search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சவுக்கு சங்கர்"

    • பெண் போலீசாரை அவதூறாக பேசிய வழக்கில் கைதான சவுக்கு சங்கர் ஜாமினில் வெளியே உள்ளார்.
    • சவுக்கு சங்கருக்கு ஹெச்.ஐ.வி. தொற்று உள்ளது என்று தகவல் சமூக வலைத்தளங்களில் பரவியது.

    பெண் போலீசாரை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தற்போது ஜாமினில் வெளியே உள்ள சவுக்கு சங்கருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் அக்டோபர் 12ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நெஞ்சுவலி காரணமாக சிகிச்சை பெற்றுவந்த சவுக்கு சங்கர் மருத்துவமனையில் இருந்து கடந்த அக்டோபர் 15ம் தேதி நலம் பெற்று வீடு திரும்பினார் .

    இதனிடையே சவுக்கு சங்கருக்கு எச்.ஐ.வி. தொற்று உள்ளது என்று ஒரு மருத்துவ பரிசோதனை அறிக்கை சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்தது. இந்நிலையில் தனக்கு ஹெச்ஐவி தொற்று பாதித்து இருப்பதாக வெளியான தகவல் உண்மையில்லை என்று சவுக்கு சங்கர் மறுத்துள்ளார்.

    இது தொடர்பாக சவுக்கு சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எனக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து, 12.10.2024 அன்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தேன். நான் சிகிச்சை பெற்ற மருத்துவ அறிக்கை தனியார் மருத்துவமனையில் இருந்து திருடப்பட்டது. திருடப்பட்ட மருத்துவ அறிக்கை போலியாக உருவாக்கப்பட்டு, நான் எச்.ஐ.வி. வைரசால் பாதிக்கப்பட்டுள்ளேன் என்று சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டது.

    இந்த மருத்துவ அறிக்கை போலியானது. நான் எச்.ஐ.வி. வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டதாக பரவிய செய்தி முற்றிலும் தவறானது மற்றும் ஆதாரமற்றது. இந்த விவகாரம் தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளேன். தவறான தகவல் பரப்புவோர் மீது சிவில் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகாக நீதிமன்றத்தை நாடியுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.

    • அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
    • சவுக்கு சங்கர் தற்போது ஜாமீனில் வெளியே உள்ளார்.

    பிரபல அரசியல் விமர்சகரும் யூடியூபருமான சவுக்கு சங்கர் திடீர் நெஞ்சுவலியால் காரணமாக சென்னை வடபழனி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    கடந்த ஏப்ரல் மாதம் பெண் காலவர்கள் குறித்து நேர்காணலில்  அவதூறாக பேசியது உட்பட பல்வேறு வழக்குகளில்  கைதாகி சிறையில் இருந்த சவுக்கு சங்கர் தற்போது ஜாமீனில் வெளியே உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • சவுக்கு மீடியாவின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. அலுவலகம் மற்றும் வீடு சீல் வைக்கப்பட்டுள்ளது.
    • பல உண்மைகள் தமிழக மக்களுக்கு தெரியக்கூடாது என்பதற்காகத்தான் சவுக்கு மீடியா முடக்கப்பட்டது.

    யூடியூபர் சவுக்கு சங்கர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்த நிலையில் மதுரை மத்திய சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்தார்.

    அப்போது செய்தியாளர்களை சந்தித்த சவுக்கு சங்கர் கூறியதாவது:-

    * தமிழகத்தில் பத்திரிகை சுதந்திரம் என்பது துளியும் இல்லை.

    * தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனங்களை சந்தித்தவர் அல்ல. விமர்சனங்களை பார்த்து பழகியவர் அல்ல. தந்தையின் நிழலில் வளர்ந்தவர் தான்.

    * பணியில் ஒருவர் இறந்தால் கருணை அடிப்படையில் வழங்குவது போல தான் தி.மு.க. தலைவர் ஆகியிருக்கிறார் மு.க.ஸ்டாலின். அதுபோலத்தான் தமிழகத்தில் முதல்வராகவும் ஆகியிருக்கிறார்.

    * உண்மைகளை சவுக்கு மீடியா ஏறக்குறைய 8 மாதங்கள் எடுத்துக் கூறியதன் காரணமாக தான் சவுக்கு மீடியாவின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. அலுவலகம் மற்றும் வீடு சீல் வைக்கப்பட்டுள்ளது.

    * நாட்டில் நடக்கும் உண்மைகள் எந்த வகையில் வெளியே வந்துவிடக்கூடாது என்பதில் முதல்வர் மற்றும் அவரது மகன் ஆகியோர் மிக கவனமாக இருக்கின்றனர்.

