search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பலூன்"

    • வடகொரியாவின் இந்த செயல் மனிதாபிமானமற்றது.
    • இந்த செயலை உடனடியாக நிறுத்த வலியுறுத்தியது.

    கொரிய தீபகற்பத்தில் வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி தென்கொரியாவை அச்சுறுத்தி வருகிறது. அமெரிக்காவுடன் இணைந்து போர் ஒத்திகை மேற்கொள்ளும்போது, இவ்வாறு ஏவுகணைகளை செலுத்து தென்கொரியாவை எச்சரிக்கை விடுப்பது வழக்கம்.

    அந்த வகையில், கடந்த சில நாட்களாக ராட்சத பலூன்கள் முழுக்க குப்பைகளை கட்டி அவற்றை தென்கொரியா எல்லைக்குள் அனுப்பி வைத்தது. இருநாட்டு எல்லையில் அமைந்துள்ள தென்கொரிய பகுதிகளுக்குள் ஏராளமான பலூன்கள் இவ்வாறு பறந்து வந்துள்ளதாக தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அந்த பலூன்களில் குப்பைகள், பிளாஸ்டிக் பாட்டில், ஷூ பகுதிகள், சாணம், சிகரெட் துண்டுகள் இடம்பெற்று இருந்தன. வடகொரியாவின் இந்த செயல் மனிதாபிமானமற்றது என்றும் மிகவும் தரம்தாழ்ந்த ஒன்று என தென்கொரியா தெரிவித்தது. மேலும், வடகொரியாவின் இந்த செயலை உடனடியாக நிறுத்தவும் வலியுறுத்தியது.

    இந்த நிலையில், வடகொரியா துணை பாதுகாப்பு துறை அமைச்சர் கிம் காங் II, "எல்லைப்பகுதியில் ராட்சத பலூன்களில் குப்பை அனுப்புவதை தற்காலிகமாக நிறுத்துகிறோம். குப்பைகளை சுத்தம் செய்ய எவ்வளவு கூட்டு முயற்சி தேவைப்படுகிறது, இப்படி குப்பைகளை கொட்டினால் எப்படி இருக்கும் என்பதை தென் கொரியர்கள் அறிந்து கொள்ள வேண்டும்," தெரிவித்தார்.

    தென் கொரியா சார்பில் நீண்ட காலமாக பலூன்கள் அனுப்பப்பட்டு வருவதற்காகவே இவ்வாறு பலூன்கள் அனுப்பப்பட்டன என்று கிம் காங் II தெரிவித்தார்.  

    • சிறிய அளவிலான பெட்டி ஒன்றும் இருந்ததை கண்டு கிராமமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
    • கீழே விழுந்து கிடந்த பொருட்களை ஆர்.கே. பேட்டை வட்டாட்சியர் விஜயகுமார் சேகரித்து அலுவலகத்திற்கு கொண்டு சென்றார்.

    திருவள்ளூர்:

    திருத்தணி அடுத்த ஆர்.கே. பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆதிவராகபுரம் கிராமத்தில் உள்ள வயல்வெளி பகுதியில் நேற்று காலை வானத்தில் இருந்து மர்ம பொருள் ஒன்று கீழே விழுந்தது.

    பலூன் போன்று இருந்த அதன் அருகில் மர்ம பொருள் ஒன்று கிடந்தது. அதில் இருந்து சிக்னல் வந்தபடி இருந்தது. மேலும் சிறிய அளவிலான பெட்டி ஒன்றும் இருந்ததை கண்டு கிராமமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுபற்றி அறிந்ததும் ஏராளமானோர் அங்கு திரண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் ஆர். கே. பேட்டை போலீசார் விரைந்து வந்து மர்ம பொருளை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    அந்த மர்ம பொருளில் மத்திய அரசின் தேசிய வானிலை ஆய்வு மையம், சென்னை மீனம்பாக்கம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அதில் போன் நம்பரும் இருந்தது.

    அந்த எண்ணில் தொடர்பு கொண்டு அதிகாரிகள் விசாரித்தபோது அந்த மர்ம பொருள் வானிலை ஆராய்ச்சி மையத்தின் சார்பில் வானிலை ஆய்வுகளுக்கு அனுப்பப்பட்டது என்பது தெரியவந்தது.

