search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவ-மாணவி"

    • மாவட்ட தீயணைப்பு அலுவலர் வழங்கினார்
    • இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க கூடாது

    நாகர்கோவில், நவ.8-

    வருகிற 12-ந் தேதி கொண்டாடப்படும் தீபாவ ளியை விபத்தில்லாமல் அனைவரும் கொண்டாட வேண்டும் என்று தீயணை ப்புத்துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு தீய ணைப்புத் துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. கோட்டார் ஏழகரம் அரசு தொடக்க மற்றும் உயர் நிலைப் பள்ளியில் பள்ளி மாணவ-மாணவிகள் பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பு சம்பந்தமான செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் சத்ய குமார் பேசியதாவது:-

    இந்த தீபாவளி விபத்தில்லா தீபாவளியாக அமைய அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். பட்டாசு கடைகளை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டிருக்கிறது.

    பட்டாசு கடைகள் விதிமுறைகளை முறை யாக பின்பற்ற வேண்டும். குறிப்பாக உரிமம் வழங்கப் பட்ட இடத்தில் மட்டுமே பட்டாசு விற்பனை செய்ய வேண்டும் .

    பட்டாசு அடுக்கி வைக்கும் ரேக் உராய்வி னால் தீப்பொறி ஏற்படக் கூடியதாக இருக்கக் கூடாது. தயாரிப்பா ளர்களின் லேபில்களுடன் கூடிய பட்டாசுகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் .உரிமம் இல்லாமல் தயாரிக்கப்படும் பட்டாசு களை விற்பது சட்டப்படி குற்றமாகும். 125 டெசிபல் அளவுக்கு மேல் ஒலி எழுப்பும் பட்டாசுகளை விற்பனை செய்யக்கூடாது. உரிமம் இல்லாத இடத்தில் பட்டாசு சேமித்து வைப்பது குற்றமாகும்.

    இதே போல பொதுமக்க ளும் விபத்தில்லா தீபாவளி யாக அமைய ஒத்துழைக்க வேண்டும். பட்டாசு வெடிக்கும் போது இறுக்க மான ஆடைகளை அணிய வேண்டும். பெரியவர்கள் மேற்பார்வையில் சிறு வர்கள் பட்டாசு வெடிக்க வேண்டும். வீட்டிற்கு வெளியில் திறந்த வெளி யில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். தீக்காயம் ஏற்பட்டால் உடனே காயத்தில் குளிர்ந்த நீரை ஊற்ற வேண்டும்.

    வீட்டின் மாடியில் பட்டாசு வெடிக்க கூடாது. குடிசைகள் நிறைந்த பகுதி யில் பட்டாசு வெடிக்க வேண்டாம். மருத்துவ மனை, திரையரங்குகள், பொது மக்கள் கூடும் இடங்களில் பட்டாசு வெடிக்காதீர்கள். வெடிக்காத பட்டாசுகளை மீண்டும் வெடிக்க முயற்சி க்க கூடாது.

    பட்டாசுகளை சிறு வர்கள் கையில் எடுத்து விளை யாட அனுமதிக்க வேண்டாம் . உச்ச நீதிமன்ற உத்தரவின் படி இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க கூடாது என்பன போன்ற விதிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    • வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது
    • கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி நடந்தது

    கன்னியாகுமரி :

    முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதி யின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகம் சார்பில் மாதந்தோறும் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. அவற்றுள் ஒன்றாக இந்த மாதம் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு கலைஞரும் சங்கத்தமிழும் என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி நடத்தப்பட்டது.

    இந்த போட்டியில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 20-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து 60-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    தமிழ் ஆசிரியர் சிவதாணு, ஆசிரியை குறமகள் ஆகியோர் நடுவர்களாக இருந்தனர். போட்டியில் மாணவர் அண்ணாமலை, மாணவிகள் சுப்பிரஜா, ஜியுபிளமிங், ஆஸ்லின் அபீஷ்மா, ஆன்றனி வித்யா ஆகியோர் வெற்றி யாளர்களாக அறிவிக்கப்பட்ட னர்.

