என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "போர் கப்பல்"
- போக்குவரத்து, மருத்துவ பிரிவு உள்ளிட்டவற்றில் மட்டுமே பெண்கள் பணியாற்றி வந்தனர்.
- அக்னிவீரர் திட்டத்தின் கீழ் கடற்படையில் தற்போது 1,000 பெண்கள் பணியாற்றி வருகின்றனர்.
புதுடெல்லி:
இந்திய கடற்படை வரலாற்றில் முதல்முறையாக, பெண் அதிகாரி ஒருவர் போர் கப்பலின் கமாண்டராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரும், இவரது சகோதரரும் ஒரே நேரத்தில் இருவேறு போர் கப்பல்களின் கமாண்டர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.
இந்திய முப்படைகளில், பெண்கள் அதிகாரிகளாக பணி நியமனம் செய்யப்படும் நடைமுறை 30 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது.
போக்குவரத்து, மருத்துவ பிரிவு உள்ளிட்டவற்றில் மட்டுமே பெண்கள் பணியாற்றி வந்தனர். அதிகாரிகள் பதவிக்கு பெண்களை முதல்முறையாக நியமனம் செய்த பெருமை, நம் கடற்படையை சேரும்.
அக்னிவீரர் திட்டத்தின் கீழ் கடற்படையில் தற்போது 1,000 பெண்கள் பணியாற்றி வருகின்றனர். கடற்படையின் போர் கப்பல்களில், 4 பெண் அதிகாரிகள் கடந்த 2021-ல் பணி நியமனம் செய்யப்பட்டனர்.
இதை தொடர்ந்து 40 பெண் அதிகாரிகள் தற்போது பணியில் உள்ளனர். ஆனால் போர் கப்பலுக்கு தலைமை வகிக்கும் கமாண்டர் பொறுப்பு அவர்களுக்கு வழங்கப்பட்டதில்லை.
இதனை மும்பையை சேர்ந்த பிரேர்னா தியோஸ்தலி என்ற பெண் முறியடித்து முதல்முறையாக பெண் கமாண்டராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 2009-ம் ஆண்டில் இந்திய கடற்படையில் பணியமர்த்தப்பட்டார்.
ஐ.என்.எஸ் சென்னை போர் கப்பலின் முதல் லெப்படினன்டாகவும் இருந்தவர்.
கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ்., டிரிங்கட் போர் கப்பலின் முதல் பெண் கமாண்டராக அவர் நியமிக்கப்பட்டார். கடற்படையில் கடந்த 2000-ம் ஆண்டில் இணைந்த ஐ.என்.எஸ்., டிரிங்கட், 50 வீரர்களை கொண்டது. அந்தமான் நிகோபாரில் உள்ள ஒரு தீவின் நினைவாக கப்பலுக்கு இந்த பெயர் சூட்டப்பட்டது.
கனரக இயந்திர துப்பாக்கிகள் பொருத்தப்பட்ட இந்த கப்பல், நிலப்பரப்பு தாக்குதல்களை எதிர்க்கும் திறன் உடையது. அதிவேகத்திலும், ஆழம் குறைவான பகுதிகளிலும் இயங்கும் திறன் உடையது. இந்த கப்பலின் கமாண்டராக பிரேர்னாவின் தியோஸ்தலி நியமிக்கப்பட்டுள்ளார்.
இவரது சகோதரர் இஷான் தியோஸ்தலியும், கடற்படையில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
இவர், ஐ.என்.எஸ்., விபூதி போர் கப்பலின் கமாண்டராக நியமிக்கப்பட்டார்.
ஐ.என்.எஸ். விபூதி அரபிக் கடலில் கோவா கடற்கரையோரம் ஜனாதிபதி முர்மு பங்கேற்ற விழாவில் இந்த கப்பலும் பங்கேற்றது கூறிப்பிடத்தக்கது.
சகோதரனும், சகோதரியும் ஒரே நேரத்தில் கடற்படை போர் கப்பல்களின் கமாண்டர்களாக பணியாற்றுவது இதுவே முதல்முறை.
- கடலில் தத்தளித்த மாலுமி ஒருவர் பத்திரமாக மீட்கப்பட்டார்.
- மீட்கப்பட்ட மாலுமி சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பாங்காக்:
தாய்லாந்து நாட்டின் பிரசுவாப் கிரி கான் மாகாணத்தில் பாங்சாபன் மாவட்டத்துக்கு அருகே தாய்லாந்து வளைகுடா பகுதியில் போர் கப்பல் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது. எச்.டி.எம்.எஸ். சுகோதாய் என்ற அந்த போர்க்கப்பல் புயலில் சிக்கியது.
கப்பலில் 106 மாலுமிகள் பயணித்த நிலையில் கடுமையான புயலில் சிக்கிய அந்த கப்பலுக்குள் கடல்நீர் புகுந்தது.
இதைத்தொடர்ந்து கப்பல் கொஞ்சம் கொஞ்சமாக மூழ்கியது. தகவல் அறிந்து வந்த மீட்பு படையினர் அங்கு விரைந்தனர். அவர்களுடன் 3 போர் கப்பல்கள், 2 ஹெலிகாப்டர்களும் கடலில் தத்தளித்த மாலுமிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டன.
இந்த நிலையில் 75 மாலுமிகளை மீட்டனர். 31 மாலுமிகள் மாயமானதாக முதல்கட்ட தகவல் வெளியானது. பின்னர் 30 மாலுமிகள் மாயமானதாக கடற்படை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இதையடுத்து கடலில் தத்தளித்த மாலுமி ஒருவர் பத்திரமாக மீட்கப்பட்டார். அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த நிலையில் மீட்பு பணியின்போது 6 மாலுமிகள் சடலமாக மீட்கப்பட்டனர். மேலும் காணாமல் போன 23 மாலுமிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கப்பல் மூழ்கி 2 நாட்களுக்கு மேல் ஆனதால் பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது.
- ஏழு போர்க் கப்பல்கள் பல்வேறு கட்ட தயாரிப்பு நிலைகளில் உள்ளன.
- மூன்று போர் கப்பல்கள் இந்திய கடற்படையில் சேர்க்கப்படும்.
எதிரி நாடுகளின் ரேடாருக்குத் தென்படாமல் செயல்படும் போர்க் கப்பல்களை எம்.டி.எல். மற்றும் ஜி.ஆர்.எஸ்.இ நிறுவனங்கள் கட்டமைத்து வருகின்றன. தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் ஏழு, பி17-ஏ ரக போர்க் கப்பல்கள் பல்வேறு கட்ட தயாரிப்பு நிலைகளில் உள்ளன.
இந்த போர்க் கப்பல், கப்பல் கட்டும் துறையில் இந்தியாவை உயர்ந்த இடத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. 17ஏ போர்க் கப்பலின் 75 சதவீத ஆர்டர்கள் , தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட உள்நாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் ரேடாருக்கு தென்படாமல் இயங்கும் தன்மை கொண்ட பி17-ஏ ரக போர்க் கப்பலான தரகிரியை மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கடற்படை மனைவியர் நல சங்கத்தின் தலைவர் சாரு சிங் அறிமுகப் படுத்தினார். மேற்கு கடற்படையின் தலைமைத் தளபதி அஜேந்திர பஹதுர் சிங் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
தரகிரி போர்க்கப்பலை போன்று எம்.டி.எல் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இரண்டு போர் கப்பல்கள் தயார் நிலையில் உள்ளன. மூன்று போர் கப்பல்களும் இந்திய கடற்படையில் விரைவில் சேர்க்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்