search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அம்பேத்கர்"

    • அம்பேத்கர் பேரன் பிரகாஷ் அம்பேத்கருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
    • சிலையை வடிவமைத்த 98 வயதான சிற்பி ராம் வஞ்சி சுடர் கவுரவிக்கப்படுகிறார்.

    ஐதராபாத் :

    இந்திய அரசியல் சாசன சிற்பி என போற்றப்படும் அம்பேத்கருக்கு ஐதராபாத்தில் பிரமாண்ட வெண்கல சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் அம்பேத்கருக்கு அமைக்கப்பட்டு உள்ள மிகவும் உயரமான இந்த சிலை 125 அடி உயரத்தில் நிறுவப்பட்டு இருக்கிறது.

    ரூ.146.5 கோடி செலவில் இந்த பிரமாண்ட சிலை மற்றும் புதிய தலைமை செயலக வளாகத்தை தெலுங்கானா அரசு கட்டியுள்ளது. 2 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வந்த இந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்து திறப்பு விழாவுக்கு தயாராகி உள்ளன.

    இதைத்தொடர்ந்து அம்பேத்கரின் பிறந்த தினமான இன்று (வெள்ளிக்கிழமை) இந்த பிரமாண்ட சிலை மற்றும் தலைமைச் செயலக வளாகத்தை தெலுங்கானா முதல்-மந்திரியும், பாரதிய ராஷ்ட்ரீய சமிதி கட்சித்தலைவருமான சந்திரசேகர் ராவ் திறந்து வைக்கிறார்.

    அப்போது ஹெலிகாப்டர் மூலம் சிலை மீது மலர்கள் தூவப்படுகின்றன.

    பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் இந்த விழாவுக்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. குறிப்பாக மாநிலத்தின் 119 தொகுதிகளில் இருந்து 35 ஆயிரத்துக்கு மேற்பட்டோரை பங்கேற்க செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இதற்காக 750 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அத்துடன் விழாவில் பங்கேற்பவர்களுக்கு சட்டசபை வளாகத்தில் உணவு, இனிப்பு, மோர், தண்ணீர் போன்றவற்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.

    அம்பேத்கர் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க அவரது பேரன் பிரகாஷ் அம்பேத்கருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இந்த விழாவில், சிலையை வடிவமைத்த 98 வயதான சிற்பி ராம் வஞ்சி சுடர் கவுரவிக்கப்படுகிறார்.

    இந்த திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகளை முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் நேற்று ஆய்வு செய்தார். மேலும் மாநில மந்திரிகள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனையும் நடத்தினார்.

    அம்பேத்கர் சிலை திறப்பு விழாவையொட்டி ஐதராபாத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    • சனாதன-கார்ப்பரேட் மோடி அரசின் பாசிசப் போக்கை கண்டித்து நாளை தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது.
    • அசோக் நகரில் உள்ள 'வெளிச்சம்' அலுவலகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கிறார்.

    சென்னை:

    டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவை ஒவ்வொரு ஆண்டும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எழுச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

    இந்த ஆண்டு ஜனநாயகம் காப்போம் சிறுத்தைகள் அணிவகுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    சனாதன-கார்ப்பரேட் மோடி அரசின் பாசிசப் போக்கை கண்டித்து இந்த அணிவகுப்பு தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நாளை நடைபெறுகிறது.

    அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஒன்று கூடி அணிவகுப்பாக சென்று அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.

    இதற்காக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துள்ளனர்.

    சென்னையில் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தை அணிவகுப்பு நாளை பிற்பகல் 3 மணிக்கு நடைபெறுகிறது. எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து எல்.ஜி. சாலை வரை மத்திய அரசுக்கு எதிராக அணிவகுத்து செல்கிறார்கள். இந்த நிகழ்ச்சியை சென்னை மாவட்ட செயலாளர்கள் இரா.செல்வம், ந.செல்லத்துரை, ரவிசங்கர், வி.கோ.ஆதவன், அன்பு செழியன், அம்பேத் வளவன் ஆகியோர் ஒருங்கிணைத்துள்ளனர்.

    சென்னையில் உள்ள 6 மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த விடுதலை சிறுத்தை தொண்டர்கள் ஆயிரக்கணக்கில் குவிகிறார்கள்.

    முன்னதாக அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி அம்பேத்கர் மணிமண்ட பத்தில் நாளை திருமாவளவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். அதன் பின்னர் அசோக் நகரில் உள்ள 'வெளிச்சம்' அலுவலகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கிறார்.

    தொடர்ந்து கோயம்பேடு பஸ் நிலையம் எதிரே உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

    • அம்பேத்கரை இழிவுபடுத்திய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    சென்னை:

    சட்ட மேதை புரட்சியாளர் அம்பேத்கர் காவி உடை அணிவது போன்ற தோற்றத்தை உருவாக்கி அவரை அவமதித்த இந்து மக்கள் கட்சியை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தமிழ்நாடு முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

    சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர் அம்பேத்கரை இழிவுபடுத்திய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆவேசமாக பேசினார்.