    தொடர்ந்து பிற்பகலில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் "அமரர் கலைஞருக்கு சூட்டும் வெண்பா மலர் 100" என்ற நூல் வெளியீட்டு விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கவிஞர் கவிமணி தாசன் நற்பணி இயக்கத்தின் செயலாளர் ஓவியர் வை.கோபாலகிருஷ்ணன் வரவேற்று பேசினார். கன்னியாகுமரி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவசத்தியவள்ளி தலைமை தாங்கினார். பன்னாட்டு தமிழ் உறவு மன்ற இளங்கோ நூலினை வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார். கலைவாசல் அமைப்பின் தலைவர் குமரி எழிலன் நூல் ஆய்வுரை நிகழ்த்தினார்.

    நூலாசிரியர் கவிமணி தாசன் நற்பணி இயக்கத்தின் பொதுச்செயலாளர் புலவர் சிவதாணு ஏற்புரை ஆற்றி னார். அதைத்தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளும் கலந்துகொண்ட மாணவர்களுக்கு சான்றி தழ்களும் வழங்கப்பட்டன.

    முடிவில் ஆசிரியை குறமகள் நன்றி கூறினார்.

    இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி அரசு அருங் காட்சியக பணியாளர்கள் செய்து இருந்தனர்.

    • முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகளுக்கான வகுப்பு தொடக்க விழா நடைபெற்றது.
    • கல்வியின் தேவையையும், முக்கியத்துவத்தையும் அதில் சிறந்து விளங்க செய்ய வேண்டியவற்றையும் எடுத்துரைத்தார்

    நாகர்கோவில் :

    அஞ்சுகிராமம் அருகே பால்குளத்தில் அமைந்துள்ள ரோகிணி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் இளநிலை பொறியியல் முதலாம் ஆண்டு மாணவ-மாணவி களுக்கான வகுப்பு தொடக்க விழா நடைபெற்றது.

    கல்லூரி தலைவர் நீல மார்த்தாண்டன், துணை தலைவர் நீலவிஷ்ணு, நிர்வாக இயக்குனர் பிளஸ்ஸி ஜியோ ஆகியோர் தலைமை தாங்கினர். கல்லூரி முதல்வர் ராஜேஷ் முன்னிலை வகித்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    பொறியியல் கல்வியின் தேவையையும், முக்கியத்துவத்தையும் அதில் சிறந்து விளங்க செய்ய வேண்டியவற்றையும் எடுத்துரைத்தார். கணினி துறை பேராசிரியர் மீனாட்சி யம்மாள் முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்களை வரவேற்று பேசினார். வேதி யியல் துறை பேராசிரியர் ராதிகா கல்லூரியின் கட்ட மைப்பு வசதி பற்றி விளக்கி னார். ஆங்கிலத்துறை பேரா சிரியர் ஷாமிலா பேகம் கல்லூரியின் விதிமுறை களை பற்றி எடுத்துரைத்தார்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முதலாம் ஆண்டு துறையின் தலைவர் மற்றும் பேராசிரியர், பேராசிரியை செய்து இருந்தனர்.

    • கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகத்தில்20-ந்தேதி நடக்கிறது
    • ஒரு கல்லூரியில் இருந்து 5 மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும்

    கன்னியாகுமரி :

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகம் சார்பில் வருகிற 20-ந்தேதி காலை 10 மணி அளவில் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு "கலைஞரும் சங்கத் தமிழும்" என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் ஒரு கல்லூரியில் இருந்து 5 மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். 3 நிமிடங்களுக்குள் மாணவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்.

    போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ்களும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு களும் வழங்கப்படும். போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் வருகிற 17-ந்தேதி மாலை 5 மணிக்குள் தங்களின் பெயர்களை 72005 62301 என்ற எண்ணில் கட்டாயம் முன்பதிவு செய்ய வேண்டும் என்று கன்னியாகுமரி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ சத்திய வள்ளி தெரிவித்துள்ளார்.

    • வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது
    • 280 க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்

    கன்னியாகுமரி, 

    கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகத்தில்சு தந்திரதினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ- மாணவி களுக்கான ஓவியப்போட்டி நடந்தது. 6-ம்வகுப்பு முதல் 9-ம் வகுப்புவரை பயிலும் மாணவ- மாணவி களுக்கு"எனக்கு பிடித்த சுதந்திர போராட்ட வீரர்" என்ற தலைப்பில்இந்த ஓவியப்போட்டி நடந்தது. இந்தப்போட்டிகளை கன்னியாகுமரி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவசத்திய வள்ளி தொடங்கி வைத்தார்.