    * டிசம்பர் 2023-ல் தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அவர்கள் தமிழகத்தில் சட்டவிரோதமாக மெத்தனால் சர்வ சாதாரணமாக கடத்தப்படுகிறது. உடனடியாக இதை தடுக்கப்பட வேண்டும். தடுக்கவில்லை என்றால் மரக்காணத்தில் ஏற்பட்டதுபோல் கள்ளச்சாராய மரணங்கள் ஏற்படுவதை தடுக்க முடியாது என்று உள்துறை செயலாளருக்கு கடிதம் எழுதியிருக்கிறார். இந்த கடிதத்தின் மீது தமிழக முதல்வர் நடுவடிக்கை எடுத்து இருந்தால் என்றால் 66 உயிர்கள் பலியாகி இருக்காது, இதுபோன்ற பல உண்மைகள் தமிழக மக்களுக்கு தெரியக்கூடாது என்பதற்காகத்தான் சவுக்கு மீடியா முடக்கப்பட்டது.

    இவ்வாறு சவுக்கு சங்கர் கூறினார்.

    • சவுக்கு சங்கரை கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் ஒருநாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.
    • சவுக்கு சங்கர் மீது மேலும் பல வழக்குகள் இருப்பதால் அவர் ஜெயிலில் இருந்து விடுதலை ஆகவில்லை.

    கோவை:

    பெண் போலீசாரை அவதூறாக பேசியதாக யூடியூபர் சவுக்கு சங்கர் மீது கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    இந்த நிலையில் கோவை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள அவர் மீது முத்துராமலிங்கத் தேவர் பற்றி அவதூறாக பேசியதாக ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கடந்த மே மாதம் 3-ந் தேதி கைது செய்தனர்.

    இந்த வழக்கு சம்பந்தமாக சவுக்கு சங்கரை கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் ஒருநாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி மீண்டும் ஜெயிலில் அடைத்தனர்.

    இந்த நிலையில் இந்த வழக்கில் இருந்து ஜாமீன் வழங்கக்கோரி சவுக்கு சங்கர் தரப்பில் கோவை 3-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி சரவணபாபு (பொறுப்பு) சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இருப்பினும் அவர் மீது மேலும் பல வழக்குகள் இருப்பதால் அவர் ஜெயிலில் இருந்து விடுதலை ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    சவுக்கு சங்கர் தரப்பில் டெல்லியை சேர்ந்த வக்கீல் மவுலி வெள்ளிமலை ஆஜரானார்.

    • முத்துராமலிங்கத் தேவர் குறித்த சர்ச்சை பேச்சு புகாரில் ரேஸ்கோர்ஸ் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
    • மூன்று நாள் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி கேட்டு போலீஸ் தரப்பில் மனு தாக்கல்.

    முத்துராமலிங்கத் தேவர் குறித்த சர்ச்சை பேச்சு வழக்கில் சவுக்கு சங்கரை 3 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி வழங்க வேண்டி போலீஸ் தரப்பில் கோவை 4-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

    அப்போது சவுக்கு சங்கரை ஒருநாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீஸ்க்கு கோவை 4-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

    பெண் காவலர்களை பற்றி அவதூறாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. அதனை எதிர்த்து அவரது தாயார் மனுதாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் கடந்த வாரம் குண்டர் சட்டத்தை ரத்து செய்தது.

    அதேவேளையில் நேற்று கஞ்சா வைத்திருந்ததாக போடப்பட்ட வழக்கில் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. தற்போது சென்னை சிறையில் இருந்து சவுக்கு சங்கர் மதுரை சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

    சவுக்கு சங்கர் மீது பல வழக்குகள் பதியப்பட்டு வருகின்றன. ஒரு வழக்கில் ஜாமின் கிடைக்கும்போது மற்றொரு வழக்கில் கைது நடவடிக்கை பாய்கிறது. இதனால் அனைத்து மனுக்களையும் ஒன்றாக இணைத்து விசாரணை நடத்க்கோரி சவுக்கு சங்கர் சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    கார் பந்தயம் முடியும் வரை நான் ஜாமினில் வெளியில் வரக்கூடாது என உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனால் என்மீது தினந்தோறும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறார்கள். எல்லா கைதுக்கும் காரணம் உதயநிதி ஸ்டாலின்தான் என சவுக்கு சங்கர் குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பேட்டி அளித்தபோது, முத்துராமலிங்கத் தேவர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்கள் கூறியதாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் சவுக்கு சங்கர் ரேஸ்கோர்ஸ் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

    • பெண் காவலர்களை அவதூறாக பேசியது தொடர்பான வழக்கில் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்திருந்தது.
    • கடந்த வாரம் சென்னை உயர்நீதிமன்றம் அவர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்திருந்தது.

