என் மலர்
நீங்கள் தேடியது "சிறுவன் உயிரிழப்பு"
- பள்ளிக்கு சாக்லேட் எடுத்துச்சென்ற சந்தீப் ஆசிரியை பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது அவருக்கு தெரியாமல் சாக்லேட் சாப்பிட்டார்.
- தொண்டையில் சாக்லேட் சிக்கியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு வரும் வழியிலேயே சந்தீப் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் வாரங்கல் பின்னி வாரி வீதியை சேர்ந்தவர் கன்வர் சிங். இவர் ஆஸ்திரேலியாவில் எலக்ட்ரிக்கல் கடையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கீதா சிங். தம்பதியின் 2-வது மகன் சந்தீப் (வயது 9) 4-ம் வகுப்பு படித்து வந்தார்.
கன்வர் சிங் கடந்த வாரம் ஆஸ்திரேலியாவில் இருந்து சொந்த ஊருக்கு வந்தார். அங்கிருந்து பிள்ளைகளுக்கு பிடித்தமான சாக்லேட்டுகளை வாங்கி வந்தார்.
நேற்று முன் தினம் காலை பிள்ளைகள் பள்ளிக்கு சென்றபோது கீதா சிங் குழந்தைகளுக்கு சாக்லேட் கொடுத்து அனுப்பினார்.
பள்ளிக்கு சாக்லேட் எடுத்துச்சென்ற சந்தீப் ஆசிரியை பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது அவருக்கு தெரியாமல் சாக்லேட் சாப்பிட்டார். அப்போது திடீரென சாக்லேட் அவனது தொண்டைக்குள் சிக்கியது.
இதனால் சந்தீப்புக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனைக் கண்ட ஆசிரியை மற்றும் பள்ளி நிர்வாகிகள் சந்தீப்பை மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
மேலும் அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் பதறியடித்துக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அதற்குள் சந்தீப்பை பரிசோதித்த டாக்டர்கள் தொண்டையில் சாக்லேட் சிக்கியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு வரும் வழியிலேயே சந்தீப் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து வாரங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிறுவன் குளிர்பானம் என நினைத்து கரப்பான் பூச்சி மருந்தை எடுத்து குடித்தான்.
- தர்ஷித்துக்கு வயிற்று வலி ஏற்பட்டது. வலியால் அவன் அலறி துடித்தான்.
கோவை:
கோவை சீரநாயக்கன் பாளையம் அருகே உள்ள திலகர் நகரை சேர்ந்தவர் பிரகாஷ். தனியார் நிறுவன ஊழியர். இவரது மகன் தர்ஷித் (வயது 5). சம்பவத்தன்று சிறுவனை அவரது பெற்றோர் அந்த பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் விட்டு விட்டு வேலைக்கு சென்றனர்.
மதியம் அங்கன்வாடி மையத்தில் இருந்து சிறுவன் வீட்டிற்கு திரும்பினார். பின்னர் அருகே உள்ள உறவினர் வீட்டிற்கு விளையாட சென்றான். அவர்களது வீட்டில் கரப்பான்பூச்சி மருந்தை குளிர்பான பாட்டிலில் கலந்து வைத்து இருந்தனர்.
இதனை பார்த்த சிறுவன் குளிர்பானம் என நினைத்து கரப்பான் பூச்சி மருந்தை எடுத்து குடித்தான். பின்னர் மாலையில் வீட்டிற்கு திரும்பினான். ஆனால் கரப்பான் பூச்சி மருந்து குடித்ததை தனது பெற்றோரிடம் சொல்லவில்லை. சிறுவனின் பெற்றோர் அவருக்கு இரவு உணவு கொடுத்தனர். அப்போது தர்ஷித்துக்கு வயிற்று வலி ஏற்பட்டது. வலியால் அவன் அலறி துடித்தான்.
இதுகுறித்து சிறுவனிடம் அவரது தந்தை கேட்டபோது குளிர்பானம் என நினைத்து கரப்பான் பூச்சி மருந்தை குடித்த விவரத்தை தெரிவித்தான். அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக சிறுவனை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் தர்ஷித் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சம்பந்தப்பட்ட கார் 4 மாதங்களுக்கு முன்பு இந்த பட்டறைக்கு டிங்கரிங் வேலைக்காக கொண்டு வரப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
- குடும்ப தகராறு காரணமாக சுகன்யா முதல் கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்தார்.
சேலம்:
சேலம் அம்மாப்பேட்டையை அடுத்த ராமநாதபுரம் ரஷ்யா காலனியை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 28). இவர் அதே பகுதியில் மிலிட்டரி ரோட்டில் கார் மெக்கானிக் பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இவரது தங்கையின் திருமணத்திற்காக கடந்த 22-ந் தேதி பட்டறைக்கு பூட்டு போட்டு விட்டு சென்றுள்ளார்.