    இந்தப்போட்டியில் கன்னியாகுமரி சுற்று வட்டார பகுதியில்உள்ள 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 280 க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். .அவர்கள் தங்களுக்கு பிடித்த சுதந்திர போராட்ட வீரர்களை ஓவியங்களாக வரைந்தனர். தொடர்ந்து பரிசளிப்பு விழா நடத்தப்பட்டது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய முன்னாள் அதிகாரி மகாராஜாபிள்ளை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளையும் சான்றிதழ்களை யும் வழங்கினார்.

    ஓவியர் கோபால கிருஷ்ணன் நடுவராக இருந்து போட்டி யில்வெற்றியாளர்களை தேர்ந்தெடுத்தார். இந்தநிகழ்ச்சியில் எழுத்தாளர் சரலூர் ஜெகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்தப்போட்டியில் வாரியூர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி தர்ஷினி, மணிக் கட்டி பொட்டல் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி அஸ்மிகா, ராஜாக்காமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் அகிலேஷ், காட்டா துறை அரசு மேல்நிலை பள்ளி மாணவி ஷானுகா, திட்டுவிளை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி லலிதா சிவத ர்ஷினி, கொட்டாரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ஹரி வர்ஷினி, நாகர்கோவில் புனித ஜோசப் கான்வென்ட் மேல்நிலைப்பள்ளி மாணவி ஆராதனா, புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ஐஸ்வர்யா, விவேகானந்தாகேந்திர வித்யாலயாபள்ளி மாணவர்விஷ்ணுசரண் ,புனித மரிய கொரற்றி மேல்நிலைப்பள்ளி மாணவர் அல்டாப் முகமது ஆகியோர் வெற்றியாளர்களாக அறிவிக்கபட்டனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவிகளுக்கும் சான்றி தழ்களும் வழங்கப்பட்டன.

    • விஜய்வசந்த் எம்.பி. பங்கேற்பு
    • மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

    நாகர்கோவில் :

    சுதந்திர தின விழாவை முன்னிட்டு தோவளை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சகாயநகர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் விஜய் வசந்த் எம்.பி. கலந்துகொண்டு அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

    மேலும் தன்னார்வலர்கள், சமூக சேவகர்களுக்கும் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. முருங்கை மற்றும் பப்பாளி மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. முன்னதாக ஊராட்சி மன்றம் சார்பில் சால்வை அணிவித்து மரக்கன்று கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அங்குள்ள பெருந்தலைவர் காமராஜர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    • அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்
    • 231 மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார்.

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டத்துக் குட்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா கன்னியா குமரி அருகே உள்ள கொட்டாரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.

    மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். மேயர் மகேஷ் முன்னிலை வகித்தார். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முருகன் வரவேற்று பேசினார்.

    விழாவில் அமைச்சர் மனோதங்கராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முதல் கட்டமாக கொட்டாரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 231 மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார்.

    விழாவில் அகஸ்தீஸ்வ ரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு, தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் ஆர்.எஸ். பார்த்தசாரதி கொட்டாரம் பேரூர் தி.மு.க. செயலாளர் வைகுண்டபெருமாள், முன்னாள் ஒன்றிய அவைத்தலைவர் ராஜகோபால், மாவட்ட தி.மு.க. பொறியாளர் அணி துணை அமைப்பாளர் தமிழன் ஜானி, கொட்டாரம் பேரூராட்சி தலைவி செல்வகனி, துணை தலைவர் விமலா, பேரூ ராட்சி வார்டு கவுன்சிலர் சரோஜா, மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி துணை அமைப்பாளர் பொன் ஜான்சன், கொட்டாரம் அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சிதம்பரம், பள்ளி தலைமை ஆசிரியை பேபி, உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நாகர்கோவில் மாவட்ட கல்வி அலுவலர் மோகன் நன்றி கூறினார்.

    இதேபோல் தென்தா மரைகுளம் பேரூராட்சியில் நகர்ப்புற சாலைகள் மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 5 லட்சம் மதிப்பில் 1-வது வார்டு தென்தாமரைகுளம் முதல் தேரிவிளை-மன்னராஜா கோவில் சாலை, 6-வது வார்டு தென்தாமரைகுளம் போலீஸ் நிலையம் முதல் பூவியூர் அம்பலம் சாலை அலங்கார கற்கள் பதிக்கும் பணியை அமைச்சர் மனோதங்கராஜ் தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பா.ஜ.க. ஆட்சி செய்யாத மாநிலங்களில் தன்னாட்சி அதிகாரம் பெற்று செயல்படும் அமலாக்க துறை போன்ற துறைகளை மத்திய அரசு கையில் வைத்து கொண்டு அரசியல் அடக்குமுறை ஆயுதமாக பயன்படுத்தி வருகிறது.