    மீட்கப்ட்ட சிறிய பெட்டி பல்வேறு பகுதியில் வெப்பநிலை, வானிலை மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்ய உதவிகரமாக இருக்கும் என்றும், இதனால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் கூறப்பட்டது.

    இதையடுத்து அங்கு கீழே விழுந்து கிடந்த பொருட்களை ஆர்.கே. பேட்டை வட்டாட்சியர் விஜயகுமார் சேகரித்து அலுவலகத்திற்கு கொண்டு சென்றார். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விபத்தில் கரூர் மாவட்டம் சின்ன தாராபுரம் பகுதியை சேர்ந்த ரவிக்குமார் என்ற மாட்டு ரவி என்பவர் உயிரிழந்தார்.
    • ஹீலியம் கியாஸ் சிலிண்டர் அருகில் நின்று கொண்டு ரவிக்குமார் சிகரெட் குடித்தபோது ஏற்பட்ட தீப்பொறியால், கியாஸ் சிலிண்டர் வெடித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    திருச்சி மெயின்கார்டு கேட் அருகே மேலிப்புலிவார்டு ரோட்டில் நேற்று இரவு 8.10 மணியளவில் ஒருவர் பலூன் விற்பனை செய்து கொண்டிருந்தார்.

    அப்போது அவர் பலூனுக்கு காற்று நிரப்புவதற்காக வைத்திருந்த ஹீலியம் கியாஸ் சிலிண்டர் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் அங்கு நின்று கொண்டிருந்த ஒருவர் தூக்கி வீசப்பட்டார்.

    வெடிச்சத்தத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அலறியடித்து கொண்டு சிதறி ஓடினர். மேலும் வெடித்த கியாஸ் சிலிண்டர் அருகில் நின்று கொண்டிருந்த ஆட்டோ மீது விழுந்ததில் ஆட்டோ நசுங்கியது.

    அதன் அருகில் நிறுத்தப்பட்டிருந்த 4 இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன. இந்த விபத்தில் கரூர் மாவட்டம் சின்ன தாராபுரம் பகுதியை சேர்ந்த ரவிக்குமார் என்ற மாட்டு ரவி என்பவர் உயிரிழந்தார்.

    ஹீலியம் கியாஸ் சிலிண்டர் அருகில் நின்று கொண்டு ரவிக்குமார் சிகரெட் குடித்தபோது ஏற்பட்ட தீப்பொறியால், கியாஸ் சிலிண்டர் வெடித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    இந்த விபத்தில் காயம் அடைந்த 22 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில், ஹீலியம் கியாஸ் சிலிண்டர் வெடித்து ஒருவர் பலியான விவகாரத்தில் பலூன் வியாபாரி அனர் சிங் தலைமறைவாக இருந்தார். அவரை கோட்டை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கருப்பு பலூன் பறக்க விட முயன்றதை அறிந்த போலீசார் விரைந்து வந்து பலூன்களை பறிமுதல் செய்தனர்.
    • இந்து மக்கள் கட்சியினர் கோ பேக் ராகுல் காந்தி என்ற பதாகையுடன் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தஞ்சாவூர்:

    கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 3500 கி.மீ. தூரத்திற்கு ராகுல் காந்தி பாதயாத்திரை செல்கிறார்.

    இன்று மாலை அவரது பாதயாத்திரை தொடங்குகிறது.

    இதனை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

    இந்த நிலையில் ராகுல்காந்தி தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மதியம் தஞ்சை ரயிலடியில் இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி செயலாளர் கார்த்திராவ் தலைமையில் நிர்வாகிகள் திரண்டனர்.

    பின்னர் அவர்கள் கருப்பு பலூன் பறக்க விட முயன்றனர். உடனே போலீசார் விரைந்து வந்து பலூன்களை பறிமுதல் செய்தனர்.

    இதனைத் தொடர்ந்து இந்து மக்கள் கட்சியினர் கோ பேக் ராகுல் காந்தி என்ற பதாகையுடன் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது ராகுல் காந்தி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர்.

    மேலும் கைது செய்யப்பட்ட அர்ஜுன் சம்பத்தை உடனே விடுவிக்க கோரியும் கோசங்களை எழுப்பினர். இதையடுத்து இந்து மக்கள் கட்சியினர் 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×