search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெள்ளி பொருட்கள்"

    • நகைக்கடைகள் போட்டி போட்டு சலுகைகளை அறிவித்துள்ளன.
    • தங்க நகை வாங்குவதற்கான முன்பதிவு அதிகரித்து வருகிறது.

    சென்னை:

    அட்சய திரிதியை நாளில் தங்கம் வாங்கினால், செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. இந்த ஆண்டு அட்சய திரிதியை வருகிற 10-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை 6.33 மணிக்கு தொடங்கி மறுநாள் சனிக்கிழமை அதிகாலை 4.56 மணி வரை உள்ளது.

    இதையடுத்து அட்சய திருதியை அன்று நகை வாங்கும் வாடிக்கையாளர்களை கவருவதற்காக, நகைக்கடைகள் போட்டி போட்டுக் கொண்டு சலுகைகளை அறிவித்துள்ளன.

    இதன்படி, சில கடைகள் தங்கம் பவுனுக்கு ரூ.2 ஆயிரம் வரை தள்ளுபடி சலுகையை அறிவித்துள்ளன. வைர நகைகள் காரட்டுக்கு ரூ.15 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. வெள்ளி நகைகள் மற்றும் பொருட்களுக்கு கிலோவுக்கு ரூ.3 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    சில கடைகளில் தங்கம் மற்றும் வெள்ளி நகைககளுக்கு செய்கூலி, சேதாரம் தள்ளுபடியும் வழங்கப்பட உள்ளது.

    தங்க நாணயங்களுக்கு சேதாரம் இல்லை. பழைய தங்க நகைகளை அன்றைய மார்க்கெட் விலைக்கே மாற்றிக் கொள்ளலாம்.

    முன்பதிவு செய்பவர்கள் அட்சயதிரிதியை அன்று தங்கத்தின் விலை குறைந்திருந்தால் குறைந்த விலையிலும் அதிகமாக இருந்தால் ஏற்கெனவே முன்பதிவு செய்த விலையிலும் நகைகளை வாங்கிக் கொள்ளலாம் என்றும் சலுகைகளை அறிவித்துள்ளனர்.

    மேலும் அட்சய திரிதியைக்காக 1000-க்கும் மேற்பட்ட மாடல்களில் புதுப்புது டிசைன்களில் நகைகள் விற்பனைக்கு அறிமுகப் படுத்தப்பட்டுள்ளன. அட்சய திரிதியை அன்று காலை 6 மணிக்கே நகைக்கடைகளை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இரவில் வாடிக்கையாளர்களின் வருகையை பொருத்து கூடுதல் நேரம் கடையை திறந்து வைத்து வியாபாரம் செய்யவும் முடிவு செய்துள்ளனர்.

    இதனால் அட்சய திரிதியை அன்று நல்ல நேரத்தில் தங்க நகை வாங்குவதற்கான முன்பதிவு அதிகரித்து வருகிறது. ஏராளமானோர் தற்போதே கடைகளுக்கு சென்று முன்பணம் செலுத்தி தங்களுக்கு பிடித்த நகைகளை முன்பதிவு செய்து வருகிறார்கள்.

     இதுகுறித்து, சென்னையை சேர்ந்த நகைக்கடை வியாபாரிகள் கூறியதாவது:-

    இந்த ஆண்டு அட்சய திரிதியை பண்டிகையை முன்னிட்டு, நகை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு தள்ளுபடி சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே முன்பதிவு தொடங்கப்பட்டு விட்டது. வாடிக்கையாளர்கள் தற்போது கடைகளுக்கு வந்து தங்களுக்கு

    பிடித்த நகைகளை தேர்வு செய்து முன்பதிவு செய்து வருகிறார்கள்.

    தங்கம் விலை கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிகபட்சமாக ஒரு பவுன் ரூ.55 ஆயிரம் வரை அதிகரித்தது. இந்த நிலையில் தற்போது தங்கம் விலை குறைந்து வருவதால், வாடிக்கையாளர்கள் தங்க நகைகள் வாங்க அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.

    கடந்த ஆண்டு அட்சய திரிதியை அன்று 20 ஆயிரம் கிலோ தங்கம் விற்பனையானது. தமிழகம் முழுவதும் ரூ.11 ஆயிரம் கோடி அளவுக்கு நகைகள் விற்கப்பட்டது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நகை விற்பனை 25 சதவீதம் வரை அதிகரிக்க கூடும்.

    தமிழகத்தில் இந்த ஆண்டு சுமார் ரூ.14 ஆயிரம் கோடிக்கு தங்க நகைகள் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • வெள்ளி விலை ஏற்ற, இறக்கத்திற்கு ஏற்ப தொழில் இருக்கும்.
    • உக்ரைன் போரால் ரஷியாவில் இருந்து வெள்ளி விற்பனைக்கு கொண்டு வருவது குறைந்துள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் வெள்ளி கொலுசுக்கு தனி மவுசு உண்டு. இதனால் இங்கு உற்பத்தி செய்யப்படும் வெள்ளி கொலுசுகள், அரைஞான் கொடி உள்பட வெள்ளி பொருட்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    சேலம் செவ்வாய்பேட்டை, சிவதாபுரம், பனங்காடு, நங்கவள்ளி, ஜலகண்டாபுரம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெள்ளி பட்டறைகள் உள்ளன. இதனை நம்பி ஒரு லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் உள்ளனர்.