    பல்வேறு ஊழல் குற்றச் சாட்டுகளுக்கு ஆளான அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது நடவ டிக்கை எடுக்க அனுப்பப் பட்ட கோப்புகளில் ஆளுநர் கையெழுத்திட வில்லை. தி.மு.க.வை அரசியல் ரீதியாக எதிர் கொள்ளும் எந்த சக்தியும் தமிழக பா.ஜ.க.விற்கு கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் மாநில வர்த்தக அணி இணை செயலாளர் தாமரை பாரதி, தென்தாமரைகுளம் பேரூராட்சி தலைவி கார்த்திகா பிரதாப், துணை தலைவி மல்லிகா, பேரூ ராட்சி கவுன்சிலர்கள் எட்வின் ராஜ், பூவியூர் காமராஜ், ஆல்வின், கான்ஸ்டன் டைன், அமுதா, தி.மு.க. பிரமுகர்கள். பேராசிரியர் டி.சி. மகேஷ், தாமரை பிரதாப் உட்பட தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • மேல்படிப்பு படிக்க பேச்சிப்பாறை வரவேண்டும். அதற்கு படகில் செல்ல வேண்டும்.
    • மாணவ-மாணவிகளின் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்தார்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டம் பேச்சிப்பாறை பகுதியில் உள்ள தச்சமலை, தோட்ட மலை பகுதிகளில் ஏராள மான காணி இன மக்கள் வசித்து வருகிறார்கள்.

    இங்குள்ள மாணவ, மாணவிகள் இன்று நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் வந்தனர். அவர்கள் கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க வேண்டும் என்று அதிகாரி களிடம் தெரிவித்தனர். உடனே அதிகாரிகள் அவர்கள் அனைவரையும் கலெக்டர் அலுவலக கூட்டரங்குக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்கள் கலெக்டர் ஸ்ரீதர் மற்றும் பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக் ஆகியோரை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    தச்சமலை, தோட்ட மலை பகுதியில் தொடக்க பள்ளி மட்டுமே உள்ளது. அங்கிருந்து மேல்படிப்பு படிக்க பேச்சிப்பாறை வரவேண்டும். அதற்கு படகில் செல்ல வேண்டும். இதுவரை தொண்டு நிறுவனம் ஒன்று படகு சவாரிக்கான கட்டணத்தை வழங்கி வந்தது. தற்போது நிதிநெருக்கடி காரணமாக அந்த நிறுவனம் படகு கட்டணம் வழங்க முடியாத நிலையில் உள்ளது.

    எனவே எங்கள் படிப்பை தொடர எங்கள் பகுதியிலேயே உயர் நிலை மற்றும் மேல்நிலை வகுப்பு களை தொடங்க வேண்டும். மேலும் ஆன்லைன் வகுப்புகளை கவனிக்க தேவையான வசதிகளையும் செய்து தரவேண்டும் என்றனர்.

    மாணவ-மாணவிகளின் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்ட கலெக்டர், அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித் தார். மாணவிகளுக்கு தேவையான போக்குவரத்து வசதி மற்றும் அவர்கள் தொடர்ந்து மேல் படிப்புக்கான ஏற்பாடுகளை செய்வதாகவும் கூறினார்.

    • முதல் கட்டமாக 19 பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டது
    • குமரி மாவட்டத்தில் தற்போது 42 பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது

    நாகர்கோவில் :

    தமிழகம் முழுவதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே குமரி மாவட்டத்தில் 19 அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் 2-ம் கட்டமாக காலை உணவு திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து கன்னி யாகுமரியிலும் 2-ம் கட்டமாக 23 பள்ளிகளுக்கு காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க விழா நிகழ்ச்சி நாகர்கோவில் தம்மத்து கோணம் அரசு நடுநிலைப்பள்ளியில் இன்று நடந்தது. விழாவில் கலெக்டர் ஸ்ரீதர் கலந்து கொண்டு காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    இதை தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கு உணவுகளை பரிமாறினார். பின்னர் கலெக்டர் ஸ்ரீதர் மாணவ மாணவிகளுடன் அமர்ந்து உணவு அருந்தினார். பின்னர் கலெக்டர் ஸ்ரீதர் கூறுகையில்:-

    குமரி மாவட்டத்தில் முதல் கட்டமாக 19 பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதன் மூலமாக 973 மாணவ மாணவிகள் பயனடைந்தனர்.

