search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நேதாஜி"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விடுதலைப் போராட்ட வீரர் நேதாஜியின் 126வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
    • மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் நேதாஜியின் மணல் சிற்பத்தை ஒடிசாவில் உருவாக்கியுள்ளார்.

    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் சுதர்சன் பட்நாயக். இவர் சிறந்த மணல் சிற்ப கலைஞராவார். உலகில் நடந்து வரும் அனைத்து விஷயங்கள் தொடர்பாக தனது கருத்தை தயங்காமல் தெரிவித்து வருபவர். எந்த விஷயமானாலும் அது தொடர்பாக ஒடிசா கடற்கரையில் மணல் சிற்பங்களை வரைந்து வருபவர். பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.

    இதற்கிடையே, விடுதலைப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போசின் 126வது பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

    இந்நிலையில், ஒடிசா மாநிலத்தின் புரி கடற்கரையில் மணல் சிற்பக் கலைஞரான சுதர்சன் பட்நாயக் நேதாஜியின் மணல் சிற்பத்தை உருவாக்கியுள்ளார்.

    மணல் சிற்பத்துக்குப் பின்னால் சுமார் 450 ஸ்டீல் கிண்ணங்களையும் பயன்படுத்தியுள்ளார். மேலும் நேதாஜி என்றும், ஜெய்ஹிந்த் என்னும் சொற்களையும் வரைந்துள்ளார்.

    • மர நடுவோம் மழை பெறுவோம் என்ற வாசகத்துடன் சுற்றுச்சூழலை பாதுகாப்போம் பிளாஸ்டிக்கை ஒழிப்போம் என்ற முழுக்கமிட்டு இந்த விழிப்புணர்வு பேரணி துவங்கியது.
    • மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    திருவாரூர்:

    திருவாரூர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கல்வி குழுமத்தின் தாளாளர் வெங்கடராஜூலு பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. முதல் நிகழ்வாக மரம் நடுவோம் மழை பெறுவோம் என்ற வாசகம் ஏற்ப 500 மரக்கன்று களை கல்லூரி மாணவ மாணவிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    மர நடுவோம் மழை பெறுவோம் என்ற வாசகத்துடன் சுற்றுச்சூழலை பாதுகாப்போம் பிளாஸ்டி க்கை ஒழிப்போம் என்ற முழுக்கமிட்டு இந்த விழிப்புணர்வு பேரணி துவங்கியது.

    இதில் கல்லூரியின் செயலர் சுந்தர்ராஜ், முதன்மை செயல் அதிகாரி நிர்மலா ஆனந்த் மேம், இயக்குனர் விஜயசுந்தரம், கல்லூரி முதல்வர் முனைவர் சிவக்குமார் மற்றும் அனைத்து கல்லூரி மற்றும் பள்ளி முதல்வர்கள் துணை முதல்வர்கள் துறை தலைவர்கள் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • மனிதனுக்கான மிகப்பெரிய சாபம் என்பது அவன் அடிமையாக நீடித்திருப்பதே என்பதை மறந்து விடாதீர்கள்.
    • அநீதியுடனும் தவறுகளுடனும் சமரசம் செய்து கொள்வதே மிகப்பெரிய குற்றம் என்பதை மறந்து விடாதீர்கள்.

    காந்திஜியின் வேட்பாளரான பட்டாபி சீதாராமையாவை தோற்கடித்து காங்கிரஸ் தலைவரான பிறகு நேதாஜியால் கட்சிக்குள் அதிக நாள் நீடிக்க முடியவில்லை. தலைமைப் பொறுப்பில் இருந்து விலகுகிறார், கட்சியை விட்டு விலக்கப்படுகிறார். 1939 இல் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியை ஆரம்பித்து அதன் தலைவராகிறார்.

    ஆங்கிலேய கவர்னரும் வங்காள மாகாண அரசும் சேர்ந்து அடுத்தடுத்து அவர் மீது வழக்குகளை பதிவு செய்கின்றன. "ஏன் இரண்டு இடத்தில் பேசியதற்காக மட்டும் வழக்கு போடுகிறீர்கள் நான் எல்லா ஊர்களில் பேசும்போதும் உங்களை தூக்கி எறிய வேண்டும் என்று தானே பேசுகிறேன்" என்று நேதாஜியே கேட்கிறார். அவர் நடத்திய பார்வர்ட் பிளாக் பத்திரிகை தடை செய்யப்படுகிறது. கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பிறகு இந்திய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. இந்த நேரத்தில் அவர் மாகாண சட்டசபை உறுப்பினராகவும் இருக்கிறார். சட்டசபை நடக்கும் நாட்களில் தனக்கு அவை நடவடிக்கைகளில் பங்கேற்க அனுமதி கோரினார். மறுக்கப்பட்டது.

    அவருடைய எந்த கோரிக்கைகளும் ஏற்கப்படாத நிலையில் வங்காள அரசுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அந்தக் கடிதம் தேசிய ஆவணத்தில் இருக்கிறது. நம் பார்வைக்கு கிடைக்கிறது. வாசித்துப் பார்த்தேன். ஐந்து பக்க கடிதத்தில் முக்கியமான பகுதியை மட்டும் சொல்கிறேன்.

    "நியாயமாக நடந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கையை முற்றிலும் இழந்துவிட்ட நிலையில் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். எனது இரண்டு வேண்டுகோள்களை மட்டும் நிறைவேற்றித் தர வேண்டுகிறேன். முதல் வேண்டுகோள் என்னவென்றால் என்னுடைய நியாயமான கோரிக்கைகள் எவற்றையும் நீங்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. இந்த கடிதத்தை மட்டும் பத்திரமாக வைத்திருங்கள். இதை அரசின் ஆவணக் காப்பகத்தில் சேர்த்து விடுங்கள். நீங்கள் தோற்கடிக்கப்பட்டு என் மக்கள் ஆட்சியை கைப்பற்றும் போது அவர்கள் கையில் இந்த கடிதம் கிடைக்கட்டும். இக்கடிதம் என் நாட்டு மக்களுக்கான என்னுடைய செய்தியும் என் அரசியல் நிலைப்பாடின் சாசனமும் ஆகும்.