    இந்து மக்கள் கட்சியினர் அண்ணல் அம்பேத்கரை வேண்டும் என்றே அவமதிப்பதாகவும், வரலாற்றை மாற்றி பேசுவதாகவும் குற்றம் சாட்டினார்.

    தமிழகத்தில் திருவள்ளுவர், பெரியார், அம்பேத்கர் என தொடர்ந்து ஒவ்வொரு தலைவர்களையும் இதே போல் இழிவுபடுத்தும் வகையில் அந்த அமைப்பு செயல்படுவதாகவும் இவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு உள்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.

    இதே போல் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    • பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் அம்பேத்கர் மிகச்சிறந்த அனுபவம் கொண்டவர்
    • ஆசிரியராகவும், இதழாளராகவும், எழுத்தாளராகவும் சமூகநீதிப் புரட்சியாளராகவும் விளங்கியவர் அம்பேத்கர்.

    நெல்லை:

    தமிழக காங்கிரஸ் பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியுள்ள தாவது:-

    பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் என்கிற பி.ஆர்.அம்பேத்கர், இன்றைய மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள அம்பாவாதே என்னும் கிராமத்தில் பிறந்தவர். இந்திய விடுதலைக்குப் பிறகு, நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றவர்.

    உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர். பட்டியல் இன மக்களுக்கு என்று கழகம் ஒன்றைத் தொடங்கியவர், பரோடா மன்னருடன் இணைந்து தீண்டாமை ஒழியப் போராடியவர் என்று, பல்வேறு போற்று தல்களுக்கு உரியவர் அம்பேத்கர்.

    பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் மிகச்சிறந்த அனுபவம் கொண்டவர். ஆசிரியராகவும், இதழாளராகவும், எழுத்தாளராகவும் சமூகநீதிப் புரட்சியாளராகவும் விளங்கியவர்.

    இந்திய அரசியலமைப்புச் சாசனத்தை வரைவதற்கான குழுவின் தலைவராகவும் பொறுப்பேற்றவர். இந்தியாவின் மிகச்சிறந்த உயரிய விருதான 'பாரத ரத்னா' விருது இவரது இறப்புக்குப் பின் 1990ல் இவருக்கு வழங்கப்பட்டது

    போற்றுதலுக்கு உரிய டாக்டர் அம்பேத்கரின் நினைவுநாள் இன்று (டிசம்பர் 6). இந்த நாளில், அவரரைப் போற்றி வணங்குவோம். இவ்வாறு ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

    • சிவகங்கை மாவட்டத்தில் டாக்டர் அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • விருதுகள் வழங்குவதற்கு ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில் 2022-2023-ம் நிதியாண்டிற்கான டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருது தமிழ் வளர்ச்சிக்கு பாடுபடும் மற்றும் பட்டியல் இன மக்களின் முன்னேற்றத்திற்கு தொண்டு செய்யும் ஆதிதிராவிட இனத்தைச் சேர்ந்த தமிழறிஞர்கள், கவிஞர்கள், சான்றோர் ஆகியோர்களில் சிறந்தோருக்கு, 2023-ம் ஆண்டில் திருவள்ளுவர் திருநாளன்று விருதுகள் வழங்குவதற்கு ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.

    டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருது பெற விரும்பும் தகுதிவாய்ந்த நபர்கள் உரிய விண்ணப்பப் படிவத்தினை சிவகங்கை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் பெற்று வருகிற 30-ந்தேதிக்குள் மேற்படி அலுவலகத்திற்கு உரிய ஆவணங்களுடன் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

    இந்த தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

    • போலீசார் தாக்கியதாக கூறி சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    • அனுமதியின்றி வைக்கப்பட்ட அம்பேத்கர் சிலையை அகற்றவிடாமல் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள செம்மாண்டபட்டி கிராமத்தில் உள்ள காலனியில் புதிதாக அம்பேத்கர் சிலை வைக்கப்பட்டது. உரிய அனுமதி பெறாமல் வைக்கபட்ட சிலையை அகற்ற காடையாம்பட்டி தாசில்தார் அருள்பிரகாஷ், ஓமலூர் டி.எஸ்.பி சங்கீதா மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

    அப்போது அங்கு வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மற்றும் தலித் அமைப்புகள் சிலையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். தொடர்ந்து சிலையின் முன்பாக அமர்ந்து, சிலையை எடுத்தல் கடுமையான போராட்டம் நடத்தப்படும் என்று அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.

    அப்போது அங்கு வந்த சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ் சம்பவ இடத்திற்கு வந்து பேசினார். ஆனால், அவரது பேச்சை யாரும் கேட்காத நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட 20-க்கும் மேற்பட்டோரை கைது செய்து வாகனத்தில் அழைத்து செல்லப்பட்டனர். தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிலை அகற்றி எடுத்து செல்லப்பட்டது.

    இந்தநிலையில், கைது செய்யப்பட்டவர்களை சங்ககிரி, கொங்கணாபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அழைத்து சென்று வைத்ததாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் சிலை விவகாரம் பிரச்சனை ஓய்ந்ததால், மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டு, ஓமலூரில் கொண்டு வந்து விடப்பட்டனர்.