திருமணம் முடிந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு மாணிக்கம் மீண்டும் கார் பட்டறைக்கு வந்தார். அப்போது பட்டறைக்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு காரில் இருந்து துர்நாற்றம் வீசியது.
இதையடுத்து அந்த காரின் கதவை திறந்து பார்த்தபோது, காருக்குள் சுமார் 7 வயது சிறுவனின் உடல் அழுகிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். காருக்குள் அழுகிய நிலையில் இறந்து கிடந்த சிறுவன் யார்? எந்த பகுதியை சேர்ந்தவன்? அவனது பெற்றோர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அதில், சம்பந்தப்பட்ட கார் 4 மாதங்களுக்கு முன்பு இந்த பட்டறைக்கு டிங்கரிங் வேலைக்காக கொண்டு வரப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் காருக்குள் சிறுவன் இறந்து 4 நாட்களுக்கு மேல் ஆகியிருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
பட்டறையில் பூட்டி நிறுத்தப்பட்டு இருந்த காரில் சிறுவன் எப்படி வந்தான்? என்றும், அல்லது சிறுவனை யாராவது கொலை செய்து உடலை காருக்குள் வைத்து விட்டு சென்றிருக்கலாமா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் மீட்கப்பட்ட சிறுவனின் உடல் அழுகிய நிலையில் இருந்ததால் அதே இடத்தில் டாக்டர்கள் உடற்கூறு ஆய்வு மேற்கொண்டனர்.
இதனிடையே, போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.
இதுபற்றி போலீசார் கூறியதாவது:-
பிணமாக கிடந்த சிறுவன், அதே பகுதியை சேர்ந்த சுகன்யா (27) என்பவரின் மகன் சிலம்பரசன் (7) என அடையாளம் தெரிந்தது. சுகன்யாவுக்கும், கண்ணன் என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு சிலம்பரசன் என்ற மகனும், 2 மகள்களும் இருந்தனர்.
குடும்ப தகராறு காரணமாக சுகன்யா முதல் கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் ஏற்கனவே திருமணம் ஆகி மனைவியை பிரிந்து வசித்து வந்த கட்டிட தொழிலாளி வினோத் (31) என்பவருடன் சுகன்யாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. பின்னர் அவர்கள் 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். அதன்பிறகு கணவன்-மனைவியாக இருவரும் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் சிலம்பரசன் கடந்த சில தினங்களுக்கு முன்பு காணாமல் போனதாக கூறப்படுகிறது. அவன் கோலாத்து கோம்பையில் உள்ள அவனது தந்தை வீட்டுக்கு சென்றிருக்கலாம் என்று நாங்கள் தேடவில்லை என சிறுவனின் தாய் சுகன்யா கூறினார். அவர் கூறுவது உண்மையா? என்பது குறித்து அவரிடமும், வினோத்திடமும் விசாரித்து வருகிறோம்.
மேலும், நண்பர்களுடன் சிலம்பரசன் விளையாடியபோது, காருக்குள் ஏறிவிட்டு அதன்பிறகு வெளியே வரமுடியாமல் மூச்சு திணறி இறந்தானா? என்ற கோணத்திலும் கார் பட்டறை உரிமையாளரிடமும் விசாரணை நடத்தி வருகிறோம். இருப்பினும், பிரேத பரிசோதனை அறிக்கை வந்தால் தான் சிறுவன் எப்படி இறந்தான்? என்ற முழு விவரம் தெரியவரும்.
இவ்வாறு போலீசார் கூறினர்.
- நண்பர்களுடன் குளித்து கொண்டிருந்த நிலையில் சாமுவேல் திடீரென நீரில் மூழ்கி மாயமாகி விட்டான்.
- சாலவாக்கம் போலீசார் உயிரிழந்த சிறுவன் சாமுவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
வாலாஜாபாத்:
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் தாலுகா, பழைய சீவரம் ஊராட்சிக்கு உட்பட்ட பெரிய காலனி பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மகன் சாமுவேல் வயது 16. இவர் 10-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் நண்பர்கள் சிலருடன் பழையசீவரம் பாலாற்றில் உள்ள தடுப்பணையில் குளிக்க சென்றார். நண்பர்களுடன் குளித்து கொண்டிருந்த நிலையில் சாமுவேல் திடீரென நீரில் மூழ்கி மாயமாகி விட்டான்.
சாமுவேல் நீரில் மூழ்கி காணாமல் போனது குறித்து நண்பர்கள் ஓடிச் சென்று கிராமத்தில் தெரிவித்த நிலையில், கிராம மக்கள் ஓடி வந்து தடுப்பணையில் தீவிரமாக தேடினர். நீரில் மூழ்கி உயிரிழந்த சிறுவன் சாமுவேல் உடலை மீட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த சாலவாக்கம் போலீசார் உயிரிழந்த சிறுவன் சாமுவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- சைதாப்பேட்டை அபித்காலனியில் சிறப்பு மருத்துவ முகாமும், நோய்த் தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது.