    தற்பொழுது 2-ம் கட்டமாக 23 பள்ளிகளில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக 3175 குழந்தைகள் பயனடைவார்கள். மொத்தத்தில் குமரி மாவட்டத்தில் தற்போது 42 பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இதன் மூலமாக 4152 மாணவ மாணவிகள் பயன்பெறுவார்கள் என்றார்.

    நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன் துணை மேயர் மேரிபிரின்சிலதா முதன்மை கல்வி அதிகாரி புகழேந்தி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். காலை உணவு திட்டம் தந்த முதல்-அமைச்சருக்கு மாணவ மாணவிகள் நன்றி தெரிவித்தனர். பின்னர் அவரது பிறந்த நாளான இன்று அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களையும் மாணவ மாணவிகள் கூறினார்கள்.

    • கலெக்டர்-மேயர் வழங்கினர்
    • இந்த மாத்திரையை உட்கொள்வதால் எந்த விதமான பக்க விளைவுகளும் ஏற்படுவதில்லை.

    நாகர்கோவில்:

    பொது சுகாதாரத்துறை மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் தேசிய குடற்புழு நீக்க தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையடுத்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை இன்று வழங்கப்பட்டது.

    நாகர்கோவில் செட்டி குளம் அரசு தொடக்கப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சி யில் கலெக்டர் ஸ்ரீதர் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மேயர் மகேஷ், முதன்மை கல்வி அதிகாரி புகழேந்தி, ஆணை யாளர் ஆனந்த மோகன், சுகாதாரப் பணிகள் துணை இயக்கு னர் மீனாட்சி, துணை மேயர் மேரி பிரின்சி லதா, தி.மு.க. மாநகர செய லாளர் ஆனந்த் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    முன்னதாக மாணவ- மாணவிகளுடன் குடற்புழு நீக்க நாள் உறுதி மொழியை கலெக்டர் மற்றும் அதிகாரி கள் எடுத்துக் கொண்டனர்.

    தொடர்ந்து கலெக்டர் ஸ்ரீதர் பேசியதாவது:-

    வளரும் குழந்தைகளுக்கு குடற்புழு இருந்தால் உடல் வளர்ச்சி குறைபாடு, ரத்தசோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. இதை தடுக்க குடற்புழு தடுப்பு மாத்தி ரைகள் விநியோகம் செய்யப்படுகிறது.

    பள்ளிகள், கல்லூரிகள், அங்கன்வாடி மையங்க ளில் இந்த மாத்திரைகள் வழங்கப்படு கிறது. மாணவ- மாணவிகள் அனைவரும் இந்த மாத்திரையை உட்கொள்ள வேண்டும்.

    20 முதல் 30 வயதுக்குட் பட்ட பெண்களுக்கு குடற்புழு இருந்தால் ரத்த சோகை ஏற்பட்டு எடை குறைவான குழந்தை பிறக்க வாய்ப்பு உள்ளது. இதை தடுக்கும் வகை யில் குடற்புழு நீக்க மாத்திரைகள் வினியோகம் செய்யப்படுகிறது.

    குமரி மாவட்டத்தை பொறுத்தமட்டில் 1 முதல் 19 வயதுக்குட்பட்ட 5 லட்சத்து 58 ஆயிரத்து 76 பேருக்கும், 20 முதல் 30 வயதுக்கு உட்பட்ட பெண்கள் 75 ஆயிரத்து 43 பேருக்கும் இந்த மாத்திரை வழங்கப்படுகிறது.