    வெள்ளி விலை ஏற்ற, இறக்கத்திற்கு ஏற்ப தொழில் இருக்கும். தற்போது போதிய ஆர்டர் கிடைக்காமல் உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் வெள்ளி விலை ஒரே நாளில் 1800 ரூபாய் சரிந்துள்ளது. இதனால் வெள்ளி ஆபரணம் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சேலத்தில் நேற்று முன்தினம் வெள்ளி கிராம் 79.30 ரூபாய், பார் வெள்ளி கிலோ 79 ஆயிரத்து 300-க்கு விற்பனையானது. நேற்று வெள்ளி கிராமுக்கு 1.80 குறைந்து 77.50 ரூபாய், பார் வெள்ளி ஒரே நாளில் கிலோவுக்கு 1800 ரூபாய் குறைந்து 77 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனையானது.

    சர்வதேச அளவில் பங்கு சந்தையில் ஏற்பட்ட இறக்கம் மற்றும் டாலர் மதிப்பு குறைவு உள்பட காரணங்களால் வெள்ளி விலை குறைந்துள்ளது. விலை குறையும்போது இன்னும் விலை குறையும் என கருதி மக்கள் வெள்ளி வாங்குவதை தவிர்த்து விடுகிறார்கள். இதனால் தொழில் மேலும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    சேலம் வெள்ளி கொலுசு உற்பத்தியாளர் கைவினை சங்க தலைவர் ஆனந்த ராஜன் கூறியதாவது,

    ரஷியா, இங்கிலாந்து ஆஸ்திரேலியா உள்பட பல நாடுகளில் இருந்து அதிக அளவில் வெள்ளி கிடைக்கப்பெற்று சர்வதேச மார்க்கெட்டில் விற்கப்படுகிறது. ரஷியாவில் இருந்து மட்டும் வெள்ளி வரத்து 40 சதவீதம் இருக்கும். உக்ரைன் போரால் ரஷியாவில் இருந்து வெள்ளி விற்பனைக்கு கொண்டு வருவது குறைந்துள்ளது. இது மட்டுமின்றி சர்வதேச நிலவரங்கள் அடிப்படையில் வெள்ளி விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

    ஏற்கனவே வெள்ளி பொருட்கள் ஆர்டர் கிடைக்கவில்லை. கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து கிடைத்த 25 சதவீத ஆர்டர்களுக்கு மட்டும் பட்டறைகள் இயங்குகின்றன. 75 சதவீதம் வரை ஆர்டர்கள் குறைவால் பட்டறைகள் பாதி நாட்கள் மூடப்படுகின்றன.

    இந்த நிலையில் திடீரென பார் வெள்ளி விலை சரிந்துள்ளதால் மேலும் தொழில் வீழ்ச்சி அடையும் நிலை உள்ளதால் வெள்ளி பொருட்கள் விற்பனையாளர்கள், வெள்ளி நகை தயாரிப்பாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சதீஷ்குமார் சென்னை ஐ.டி. கம்பெனியில் பணியாற்றி வருகிறார்.
    • பூஜை அறையில் இருந்த வெள்ளி குத்துவிளக்கு, தட்டு, பஞ்சபாத்திரம், மணி போன்ற வெள்ளி பாத்திரங்கள் காணாமல் போயிருந்தது.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அடுத்த இருவேல்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 42). இவர் சென்னை ஐ.டி. கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி, குழந்தைகள் மற்றும் தந்தை ஜனார்த்தனன் ஆகியோர் இருவேல்பட்டில் வசித்து வருகின்றனர். சதீஷ்குமாரின் தந்தை ஜனார்த்தனன் விபத்தில் சிக்கி சென்னை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவரைக் காண வீட்டை பூட்டிவிட்டு சதீஷ்குமாரின் மனைவி மற்றும் குழந்தைகள் சென்னைக்கு சென்றனர். அங்கிருந்து நேற்று மாலை இருவேல்பட்டு கிராமத்திற்கு திரும்பினர்.