- மருத்துவ முகாமினைத் தொடர்ந்து மூன்று நாட்கள் நடத்தப்படவும், அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
சென்னை மாநகராட்சி கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் ஆணையாளர் ராதாகிருஷ்ணன் சைதாப்பேட்டை அபித் காலனியில், மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள மருத்துவ முகாம் மற்றும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
சைதாப்பேட்டை அபித் காலனியில் உள்ள வெளி மாநிலத் தொழிலாளி ராஜேஷ்குமார் என்பவரின் மகன் யுவராஜ் (வயது 11) என்பவர் நோய்த் தொற்றின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்ததைத் தொடர்ந்து,
சைதாப்பேட்டை அபித்காலனியில் சிறப்பு மருத்துவ முகாமும், நோய்த் தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது.

இதனை கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் ஆணையாளர் ராதாகிருஷ்ணன் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் இப்பகுதி மக்களுக்கு பிளிச்சீங் பவுடர், ஓ.ஆர்.எஸ் கரைசல், ஆகியவற்றினையும் இப்பகுதி மக்களிடம் வழங்கி, வீட்டின் குடிநீர்த் தொட்டியினை சுத்தம் செய்திடவும், சுற்றுப்புறப் பகுதியினை தூய்மையாக வைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தி, விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களையும் வழங்கினார்.
இப்பகுதியில் 12 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு டாக்சி சைக்ளின் (Doxycycline) மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளதையும், லைசால், பிளீச்சிங் பவுடர் (Lysol, Bleaching powder) கொண்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளதையும், மக்களிடம் மருத்துவப் பணியாளர்கள் மேற்கொண்ட மருத்துவப் பரிசோதனை நடவடிக்கைகளையும் கேட்டறிந்து ஆய்வு செய்தார்.

இப்பகுதிக்கு வழங்கப்படும் குடிநீரில் குளோரின் உள்ளதை உறுதி செய்யப்பட்டுள்ளதோடு, இப்பகுதியில் தொடர் கண்காணிப்பினை மேற்கொள்ளவும், இம்மருத்துவ முகாமினைத் தொடர்ந்து மூன்று நாட்கள் நடத்தப்படவும், அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். முன்னதாக சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை மற்றும் மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனை ஆகியவற்றினை கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் ஆணையாளர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிகழ்வின் போது மத்திய வட்டார துணை ஆணையாளர் பிரவீன் குமார், மண்டலக் குழுத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாநகர நல அலுவலர் ஜெகதீசன், கூடுதல் மாநகர நல அலுவலர் ஆஷாலதா, சென்னைக் குடிநீர் வாரியம், மாநகராட்சி அலுவலர்கள், மருத்துவப் பணியாளர்கள் உடனிருந்தனர்.
- ஜபல்பூரில் தீபக் தாக்கூர் என்ற 5 வயது சிறுவன் பட்டாசு மீது டம்ளரை வைத்து வெடித்துள்ளார்.
- மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் சிறுவன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றதை கொண்டாடிய சிறுவன், பட்டாசு வெடித்தபோது உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் தீபக் தாக்கூர் என்ற 5 வயது சிறுவன் பட்டாசு மீது டம்ளரை வைத்து வெடித்துள்ளார். அப்போது டம்ளர் வெடித்து சிதறியதில், அதன் துகள்கள் சற்று தொலைவில் நின்றுகொண்டிருந்த சிறுவனின் வயிற்றில் குத்தியது.
இதைத் தொடர்ந்து அவசர அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் சிறுவன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கோஹல்பூர் காவல் நிலைய அதிகாரி பிரதிக்ஷா மார்கோ தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். சம்பவம் தொடர்பாக அப்பகுதி சிசிடிவி காட்சிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
2024 டி20 உலகக்கோப்பையில் இந்தியா வெற்றி பெற்றதை குழந்தைகள் கொண்டாடிக் கொண்டிருந்தபோது இந்த சோகமான விபத்து ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.
- சிறுவன் கொளத்தூரில் நீச்சல் பயிற்சி பெற்று வந்தான்.
- சிறுவன் உயிரிழந்ததையடுத்து பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.
சென்னை:
சென்னையின் புழல் அருகே உள்ள விநாயகபுரம் பகுதியை சேர்ந்த ரத்தினகுமார்-ராணி தம்பிதியின் மகன் கீர்த்தி சபரீஸ்கர். 10 வயதான இவர் சிறப்பு குழந்தையாவார்.