    இந்த மாத்திரையை உட்கொள்வதால் எந்த விதமான பக்க விளைவுகளும் ஏற்படுவதில்லை. எனவே பெற்றோர் தங்களது குழந்தைகள் மாத்திரை உட்கொண்டதை உறுதிப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு
    • tn.adtwo.gov.in.index.php மூலம் கல்லூரிகள் தனது குறிப்புகளை பதிவு செய்ய வேண்டும்

    நாகர்கோவில்:

    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை யின் சார்பில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி கள் மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உத வித்தொகை வழங்குவது குறித்து துறை சார்ந்த அலு வலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நேற்று நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    உதவித்தொகைவழங்கும் திட்டத்தில் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சத்திற்குள் இருக்கும் ஆதி திராவிட மற்றும் பழங்குடியினர் அல்லது மதம் மாறிய ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்த மாணவ- மாணவிகளுக்கு அரசின் கல்வி உதவித் தொகை வழங்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குமரி மாவட்டத்திற்குட்பட்ட மாணவ-மாணவிகள் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை பெற 4 ஆயிரத்து 499 மாணவ- மாணவிகள் புதுப்பித்தலுக்கும், 2 ஆயிரத்து 150 மாணவ- மாணவிகள் புதிதாக விண்ணப்பிக்கவும், தகுதியுடையவர்கள் என கணக்கிடப்பட்டுள்ளது.

    மத்திய, மாநில அரசுகளின் உதவித் தொகையை மாணவர்களுக்கு தங்கு தடையின்றி வழங்க விரைந்து நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும். மேலும், போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை விண்ணப்பிக்கும் கடந்த கால முறையில் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    அதன்படி tn.adtwo.gov.in.index.php எனும் இணையத்தின் மூலம் கல்லூரிகள் முதலில் தனது குறிப்புகளை உரிய ஆவணங்களுடன் பதிவு செய்ய வேண்டும். இப்பதிவேற்றத்திற்கு கல்லூரிகளுக்கு ஏ.ஐ.சி.எச்.இ. கோடு மிக அவசியம். பின்னர் மாணவர்கள் தங்கள் ஆதார் மூலம் சுய விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். பதிவேற்றம் நிறைவு பெற்றால் மட்டுமே மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை மத்திய, மாநில அரசுகளின் மூலம் பெற முடியும்.

    குமரி மாவட்டத்தில் உள்ள மொத்தம் 6 ஆயிரத்து 655 மாணவர்களில் இது வரை 339 பேர் மட்டுமே முழுமையாக பதிவு செய்துள்ளனர். இத்திட்டத்தை விரைவுபடுத்தி அனைத்து ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாண வர்கள் பயன்பெறும் வகையில் துறைசார்ந்த அலுவலர்கள் செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் நாகராஜன் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • சப்-இன்ஸ்பெக்டர் சோபனராஜ் பெண்கள் வன்கொடுமை குறித்து மாணவ மாணவிகளிடம் விளக்கி கூறினார்.
    • போதை பொருட்கள் நடமாட்டம் குறித்து தகவல் கிடைத்தால் மாணவர்கள் காவல் துறையினரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்

    கன்னியாகுமரி:

    கருங்கல் போலீஸ் நிலையத்தில் மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் துண்டத்துவிளை புனித அந்தோனியார் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவியர் சுமார் 50 பேர் ஆசிரியையுடன் கலந்து கொண்டனர். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மகேஷ் மற்றும் சோபனராஜ் ேபாலீசாரின் செயல்பாடு, காவல்துறையில் தற்போது பயன்படுத்தப்பபட்டு வரும் கம்ப்யூட்டர் தொழில் நுட்ப பயன்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தனர்.

    தொடர்ந்து மாணவ-மாணவிகளுக்கு கஞ்சா போன்ற போதைப்பொருட்களால் ஏற்படும் பாதிப்புகளை சப்-இன்ஸ்பெக்டர் மகேஷ் எடுத்து கூறி, போதைப்பொருட்களை ஒருவரும் பயன் படுத்தகூடாது என அறிவுறுத்தினார். மேலும் போதை பொருட்கள் நடமாட்டம் குறித்து தகவல் கிடைத்தால் மாணவர்கள் காவல் துறையினரிடம் தகவல் தெரிவித்து போதை பழக்கத்தில் இருந்து மாணவர்களை காக்க உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

    மேலும் சப்-இன்ஸ்பெக்டர் சோபனராஜ் பெண்கள் வன்கொடுமை குறித்து மாணவ மாணவிகளிடம் விளக்கி கூறினார். இவைகளை கேட்டு அறிந்த மாணவ மாணவிகள் போலீசாருக்கு நன்றி கூறினர்.

    ×