால் ஏற்பட்ட கடனால் மனம் உடைந்து அவர் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என போலீசார் தெரிவித்தனர்.
- பாரம்பரியம், கலாசாரம் மாறாமல் காப்பதில், கோவில்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
- பக்தர்களிடம் இறை நம்பிக்கை மேம்படும் வகையில் பணிகளை அர்ப்பணித்து செயல்படுகின்றனர்.
திருப்பூர் :
தமிழக முதல்-அமைச்சருக்கு கோவில் பூசாரிகள் நல சங்க மாநில தலைவர் வாசு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- நமது பாரம்பரியம், கலாசாரம் மாறாமல் காப்பதில், கோவில்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. கோவில் பூசாரிகள், அர்ச்சகர்கள் ஆகியோர் பக்தர்களிடம் இறை நம்பிக்கை மேம்படும் வகையில் பணிகளை அர்ப்பணித்து செயல்படுகின்றனர்.தமிழகம் முழுவதும் பல ஆயிரம் அர்ச்சகர்கள், பூசாரிகள் குடும்பங்கள் கோவில் பணியையே வாழ்வாதாரமாக கொண்டுள்ளன. பக்தர்களின் கோரிக்கைகளை இறைவனிடம் கொண்டு சேர்ப்பதில் அர்ச்சகர்களின் பங்கு முக்கியமானது.
பண்டிகைகள், திருவிழாக்கள் என விடுமுறை இன்றி அர்ச்சகர்கள், பூசாரிகள் பணியாற்றி வருகின்றனர்.தமிழகத்தில் சினிமாத்துறை, கல்வித்துறை, அறிவியல், கலை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கும் அரசு சார்பில் விருது வழங்கப்படுகிறது. இதேபோல் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வரும் சிறந்த கோவில் பூசாரிகள், அர்ச்சகர்களை ஆண்டுதோறும் தேர்வு செய்து அவர்களுக்கும் விருது வழங்கி கவுரவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்