    கஞ்சா வைத்திருந்தது தொடர்பான வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. தேனி பி.சி.பட்டி போலீசார மற்றும் மாவட்ட எஸ்.பி. பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சியர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

    சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது தொடர்பான உத்தரவு மதுரை சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. சவுக்கு சங்கர் நேற்று புழல் சிறையில் இருந்து மதுரை சிறைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

    சவுக்கு சங்கர் மீது ஏற்கனவே போடப்பட்ட குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்திருந்தது. இந்த நிலையில் மீண்டும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

    பெண் போலீஸ்க்கு எதிராக அவதூறாக பேசியதாக சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். பின்னர் தேனி மாவட்டத்தில் தங்கியிருந்தபோது கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்தனர். அதன்பின் தொடர்ந்து பல வழக்குகள் அவர் மீது போடப்பட்டன.

    அனைத்து வழக்குகளையும் ஒன்றாக இணைத்து விசாரிக்கும்படி சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். கார் பந்தயம் முடியும் வரை நான் ஜாமினியில் வெளியில் வரக்கூடாது என உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனால் என்மீது தினந்தோறும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறார். எல்லா கைதுக்கும் காரணம் உதயநிதி ஸ்டாலின்தான் என சவுக்கு சங்கர் குற்றம்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சவுக்கு சங்கரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்துள்ளதை எதிர்த்து மனு.
    • சவுக்கு சங்கரின் கருத்தால் பொது அமைதிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

    சவுக்கு சங்கர் மீது சென்னையில் அடுத்தடுத்து பல வழக்குகள் பதிவானதால் அவரை குண்டர் சட்டத்தில் அடைக்க சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய்ரத்தோர் உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து கடந்த மே மாதம் 14ம் தேதி அன்று சவுக்குசங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. பின்னர், அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்நிலையில், சவுக்கு சங்கரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்துள்ளதை எதிர்த்து அவரது தாயார் தொடர்ந்த ஆர்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனு மீதான விசாரணை, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.சிவஞானம், ஆகியோர் கொண்ட டிவிஷன் பென்ச் இன்று தீர்ப்பு வழங்கியது.

    அப்போது, யூடியூபர் சவுக்கு சங்கரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவு ரத்து செய்யப்பட்டது.

    விசாரணையின்போது, சவுக்கு சங்கரின் கருத்தால் பொது அமைதிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று சவுக்கு சங்கர் தரப்பில் வாதம் செய்யப்பட்டது.

    ஆனால், சவுக்கு சங்கர் தொடர்ந்து அவதூறு கருத்துகளை தெரிவித்து வருவதை தடுக்கவே குண்டர் சட்டத்தில் அடைத்ததாக காவல்துறை வாதம் செய்தது.

    இந்நிலையில், சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ததை தொடர்ந்து, வேறு வழக்குகளில் தேவையில்லை என்றால் சவுக்கு சங்கரை உடனடியாக விடுதலை செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    • ஒரு வழக்கில் ஜாமின் வழங்கினால் மற்றொரு வழக்கில் கைது என வாதம்.
    • காவல் துறையின் கோரிக்கையை ஏற்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

    தனக்கு எதிரான 17 வழக்குகளையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்க உத்தரவிடக் கோரி பிரபல யூ டியூபர் சவுக்கு சவுக்கு சங்கர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    இந்த வழக்கு தொடர்பான விசாரணையின்போது, அனைத்து வழக்குகளும் ஒரே சம்பவத்துக்காக பதியப்பட்டதா? என விளக்கமளிக்க காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

    வழக்கு விசாரணையின்போது, ஒரு வழக்கில் ஜாமின் வழங்கினால் மற்றொரு வழக்கில் கைது செய்யப்படுவதாக சவுக்கு சங்கர் தரப்பில் வாதம் செய்யப்பட்டது.

    அப்போது, அனைத்து வழக்குகளும் ஒரே சம்பவத்துக்காக பதியப்பட்டதா என சரிபார்க்க அவகாசம் வழங்க வேண்டும் னெ காவல் துறை தரப்பு கோரிக்கை வைத்தது.

    இந்நிலையில், காவல் துறையின் கோரிக்கையை ஏற்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மேலும், சவுக்கு சங்கரின் மனு மீதான விசாரணை 3 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    • வயிற்று வலி எனக்கூறி சவுக்கு சங்கர் மயக்கமடைந்துள்ளார்.
    • சவுக்கு சங்கர் சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    பெண் போலீசாரைப் பற்றி அவதூறாக பேசியதாக யூடியூபர் சவுக்கு சங்கர் மீது கோவை போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

    இந்த நிலையில் நீலகிரி போலீசாரும் அவர் மீது வழக்கு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை நேற்று முன்தினம் ஊட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்த போலீஸ் காவலுக்கு அனுமதி கேட்கப்பட்டது.