    இந்தநிலையில், இளம்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பா ளர் சமுராய்குருவை மட்டும் தனியாக வாகனத்தில் அழைத்து சென்றதாகவும், இதுபற்றி அவர் கேட்டபோது, மேச்சேரி இன்ஸ்பெக்டர் அவரை தாக்கியதாகவும் கூறி ஓமலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபப்ட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டெல்லியில் இன்று ‛அம்பேத்கரும் மோடியும்' என்ற புத்தகத்தை முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டார்.
    • பிரதமர் மோடி பாபாசாகேப்பின் தொலைநோக்குப் பார்வையை மெய்ப்பிக்கிறார்.

    டெல்லியில் இன்று 'புளூ கிராப்ட் டிஜிட்டல் பவுண்டேஷன்' என்ற நிறுவனம் சார்பில், 'அம்பேத்கரும் மோடியும்- சீர்திருத்தவாதிகளின் சிந்தனையும் செயல் வீரர்களின் நடவடிக்கையும்' என்ற ஆங்கில புத்தகம் வெளியீட்டு விழா நடைபெற்றது.

    இந்த புத்தகத்திற்கு இசையமைப்பாளரும், மாநிலங்களவை எம்.பி.,யுமான இளையராஜா அணிந்துரை எழுதியிருந்தார். ஆனால் இளையராஜா இந்த விழாவில் கலந்துக் கொள்ளவில்லை என தெரிகிறது.

    புத்தகத்தில், அம்பேத்கரின் லட்சியங்களுக்கும் புதிய இந்தியாவின் வளா்ச்சிப் பயணத்துக்கும் இடையிலான மறுக்க முடியாத பிணைப்பு, இந்தியா குறித்த அவரின் தொலைநோக்குப் பாா்வையை விவரிக்கப்பட்டுள்ளது.

    அம்பேத்கரின் தொலைநோக்குப் பாா்வை திறம்பட அமலுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதை எடுத்துக்காட்ட பிரதமா் மோடி தலைமையில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள் நூலில் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

    இந்த புத்தகத்தை டெல்லியில் இன்று நடைபெற்ற விழாவில் முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டார். மத்திய மந்திரி அனுராக் தாக்கூர், எல்.முருகன் உள்ளிட்டோர் இவ்விழாவில் பங்கேற்றனர்.

    பின்னர் முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றியதாவது:-

    அரசியல் நிர்ணய சபையின் வரைவுக் குழு தலைவரான பாபாசாகேப், ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் திட்டத்தை அப்போது நிராகரித்தார். ஆனால், சிக்கலான சம்பவங்களுக்குப் பிறகு ஜம்மு- காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது. அது பாபாசாகேப்பின் விருப்பத்திற்கு எதிராக இருந்தது.

    ஜம்மு காஷ்மீர் தொடர்பான இந்த ஏற்றத்தாழ்வு, மோடி அரசின் முயற்சியைத் தொடர்ந்து ஆகஸ்ட் 2019-ல் நீக்கப்பட்டது. பிரதமர் மோடியின் இந்த உத்தரவு பாபாசாகேப்பின் லட்சியங்களை நிறைவேற்றுகிறது. இந்திய ஜனாதிபதி என்ற முறையில் இந்த உத்தரவில் கையெழுத்திடும் வாய்ப்பைப் பெற்றதற்கு நான் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன்.

    சுதந்திரப் போராட்டத்தின் போது, ​​நாடு வகுப்புவாதத்தின் கோரப்பிடியில் இருந்தது. அப்போது, ​​மக்களை மத ரீதியில் பார்க்கக் கூடாது என்று மூத்த தலைவர்களிடமிருந்து பரிந்துரைகள் இருந்தன.

    பெரும்பாலான தலைவர்கள் நாம் முதலில் இந்தியர்கள் என்றும் பின்னர்தான் இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள் அல்லது கிறிஸ்தவர்கள் என்றும் சொல்ல வேண்டும் என்று கூறினார்கள்.

    ஆனால் பாபாசாகேப்பின் சிந்தனை உயர்ந்த மட்டத்தில் இருந்தது. முதலில் நாம் இந்தியர்கள், பின்னர் இந்தியர்கள் மற்றும் இறுதிவரை இந்தியர்கள் என்று சொல்ல வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இந்தியத்தன்மையே நமது உண்மையான அடையாளம், மதம், ஜாதி, பிரிவு ஆகியவற்றுக்கு இங்கு இடமில்லை என்றும் அவர் கூறினார்.

    அதுபோல், பிரதமர் மோடியும் இந்தியாதான் முதல் என்று கூறுகிறார். மோடி பாபாசாகேப்பின் தொலைநோக்குப் பார்வையை மெய்ப்பிக்கிறார். மோடி அம்பேத்கரின் உண்மையான சீடர் என்பதற்கு இன்று வெளியாகியுள்ள புத்தகமே சாட்சி.

    அம்பேத்கர் வகுத்த கொள்கைகளின்படி, நல்லாட்சிக்காகவும், சமூகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகவும் பிரதமர் பல முயற்சிகளை எடுத்துள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×