    இப்படி துவங்கும் கடிதத்தில் தேசிய சர்வதேசிய அரசியல் உதாரணங்களை ஒப்பிட்டு தான் கைது செய்யப்பட்ட சூழலையும் தன் கோரிக்கைகளின் நியாயத்தையும் பற்றி கூறுகிறார்.

    "மனிதனுக்கான. மிகப்பெரிய சாபம் என்பது அவன் அடிமையாக நீடித்திருப்பதே என்பதை மறந்து விடாதீர்கள்.

    அநீதியுடனும் தவறுகளுடனும் சமரசம் செய்து கொள்வதே மிகப்பெரிய குற்றம் என்பதை மறந்து விடாதீர்கள்.

    என்றும் மாறாத விதி எது என்பதை அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் உங்களுக்கான வாழ்வைப் பெற வேண்டும் என்றால் உங்கள் வாழ்க்கையைத் தியாகம் செய்துதான் ஆக வேண்டும்.

    ஒப்பற்ற நற்குணம் என்பது, எது வந்தாலும் சமத்துவமின்மைக்கு எதிராக போராடுவதே!'

    மக்களுக்கான இந்தச் செய்தியைச் சொன்ன பிறகு தனது இரண்டாவது வேண்டுகோளை சொல்லுகிறார்.

    எல்லா கதவுகளும் அடைக்கப்பட்ட நிலையில் சிறை கைதிக்கு உள்ள ஒரே ஆயுதம் உண்ணாவிரதம் தான்.

    1940 நவம்பர் 29 முதல் சாகும் வரை உண்ணாவிரதம் தொடங்கப் போகிறேன். தடுக்கவோ எனக்கு வலுக்கட்டாயமாக உணவூட்டவோ கூடாது. அதனை நான் எப்பாடுபட்டேனும் தடுப்பேன்.

    பின் குறிப்பு : எப்பொழுதும் போலவே நான் உப்பு கலந்த நீரை மட்டுமே எடுத்துக் கொள்வேன். அதையும் நிறுத்திக் கொள்ள எனக்குத் தோன்றும்பொழுது நான் நிறுத்தி விடுவேன்.

    இந்த கடிதம் வங்காள அரசுக்குக் கிடைத்ததோ இல்லையோ தெரியாது. ஆனால் உளவுத்துறை பிரிட்டிஷ் உள்துறை அரசியல் பிரிவுக்கு இக்கடிதத்தின் நகலை அனுப்பி வைக்கிறது. அதன் பலனாக இந்த கடிதம் ஆவணக்காப்பகத்தில் சேர்ந்து விடுகிறது. ஆனால் அதற்கு முன்பாக இந்த கடிதத்தை வாசித்த உள்துறை அதிகாரி சர் ரிச்சர்ட் டோட்டன்ஹம் உச்சபட்ச திமிருடன் ஒரு குறிப்பு எழுதி இருக்கிறான் பாருங்கள்.

    "இது போய் சேர்ந்திருக்க வேண்டிய சிறந்த இடம் குப்பைத் தொட்டி தான் என்று சொல்வேன்"

    நேதாஜிக்கு என்ன ஆயிற்று என்று கேட்கிறீர்களா.. உண்ணாவிரதம் தொடங்கினார். வீட்டுக் காவலுக்கு மாற்றப்படுகிறார். அங்கிருந்து தப்பித்து நான்கே மாதங்களில் ஜெர்மனியில் இருக்கிறார்.

    -முத்துக்குமார் சங்கரன்

    • இந்தியா கேட் பகுதியில் மின்ஒளி வடிவில் இருந்த சிலைக்கு பதில் புதிய சிலை அமைக்கப்பட்டுள்ளது.
    • நேதாஜியின் வாழ்க்கை குறித்த ட்ரோன் கண்காட்சி நாளை முதல் 11ந் தேதிவரை இரவு 8 மணிக்கு இடம் பெற உள்ளது.

    புதுடெல்லி:

    இந்திய விடுதலைப் போராட்ட தலைவர்களில் ஒருவரான நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் 125-வது பிறந்தநாள் தினத்தையொட்டி கடந்த ஜனவரி மாதம் 23ந் தேதி டெல்லியில் உள்ள இந்தியா கேட் பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் மின் ஒளி வடிவிலான சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். நேதாஜிக்கு அதே இடத்தில் பிரம்மாண்ட சிலை அமைக்கப்படும் என்றும் பிரதமர் அறிவித்திருந்தார்.

    அதன்படி இந்தியா கேட் பகுதியில் மின்ஒளி வடிவில் இருந்த சிலைக்கு பதில் புதிய சிலை அமைக்கப்பட்டுள்ளது. மோனோலித்திக் கிரானைட் கற்களால் 28 அடி உயரம் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான நேதாஜி சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.

    மேலும், நேதாஜியின் வாழ்க்கை குறித்த ட்ரோன் கண்காட்சி இந்தியா கேட் பகுதியில் நாளை முதல் 11ந் தேதிவரை இரவு எட்டு மணிக்கு இடம் பெற உள்ளது. இதனைப் பார்வையாளர்கள் இலவசமாக கண்டுகளிக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் ஒரு பகுதியாக நேதாஜி சிலை அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×