    அப்போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடை ந்தனர். உள்ளே சென்று பார்த்த போது பூஜை அறையில் இருந்த வெள்ளி குத்துவிளக்கு, தட்டு, பஞ்சபாத்திரம், மணி போன்ற வெள்ளி பாத்திரங்கள் காணாமல் போயிருந்தது. இதன் மதிப்பு ரூ.1 லட்சமாகும். சதீஷ்குமார் அளித்த புகாரின் பேரில் திருவெண்ணைநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் புனிதவள்ளி தலைமை யிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மேலும், விழுப்புரத்தில் இருந்து மோப்ப நாய் ராக்கி வரவழைக்கப்பட்டது. திருடுப்போன வீட்டிலிருந்து சிறிது தூரம் ஓடிய மோப்ப நாய் யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை. தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு திருடு போன வீட்டிலிருந்த தடயங்களை சேகரித்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து வெள்ளி பொருட்களை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    • வீடு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்
    • போலீசார் விசாரணை

    சேத்துப்பட்டு:

    சேத்துப்பட்டு கோல்டன் சிட்டி நகரை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் வங்கி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 2 தினங்களுக்கு முன்பு பிரகாஷ் கரூருக்கு வேலை சம்பந்தமாக சென்றார்.

    பின்னர் வேலைகளை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பினார். அப்போது வீடு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் வைத்திருந்த வெள்ளி பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்து சேத்துப்பட்டு போலீசில் பிரகாஷ் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருடச்சென்ற வீட்டில் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் விட்டு சென்றனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் சூலக்கரை மேடு வ.உ.சி. நகரை சேர்ந்தவர் முருகன்(வயது57). இவரது மனைவி புஷ்பம். இவர்கள் ஊருக்கு வரும் மகனை அழைத்து வருவதற்காக ரெயில் நிலையத்திற்கு சென்றிருந்தனர். அப்போது மர்மநபர்கள் வீட்டின் முன் கதவை உடைத்து உள்ளே புகுந்து திருடும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    முருகன் குடும்பத்துடன் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது முன்கதவு உடைக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தனர். இவர்கள் வருவதை கண்ட மர்மநபர்கள் பின்கதவு வழியாக தப்பி சென்றனர்.

    அப்போது அவர்கள் பை ஒன்றை விட்டு சென்றனர். அதில் வெள்ளியிலான விநாயகர் சிலை, கரண்டிகள், கிண்ணங்கள், காமாட்சி விளக்கு, தட்டுகள், உடைந்த தங்க நகை உள்ளிட்ட பொருட்கள் இருந்தன. அவைகளை சூலக்கரை போலீஸ் நிலையத்தில் முருகன் ஒப்படைத்தார். மேலும் தனது வீட்டில் மர்மநபர்கள் திருட முயற்சி செய்தது குறித்து புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளையும் காணவில்லை.
    • வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை சீதா நகரை சேர்ந்தவர் யுவராஜ் (வயது 65). ஓய்வு பெற்ற அரசு பஸ் கண்டக்டர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள தன் மகளை பார்ப்பதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றார்.

    இந்த நிலையில் சென்னையில் இருந்து தஞ்சைக்கு வந்த யுவராஜ் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பொருட்கள் சிதறி கிடந்தன.

    அப்போது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 600 கிராம் வெள்ளிப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. மேலும் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளையும் காணவில்லை. ஆளில்லா ததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் பொருட்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை திருடி சென்றது தெரிய வந்தது.

    இது குறித்து அவர் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகின்றனர்.
    • 15 பவுன் நகை, வெள்ளி பொருட்கள், செலவுக்கு வைத்திருந்த பணம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் நல்லிபாளையம் அடுத்த எஸ்.பி.கே.நகர் இ-பிளாக் பகுதியில் வசித்து வருபவர் கண்ணன் (வயது 45). இவரது மனைவி சசிகலா. இவர்களது மகள் பிரியதர்ஷினி.

    கண்ணன் மற்றும் சசிகலா ஆகியோர் நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகின்றனர். பிரியதர்ஷினி நாமக்கல் மாவட்ட அரசு கால்நடை மருத்துவ கல்லூரியில் 2-ம் ஆண்டு மருத்துவ படிப்பு படித்து வருகின்றார்.

    இந்த நிலையில் சசிகலா சாமி தரிசனம் செய்வதற்காக திருப்பதிக்கு சென்றுள்ளார். இதனால் கண்ணன் மட்டும் நேற்று காலை புறப்பட்டு பள்ளிக்கு சென்றார். மகள் பிரியதர்ஷினி வழக்கம்போல் கல்லூரிக்கு சென்றார்.

    இதனை நோட்டமிட்டு திருடர்கள், வீட்டின் கதவை திறந்து வீட்டில் இருந்த 15 பவுன் நகை, வெள்ளி பொருட்கள், செலவுக்கு வைத்திருந்த பணம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர். அதன் பிறகு சுவர் ஏறி குதித்து அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    நேற்று மாலை கண்ணன், மகள் அங்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைந்து கிடப்பதை கண்டு திடுக்கிட்டனர். வீட்டில் இருந்த நகை, பணம், வெள்ளி பொருட்களை ஆள் இல்லாத நேரத்தில் திருடர்கள் புகுந்து திருடியுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இந்த சம்பவம் குறித்து நல்லிபாளையம் இன்ஸ்பெக்டர் குமாரவேல் பாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    ×