    இதையடுத்து போலீசார் ஒருநாள் காவல் எடுத்து விசாரணை நடத்த போலீசாருக்கு அனுமதி அளித்தனர். அதன்படி சவுக்கு சங்கரிடம் விசாரணை நடத்திய போலீசார் நேற்று மாலை மீண்டும் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவரை சென்னை சிறையில் அடைக்க போலீசார் அழைத்து வந்தனர்.

    இந்நிலையில், வயிற்று வலி எனக்கூறி சவுக்கு சங்கர் மயக்கமடைந்ததாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து இன்று மதியம் 12.30 மணியளவில் சவுக்கு சங்கர் சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது ஆஸ்பத்திரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    சிகிச்சை முடிந்ததும் மீண்டும் காவல்துறை வேனில் ஏறுவதற்காக சவுக்கு சங்கர் வந்தார். அப்போது வேனில் இருந்தபடியே "என் கைதுக்கு உதயநிதிதான் காரணம், உதயநிதி உத்தரவின் பேரில், என் மீது மீண்டும் மீண்டும் பொய் வழக்கு போட்டு கைது செய்து வருகின்றனர்" என தெரிவித்தார்.

    • யூடியூபர் சவுக்கு சங்கர் மீது கோவை போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
    • சவுக்கு சங்கரிடம் விசாரணை நடத்திய போலீசார் நேற்று மாலை மீண்டும் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    ஆத்தூர்:

    பெண் போலீசாரைப் பற்றி அவதூறாக பேசியதாக யூடியூபர் சவுக்கு சங்கர் மீது கோவை போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    இந்த நிலையில் நீலகிரி போலீசாரும் அவர் மீது வழக்கு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை நேற்று முன்தினம் ஊட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்த போலீஸ் காவலுக்கு அனுமதி கேட்கப்பட்டது.

    இதையடுத்து போலீசார் ஒருநாள் காவல் எடுத்து விசாரணை நடத்த போலீசாருக்கு அனுமதி அளித்தனர். அதன்படி சவுக்கு சங்கரிடம் விசாரணை நடத்திய போலீசார் நேற்று மாலை மீண்டும் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவரை சென்னை சிறையில் அடைக்க போலீசார் அழைத்து வந்தனர்.

    இந்த நிலையில் இன்று மதியம் 12.30 மணியளவில் சவுக்கு சங்கர் சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு என்ன பாதிப்பு என்ற விவரம் தெரியவில்லை. ஆஸ்பத்திரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • சவுக்கு சங்கர் தங்கியிருந்த விடுதி அறை மற்றும் காரில் இருந்த 409 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல்.
    • ஜாமின் கோரிய வழக்கு மதுரை போதை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

    பெண் போலீசார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கரை கடந்த மே மாதம் 4ம் தேதி தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டியில் கோவை போலீசார் கைது செய்தனர்.

    அப்போது அவர் தங்கியிருந்த விடுதி அறை மற்றும் காரில் இருந்த 409 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் கஞ்சா வைத்திருந்த வழக்கிலும் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார்.

    இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு சவுக்கு சங்கர், மதுரையில் உள்ள போதைப்பொருட்கள் கடத்தல் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

    பிறகு, சவுக்கு சங்கர் மீதான கஞ்சா வழக்கில் 280 பக்க குற்றப்பத்திரிகையை போலீசார் நேற்று தாக்கல் செய்தனர். ஆன்லைன் மூலம் மதுரை சிறப்பு கோர்ட்டில் இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

    இந்நிலையில், சவுக்கு சங்கர் தேனியில் கஞ்சா வைத்திருந்த வழக்கில், ஜாமின் வழங்க கோரிய வழக்கு மதுரை போதை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

    இந்நிலையில், சவுக்கு சங்கருக்கு நிபந்தனையுடன் ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

    • சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    • உச்சநீதிமன்றம் உள்பட பல்வேறு நீதிமன்றங்களில் ஜாமின் கோரி மனு தாக்கல்.

    யூ டியூபர் சவுக்கு சங்கர் தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் பெண் போலீசார் குறித்து தரக்குறைவாக பேசி இருந்தார்.

    இதுதொடர்பாக, பெண் போலீசார் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இதனைத்தொடர்ந்து, சவுக்கு சங்கர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் போலீசார் பல்வேறு வழக்குகளின் கீழ் அதிரடியாக கைது செய்தனர்.

    இந்நிலையில், சவுக்கு சங்கர் உச்சநீதிமன்றம் உள்பட பல்வேறு நீதிமன்றங்களில் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

    அதன்படி, கோவை சைபர் கிரைம் போலீசார் பதிவு செய்த, பெண் காவலர்கள் மற்றும் உயர் காவல் அதிகாரிகளை அவதூறாக பேசிய வழக்கில் யூ டியூபர் சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    ×