இந்த சிறுவன் கொளத்தூரில் நீச்சல் பயிற்சி பெற்று வந்தார். வழக்கம்போல் நீச்சல் குளத்திற்கு பயிற்சிக்கு சென்ற பள்ளி சிறுவன் கீர்த்தி நீரில் மூழ்கி பலியானார்.
சிறுவன் உயிரிழந்ததையடுத்து பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். பெற்றோரின் புகாரை அடுத்து நீச்சல் குளத்தின் உரிமையாளர் காட்வின், பயிற்சியாளர் அபிலாஷ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முறையான பயிற்சி அளிக்காமல் பயிற்சியாளர்கள் வேடிக்கை பார்த்து கொண்டிருந்ததால் சிறுவன் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.
பலியான சிறுவன் உடலை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிறுவன் அவினேக் குமாரை காணவில்லை என அவரது பெற்றோர்கள் தேடி உள்ளார்.
- சிறுவனை பரிசோதனை செய்த டாக்டர் சிறுவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
ஸ்ரீபெரும்புதூர்:
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் முகேஷ் தாஸ்.இவர் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பால்நல்லூர்பகுதியில் உள்ள புதியதாக கட்டி வரும் கட்டிடத்தில் வேலை செய்து வருகிறார்.
கட்டிடம் கட்டும் இடத்திற்கு அருகில் தன் குடும்பத்துடன் தங்கி முகேஷ் தாஸ் வேலை செய்து வந்தார். அவினேக் குமார் வயது 6,என்கிற மகனும், அனுகுமாரி வயது 2 என்கிற மகளும், லலிதா குமாரி என்கிற மனைவியும் உள்ளனர். நேற்று மாலை சிறுவன் அவினேக் குமாரை காணவில்லை என அவரது பெற்றோர்கள் தேடி உள்ளார்.
அப்போது முகேஷ் தாஸ் தங்கி உள்ள இடத்திற்கு அருகே அவர் வேலை செய்யும் புதிய கட்டுமான பணிக்கு தோண்டபட்ட பள்ளத்தில் தேங்கிய மழை நீரில் சிறுவன் மூழ்கி பேச்சு மூச்சு இல்லாமல் மிதந்து உள்ளார். அவரை மீட்டு மாத்துரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிறுவனை பரிசோதனை செய்த டாக்டர் சிறுவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தகவலறிந்த போலீசார் அங்கு சென்று சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கொச்சியில் உள்ள திருப்புனித்துறையில் உள்ள பெரிய அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த சிறுவன் மிஹிர் (வயது16). இவன் அந்த அடுக்குமாடி குடியிருப்பின் 26-வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தான். இதில் படுகாயமடைந்த அவன் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி இறந்தான்.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார் அங்கு சென்று சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்புனித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிறுவனின் கால்கள் திடீரென உணர்விழந்து போனது.
- திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிறுவன் அனுமதிக்கப்பட்டான்.
திருவள்ளூரை சேர்ந்த பிரேம்குமார் என்பவரின் மகன் வைத்திஸ்வரன் (9). இவர் தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிறுவனின் கால்கள் திடீரென உணர்விழந்து போனது. இதையடுத்து அவன் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.
இதைத்தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.
பரிசோதனையில் சிறுவன் ஜிபிஎஸ் என்னும் அரிய வகை நோயால் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாக்டீரியாக்களால் பரவக்கூடிய இந்த நோயால் சிறுவன் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.
- அரசலூரில் உள்ள மாரியம்மன் கோவிலில் நேற்று காலை கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
- வெடிகளில் ஒன்று சிதறி அங்கு கூடியிருந்த கூட்டத்திற்குள் புகுந்து வெடித்து சிதறியது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் அரசலூரில் உள்ள மாரியம்மன் கோவிலில் நேற்று காலை கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டபோது வாணவெடி மற்றும் அதிர்வேட்டுகள் வெடிக்கப்பட்டது. இதில் வெடிகளில் ஒன்று சிதறி அங்கு கூடியிருந்த கூட்டத்திற்குள் புகுந்து வெடித்து சிதறியது.
இதில் அந்த கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவரது மகன் லலித்கிஷோர் (வயது 9) என்ற சிறுவனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் சிறுவன் லலித்கிஷோர் பரிதாபமாக உயிரிழந்தான்.
மேலும் இந்த வெடிவிபத்தில் ஈச்சங்காடு கிராமத்தை சேர்ந்த புனிதா (32), திருச்சி மாவட்டம், சிக்கத்தம்பூர் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் (36), ஷோபனாபுரம் கிராமத்தை சேர்ந்த பிரியா (21) ஆகியோர் காயம் அடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உரிமம் இல்லாமல் வெடி வெடித்த அதே ஊரைச் சேர்ந்த நீலகண்டன் (27), மணிகண்டன் (34) ஆகியோரை கைது செய்தனர்.